வியாழன், 3 ஜனவரி, 2019

அல்குர்ஆனின் பார்வையில் அருள் பொருந்திய பொருட்கள்



அல்குர்ஆனின் பார்வையில் அருள் பொருந்திய பொருட்கள்








01 பரகத் பொருந்திய இறையில்லம்.

கஃபா ஆலயம் அருள் நிறைந்ததொரு ஆலயமாக அல்லாஹ் அல்குர்ஆனில் அடையாளப்படுத்தப்படுத்தி உள்ளான். இல்லையென்றால் அது பிற கட்டிடங்களைப்போன்றதொரு சாதராண கட்டிடமாகவே இருந்திருந்திருக்கும்.

إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين. آل عمران 96

“அல்லாஹ்வை வணங்குவதற்காக மனிதHகளுக்கு அமைக்கப்பட்ட முதல் வீடு பக்கா எனப்படும் மக்காவில் உள்ளதாகும். அது பாக்கியம் பொருந்தியதும் அகிலத்தாருக்கு நேH வழியூமாகும்.”
ஆல இம்ரான் வசனம் 96

மண்ணில் தோன்றிய முதல் இறை இல்லம் பரகத் பொருந்தியதொரு இல்லமாக அல்லாஹ் அறிமுகம் செய்திருக்கின்றான். அல்லாஹ்வின் பேரருளான பெருமானர் முஜ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் அவ்வில்லம் தோன்றிய பிரதேசத்தில் பிறந்து அப்பிரதேச மக்களுக்கு நேர் வழி காட்டவேண்டும் என்ற இறை நியதியின் அடிப்படையில் மக்கா முகர்ரமா பாக்கியம் பொருந்திய இடமாகவூம் அகிலத்தாருக்கு நேர் வழியாகவூம் ஆனது. இது அல்லாஹ்வின் அருள் பெற்றவறர்களின் கணிப்பீடாகும்.

மண்ணில் தோன்றிய முதல் இறை இல்லமும் அதன் சுற்றுப் புறமும் பாக்கியம் பொருந்தியவை என இறைவன் அறிவித்ததுபோன்றே இம்மண்ணில் தோற்றம் பெற்ற இரண்டாவது இறை இல்லத்தையூம் அதனைச் சூழவூள்ள பிரதேசத்தினையூம் பாக்கியம் நிறைந்தது என்றும் அவன் சொன்னான்.


02 மஸ்ஜிதுல் அக்ஸா
 பள்ளியைச் சூழவுள்ள பிரதேசங்களை அவன் அருள் பொருந்திய இடம் என்று சொல்லவில்லை என்றிருந்தால் அதற்கு எவ்வித முக்கியத்துவமும் இருந்திருக்கப்போவதில்லை. 

سبحن الذي اسرى بعبده ليلا من المسجد الحرام  الى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آيتنا إنه هو السميع البصير. (سورة بني إسرائيل) 

“தனது அடியாரை மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து நாம் சுற்றுச் சூழலைப் பாக்கியம் பொருந்தியதாக ஆக்கிய அந்த மஸ்ஜிதுல் அக்ஸா வரை இரவில் அழைத்துச் சென்றவன் தூயவன்.” 
பனீ இஸ்ராயீல் வசனம் 01 

பைத்துல் முகத்தஸின் சுற்றுச் சூழலில் நபிமார் மற்றும் வலிமார்கள் வாழ்ந்திருக்கிறார்கள். அங்கே அவர்களின் மண்ணறைகள் இருக்கின்றன. இது அப்பிரதேசம் அருள் நிறைந்த பிரதேசம் என்று சொல்லப்படுவதற்குரிய காரணங்களில் ஒன்றாகும் என்பது அல்லாஹ்வின் அருள் பெற்றவர்களின் கணிப்பீடாகும். 

பைத்துல் முகத்தஸ் சாம் தேசத்தில் இடம் பெறும் ஓர் இறையில்லமாகும். “யா அல்லாஹ்! ஷாம் மற்றும் எமன் தேசங்களுக்கு பரகத் செய்தருள்வாயாக” என அருமை நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் விசேட பிரார்த்தனை செய்துள்ளார்கள். இது அப்பிரதேசம் பரகத் பொருந்தியதாக ஆனதற்குரிய காரணங்களில் மற்றுமொரு காரணமாகும் என்று மேற்சொன்னோர் கூறியுள்ளனர்.

03 பரகத் பொருந்திய பள்ளத்தாக்கு


“துவா” என்றதொரு பள்ளத்தாக்கினை அல்லாஹ் பரிசுத்தமானதொரு பள்ளத்தாக்கு என்று கூறிவிட்டான். இல்லையென்றிருந்தால் அதுவொரு சாதாரண பள்ளத்தாக்குதான்.

