நோக்கம்
அ: அஷ்அரிய்யா கோட்பாட்டின் அடிப்படையில் அஹ்லுஸ் ஸுன்னத்
வல்ஜமாஅத்தின் கொள்கையின் பிரகாரம் ஷாபிஈ மத்ஹபின் சட்டங்களைப் பேணி காதிரிய்யா சிஷ்திய்யா
தரீக்கா மஷாயிகுமார்களின் வழிகாட்டளைப் பெற்ற தகுதிமிக்க ஆலிம்களை உருவாக்குதல்
ஆ: பாடசாலைக் கல்வியுடன் இணைந்து ஷரீஆ கற்கையைக் கற்று தகுதியாக
வெளியாகக் கூடிய ஆலிம்களை உருவாக்குதல்
இ: ஏழை அநாதை மாணவர்களுக்கான முழுமையான ஷரீஆ வழிகாட்டல்
ஈ: சமூக சமய நலன் கருதி பிரதேச இளைஞர்களுக்கான பிரத்தியேக
மார்க்க வழிகாட்டலும் ஆலோசனை வழங்களும்
உ: நவீன தொழில்நுட்ப உபகரணங்கள் ஊடாக மார்க்கப் பிரச்சாரம்
செய்யும் தகுதிமிக்க தலை சிறந்த சமூகம் ஒன்றினை உருவாக்குதல்
எ: சுய கைத்தொழில் புரிந்தவர்களாக மார்க்கப் பிரச்சாரப் பணி
செய்யும் சமூக சமய அக்கறையுள்ள காலத்திற்குப் பொருத்தமான அறிஞர்களைத் தோற்றுவித்தல்.
செயற்பாடுகள்
|
அ: அரச அங்கீகாரம் பெற்ற அல்-ஆலிம் பாடத்திட்டத்தை
அமுல்படுத்தல்
ஆ: இஸ்லாமிய அறிவினை மேம்படுத்தும் பொருட்டு கல்லூரி மாணவர்களிடையே
போட்டி நிகழ்ச்சிகளை தோற்றுவித்து ஊக்கப்படுத்தி சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்குதல்.
இ: வறிய மாணவர்களுக்கு குர்ஆன், கிதாபுகள் அப்பியாசக் கொப்பிகள் உடுதுணிகள்
உணவு போன்றவற்றை இலவசமாக வழங்குதல்
ஈ:
இறைவனின்பால் நாட்டத்தை அதிகரிக்கும் நோக்குடன் நாட்டின் நலனுக்காக
மற்றும் அபிவிருத்திற்காக கல்லூரியிலும் வெளியிடங்களிலும் திக்ர் மற்றும் ஸலவாத்
துஆ
மஜ்லிஸ்களை ஏற்பாடு
செய்து நடத்தல்
உ:
இஸ்லாமிய ஷரீஆ சம்பந்தமான அறிவினையும் தரீகாவின் ஆன்மீக வழிமுறை
சம்மந்தமான அறிவினையும் வளர்க்கும் பொருட்டு மாணவர்கள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும்
பிரச்சாரங்களை ஏற்பாடு செய்து நடாத்துதல்.
ஊ:
ஆங்கிலம், சிங்களம், உர்து ஆகிய மொழிவிருத்திப் பாடங்களை போதித்தல்.
|
எ: G.C.E.O/L,
G.C.E.A/L ஆகிய பரீட்சைகளுக்கு பூரணவழிகாட்டுதல். மற்றும் , இலங்கை பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக் குழுவினரால் (UGC) அங்கீகாரம் பெற்ற பட்டம் பெற வழிகாட்டுதல் .
|


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக