திங்கள், 4 பிப்ரவரி, 2019

இலங்கை முஸ்லீம்களின் பூர்வீக குடியிருப்பு வரலாறு(இலங்கையின் பாரம்பரிய கொள்கை.)

இலங்கையின் பாரம்பரிய கொள்கை.

களுத்துறை, மாத்தளை, மாத்தறை, கண்டி, அநுராதபுரம், அம்பாறை, புத்தளம் ஆகிய மாவட்டங்களுடன் ஏறாவூர் காத்தான்குடி நகர முஸ்லிம்களின் வரலாறு, பாரம்பரியம் என்பன ஆராயப்பட்டு தொகுத்து நூலாக்கப்பட்டிருக்கின்றன.


இலங்கை முஸ்லிம்களின் வரலாறு தொடர்பில் எழுதப்பட்டுள்ள சகல மொழி நூற்களும் இலங்கை முஸ்லிம்கள் அரேபியர் வம்சத்தினர் என்றே குறிப்பிடுவதுடன் அந்த அரேபியர் கிரேக்கர்களும் ரோமர்களும் இலங்கையை அறிந்திருந்த காலத்திற்கு முன்பிருந்து அறிந்து இங்கு வாழ்ந்து வந்ததாகவும் குறிப்பிடுகின்றது. ஆதி பிதா ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பாதச் சுவடு இங்குள்ள மலைச்சிகரமொன்றில் காணப்படுகின்றது என்ற நம்பிக்கையும் அரேபியர்களின் கவன ஈர்ப்புக்குக் காரணமாகும்




அருமை நாயகம் முஜ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களையடுத்து மக்கா, மதீனா, யெமன், பாரசீகம், இந்தியா முதலிய நாடுகளில் இருந்து  இஸ்லாமிய தஃவா பணியின் பொருட்டு அவ்லியாக்கள் இப்பிரதேசங்களுக்கு வருகை தந்து சமயப் பணியாற்றி மக்களை இஸ்லாத்தின் பக்கம் ஈர்த்தெடுத்தனர். சிலர் இங்கேயே வாழ்ந்து சமாதிகொண்டுள்ளனர். அவர்கள் அடக்கப்பட்ட ஸ்தலங்கள் முஸ்லிம்களின் புனிதஸ்தலங்களாகப் பேணப்பட்டு வருகின்றன.

இந்த ஸியாரங்களைச் சூழவே முஸ்லிம்களின் ஆதிக் குடியேற்றங்கள் பெரும்பாலும் தோன்றியிருக்கிறன. இவ்வாறு இப்பிராந்திய முஸ்லிம்களின் குடிப்பரம்பலானது ஸியாரத்திற்காகவும் தஃவா பணிக்காகவும் இங்கு விஜயம் செய்த அரேபிய மற்றும் கிழக்காசிய முஸ்லிம் ஆண்களின் நேரடியான வருகையில் இருந்தே தோற்றம் பெற்றுள்ளது. பார்க்க: அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் வரலாறு பக்கம் 68,69

சுப்ஹான மௌலித், கிழ்ர் மௌலித், காஜா முஈனுத்தீன் மௌலித், ஹரீரி மௌலித், ஷெய்கு தாவூத் மௌலித், பத்ர் ஸஹாபாக்கள் மௌலித், ஹத்தாத் ராதிப், ஜலாலிய்யா ராத்திப் என்பன இடம் பெற்று கந்தூரி கொடுக்கும் பழக்கம் அநுராதபுரத்தில் காணப்பட்டிருக்கிறதென்றும் முஹ்யித்தின் பள்ளி வாசல் என்று பெயரிடப்பட்ட பள்ளிகளே இம்மாவட்டத்தில் நிறைய உள்ளதாகவும் நாகூர் ஆண்டகையின் நினைவாக சில பள்ளிவாயில்கள் இருப்பதாகவும் அநுராதபுர மாவட்ட வரலாறு சொல்கிறது. பக்கம்: 40,41.

இன்றைக்கு 452 வருடங்களுக்கு முன் அதாவது 1494ஆம் வருடம் ஓர் வன்னியனாரின் மகள் மீரா உம்மா என்பவள் முஹ்யித்தீன் ஆண்டவர் தர்காவிற்காக புத்தளம் பட்டின மத்தியில் ஓர் இடத்தை அன்பளிப்புச் செய்தாஹக. இக்காணியில் கடற்கரையோரமாய் முஹ்யித்தீன் தர்கா ஊரவர்களின் முயற்சினால் கட்டப்பட்டது.


குத்பு நாயகம் முஹ்யித்தின் அப்துல் காதிர் ஜீலானி அவர்களை நினைவுபடுத்தும் பல நிகழ்ச்சிகளும் கொண்டாட்டங்களும் வருடந்தோறும் புத்தளம் மாவட்டத்தில் பல இடங்களில் இடம் பெற்றிருக்கின்றன என்று புத்தள மாவட்ட வரலாறு சொல்கிறது. குத்பு நாயகம் அவர்கள் கி.பி.1166ல் பக்தாதில் சமாதியுற்ற ஒரு பெரியாராகும். இதுவே இந்நாட்டு இஸ்லாமியர்களின் பூர்வீக கொள்கை ரீதியான வரலாறாகும். இந்த வரலாறும் சில தீய சக்திகளால் மறுக்கப்படுகிறது. மறைக்கப்படுகிறது. பொய்யானது, பிழையான தென்று பிரசாரம் செய்யப்பட்டும் வருகின்றது.

தொடரும்......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கட்டுரைகள்

“வஹ்ஹாபிகள்” இந்தக் காலத்தின் “க்வாரிஜ்கள்”

  இப்னு அப்தில் வஹ்ஹாபும் இப்னு தைமிய்யாவும்   இப்னு தைமிய்யா என்ற தனி நபரால் விதைக்கப்பட்ட பொய்யான, பிழையான, மார்க்கத்துக்கு ...