திங்கள், 7 ஜனவரி, 2019

நான் அருளன்றி வேறில்லை

நான் அருளன்றி வேறில்லை


நாம் உங்களை அருளாகத்தான் அனுப்பி வைத்தோம்” என்று அல்குர்ஆனும் “நான் அருளாகத்தான் அனுப்பி வைக்கப்பட்டுள்ளேன்” என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களும் நவின்றுள்ளதை நாம் அறிவோம். அதனடிப்படையில் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் எந்தெந்த அமைப்பில் அருளாக இருக்கின்றார்கள் என்பதற்கான ஒரு சில தகவல்களை இங்கே பதிவிடுகின்றொம். படித்துப் பயன் பெறுங்கள். 

ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் பிறப்பு பரக்கத்தாகும்.

“அல்ஹாபிழ் தஹபி அவர்கள் ஸியர் அஃலாமிந் நுபலாயி என்ற நூலில்“நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் மீலாத் முபாரக்கானதாகும்” என்று பதிவு செய்துள்ளார்கள்.”

நபிமார்கள் பிறந்த இடத்தின் மூலமாக அருள் பெறுதல்



عدل إلي عبد الله بن عمر رضي الله عنهما وأنا نازل تحت سرحة بطريق مكة فقال ما أنزلك تحت هذه الشجرة فقلت انزلني ظلها قال عبد الله فقال رسول الله صلى الله عليه وآله وسلم إذا كنت بين الأخشبين من منى ونفخ بيده نحو المشرق فإن هناك واديا يقال له السرربه سرحة سر تحتها سبعون نبيا.   

“நபித் தோழர் முஹம்மத் பின் இம்ரான் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் தன்னுடைய தகப்பன் சொன்னதொரு தகவலை இவ்வாறு சொல்கின்றார்கள். நான் மக்கா முகர்ரமாவின் வழியில் தென்பட்ட பெரியதொரு மர நிழலின் கீழ் தங்கினேன். இவ்விடத்தில் தங்கியதற்கான காரணம் என்னவென்று நபித் தோழர் ஹழ்ரத் ஸெய்யிதுனா இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அன்னவர்கள் என்னிடம் கேட்டார்கள். நிழல் பெறுவதற்காகவே தங்கினேன் என்று கூறினேன். நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் மினாவில் இருக்கும் சந்தர்ப்பத்தில் கிழக்குப் பகுதியில் ஸரர் என்றதொரு பள்ளத்தாக்கு இருக்கிறது. அங்கே பெரியதொரு மரம் உள்ளது. அவ்விடத்தில் எழுபது நபிமார்கள் பிறந்திருக்கின்றார்கள் என்று கூறியதாகச் சொன்னார்கள்.”
 பார்க்க : முவத்தா, நசாயீ, தம்ஹீது, பைஹகீ, இப்னு ஹிப்பான்.”

நபிமார்கள் பிறந்த இடங்களில் நமது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் தொழுது அவ்விடங்களை சங்கைப்படுத்தி இருந்துள்ளதுடன் தமது அருமைத் தோழர்களுக்கும் அவ்வாறான இடங்களை அடையாளப்படுத்திக் காண்பித்துள்ளார்கள். ஸஹாபாக்களும் அவ்வாறான இடங்களை தரிசித்து அருள் பெற்றிருக்கிறார்கள்

இமாம்களான ஸர்கானி, இப்னு அப்துல் பர்ரு ஆகியோர், நபிமார்கள் மற்றும் நல்லடியார்களுடன் தொடர்புள்ள இடங்களில் பரகத் இருக்கிறது. எனவே அவ்விடங்களில் பரகத் பெற முடியும் என்று இந்த ஹதீதை ஆதாரம் காண்பிக்கின்றார்கள்.
பார்க்க: அத்தபர்ருக் - உமர் அப்துல்லாஹ் காமில் பக்கம் 48

அல்லாஹ்வின் தூதர் நாயகம் முஜ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் அல்லாஹ்வின் பேரருளாகும். அவர்களின் உம்மத்தினர்களாக நாம் இருப்பது அல்லாஹ் நமக்களித்த பேருபகாரமாகும். உம்மதுன் மர்ஹுமதுன் - அருள்பாளிக்கப்பட்ட உம்மத் என்று இந்த சமூகத்திற்கு சொல்லப்படுகின்றது. ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களுடன் தொடர்பு பெறுகின்ற சகலதும் சிறப்பானது சங்கையானதென்பதற்கு இதை விட வேறு என்ன ஆதாரம் வேண்டும்.

ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் எதையெல்லாம் தன்னுடையது என்று அடையாளம் செய்து வைத்தார்களோ அவை அனைத்திற்கும் அருமைத் தோழர்களான ஸஹாபாக்கள் சங்கை செய்து அதனூடாக பரகத் பெற்றிருக்கின்றார்கள்.

ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லமவர்கள் மண்ணின் மேற் புறத்தில் வாழும் காலப் பகுதியில் மட்டும்தான் அவர்களினூடாகவோ அவர்கள் உபயோகித்த பொருட்களினூடாகவோ அருள் பெறலாமே தவிர மரணத்தின் பின்னர் பரகத் பெற முடியாதென்ற நிலைப்பாடு அருமைத் தோழர்களிடம் இருந்திருக்கவில்லை.

மண்ணின் மேற்புறத்தில் வாழும் ஒருவர் மற்றும் அவருடன் தொடர்புள்ள பொருட்களினால் பரகத் பெற முடிவயுமானால் அவர் மண்ணின் உற்புறத்தில் வாழச் சென்ற பின்னரும் அவர் பரகத் பெறப்படத் தகுதி பெறுகிறார். இதனடிப்படையில் அவரது நிரந்த இல்லமான கப்ரின் மூலமும் அருள் பெறலாம். இதுதான் இஸ்லாமிய ஆழமான சிந்தனை. இதனால்தான் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் திரு மேனியைச் சுமக்கும் பாக்கியம் பெற்ற மதீனத்து மண்ணானது அர்ஷை விடச் சிறந்ததென்று அவர்கள் சொன்னார்கள். ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் பிறந்த இடம் மட்டுமல்ல மறைந்த இடமும் மகத்தானது.

ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் நாமம் அருளாகும்.


وعزتي وجلالي لا أعذب أحدا تسمى باسمك فى النار. السيرة الحلبية

“நபியே நாயகமே உங்கள் நாமத்தைச் சூட்டியவரை நான் நரகில் தண்டிக்கமாட்டேன் என்று அல்லாஹ் சத்தியமிட்டுக் கூறினான் என்றார்கள் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள்.” 
அஸ்ஸீரதுல் ஹலபிய்யா

ما اجتمع قوم قط فى مشورة معهم رجل اسمه محمد لم يدخلوه فى مشورتهم إلا لم يبارك لهم. السيرة الحلبية

“முஹம்மத் என்ற பெயர் சூட்டப்பட்ட ஒருவர் கலந்து கொள்ளும் ஆலோசனை சபையானது அருள் பெற்ற சபையாகும் என்றார்கள் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள்.”
அஸ்ஸீரதுல் ஹலபிய்யா

ما كان فى أهل بيت اسم محمد إلا كثرت بركته. فيض القدير

“முஹம்மத் என்ற பெயர் உள்ள வீட்டில் அருள் அதிகரிக்கும் என இமாமுனா மாலிக் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறியுள்ளார்கள்.”
 ஃபைழுல் கதீர்

ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லமவர்கள் பிறருக்குப் பெயர் சூட்டுவதன் மூலமாக அருள் பெறுதல்

عن عائشة رضي الله تعالى عنها أن رسول الله صلى الله عليه وآله وسلم كان يؤتى بالصبيان فيبرك عليهم ويحنكهم. 
البخاري ومسلم

“நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களிடம் குழந்தைகள் கொண்டு வரப்பட்டு அருள் பெற்று செல்லப்படும். இன்னும் தஹ்னீகும் செய்யப்படும்.” புகாரி முஸ்லிம்

إن كل مولود ولد فى حياته عليه أفضل الصلاة والسلام بالمدينة المنورة كان يؤتى به إليه ليحنكه

“நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் மதீனா முனவ்வறாவில் வாழ்ந்த காலப் பகுதியில் அப்பிரதேசத்தில் பிறந்த சகல குழந்தைகளும் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களிடம் கொண்டு வரப்பட்டு தஹ்னீக் செய்து அருள் பெறப்பட்டிருக்கின்றது.”

தஹ்னீக் என்றால் என்ன?

குழந்தையொன்று பிறந்ததும் அதற்கு தாய் பாலூட்டுவதற்கு முன் நபிமார் மற்றும் நல்லடியார்களின் மடியில் அக்குழந்தை வைக்கப்பட்டு ஈத்தம் பழம் அல்லது ஏதாவதொரு இனிப்புப் பண்டம் அப்பெரியாரின் உமிழ் நீரில் கலக்கப்பட்டு மெண்று அக்குழந்தைக்கு ஊட்டுதலுக்குப் பெயர் தஹ்னீக் ஆகும். 

