வெள்ளி, 4 ஜனவரி, 2019

தபர்ருக்கும் நபிமார்களும்.

தபர்ருக்கும் நபிமார்களும்.


அல்லாஹ்வால் தெரிவு செய்யப்பட்டு கண்ணியப்படுத்தப்பட்ட மேற்சொன்ன பொருட்கள் வாயிலாக பிறர் அருள் பெறுவதற்கு ஏதேனும் ஆதாரம் இருக்கின்றதா?அல்லது இல்லையா? என்ற வினாக்களுக்கான விடையினைஇத்தலைப்பில் நாம் காண இருக்கின்றொம்.

அந்த வகையில் நபிய்யுல்லாஹ் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் அவர்களது குடும்பத்தினரும் அருள் பொருந்தியவர்கள் என்று கூறப்பட்டதை நாம் படித்தோம். அவ்வாறே அவர்களுக்கு முந்திய நபிமார்களில் நபியுல்லாஹ் நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களையூம் அவர்களை விசுவாசித்தவர்களையும் அருள் பொருந்தியவர்கள் என்று கூறப்பட்டதையும் படித்தோம்.

இதில் நபியூல்லாஹ் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களது புதல்வர்களான இஸ்ஹாக் மற்றும் இஸ்மாயீல் ஆகிய இரு நபிமார்களில் இஸ்ஹாக் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பரம்பரையில் சுமார்ஆயிரம் நபிமார்கள் தோன்றியிருக்கிறார்கள். அவர்களில் முதல் நபியாக யஃகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் இறுதி நபியாக ஈசா அலைஹிஸ்ஸலாம் அவர்களும் காணப்படுகிறார்கள்.

நபிமார்களான யஃகூப் மற்றும் ஈசா (அலைஹிமஸ்ஸலாம்) ஆகிய இவ்விருவருக்கும் இடைப்பட்ட நபிமார்களில் மூசா, ஹாரூன், லூத் ஆகியோர் உள்ளடங்குகின்றனர். இவர்களும் அருள்பாளிக்கப்பட்டவர்கள் என்றே அல்குர்ஆன் அறிவித்து விட்டது. நபியுல்லாஹ் இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பரம்பரையில் தோன்றிய ஒரேயொரு நபி நமது நாயகம் முஜ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் மாத்திரமே ஆகும்.

நபியுல்லாஹ் யஃகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தனது புதல்வர் நபியுல்லாஹ் யூசுப் அலைஹிஸ்ஸலாம் அவர்களை இழந்த கவலையில் அழுதழுது கண் பார்வையினை இழந்து விடுகிறார்கள். அவ்வாறு இழந்த கண்ணின் பார்வை மீண்டது பற்றி அல்குர்ஆன் அறிக்கையிடும் போது

اذهبوا بقميصي هذا فالقوه على وجه ابي يأت بصيرا. يوسف 93

“எனது இந்த சட்டையைக் கொண்டு சென்று எனது தந்தையின் முகத்தில் அதனைப் போடுங்கள். அவர் பார்வையுடையவராக ஆகிவிடுவார்.”
யூசுப் வசனம் 93

فلما ان جاء البشير القاه على وجهه فارتد بصيرا. يوسف 96

“நன்மாராயம் கூறுபவH வந்து (சட்டையை) இவரது முகத்தில் போட்டபோது இவர் மீண்டும் பார்வையுடையவராக மாறினார்.”
யூசுப் வசனம் 96

நபி யஃகூப் அவர்களின் கண் பார்வை நபி யூசுப் அவர்கள் அணிந்திருந்த சட்டையினால்தான் மீண்டது என்பதனை அல்குர்ஆன் தெளிவாகச் சொன்னது.

நபியுல்லாஹ் யூசுப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தனது தந்தையிடம் அனுப்பி வைத்த சட்டையானது அவரது தந்தை அவருக்கு அணிவித்த சட்டைதானே தவிர அது வேறில்லை. தான் அணிவித்த சட்டையை புதல்வர் அனுப்பி வைத்து அதன் மூலம் கண் பார்வை மீள வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? தன்னிடம் இருந்த பிற ஆடைகளில் ஒன்றைக்கண்ணில் வைத்து அதன் மூலமாக கண் பார்வையை அவர்மீள வைத்திருக்கலாம் அல்லவா?

