ஞாயிறு, 17 பிப்ரவரி, 2019

“நூர்”என்பதன் பொருள்.


நூர் என்பதன் பொருள்


நூர் என்ற அரபு மொழிவார்த்தைக்கு ஒளி என்று தமிழில் பொருள் கூறுகின்றோம்அதற்காக அந்த ஒளியினை மனிதனானவன் தன்னுடைய சாதாரண புலன்களுக்குப் புலப்படுகின்ற ஒளியென்று எண்ணிவிடக் கூடாதுஸல்லல்ல்லாஹுஅலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களது நூரின் யதார்த்தத்தினை அல்லாஹ் ஒருவனே அறிவான் என்று அல்லாமா ஜவ்பர் பின் அல் பர்சன்ஜி அவர்கள் கூறிய கருத்தினை அஷ்ஷைக் அபூபக்ர் அஹ்மத் காந்தபூரி  (ஸகாபதுஸ்சுன்னிய்யாகேரளா) அவர்கள் அல் அவாயிதுல் வஜ்திய்யாஎன்ற நூலின் பக்கம் 1-5ல் பதிவு செய்துள்ளார்கள்.
ஸல்லல்ல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் நூராக இருக்கின்றார்கள் என்றால் அதன்விளக்கம் என்னஎன்ற கேள்விக்கு ஹிதாயத் என்று பொருள் கூறப் படுகிறது இவ்வாறு பொருள் கூறுவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை.
ஹிதாயத் என்றால் என்னஎன்று மீண்டும் கேட்டால் நேர்வழி என்று அதற்குப்பொருள் கூறுவோம்அதாவது ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் நூராக இருக்கின்றார்கள் என்றால் நேர்வழிகாட்டும் ஒருவராக இருக்கின்றார்கள் என்பது இதற்கான விளக்கமாகும் என்று சொல்வோம்.
ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் எந்தெந்த விடயங்கள் நூராக அதாவது ஹிதாயத்நேர்வழி காட்டுகின்றதாக இருக்கிறதென்று நம்மிடம் உங்களில் யாராவது கேட்பீர்களாக இருந்தால் அவ்வாறு கேட்பவரிடம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹிவசல்லம் அவர்களின் எந்தெந்த விடயங்கள் நூராக அதாவது ஹிதாயத்-நேர்வழி காட்டவில்லை என்று சொல்லித் தருமாறு நாம் அவரிடம் திருப்பிக் கேட்போம்.
நூர் என்பதற்குச் சொல்லப்பட்ட விளக்கத்தின் அடிப்படையில் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லமவர்களின் பேச்சு மட்டுமல்ல மூச்சும் நூர்தான்மனைவிமக்கள் மட்டுமல்ல தோழர்களும் நூர்தான்ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் முபாரக்கான சிரசில் அமரும்பாக்கியம் பெற்ற தொப்பி,தலைப்பாகை முதல்பாதம் சுமக்கும் பாக்கியம் பெற்ற பாதணியும் நூர்தான்.
அவ்வாறே ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் முபாரக்கான திரு மேனியில் இருந்து வெளியேறிய வியர்வைகுருதி முதல்சகலதும் நூர்தான்இதையே தான் மனித வடிவத்தில் வெளியான அல்லாஹ்வுடைய நூரி (ஹிதாயத்தி) ன் முழு வடிவம் என்கின்றோம். நூரினால் படைக்கப்பட்டதாகப் பேசினோம் அந்தநூருக்காகவே அகிலங்களெல்லாம் அமைக்கப்பட்டதென்று அறிவித்தோம்அவர்களின் நூரின்றி வேறில்லை என்கின்றோம். இது மேற் கூறிய நபி மொழியின் சாரமாகும்.
(அல் குர்ஆனும் நூர் அண்ணலாரும் நூர் ) தொடரும்...

சனி, 16 பிப்ரவரி, 2019

அல்லாஹ்வின் பேரருளான பெருமானார் முஜ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம்


அல்லாஹ்வின் பேரருளான பெருமானார் முஜ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் நூரும் பஷருமாகும்.