வலது காதில் அதானும் இடது காதில் இகாமத்தும் சொல்ல முடியும். அல்லது குழந்தையின் தலையினைத் தடாவி ஓதி ஊதிப் பார்க்கவும் முடியும். எப்படியோ பிறக்கும் குழந்தையில் முதன் முதலில் யாரொவொரு நல்லடியாரின் கரம் பட வேண்டும். இதில் அருள் இருக்கிறது. நல்லடியார்களின் அருள் பெற்ற அக்குழந்தைகள் நற்பிரஜைகளாக சமூகத்தில் காணப்பட்டனர். பாமரர்களாக அவர்கள் காணப்பட்டாலும் அவர்களிடம் நல்லொழுக்கம் நிறைந்து காணப்பட்டது. ஆனால் தற்காலத்தில் இது சமூகத்தில் இருந்து வழி கெட்ட கூட்டங்களின் ஊடுருவலால் அழிந்து போய் விட்டது. அதனால் கட்டுக்கடங்காத சொற் பேச்சு கேட்காத ஒழுக்கமற்ற குழந்தைகளாக இன்றைய குழந்தைகள் காணப்படுகிறார்கள். 

ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்களின் துப்பலின் மூலமாக அருள் பெறுதல்

والله إن تنخم نخامة إلا وقعت فى كف رجل منهم فدلك بها وجهه وجلده. البخاري

“அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் சளி துப்பினால் உடனே அதை ஸஹாபாக்களில் ஒருவர் தன் கையில் பிடித்து தன் முகத்திலும் மேனியிலும் தேய்த்துக் கொள்வார்.”
புகாரி

ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் ஆடையின் மூலமாக அருள் பெறுதல்


فقال رجوت بركتها حين لبسها النبي صلى الله عليه وآله وسلم لعلي أكفن بها. البخاري

“ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் அணிந்த ஆடை எனது கபன் ஆடையாக ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டேன் என்றார்.”புகாரி

عن أسماء بنت أبي بكر رضي الله تعالى عنها قالت جبة رسول الله صلى الله عليه وآله وسلم كانت عند عائشة رضي الله عنها حتى قبضت فلما قبضت قبضتها وكان النبي صلى الله عليه وآله وسلم يلبسها فنحن نغسلها للمرضى يستشفي بها. مسلم

“நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் அணிந்திருந்த ஜுப்பா ஒன்று ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களிடம் இருந்தது. அவர் மரணமான பின் அதை நான் கைப்பற்றிக் கொண்டேன். அதனை நாங்கள் கழுவி நோயாளிகளுக்குக் கொடுத்து நிவாரணம் பெறுவோம் என்று அஸ்மா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கின்றார்கள்.” முஸ்லிம்

ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் கரத்தினூடாக அருள் பெறுதல்


عن أنس رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وآله وسلم إذا صلى الغداة جاء خدم المدينة بآنيتهم فيها الماء فما يؤتى بإناء إلا غمس يده فيه. مسلم

“அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் அதிகாலைத் தொழுகையை தொழுது முடித்ததும் மதீனாவின் பணியாளர்கள் தண்ணீருள்ள பாத்திரங்களைக் கொண்டு வருவார்கள். கொண்டு வரப்படும் ஒவ்வொரு பாத்திரத்தினுள்ளும் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் தனது கையை மூழ்கச் செய்வார்கள்.”
முஸ்லிம்

أن النبي صلى الله عليه وآله وسلم أعطى إمرة من غفار قلادة ووضعها بيده فى عنقها قالت لا تفارقني فلما ماتت أوصت أن تدفن معها. أحمد

“அபூதர் அல்கிபாரீ ரழியல்லாஹு அன்ஹு அன்னவர்களின் மனைவிக்கு நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் தங்களது கரத்தினால் அணிவித்த மாலையை தன்னை விட்டும் பிரிக்கக்கூடாதென்றும் மரணித்த பின் அதனுடன் நல்லடக்கம் செய்யப்பட வேண்டும் என்றும் வஸிய்யத் செய்திருந்தார்கள்.”அஹ்மத்

ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களைத் தொட்ட கரத்தின் மூலமாக அருள் பெறுதல்


قال ثابت لأنس رضي الله تعالى عنه أمسست النبي صلى الله عليه وآله وسلم بيدك؟ قال نعم فقبلها. البخاري فى الأدب المفرد

“நீங்கள் உங்கள் கரத்தினால் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களைத் தொட்டீர்களா? என்று ஹழ்ரத் தாபித் அவர்கள் நபித் தோழர் அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அன்னவர்களிடம் கேட்டார். ஆம் என்றதும் நபித் தோழரின் கரத்தினை அவர் முத்திக் கொண்டார்.” 
அதபுல் முப்ரத்

ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களைக் கண்ட கண்ணின் மூலமாக அருள் பெறுதல்.