தந்தையால் அணிவிக்கப்பட்ட சட்டையினை புதல்வர் வெள்ளிப் பாத்திரமொன்றில் வைத்து பாதுகாத்து வந்ததுடன் தனது கழுத்தில் அதனை அணிந்தும் இருக்கின்றார்கள். நபியுல்லாஹ் யூசுப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மாமியும் இன்னும் பலரும் அதற்கு மதிப்பளித்து வந்திருக்கின்றார்களே! அது ஏன்? என்றால்இ அது நபி யூசுபின் பாட்டனார் நபியுல்லாஹ் இஸ்ஹாக் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அணிந்திருந்த சட்டையாகும் என்று தெரிய வந்தது. அதாவது நபி இஸ்ஹாக் அவர்கள் தனது புதல்வர் யஃகூபுக்கு அணிவித்த சட்டையை அவர் தனது புதல்வர் யூசுபுக்கு அணிவித்திருக்கிறார். அப்படியானால் இஸ்ஹாக் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அணிவித்த அந்தச் சட்டை யாருடையதாக இருக்கும்?

இவ்வாறு ஒரு நபி மற்றொரு நபி உபயோகித்த பொருட்களைப் பாதுகாத்து வந்துள்ளதுடன் அதன் மூலமாக அருள் பெற்றிருப்பதையும் காண முடிகிறது. அருள்பாளிக்கப்பட்டவர்களின் பொருட்கள் அருள் பொருந்தியது. அதனூடாக பிறர்கள் அருள் பெறலாம் என்று நபிமார்கள் நம்பி இருந்தார்கள் என்று சொல்வதை விட தொலைந்து போன பார்வை சட்டையின் அருளினால் மீளும் என்று உறுதியாக நம்பியும் இருந்திருக்கின்றார்கள். அந்த நம்பிக்கைதான் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்தினரின் நம்பிக்கை.

وقال لهم نبيهم إن آية ملكه أن يأتيكم التابوت فيه سكينة من ربكم ويقية مما ترك آل موسى وآل هارون تحمله الملائكة إن فى ذلك لآية إن كنتم مؤمنين.
 سورة البقرة 246  

“நிச்சயமாக அவரது ஆட்சிக்கான அடையாளமாவது வானவர்கள் சுமந்து வரும் பேழை உங்களிடம் வருவதாகும். அதற்குள் உங்கள் இரட்சகனிடமிருந்து உங்களுக்கு மன அமைதியூம் மூசா, ஹாரூன் குடும்பத்தினர் விட்டுச் சென்றதில் எஞ்சியவைகளும் இருக்கும்.” அல்பகரா வசனம் 246

பேழை என்ற கருத்துக்குரிய “தாபூத்” என்ற சொல் மேற்கூறிய அத்தியாயத்தில் பதிவாகியூள்ளதுபோன்று அல்குர்ஆனின் தாஹா அத்தியாயத்தின் 38-39ஆம் வசனங்களிலும் பின்வருமாறு இடம் பெறுகிறது.

إذ أوحينا إلى أمك ما يوحى  أن اقذفيه فى التابوت فاقذ فيه فى اليمِّ فَلْيُلقه اليمُّ بالساحل يأخذْه عدو لى وعدو له وألقيتُ عليك محبة منى ولتُصنع على عيني.طه 38-39

“அறிவிக்கப்பட வேண்டியவற்றை உமது தாயாருக்கு நாம் அறிவித்ததை (எண்ணிப்பார்ப்பீராக). (குழந்தையை) பேழையில் வைத்து அதைக் கடலில் போடுவீராக!.”தாஹா வசனம் 38-39

நபியுல்லாஹ் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பால் குடிக்கும் குழந்தையாக இருக்கும் போது பேழையில் வைத்து கடலில் போடுமாறு தாயாருக்கு அல்லாஹ் வஹி அறிவித்ததாகச் சொல்கின்ற இவ்வசனத்தில் உள்ள பேழைதான் அல் பகரா  அத்தியாயத்தில் அமரர்கள் சுமந்து வருவதாகச் சொல்லப்பட்ட பேழையா? என்று கேட்டால் ஆம் என்கிறார் அல்லாமா ஷஃராவீ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள்.

அப்படியென்றால் யஃகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பரம்பரையைச் சேர்ந்த நபிமார்களான மூஸா மற்றும் ஹாரூன் அலைஹிஸ்ஸலாம் ஆகிய இருவரும் பாவித்த பொருட்கள் வைக்கப்பட்டிருந்த பேழை ஏற்கனவே மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தயாரிடம் இருந்திருக்கிறது என்பது புரிகிறது.