إني أنا ربك فاخلع نعليك إنك بالواد المقدس طوى. طه 12

“நிச்சயமாக நானே உமது இரட்சகன். உமது இரு பாதணிகளையூம் கழற்றுவீராக! நிச்சயமாக நீர் துவா என்ற பரிசுத்தமான பள்ளத்தாக்கில் இருக்கின்றீர்.”
தாஹா வசனம் 12

நபிய்யுல்லாஹ் மூசா அலைஹிஸ்ஸலாம் அவர்களுடன் அல்லாஹ் “துவா” என்ற அப்பள்ளத்தாக்கில் வைத்து உரையாடிய காரணத்தினால் அப்பள்ளத்தாக்கு பரிசுத்தமான பள்ளத்தாக்காக ஆனது. 

04 பரகத் பொருந்திய நபிமார்கள்

قال الله تعالى وجعلنى مباركا أين ما كنت. مريم 31

“இன்னும் நான் எங்கிருந்த போதிலும் பாக்கியமளிக்கப்பட்டவனாக என்னை அவன் ஆக்கியுள்ளான்.”
மர்யம் வசனம் 31

وباركنا عليه وعلى اسحق. الصافات 113 

“அவர் (நபியுல்லாஹ் இப்ராஹீம்) மீதும் (அவர் புதல்வர்) இஸ்ஹாக் மீதும் நாம் அருள் புரிந்தோம்.”
ஸாஃப்ஃபாத் வசனம் 113



05 பரகத் பொருந்திய வீட்டார்

رحمت الله وبركاته عليكم أهل البيت.هود 73

“(நபியுல்லாஹ் இப்ராஹீமின்) வீட்டாரே அல்லாஹ்வின் அருளும் அவனது பாக்கியங்களும் உங்கள் மீது உண்டாவதாக!” ஹுத் வசனம் 73

06 பரகத் பொருந்திய சமூகம்

قيل يانوح اهبط بسلام منا وبركات عليك وعلى أمم ممن معك. هود 48

“நூஹே! உம்மீதும் உம்முடன் இருக்கின்ற சமூகங்கள் மீதும் எம்மிடமிருந்துள்ள சாந்தியையூம் அருள் பாக்கியங்களையும் பெற்றவர்களாக இறங்குவீராக!”
ஹுத் வசனம் 48

07 பரகத் பொருந்திய பூமி

وأورثنا القوم الذين كانوا يُستضعفون مشارق الأرض ومغاربها التي باركنا فيها. الأعراف 137

“பலவீனமானவர்களாக கருதப்பட்டுக் கொண்டிருந்த சமூகத்தாரை நாம் அருள் பொருந்திய பூமியின் கிழக்கு மற்றும் அதன் மேற்குப் பகுதிகளுக்கு 
உரித்துடையோர்களாக ஆக்கினோம்.”
அல் அஃராப் வசனம் 137

ونجيناه ولوطا إلى الأرض التي باركنا فيها للعالمين. الأنبياء 71

“அகிலத்தாருக்கு எப்பூமியில் நாம் பாக்கியம் அளித்தோமோ அதன்பால் அவரையும் லூத்தையும் காப்பாற்றினோம்.”
அல் அந்பிஆ வசனம் 71

وجعل فيها رواسي من فوقها وبارك فيها وقدر فيها أقواتها فى أربعة أيام. حم السجدة 10

“இன்னும் அதன் மேற்பகுதியில் மலைகளை அமைத்தான். இன்னும் அதில் பாக்கியம் பொழிந்தான்.”
ஹாமீம் ஸஜ்தா வசனம் 10

08 பரகத் பொருந்திய கிராமம்



وجعلنا بينهم وبين القرى التي باركنا فيها قرى ظاهرة. سبأ 18

“அவர்களுக்கும் நாம் அருள் செய்த கிராமங்களுக்குமிடையில் வெளிப்படையான சில கிராமங்களை நாம் ஏற்படுத்தி அதிலே பயணம் செய்வதை ஏற்படுத்தினோம்.”
சபஃ வசனம் 18

09 பரகத் பொருந்திய நூல்



وهذا كتاب أنزلناه مبارك فاتبعوه. الأنعام 155

“இது நாம் இறக்கிய அருள் பொருந்திய வேதமாகும். இதனையே நீங்கள் பின்பற்றுங்கள்.”
அல்அன்ஆம் வசனம் 155

كتاب أنزلناه اليك مبارك ليدبروا آياته وليتذكروا اولوا الألباب. ص 29

“இது நாம் உங்களுக்கு இறக்கிய அருள் பொருந்திய வேதமாகும். இதன் வசனங்களை அவர்கள் ஆழ்ந்து சிந்திப்பதற்காகவும் சிந்தனையுடையோர் நல்லுபதேசம் பெறும் பொருட்டும் நாம் இறக்கி வைத்தோம்.”
ஸாத் வசனம் 29

10 பரகத் பொருந்திய தளம்

وقل رب أنزلني منزلا مباركا. المؤمنون 29

“எனது ரட்சகனே!பாக்கியம் பொருந்திய தளத்தில் என்னை இறக்கி வைப்பாயாக!”
அல்முஃமினூன் வசனம் 29