உங்களது கண்கள் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களைக் கண்ட கண்கள் என்று கூறி நபித் தோழர் அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் கண்கள் முத்தப்பட்டிருக்கிறது. அவ்வாறே இடுப்புப் பகுதி முத்தப்பட்டிருக்கிறது.

நபித்தோழர் ஹழ்ரத் ஹன்ழலா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் சிறுவராக இருக்கும்போது அவரது தலையைத் தடாவி விட்டு அல்லாஹ் உங்களுக்கு அருள் புரியட்டும் என்று ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் துஆ செய்திருந்தார்கள். அவ்வாறு துஆ பரக்கத்தினைப் பெற்றுக் கொண்ட தோழரிடம் நோயாளிகள் வந்து அருள் பெற்றுச் சென்றிருக்கிறார்கள். 
பார்க்க: தபரானீ, அஹ்மத், மஜ்மஉஸ் ஸவாயித். அஷ்ஷர்ஹுல் கவீம் ஃபீ ஹல்லி அல்ஃபாழிஸ் ஸிராத்தில் முஸ்தகீம் பக்கம் 579.

ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் வியர்வை மூலமாக அருள் பெறுதல்


نرجو بركته لصبياننا. مسلم

“அல்லாஹ்வின் தூதரே! அதன் (வியர்வையின்) அருளை எங்கள் குழந்தைகளுக்காக எதிர்பாக்கிறொம் என்று கூறினார்.”
முஸ்லிம்


ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் திரு முடியின் மூலமாக அருள் பெறுதல்


நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் தமது முடிகளை அருமைத் தோழர்களுக்கு பங்கீடு செய்திருக்கிறார்கள். அவர்களின் ஒரு முடியாவது தனக்கு கிடைக்க வேண்டும் என்று தோழர்கள் ஆசைப்பட்டிருக்கிறார்கள். அவ்வாறு ஒரு முடி இருக்குமாக இருந்தால் அது உலகம் அதிலுள்ளவற்றுக்களை விடச் சிறந்ததாக தோழர்கள் கருதியிருக்கிறார்கள். அதனைத் தோழர்கள் பாதுகாத்து வந்திருக்கிறார்கள். அதனை தண்ணீருள் விட்டெடுத்து அத்தண்ணீரை நோயாளிகளிக்கு மருந்தாக பருகக் கொடுத்தும் இருக்கிறார்கள்.

ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் வுழுச் செய்த நீரின் மூலமாக அருள் பெறுதல்


ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் வுழுச் செய்த தண்ணீரை பெற்றுக் கொள்வதில் தோழர்கள் போட்டி போட்டுக் கொள்வார்கள். யார் அந்த தண்ணீரைப் பெறுகிறாரோ அவர் அதை தனது உடம்பில் தடவிக் கொள்வார். யாருக்கு தண்ணீர் கிடைக்கவில்லையோ அவர் தண்ணீர் கிடைக்கப்பெற்ற தனது நண்பரின் கையில் உள்ள ஈரத்தை தொட்டுத் தடவிக் கொள்வார்.

ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் இரத்தத்தின் மூலமாக அருள் பெறுதல்


நபித் தோழர்களான மாலிக் பின் சினான், அபூ தைபா, அப்துல்லாஹ் பின் ஸுபைர், அலி ரழியல்லாஹு அன்ஹும் போன்ற பலர் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் இரத்தத்தினைக் குடித்து அருள் பெற்றிருக்கிறார்கள். அவ்வாறு குடித்தவர்களுக்கு நரகம் தீண்டாது. வியாதிகள் மற்றும் பிற கஷ்டங்கள் வராது என்று ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் தனது இரத்தத்தினைக் குடித்தவர்களுக்கு சுபச் செய்தியும் கூறியிருக்கிறார்கள்.
பார்க்க: உசுதுல் காபா, அஸ்ஸீரதுல் ஹலபிய்யா, அல் இஸாபா, அஷ்ஷிஃபா, அல்இஸாபா

ذكر العلامة القسطلاني رحمه الله فى المواهب اللدنية نقلا عن كتاب الجوهر المكنون فى ذكر القبائل والبطون أنه لما شرب عبد الله بن الزبير دمه صلى الله عليه وآله وسلم تضوع فمه مسكا وبقيت رائحته موجودة فى فمه إلى أن صلب رضي الله عنه