நபியுல்லாஹ் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தாயாரினால் பாதுகாக்கப்பட்டிருந்த அந்தப் பேழையின் பரக்கத்தினால் பால் குடிக்கும் குழந்தையாக இருந்த பருவத்தில் எதிரிகளிடமிருந்து பாதுகாப்புப் பெற்றதுபோல அந்தப் பேழை பின்னர் நபியவர்கள் கைவசம் இருந்திருக்கிறது. அதே பேழையின் பரக்கத்தினால் மீண்டுமொரு தடவை நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் எதிரிகளின் ஆபத்துக்களில் இருந்து பாதுகாப்பு பெற்றதாகவும் அல்லாமா ஷஃராவீ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் குறிப்பிடுகிறார்கள். அதாவது பால் குடிக்கும் பாலகனாக இருந்த போது பிர்அவ்னின் பிடியிலிருந்து பாதுகாப்பு பெற்றது போன்று பிர்அவ்ன் கடலில் மூழ்கடிக்கப்பட்டபோதும் பாதுகாப்பு பெற்றார்கள் என்பதாகும்.

இவ்வாறு எந்தப் பேழையின் பரக்கத்தினால் நபியவர்கள் இரு தடவைகள் எதிரிகளின் பிடியில் இருந்து பாதுகாப்புப் பெற்றார்களோ அதே பேழையை அல்லாஹ் அமரர்கள் மூலமாக பாதுகாத்து வந்திருக்கின்றான். அதன் அருளால் இஸ்ரவேலர்கள் எதிரிகளின் பிடியிலிருந்து பாதுகாக்கப்பட்டு வந்திருக்கிறார்கள்.

அந்தப் பேழையில் அல்லாஹ்வின் அருளும் நபிமார்களான மூஸா மற்றும் ஹாரூன் அலைஹிஸ்ஸலாம் ஆகிய இருவரின் குடும்பத்தினர்கள் விட்டுச் சென்றதில் எஞ்சிய பொருட்கள் இருந்ததாக கூறும் இறை வசனத்திற்கு விளக்கமளிக்கும் அறிஞர்கள்அதில் அவ்விரு நபிமார்களின் பாதணிகள், தடி, ஆடைகள்,  தலைப்பாகை, உணவுப் பொருட்கள் என்பனவற்றுடன் நபிமார்களின் உள்ளங்கள் கழுவுவதற்கு உபயோகம் செய்யப்பட்ட படிக்கம்இநபிமார்களின் உருவப் படங்கள் போன்ற வஸ்துக்கள் இருந்ததாகக் குறிப்பிடுகின்றனர்.

இது நபியுல்லாஹ் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு அல்லாஹ் அனுப்பி வைத்த பேழையாகும். அதில் அவரது புதல்வர்களில் யார் யார் நபிமார்களாக அனுப்பப்படவுள்ளார்களோ அவர்களின் உருவப் படங்கள் இருந்திருக்கிறது. அது ஒருவர் பின் ஒருவராக கைமாறி இறுதியாக பனூ இஸ்ரவேலர்கள் கைவசம் வந்தடைந்தது. அவர்களோ அதனை அசிங்கப்படுத்தினார்கள்.மலஜலம் கழிக்கும் இடங்களில் அதனைக் கொண்டு வைத்து கேவலப்படுத்தினார்கள். அதன் மேல் மலஜலம் கழிக்கவூம் செய்தனர். இதனால் அது மறைக்கப்பட்டு விட்டது.

நபிமார்களின் உருவப் படங்கள், அவர்கள் அணிந்த செருப்பு, தலைப்பாகை, கம்பு போன்ற பொருட்கள் அருள் பொருந்திய பொருட்கள் என்றால் அந்த நபிமார்கள் நல்லடக்கம் செய்யப்பட்ட கப்ருகள் ஏன் அருள் பொருந்திய இடங்களாக இருக்கக் கூடாது?

நபிமார்கள் நல்லடக்கம் செய்யப்பட்ட கப்ருகளும் அருள் பொருந்திய இடங்களாகவே அடையாளப்படுத்தப்பட்டிருந்தது.

அதனை இஸ்ரவேலர்கள் அசிங்கப்படுத்தினாருகள். நபிமார்களின் கப்ருகளுக்கு அவர்கள் சுஜுத் செய்து அஅநியாயக்காரர்கள்  ஆகிக் கொண்டார்கள்.