யா அல்லாஹ் எனது உள்ளம், நாவு, கேள்வி, பார்வை, வலது, இடது, மேலும், கீழும், முன்னும் பின்னும் என அனைத்திலும் நூரை ஏற்படுத்துவதுடன் எனக்கும் நூரைத் தருவாயாகஎன ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தனை புரிந்துள்ளார்கள். (புகாரி, முஸ்லிம்.)
அல்லாஹ்வின் பேரருளான பெருமானார் முஜ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் பஷராகவும் நூராகவும் இருக்கின்றார்கள். இந்தரெண்டில் எந்தவொன்றையும் மறுக்கவோ மறைக்கவோ கூடாது. அவ்வாறு மறுப்பவன் அல்லது மறைப்பவன் முஸ்லிமாக இருக்க முடியாது. அத்துடன் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் நூரைத்தான் அல்லாஹ் முதன்மையாகப் படைத்தான் என்பதை மறுக்கும் ஒருவர் தெளிவான தூய்மையான (சூபித்துவ) அஹ்லுஸ் சுன்னத் வல்ஜமாஅத் கொள்கையுடையவராக  இருக்க முடியாது.
இந்த பிரபஞ்சத்தில் உயிரினங்களாக கருதப்படும் ஓரறிவுத் தாவரங்கள் முதல், பகுத்தறிவு கொண்ட மனிதன் வரை அனைத்துமே பஞ்சபூதங்களின் கூட்டாகும். உயிரற்ற பொருட்களிலும் பஞ்சபூதங்களின் செயல்பாடுகள் இருக்கும். அவ்வாறிருந்தும் தாவரம் முதல் மனிதன் வரை  எதிலுமே பஞ்சபூதங்கள் இருப்பது மனிதனின் சாதாரண புறப்பார்வைக்குப் புலப்படுவதாகத் தெரியவில்லை. அதற்காக மேற்கூறிய கூறுகள் மனிதனில் இல்லையென்று கூறிவிட முடியாது.

மின்சாரத்தினூடாக கிடைக்கப்பெறுகின்ற ஒளியின் உற்பத்திற்கு பஞ்சபூதங்களின் பங்ககளிப்பு இருப்பதாக மனிதன் சொல்லிக்கொண்டிருந்தாலும் அந்த ஒளியிலும் பஞ்சபூதங்களைப் பார்க்கமுடியாதவனாக அவன் இருக்கின்றான். அவ்வாறே சூரியனும் சந்திரனும் நமக்கு ஒளியைத் தருகிறது. அதன் ஒளிகளை மனிதனானவன் பார்த்துக்கொண்டும் அனுவவித்துக்கொண்டும் இருக்கின்றான். ஆனாலும்கூட அவ்விரண்டும் என்னென்ன கூறுகளின் கூட்டுக்களினால் அவை ஆனதென்பதை அவன் அறியாதிருக்கும்போது புலன்களுக்குப் புலப்படாததொரு ஒளியினை என்னவென்று வர்ணிப்பது?. அல்லது சாதாரண புலன்களுக்குப் புலப்படவில்லையே என்ற காரணத்திற்காக ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் நூரில்லை என்று சொல்ல முற்படுவது எவ்வாறு?
மனிதனில் கலந்துள்ளதாகச் சொல்லப்படுகின்ற பஞ்சபூதங்களின் அளவுகளும் சந்திரனில் என்னென்ன பஞ்சபூதங்கள் இருக்கின்றன என்பதும் கடுமையான தேடலுக்குப் பின் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதையும் நாம் மறுப்பதற்கில்லை.
(“நூர்என்பதன்பொருள் )தொடரும்...

செவ்வாய், 12 பிப்ரவரி, 2019

அஹ்லுஸ் சுன்னத் வல்ஜமாஅத்தினர்கள் என்றால் அவர்கள் யார்?


அஹ்லுஸ் சுன்னத் வல்ஜமாஅத்தினர்கள் என்றால் அவர்கள் யார்?