11 பரகத் பொருந்திய குடும்பம்

مثل نوره كمشكاة فيها مصباح المصباح فى زجاجة الزجاجة كأنها كوكب دري يوقد من شجرة مباركة. النور 35

“அல்லாஹ் வானங்கள் மற்றும் பூமியின் பிரகாசமாவான். அவனதுபிரகாசத்திற்கு உதாரணம் ஒரு மாடத்தைப் போன்றதாகும். அதில் ஒரு விளக்கு இருக்கிறது. அவ்விளக்கு ஒரு கண்ணாடிக்குள் இருக்கிறது. அக்கண்ணாடி பிரகாசிக்கும் நட்சத்திரம் போன்றதாகும். பாக்கியம் பொருந்திய ஸைத்தூன் மரத்தினால் அது எரிக்கப்படுகிறது. அது கிழக்கு திசையை சேர்ந்ததுமன்று. மேற்குத் திசையை சேர்ந்ததுமன்று. நெருப்பு அதனைத் தொடாவிடினும் அதன் எண்ணையூம் பிரகாசிக்கும். அது பிரகாசத்திற்கு மேல் பிரகாசமாக உள்ளது. அல்லாஹ் தான் நாடுவோரை தனது பிரகாசத்தின்பால் வழி நடத்துகின்றான்.”
அந்நூர் வசனம் 35

இவ்விறை வசனத்தில் குறிப்பிடப்படும் “مشكاة” என்ற பதம் பெருமானார் முஜ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் உட் பகுதியையும் “الزجاجة;” என்ற பதம் அவர்களின் உள்ளத்தினையும் “المصباح;” என்ற பதம் அவ்வுள்ளத்தில் காணப்படும் பிரகாசத்தையும் “يوقد من شجرة زيتونة” என்ற வசனத்திற்கு அப்பிரகாசம் நபியுல்லாஹ் ஸெய்யிதுனா இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களிலிருந்து வெளிப்படுகின்றதென்று விளக்கமளிக்கப்படுகின்றது. 
பார்க்க: அத்தபர்ருக் - கலாநிதி உமH அப்துல்லாஹ் காமில். பக்கம் 19

12 பரகத் பொருந்திய இரவு

3  إنا انزلناه فى ليلة مباركة. الدخان

“நிச்சயமாக நாம் இதை பாக்கியம் பொருந்திய ஓர் இரவிலே இறக்கி வைத்தோம்.” 
அத்துகான் வசனம் 3

13 பரகத் பொருந்திய நீர்

ونزلنا من السماء ماء مباركا. 9

“மேலும் நாம் வானத்தில இருந்து பாக்கியம் பொருந்திய நீரை இறக்கி வைத்தோம். பின்னர் அதன் மூலம் தோட்டங்களையயும் அறுவடை செய்யப்படும் தானியத்தையூம் அடுக்கடுக்கான பாளைகளையுடைய நீண்டு வளர்ந்த பேரீத்தம் மரங்களையும் நாம் முளைக்கச் செய்தோம்.”
காப் வசனம் 9

இவ்வாறு அல்லாஹ் அறிமுகம் செய்த அருள் பொருந்திய பொருட்கள் என்ற தலைப்பில் சுமார் 17 இறை வசனங்கள் பதிவு செய்யட்டு அதில் எந்தெந்த பொருட்களை அல்லாஹ் பரகத் பொருந்திய பொருட்கள் என்று கூறியிருக்கின்றான் என்பதைப் படித்து விட்டீர்கள்.
அல்ஹம்துலில்லாஹ்.

மேற்கூறப்பட்ட பொருட்களை அருள் பொருந்திய பொருட்கள் என்று அல்லாஹ் அறிமுகம் செய்து வைத்திருக்காவிட்டால் நிச்சயமாக இங்கு குறிப்பிடப்பட்ட பொருட்களுக்கும் பிற பொருட்களுக்கும் எவ்வித வித்தியாசமும் இருந்திருக்காது. மேற்கூறப்பட்ட பொருட்களை அருள் பொருந்தியதாக ஆக்கியதற்கு ஏதாவது நோக்கம் இருக்குமா? அல்லது வெறுமனே அவை அருள் பொருந்தியவைகள் என்று அறிக்கை இடுவது மாத்திரம்தான் அதன் நோக்கமா? என்ற வினாவுக்கு விடை தேடுகின்றவர்கள் அடுத்து வரும் தலைப்பைப் படித்துப் பாருங்கள்.


தொடரும்..........

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கட்டுரைகள்

“வஹ்ஹாபிகள்” இந்தக் காலத்தின் “க்வாரிஜ்கள்”

  இப்னு அப்தில் வஹ்ஹாபும் இப்னு தைமிய்யாவும்   இப்னு தைமிய்யா என்ற தனி நபரால் விதைக்கப்பட்ட பொய்யான, பிழையான, மார்க்கத்துக்கு ...