அருள் பொருந்தியதொரு பொருள் அசிங்கப்படுத்தப்படுகின்ற போது அப்பொருள் அவ்விடத்தில் இருந்து அகற்றப்பட்டு அல்லாஹ்வால் பாதுகாக்கப்படுகின்றது என்ற அல்குர்ஆனின் அடிப்படையில் நபிமார் மற்றும் வலிமார்கள் கப்ருகள் கேவலப்படுத்தப்படுகின்றபோது அங்கே நல்லடக்கம் செய்யப்பட்ட நபிமார்கள் மற்றும் ஸாலிஹீன்களுக்கு இடமாற்றம் ஏற்படுகின்றதென்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

நபிமார் மற்றும் ஸாலிஹீன்களின் பொருட்களின் பொருட்டினால் பிரார்த்தனைகள் அங்கீகரிக்கப்படும் என்பதை பனூ இஸ்ரவேலர்கள் கண்கூடாகக் கண்ட காட்சிகளாகும். அப்பொருட்கள் பாதுகாக்கப்படும் வரை அவர்களுக்கு தோல்விதானே தவிர வெற்றி என்பதில்லை என்பதையும் அவர்கள் அனுபவ ரீதியாகப் பார்த்தவர்கள். அதனால்தான் அன்று தொடக்கம் இன்று வரை அருள் பொருந்திய பொருட்களை பரம்பர பரம்பரையாக அசிங்கப்படுத்தி வருகின்றார்கள். அந்த பரம்பரையின் மாறு வேடமே வஹ்ஹாபிஷம் என்பதாகும்.

நபியுல்லாஹ் இஸ்ஹாக் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வம்சத்தில் தோன்றிய இறுதி நபியாக ஈசா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் விளங்குகின்றார்கள். தன்னை அருள் பொருந்திய ஒருவராக அல்லாஹ் ஆக்கிக்கொண்டான் என்ற அல்குர்ஆனின் கூற்றினடிப்படையில் அவரது தாயான ஸெய்யிதா மர்யம் அலைஹஸ்ஸலாம் அவர்களும் அருள் பொருந்தியவர்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

ஒருவர் அருள்பாளிக்கப்பட்டவராக இருந்தால் அவரோடு தொடர்புள்ள யாவுமே அருள் பொருந்தியது தான். இதனடிப்படையில் மர்யம் அலைஹஸ்ஸலாம் அவர்கள் எந்த இடத்தில் தொழுது பிரார்த்தனை செய்தார்களோ அதே இடத்தில் நபியூல்லாஹ் ஸகரிய்யா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தொழுதிருக்கிறார்கள். அல்லாஹ்விடம் பிரார்த்தனையும் செய்திருக்கின்றார்கள். அப்பிரார்த்தனை அல்லாஹ்வினால் அங்கீகரிக்கப்பட்டும் இருக்கிறது. இது பற்றி அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது.

هنالك دعا زكريا ربه قال رب هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء فنادته الملائكة وهو قائم يصلي فى المحراب إن الله يبشرك بيحى.... آل عمران 38

“அங்கேதான் ஸகரிய்யா தன் இரட்சகனிடம் பிரார்த்தித்து என் இரட்சகனே! உன்னிடமிருந்து எனக்கு ஒரு பரிசுத்தமான சந்ததியைத் தந்தருள்வாயாக! நிச்சயமாக நீ பிரார்த்தனைகளைச் செவியூறுபவனாவாய் என்று கூறினார்”ஆல இம்ரான் வசனம் 38

மர்யம் அலைஹஸ்ஸலாம் அவர்கள் தொழுது பிரார்த்தனை செய்த அதே இடத்தில் ஸகரிய்யா அலைஹிஸ்ஸலாம் தொழுது பிரார்த்திக்க வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? என்று கேட்டால் இவழமைக்கு மாற்றமான அதிசய உணவூகளை மர்யம் அலைஹஸ்ஸலாம் அவர்களிடத்தில் இருப்பதை நபியுல்லாஹ் ஸகரிய்யா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் காணுகின்றார்கள். அவ்விடத்தில் தொழுது பிரார்த்தித்தால் வழமைக்கு மாற்றமாக முதுமை அடைந்த நமக்கும் குழந்தைகள் கிடைக்கலாம் என்று கருதி தொழுகின்றார்கள். அல்லாஹ்விடம் பிரார்த்திக்கின்றார்கள். அவ்வாறே அவர்கள்  நோக்கமும் அங்கு நிறைவேறுகிறது. இதற்குப் பெயர்தான் அருள் பெறுதல் என்பதாகும் என்று அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்தினர் விளக்கமளிக்கின்றனர்.