يوم تبيض وجوه وتسود وجوه. (آل عمران 105)
"மறுமை நாளில்  சில முகங்கள் வெளுத்தும் இன்னும் சில முகங்கள் கறுத்தும் இருக்கும்" என்ற இறை வசனத்திற்கு அருமைத் தோழர்களான ஹழ்ரத் அப்துல்லாஹ் பின் உமர், ஹழ்ரத் அபூ சயீதுள் குத்ரி, ஹழ்ரத் அப்துல்லாஹ் பின் அப்பாஸ்ரலியல்லாஹு அன்ஹும். ஆகியோர் அஹ்லுஸ் சுன்னத் வல்ஜமாஅத்தினரின் முகங்கள் வெளுத்தும்  பித்அத்வாதிகளின் முகங்கள் கறுத்தும் இருக்கும் என விளக்கமளித்துள்ளனர். பார்க்க: தப்சீர் துர்ருல் மன்தூர், குர்துபி.
அஹ்லுஸ் சுன்னத் வல்ஜமாஅத்தினரைப் பார்ப்பது வணக்கம். அது நேர்வழியில் அழைத்துச் செல்லும். பித்அத்துக்களில் இருந்து பாதுகாக்கும் என்று ஹழ்ரத் இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹுமா கூறியதாகவும் அல்லாமா குர்துபி அவர்கள் பதிவு செய்துள்ளார்கள்.
أهل السنة والجماعة مذهب قديم معروف قبل ان يخلق الله ابا حنيفة ومالكا والشافعي وأحمد فإنه مذهب الصحابة الذين تلقوه عن نبيهم ومن خالف ذلك كان مبتدعا عند أهل السنة.
இமாம்களான அபூ ஹனீபா, மாலிக், ஷாஃபிஈ, அஹ்மத் போன்றவர்கள் தோன்றுவதற்கும் முன்பிருந்து அஹ்லுஸ் சுன்னத் வல்ஜமாஅத் பிரபல்யமிக்கதாகவும் நிலையான ஒன்றாகவும் இருந்துள்ளது. அது அருமைத் தோழர்களின் பாதையாகும். அதனை அவர்கள் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களிடம் இருந்து பெற்றுக்கொண்டார்கள். அவர்களிடம், இதற்கு மாற்றமானவர்கள் பித்அத்வாதிகள் என்று இப்னு தைமிய்யா பதிவு செய்துள்ளார். பார்க்க: மின்ஹாஜுஸ் சுன்னா.
அஹ்லுஸ் சுன்னத் வல்ஜமாஅத்தினரின் கொள்கை கோட்பாடுகள் மட்டும்தான் உண்மையானது. அவர்கள் மட்டுமே வெற்றி பெற்றவர்கள் என்ற காரணத்தினால்தான், இஸ்லாமிய தஃவா அமைப்புக்கள் ஒவ்வொன்றும் தங்களைத் தாங்களே அஹ்லுஸ் சுன்னத் வல்ஜமாஅத்தினர் என்று கூறிக்கொள்வதை நாம் பார்க்கின்றோம். இருந்தபோதும் இன்றுள்ள தஃவா அமைப்புக்களில் எந்த அமைப்பு  உண்மையான அமைப்பு என்ற சந்தேகமும் கேள்வியும் பாமரர்களிடம் பரவலாக இருப்பதை மறுக்க முடியாது.
அவ்வாறே அஹ்லுஸ் சுன்னத் வல்ஜமாஅத்தினர்கள் என்றால் அவர்கள் யார்? அவர்களின் பாதை என்ன? என்ற கேள்விக்கு "நானும் எனது தோழர்களும் சென்ற பாதையாகும். என்ற ஹதீதினை அவ்வமைப்புக்களெல்லாம் கூறிக்கொண்டிருந்தபோதிலும் அவற்றில் எந்த அமைப்பு அந்தப் பாதையில் பயணிக்கிறது என்பதைக் கண்டுபிடிப்பதில் மக்கள் சிரமப்படுவதைக் காண முடிகிறது.