“நபித் தோழர் இப்னு ஷுபைர் ரழியல்லாஹு அன்ஹு அன்னவர்கள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் இரத்தத்தினை குடித்ததைத் தொடர்ந்து அவரது வாயிலிருந்து கஸ்தூரியின் வாடை வீசத் தொடங்கிவிட்டது. அந்த வாடை அவர் சிலுவையில் அறையப்படும் வரை அவரில் காணப்பட்டதென்ற தகவலை அல்லாமா கஸ்தலானீ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் அல் ஜௌஹருல் மக்னூன் என்ற நூலை மேற்கோள் காட்டி தனது மவாஹிப் என்ற நூலில் பதிவு செய்துள்ளார்.”

ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் சிறு நீரின் மூலமாக அருள் பெறுதல்


ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் திரு மேனியில் இருந்து வெளிப்பட்ட எந்தவொரு பொருளும் அசுத்தமானதல்ல. இதுவே ஆய்வாளர்களின் அறிக்கையாகும். ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் மலஜலம் என்பன சுத்தமானதாகும். இதற்கு நிறைய ஆதாரங்கள் இருப்பதாக அல்ஹாபிழ் இப்னு ஹஜர் அல்ஹைதமீ அவர்கள் கூறுகின்றார்கள். இதற்கான நபி மொழி தபரானி மற்றும் பைஹகீ இப்னு அப்துல் பர்ரு தாரகுத்னீ அபூ நுஐம் ஹாகிம் ஆகியோர்அறிவிப்புச் செய்துள்ளனர்.

عن أم أيمن رضي الله عنها شربت بوله صلى الله عليه وآله وسلم فقال لها أما والله لا تلج النار بطنك ولم ينكر عليها

“உம்மு ஐமன் ரழியல்லாஹு அன்ஹா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் ஜலத்தினைக் குடித்திருக்கிறார்கள். இதை அறிந்த ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் உமது வயிற்றினை நெருப்புத் தீண்டாது என்று கூறினார்கள். அதனை நிராகரிக்கவில்லை.” தல்கீசுல் ஹிப்யர், அல்இஸாபா

இதுவொரு ஹஸனான ஸஹீஹான ஹதீத் என்கிறார் இமாம் தாரகுத்னீ அவர்கள். இமாம்களான காழீ ஹுஸைன்இ பகவீஇ சுப்கீ, பாரிஸீ, ஸர்கஸீ, இப்னுர் ரிப்ஆ, புல்கீனீ, ரமலீ, ஸர்கானீ, இப்னுல் அரபீ, பத்ருத்தீன் ஐனீ, இப்னு ஹஜர் அஸ்கலானீ ஆகியோர் மேற்கூறிய பொருள் சுத்தமானது என்று கூறுகின்றார்கள்.
 பார்க்க: அத்தபர்ருகு பிஸ்ஸாலிஹீன - ஹிஷாம் பின் முஹம்மத்


ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் பாதத்தின் வாயிலாக அருள் பெறுதல்


بخير قد اصابته بركتك


நபித் தோழர் ஸெய்யிதுனா ஜாபிர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிப்பதாவது: “நான் எனது பலவீனமான நடக்க இயலாத ஒட்டகத்தில் பயணம் செய்து ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களுடன் யுத்தம் ஒன்றில் கலந்து கொண்டேன். ஒட்டகத்தின் நிலையைக் கேட்டறிந்து விட்டு அதன் மீது ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் தமது பாதத்தினால் அடித்து விட்டு துஆச் செய்தார்கள். உடனே அது வேகமாகச் செல்ல ஆரம்பித்தது. அச்சந்தர்ப்பத்தில் தோழரிடம் உமது ஒட்டகத்தின் தற்போதைய நிலை எவ்வாறு உள்ளதென்று விசாரிக்கின்றார்கள். அதற்கு உங்கள் அருளால் அது தேறிவிட்டதென்று கூறினார்கள்.”
புகாரி, முஸ்லிம்
தொடரும்..........

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கட்டுரைகள்

“வஹ்ஹாபிகள்” இந்தக் காலத்தின் “க்வாரிஜ்கள்”

  இப்னு அப்தில் வஹ்ஹாபும் இப்னு தைமிய்யாவும்   இப்னு தைமிய்யா என்ற தனி நபரால் விதைக்கப்பட்ட பொய்யான, பிழையான, மார்க்கத்துக்கு ...