புதல்வர்  ஈசா அலைஹிஸ்ஸலாம் அவர்களை அல்லாஹ் பரகத் பொருந்தியவர்களாக தெரிவு செய்திருக்கின்றான் என்று அல்குர்ஆன் அறிக்கையிட்டிருக்கிறது. எனவே புதல்வர் அருள் பொருந்தியவர்  என்றால் அவரைப் பெற்றெடுத்த தாயும் அருள் பொருந்தியவர்தான் என்பதில் சந்தேகமில்லை. நபிமார்கள் அருள் பொருந்தியவர்கள் என்றால் (பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும் என்பது போல) அவர்களுடன் தொடர்புள்ள யாவும்  அருள் மிக்கதுதான் என அருள் பெற்ற அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் பெருமக்கள் இதற்கு விளக்கமளிக்கின்றனரா.

எனவே கடந்த கால நபிமார்களின் நினைவூச் சின்னங்களை அல்லாஹ் அமரர்கள் வாயிலாகப் பாதுகாத்து வந்திருக்கின்றான். நபிமார்களின் நினைவுச் சின்னங்கள் உள்ளடக்கப்பட்ட அப்பேழையை தனது அத்தாட்சி என்றும் அவன் அறிவித்துள்ளான். அதன் பொருட்டினால் நபிமார்கள் அருள் பெற்று வந்ததாகவும் கூறிவிட்டான்.

நமது நாயகம் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் விண்ணுலகப் பயணத்தின் போது அவர்களின்  இருதயமும் கழுவப்பட்டிருக்கிறது. அப்பொழுது அமரர்கள் படிக்கம் ஒன்றைக் கொண்டு வந்ததாகவும் நபி மொழிகளில் காண முடிகிறது. கடந்த கால நபிமார்களின் இருதயங்கள் கழுவுவதற்கு உபயோகம் செய்யப்பட்ட அந்த படிக்கம்தான் இந்த படிக்கமாகவும் இருந்திருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது. அல்லாஹு வரசூலுஹு அஃலமு.

(நாயகம் முஜ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் விண்ணுலகப் பயணத்தின் போது ஏறிச் சென்ற) புராக் வாகனம் என்பது நபிய்யுல்லாஹ் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பைத்துல் ஹராத்தினை தரிசிப்பதற்காக உபயோகம் செய்த வாகனம் என்று தப்சீர் தபரியில் பதிவாகியூள்ளது. பிற நபிமார்கள் ஏறிப் பயணம் செய்த வாகனம் என்றதொரு தகவலும் உள்ளது.

عن ابن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وآله وسلم صلى فى مسجد الخيف  سبعون نبيا. الطبراني والترمذي

மஸ்ஜிதுல் கைஃப் என்ற இறையில்லத்தில் நாயகம் முஜ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் தொழுதிருக்கின்றார்கள். எனவேஇ அவ்விறை இல்லத்தில் தொழுது கொள்வது ஸஷுன்னத்தாகும். காரணம் அவ்விடத்தில் எழுவது நபிமாHகள் தொழுதுள்ளாHகள் என்று ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவHகளே கூறியூள்ளாHகள்.

عن أنس بن مالك رضي الله عنه أن رسول الله صلى الله عليه وآله وسلم  قال أتيت بدابة فوق الحمار ودون البغل خطوها عند منتهى طرفها  فركبت ومعي جبريل عليه السلام فسرت فقال انزل فصل ففعلت فقال أتدري أين صليت صليت بطيبة وإليها المهاجر ثم قال انزل فصل فصليت فقال أتدري أني صليت صليت بطور سيناء حيث كلم الله عز وجل موسى عليه السلام ثم قال انزل فصل فنزلت فصليت فقال أتدري أين صليت صليت ببيت لحم حيث ولد عيسى عليه السلام   

“நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவHகள் தாம் எதிHகாலத்தில் இடம்பெயர இருக்கின்ற தைபா என்ற இடம்இ நபியூல்லாஹ் மூசா அலைஹிஸ்ஸலாம் அவHகள் அல்லாஹ்வூடன் சம்பாசித்த இடம்இ நபியூல்லாஹ் ஈசா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பிறந்த இடம் ஆகிய மூன்று இடங்களில் விண்ணுலகப் பயணத்தின் போது தொழுததாக ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் கூறியூள்ளார்கள்.” நசாயீ

أن الناس نزلوا مع رسول الله صلى الله عليه وآله وسلم أرض ثمود الحجر فاستسقوا من بئرها واعتجنوا به فأمرهم رسول الله صلى الله عليه وآله وسلم أن يهريقوا ما استقوا من بئرها وأن يعلفوا الإبل العجين وأمرهم أن يستقوا من البئر التي كانت تردها الناقة.     

“ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களும் தோழர்களும் தபூக் யுத்தத்திற்காக மேற்கொண்ட பயணத்தில் நபியுல்லாஹ் ஸாலிஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சமூக மக்களான ஸமூத் கூட்டத்தினர்ர்ஞவாழ்ந்த பகுதியில் தங்குகின்றார்கள். அப்பொழுது அம்மக்கள் உபயோகம் செய்த கிணற்று நீரை தோழர்கள் உபயோகித்துக்கொள்கிறர்கள். இதைக் கண்ணுற்ற கண்மனி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் அக்கிணற்று நீரை உபயோகத்திற்கு எடுத்துக்கௌ வேண்டாம் என்று தடுத்துவிட்டு நபியுல்லாஹ் ஸாலிஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் ஒட்டகம் நீர் அருந்திய கிணற்று நீரை உபயோகித்துக் கொள்ளுமாறு பணித்தாHகள்.”புகாரிஇ முஸ்லிம்

நபியுல்லாஹ் ஸாலிஹ் அலைஹிஸ்ஸலாம் அவHகளுக்கும் ஸஹாபாக்களுக்கும் இடையில் பல்லாயிரம் ஆண்டுகள் இடைவெளி இருந்தும் கூட ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் அந்த நபியின் ஒட்டகம் அருந்திய நீரை உபயோகித்துக்கொள்ள உத்தரவிட்டார்கள் என்றால் அதன் நோக்கம் பரகத் பெறுவதைத் தவிர வேறென்னவாக இருக்க முடியும்.

عن أنس رضي الله تعالى عنه قال أصابنا ونحن مع رسول الله صلى الله عليه وآله وسلم مطر قال فحسر رسول الله صلى الله عليه وآله وسلم ثوبه حتى أصابه من المطر فقلنا يا رسول الله لم صنعت هذا قال لأنه حديث عهد بربه تعالى. صحيح مسلم

“நாம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களுடன் இருந்து கொண்டிருந்த தருனம் ஒன்றில் மழை பெய்தது. உடனே ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் தங்களது ஆடைகளை களைந்துவிட்டு மழை நீரில் நனைந்து கொண்டார்கள். இவ்வாறு எதற்காக செய்தீர்கள் நாயகமே என்று கேட்டதற்கு இது தனது ரப்புடன் புதிதாக ஒப்பந்தம் செய்து கொண்டது என்று கூறினார்கள் .”முஸ்லிம்

நபித் தோழர்களான ஸெய்யிதுனா உஸ்மான், இப்னு அப்பாஸ், அலி ரழியல்லாஹு அன்ஹும் போன்றவர்களும் நீண்ட இடைவெளியின் பின்னர் பொழியும் மழை நீரில் பரகத் பெற்றிடும் நோக்கில் நனைந்திருக்கின்றார்கள்.

பரகத் பெற்றிடுவதற்காகவே அல்லாஹ்வின் தூதர்  ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் அம்மழை நீரில் நனைந்தார்கள் என்று இமாமுனா குர்துபி மற்றும் நவவி ரஹ்மதுல்லாஹி அலைஹிமா போன்றர்கள் பதிவிட்டுள்ளார்கள்.

அருள் மற்றும் பரகத் பொருந்திய பொருட்களினூடாக தனது சமூக மக்கள் அருள் பரகத் பெற்றிட வேண்டும் என்பதை உணர்த்துவதற்காகவே அம்மழை நீரில் ஆடைகளைக் களைந்து நனைந்து காண்பித்தார்கள் என்று இமாமுனா முல்லா அலிய்யுல் காரி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் தமது கருத்தைப் பதிவிட்டுள்ளார்கள்.