காரணம், சில பாதைகளின் வெளிவேசம் பார்வைக்கு பளிச்சிட்டு கவர்ச்சிகரமாக நேர்த்தியாக அழகிய கட்டமைப்புக்களைக்கொண்டதாகக் காணப்படுகிறது.  அதனால் அதில் பயணம் செய்வதற்கு மக்களை கவர்ந்திளுத்துக்கொண்டிருக்கிறது. ஆனால் அந்தப் பாதைகள் பலமற்றது. உறுதியற்றது. காரணம் அதன் கலவையில் கலப்படம் நிறைந்துள்ளது. காரணம் பொறுப்புதாரிகள் அதிகாரிகள் அவர்களின் வயிற்றுப் பிழைப்புக்காக அந்தப் பாதைக்கென்று திட்டமிடப்பட்ட கொள்கையினை சுரண்டிவிட்டார்கள். திருடிவிட்டார்கள். மோசடி செய்துவிட்டார்கள்.
இன்னும் சில பாதைகள் பார்ப்பதற்கு கரடுமுரடாக பள்ளமும் குழியுமாகத் தென்படுக்கின்றன. அதனால் மக்கள் அதில் பயணிக்க தயங்குகிறார்கள். ஆனாலும்கூட அது பலமானதாகும் உறுதிமிக்க தாகவும் பழையதாகவும் தோன்றுகின்றன. இருந்தபோதும் அந்தப் பாதைகளை  சீர் செய்து செப்பனிட உரிய அதிகாரிகள் இல்லாமல் இருக்கின்றார்கள்.
பாதைகள் மலிந்துவிட்ட இந்தக்காலப் பகுதியில் பாதை குறுகியதாக இருப்பதுடன் கவர்ச்சி கரமாக இருப்பதையுமே மக்கள் விரும்புகின்றனர். அதனால் அவ்வாறானதொரு பாதையில் சன நெரிசல் காணப்படுகிறது. இவ்விரு பாதைகளில் முதல் பாதை  இடிந்துபோகும். பயணம் பிழைத் துவிடும். கவலைப்படவேண்டிவரும். ஆனால் இரண்டாம் பாதைப் பயணம் சிரமமாக இருந்தாலும்கூட காலமெல்லாம் நிலைத்திருக்கும். பயணத்தின் நோக்கம் நிறைவேறும்.
இதனடிப்படையில் குர்ஆனை அதிகமதிகம் ஓதுதல், அதிகமதிகம் தொழுதல், சுன்னத்தான ஆடைகளை அணிதல், சமூக அக்கறையுள்ளவர்களாக இருத்தல் போன்ற அம்சங்கள் சன்மார்க்கப் பாதையின் வெளித்தோற்றங்கள் ஆகும். இந்த வெளித்தோற்றம் உண்மையானதாக இருக்கவேண்டும் என்றால் அதில் நபிமார்கள், சஹாபாக்கள், வலிமார்கள் மீதான அன்பெண்னும் கலவை சேர்க்கப்பட்டிருக்கவேண்டும். அப்பொழுதுதான் அந்தப் பாதையின் வெளித்தோற்றம் கவர்ச்சிகரமாக இருப்பதுடன் உறுதியானதாகவும் இருக்கும். இதனடிப்படையில் இன்றுள்ள சன்மார்க்க சகல பாதைகளும் பழுதடைந்த பாதைகள் அன்றி வேறில்லை. இருந்தாலும்கூட இரண்டாம்தர பாதைதான் பலமானது. நிரந்தரமானது. உறுதிமிக்கது.
ஸஹாபாக்கள், தாபிஊன்கள், தபஉத் தாபிஈன்கள் ஆகியோரை அருமை நாயகம் முஜ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் சிறந்த காலத்தின் மக்கள் என்று கூறியுள்ளார்கள். அந்த மக்களிடம் ஒரு பாதைக்குத் தேவையான எல்லா அம்சங்களும் முழுக்க முழுக்க பரிபூரணமாக இருந்திருக்கிறன. அவர்களின் வெளித்தோற்றமும் அகத்தோற்றமும் ஒருங்கிணைந்து காணப்பட்டிருக்கிறது. எந்தவொரு குறையும் அவர்களில் காணப்படவில்லை. எனவே அவர்களை நாம் பின்பற்றக் கடமைப்பட்டுள்ளோம்.
அவர்கள் சென்ற பாதையின் வெளித்தோற்றத்திற்கு உதாரணம் சொல்லத் தேவையில்லை. அது சகல இஸ்லாமியர்களுக்கும் நன்கு வெளிச்சமானது. ஆனாலும் அவர்கள் சென்ற பாதையின் மறுபுறத்திற்கு உதாரணம் சொல்லவேண்டியுள்ளது. காரணம் அது புறக்கணிக்கப்படுகிறது. மறைக்கப்படுகிறது. நிராகரிக்கப்படுகிறது. அந்தவகையில் ஒருசில உதாரணங்களை இங்கு அவசியம் குறிப்பிட வேண்டியுள்ளன. அவ்விரு பகுதிகளுக்கும் அப்பாற்பட்டதொரு பகுதி இருக்கு மானால் அது சன்மார்க்கப் பாதைக்கு அப்பாற்பட்ட பாதை  என்பதை தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள், தனது சிறிய தந்தை ஹழ்ரத் அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அன்னவர்களிடம், நீங்கள் என்னைவிட  வயதில் பெரியவரா? என்று கேட்டதற்கு, “யா ரசூலல்லாஹ் நீங்கள்தான் பெரியவர். கண்ணியமானவர். நான் வயோதிபன் என்றார்கள்.”.
இதுபோன்றதொரு வினாவுக்கு செய்யிதுனா உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு பதிலளிக்கையில்  ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள்தான்  பெரியவர்கள். ஆனாலும்கூட மண்ணில் அவர்களுக்கு முன் பிறந்தவன் என்று கூறியுள்ளார்கள். பார்க்க: இஷ்குர் ரசூலும் உலமாயே தேவபந்த்தும். பக்கம் 73.
ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் மின்பரில் அமர்ந்த  இடத்தில் ஹழ்ரத் ஸித்தீக்குல் அக்பர் ரலியல்லாஹு அன்ஹு அமரவில்லை. மாறாக இரண்டாம் படியில் அமர்ந்தார்கள். ஹழ்ரத் உமர் ரலியல்லாஹு அன்ஹு அன்னவர்கள் அந்த மிம்பரில் ஏறியபோது ஹழ்ரத் ஸித்தீக்குள் அக்பர் அமர்ந்த இடத்தில் அமராமல் அதற்கு அடுத்த படியில் அமர்ந்துகொண்டார்கள். ஹழ்ரத் உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு அன்னவர்கள் மின்பரின் படிகளை அதிகரித்து மேற்கூறியவர்கள் அமராத படியில் அமர்ந்துகொண்டார்கள்.  பார்க்க: இஷ்குர் ரசூலும் உலமாயே தேவபந்த்தும். பக்கம் 73.
அருமையான ஸஹாபாக்கள் தொழுதுகொண்டிருக்கும்போது ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் வருகையை எதிபார்த்து இருந்திருக்கின்றார்கள். தொழுகையை விட்டுவிட்டு ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களைப் பார்க்க ஆசைப்பட்டிருக்கிறார்கள். ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லாம் அவர்களின் தூக்கத்திற்கு தொழுகையைத் தியாகம் செய்திருக்கிறார்கள். ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் கஅபாவை தவாப் செய்யாதவரை நான் தவாப் செய்யபோவதில்லை என்று கூறியிருக்கிறார்கள். ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் நின்றுகொண்டு தொழும்போது தான் அமர்ந்திருப்பதை தீய செயலாக கருதியுள்ளார்கள்.
அல்லாஹ்வின் பேரருளான பெருமானார் முஜ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் சாச்சி ஹழ்ரத் உம்முல் ஃபழ்ல் ரலியல்லாஹு அன்ஹா அன்னவர்கள் கனவொன்று காணுகின்றார்கள். அதுவொரு ஆச்சரியமான கனவாக இருக்கிறதென்று அவர்கள் கருதினார்கள். அதனால் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களிடம் அதனைச் சொல்வதற்கும் அஞ்சினார்கள். எதுவானாலும் பரவாயில்லை சொல்லுங்கள் என்று ஸல்லல்லாஹ் அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள்  கூறியதற்க்கிணங்க தான் கண்ட கனவினை பின்வருமாறு கூறுகின்றார்கள்.
நாயகமே! உங்களின் திரு மேனியில் இருந்து ஒரு துண்டு துண்டிக்கப்பட்டு என் மடியில் வைக்கப்படுவதாக நான் கனவு கண்டேன் என்று கூறினார்கள். இது கேட்ட ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் இதவொரு நல்ல கனவு என்று கூறிவிட்டு என் மகள் பாத்திமாவுக்கு ஒரு ஆண் குழந்தை கிடைக்கப்போகிறது. அதனை நீங்கள்தான் வளர்க்கப்போகிறீர்கள் என்று அதற்கு விளக்கமும் சொன்னார்கள்.
தன் மகளுக்கு என்ன குழந்தை பிறக்கப்போகிறது? அந்தக் குழந்தையை வளர்க்கப்போவது யார்? என்று அந்தக் குழந்தை பிறக்கும் முன்னே ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அறிவித்ததுபோன்று அந்தக் குழந்தை பிறந்த பின்னர் எவ்வாறு எந்த ஊரில் எந்த இடத்தில் மரணிக்கப்போகிறது என்ற தகவலையும் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். அத்துடன் தனது பேரர் அவர்கள் கொலை செய்யப்படுகின்ற நேரத்தில் அந்த இடத்திற்கு சென்றும் வந்திருக்கிறார்கள்.
அவ்வாறே ஹழ்ரத் ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு அன்னவர்களின் சகோதரி ஹழ்ரத் சைனப் வா முஹம்மதாஹ், வா முஹம்மதாஹ் நாயகமே எங்களுக்கு உதவி செய்யுங்கள் என்று கர்பலாவில் கூறியுள்ளார்கள். இவ்வறிவித்தல்களை அருமையான தோழர்கள்  அங்கீகரித்து பிறர்களுக்கு அறிவித்தும் வந்துள்ளனர்.  
எனவே இஸ்லாமிய உம்மத்தில் உள்ள கிளைகளில் எந்தக் கிளையில் இவ்வாறான பழங்கள் பறிக்கப்படுகின்றதோ அந்தக் கிளை நேரான கிளையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.ட
தொடரும்......

கட்டுரைகள்

“வஹ்ஹாபிகள்” இந்தக் காலத்தின் “க்வாரிஜ்கள்”

  இப்னு அப்தில் வஹ்ஹாபும் இப்னு தைமிய்யாவும்   இப்னு தைமிய்யா என்ற தனி நபரால் விதைக்கப்பட்ட பொய்யான, பிழையான, மார்க்கத்துக்கு ...