மழையை எதிர் பார்த்து காத்துக் கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் பொழியூம் மழை நீரில் பரகத்திற்காக நனைவதும்  அந்நீரைக் குடிப்பதும் சிறப்பானதொரு செயலாகும். அதில் நோய் நிவாரணம் இருக்கிறது. 

நபிமார் மற்றும் நல்லடியார்களுடன் தொடர்புள்ள வஸ்துக்களினூடாக அருள் பெற முடியூம் என்பதையே மேற்சொன்ன தகவல்கள் யாவூம்  வலியுறுத்துகிறதென்றே ஆழ்ந்த சிந்தனை ஆற்றல் பெற்ற அறிஞர்கள் அறிக்கையிட்டுள்ளார்கள். அவர்கள்தான் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் உலமாக்கள்.

நபிமார் மற்றும் வலிமார்களுடன் தொடர்புள்ள பொருட்கள் கண்ணியப்படுத்தப்பட்டு அவற்றின் மூலமாக பரக்கத் பெறுதல் என்பதுநபிமார்கள் மத்தியில் வாழையடி வாழையாக காணப்பட்டதொரு யதார்த்தமான அகீதாவாக இருப்பது போல் அவைகள் கேவலப்படுத்தப்பட்டு அவற்றின் மூலமாக அருள் பெற முடியாதென்ற அசிங்கமான கொள்கை பனூ இஸ்ரவேலர்களின் வழிவந்த ஒன்றென்பதை இவ்வாதாரங்களின் மூலமாக விளங்கிக்கொண்டிருப்பீர்கள் என நினைக்கின்றோம்.

ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் அருள் நிறைந்தவர்களன்றி வேறில்லை என்ற அல்லாஹ்வின் கூற்றினை நாம் நன்கறிந்து வைத்துள்ளோம். அந்த வகையில் உச்சந் தலையில் இருந்து உள்ளங்கால் வரை உள்ளும் புறமும் புனிதம் நிறைந்தவர்களாகவே அல்லாஹ் நபி அவர்களை அனுப்பியுள்ளான். இது பற்றிய விளக்கத்தினை அடுத்து வரும் தலைப்புக்களில் விரிவாக பார்க்கலாம். இன்சா அல்லாஹ்.

அதனால்தான் அத்திரு மேனியுடன் தொடர்புள்ள சகலதற்கும் ஸஹாபாக்கள் சங்கை செய்திருக்கிறார்கள். அவற்றினூடாக அருள் பெற்றிருக்கிறார்கள் என்பதற்கு எண்ணற்ற ஆதாரங்கள் குவிந்து கிடக்கிறது. இது தொடர்பான தகவல்களுக்கு விளக்கமளிக்கும் ஆழமான சிந்தனை கொண்ட அறிஞர் பெருமக்களான அஹ்லுஸ் ஸுன்னத் வல்ஜமாஅத்தினர்கள் இது நபிமார் மற்றும் நல்லடியார்களுடன் தொடர்புள்ள பொருட்களில் பரகத் இருக்கின்றதென்பதற்கான ஆதாரம் என்றுதான் கருத்துக் கூறுகிறார்களே தவிர இது ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களுக்கு மாத்திரம் சொந்தமானது என்று சொன்னதற்கு எவ்வித சான்றும் இல்லை.

அவ்வாறே ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் பொருட்களை மாத்திரமே அருள் பெறுவதற்கு அனுமதி உண்டே அன்றி வலிமார்களின் பொருட்களைக் கொண்டு அருள் பெற முடியாதென்றும் அஹ்லுஸ் ஸுன்னத் வல்ஜமாஅத்தினர் பிரித்துப் பேசியதாகத் தெரியவில்லை.

மேலும் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் இவ்வூலகில் உயிருடன் வாழும் காலத்தில் அவர்களை வஸீலாவாக எடுத்துக் கொள்ள முடியுமே தவிர மரணித்த பின் அவர்களை வஸீலாவாக அமைத்துக் கொள்வது ஷிர்க்காகும் என்றும் அஹ்லுஸ் ஸுன்னத் வல்ஜமாஅத்தினர் தீர்ப்பளிக்கவில்லை.

وللآخرة خير لك من الأولى. الضحى 4

“இவ்வுலகை விட மறுவுலகே உங்களுக்குச் சிறந்தது.” என்று அல்லாஹ் சொன்னான்.

حياتي خير لكم ومماتى خير لكم

“எனது இவ்வுலக வாழ்வும் உங்களுக்கு அருள்தான். அவ்வாறே எனது மறுவுலக வாழ்வும் உங்களுக்கு அருள்தான்.” என்றும்

إن الله إذا أراد رحمة أمة من عباده قبض نبيها قبلها. صحيح مسلم

“அல்லாஹ் தன் அடியார்களில் ஒரு சமூகத்தாருக்கு அருள் புரிய நாடினால் அதற்கு முன்னரே அதன் தூதரைக் கைப்பற்றிக் கொள்கின்றான்” என்றும் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் சொல்லியிருக்கின்றார்கள். முஸ்லிம்

இதனடிப்படையில் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் ஈருலக வாழ்வும் நமக்கு அருள் மிக்கதென்பதற்கு இன்னுமென்ன ஆதாரம் தேவை என்று கேட்கின்றேன்.

இதனால்தான் நாயகம் அவர்கள் இவ்வுலகில் உயிருடன் வாழ்ந்த காலத்தில் அவர்கள் வாயிலாக அருள் பெற முடியும். மரணித்த பின் அவர்கள் பொருட்டால் அருள் பெற முடியாது என்று குருட்டுத்தனமான கருத்துக்களை அஹ்லுஸ் ஸுன்னத் வல்ஜமாஅத்தினர் கூறவும் இல்லை.

ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் உபயோகம் செய்த பொருட்களை மாத்திரமே அருளுக்காக உபயோகம் செய்ய முடியும். பிறர்களின் பொருட்கள் மூலமாக அருள் பெற முடியாது என்றெல்லாம் பிரித்து வேறுபடுத்திப் பேசிய வரலாறு இஸ்லாமிய வரலாற்றில் இல்லை. மாறாக அது சாத்தானிய சித்தாந்த வரலாதென்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.இதுவே பனூ இஸ்ரவேலர்களின் வேலையாகும்.

நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் இவ்வூலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் தருணத்தில் அவர்களின் திருக் கரங்களை மற்றும் பாதங்களை முத்தி எவ்வாறு அருள் பெற்றுக் கொள்ள முடியுமோ அவ்வாறே அவர்களின் கப்ரை முத்தமிட்டும் அருள் பெற்றிட முடியும் என்பதில் அருள் பெற்ற அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் அறிஞர்கள் மத்தியில் இரு வேறுபட்ட நிலைப்பாடுகள் இல்லையென்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் பொருட்களில் மாத்திரம்தானே அருள் இருப்பதாகச் சொல்கின்றார்கள் என்று எண்ணி இதோ இந்தப் பொருள் அவர்களுடையது. வாருங்கள் இதைத் தரிசித்து அருள் பெறுங்கள் என அழைப்பு விடுத்தால் இதுவொரு போலியான பொருளாக இருக்குமோ என அஞ்சுகின்றோம் என்று ஒதுங்கிக் கொள்கிறார்கள். அவர்கள் நஸீபில்லாதவர்கள்.

இதுவரை எவையெவையெல்லாம் அருள் பொருந்தியவைகள் என்று அல்லாஹ் சொன்னானோ அவைகளையும் அவற்றினூடாக பிறர்கள் அருள் பெற முடியூமா என்ற வினாவவுக்குமானபதிலை அல்லாஹ்வின் பேரளுளான பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் அருளினால் இயன்ற  வரை எடுத்துச் சொன்னோம். அல்ஹம்துலில்லாஹ்.

இனி அருள் பொருந்திய பொருட்கள் என்று அண்ணல் நபி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் அறிவித்துள்ள பொருட்களின் பக்கம் உங்களை நாம் அழைத்துச் செல்கின்றோம். இதற்கென்று பின்வருவனவற்றை பட்டியளிட்டுள்ளோம். படித்துப் பயனடையுங்கள். நஸீபிருந்தால் நல்லோர்கள் சென்ற பாதையில் நிலைத்திருப்பீர்கள்.
                                                           தொடரும். ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கட்டுரைகள்

“வஹ்ஹாபிகள்” இந்தக் காலத்தின் “க்வாரிஜ்கள்”

  இப்னு அப்தில் வஹ்ஹாபும் இப்னு தைமிய்யாவும்   இப்னு தைமிய்யா என்ற தனி நபரால் விதைக்கப்பட்ட பொய்யான, பிழையான, மார்க்கத்துக்கு ...