அல்லாஹ்வின் அத்தாட்சிகள்
ولنجعله آية للناس ورحمة منا. مريم 21
“அவரை (ஹழ்ரத் நபி ஈசா அலைஹிஸ்ஸலாம் அவர்களை) மக்களுக்கு ஓர் அத்தாட்சியாகவும் நம்முடைய அருளாகவும் நாம் ஆக்குவதற்காகவே (இவ்வாறு செய்துள்ளோம்.)” இவ்வசனம் நபி ஈசாவை அல்லாஹ்வின் அத்தாட்சி எனக் கூறுகிறது. மர்யம் 21
“உமது கழுதையையும் பார்ப்பீராக! என்றான். மனிதர்களுக்கு உம்மை அத்தாட்சியாக ஆக்குவதற்காக (நாம் இவ்வாறு செய்தோம்).” அல்பகரா 259. இவ்வசனம் நபி உஸைர் அவர்களை அல்லாஹ்வின் அத்தாட்சி எனக் கூறுகிறது.
“நிச்சயமாக குகைவாசிகளும் ஏட்டையுடையோரும் நமது அத்தாட்சிகளில் ஆச்சரியத்திற்குரியோராக இருந்தனர் என (நபியே) நீங்கள் எண்ணுகிறீர்களா?.”அல்கஹ்ஃப் 9 இவ்வசனம் குகைவாசிகளான வலிமார்களை அல்லாஹ்வின் அதிசயமான அத்தாட்சி எனக் கூறுகிறது.
وجعلناها وابنها آية للعالمين.الانبياء 91
“மேலும் அவரையும் அவரது மகனையும் அகிலத்தார்களுக்கு அத்தாட்சியாக்கினோம்.”அல்அந்பியா 91. இவ்வசனம் நபி ஈசாவையும் அவரது தாயான மர்யமையும் அல்லாஹ்வின் அத்தாட்சி எனக் கூறுகிறது.
فيه آيات بينات مقام ابراهيم
“அதில் தெளிவான அத்தாட்சிகளும் மகாமு இப்ராஹீமும் இருக்கிறது.”ஆல இம்ரான் 97. இவ்வசனம் கஃபாவில் பல தெளிவான அத்தாட்சிகள் இருப்பதாக அறிவித்துவிட்டு அதில் ஒன்றாக நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பாதச் சுவடுகள் பதிவாகியுள்ள கல்லை அல்லாஹ்வின் தெளிவான அத்தாட்சி எனக் கூறுகிறது.
وقال لهم نبيهم إن آية ملكه. البقرة 248
“நிச்சயமாக அவரது ஆட்சிக்கான அத்தாட்சியானது வானவர்கள் சுமந்து வரும் பேழை உங்களிடம் வருவதாகும்.”அல்பகரா 248. இவ்வசனம் நபி மூசா மற்றம் ஹாரூன் அலைஹிமஸ்ஸலாம் ஆகிய இருவரின் பாதணிகள், கைத்தடி, தலைப்பாகை போன்ற இன்னும் பல பொருட்களை உள்ளடடிக்கிய ஒரு பெட்டியை அல்லாஹ்வின் அத்தாட்சி எனக் கூறுகிறது.
قال رب اجعل لى آية قال آيتك أن لا تكلم الناس ثلاثة أيام إلا رمزا. آل عمران 41
“என் இரட்சகனே! எனக்கு ஒரு அடையாளத்தை ஏற்படுத்துவாயாக! என்று அவர் கேட்டார். அதற்கு மூன்று நாட்கள் சைகை மூலமாகவே தவிர மனிதர்களுடன் நீர் பேசாமல் இருப்பதே உமக்குரிய அத்தாட்சியாகும் என (அல்லாஹ்) கூறினான்.”ஆல இம்ரான் 41. இவ்வசனம் மூன்று நாட்கள் பேசாமல் இருப்பதை அல்லாஹ்வின் அத்தாட்சி எனக் கூறுகிறது.
ولقد آتينا موسى تسع آيات بينات. بني إسرائيل 101
“நிச்சயமாக நாம் மூசாவுக்கு தெளிவான ஒன்பது அத்தாட்சிகளை வழங்கினோம்.”பனூ இஸ்ராயீல் வசனம் 101. இவ்வசனம் நபியவர்களின் கை, தடி, நாவு, கடல், வெள்ளம், வெட்டுக் கிளி, பேன், தவளை, இரத்தம் ஆகியவைகளை அல்லாஹ்வின் அத்தாட்சி எனக் கூறுகிறது.
هذه ناقة الله لكم آية. الأعراف 73
“இந்த அல்லாஹ்வின் ஒட்டகம் உங்களுக்கு அல்லாஹ்வின் அத்தாட்சியாகும்.”அல்அஃராப் வசனம் 73. இவ்வசனம் ஒட்டகத்தை அல்லாஹ்வின் அத்தாட்சி எனக் கூறுகிறது.
إن الصفا والمروة من شعائر الله.البقرة158
“நிச்சயமாக ஸபாவும் மர்வாவும் அல்லாஹ்வின் சின்னங்களாகும்.”அல்பகரா வசனம் 158. இவ்வசனம் ஸபா மற்றும் மர்வா எனும் மலைக் குன்றுகளை அல்லாஹ்வின் சின்னம் எனக் கூறுகிறது.
والبدن جعلناها لكم من شعائر الله. الحج 36
“குர்பானிகளுக்கான மாடு மற்றும் ஒட்டகங்களை அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களில் உள்ளவைகளாக உங்களுக்கு நாம் ஆக்கினோம்.”அல்ஹஜ் வசனம் 36. இவ்வசனம் ஆடு, மாடு, ஒட்டகங்களை அல்லாஹ்வின் சின்னங்கள் எனக் கூறுகிறது.
لم يكن الذين كفروا من أهل الكتاب والمشركين منفكين حتى تأتيهم البينة رسول من الله. البينة1-2
“வேதத்துடையவர்களிலும் இணை வைப்பாளர்களிலும் எவர்கள் நிராகரித்தார்களோ அவர்கள் தம்மிடம் தெளிவான அத்தாட்சி வரும் வரை (நிராகரிப்பை விட்டும்) விலகுபவர்களாக இருக்கவில்லை. (அவ்வத்தாட்சி) அல்லாஹ்வின் தூதராகும்.” அல்பய்யினா வசனம் 1-2. இவ்வசனம் நமது நாயகம் முஜ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களை அல்லாஹ்வின் தெளிவான அத்தாட்சி எனக் கூறுகிறது.
இவ்வாறு இன்னும் எத்தனையோ வஸ்துக்களை தனது அத்தாட்சி என அல்லாஹ் சொல்வதை திருமறையில் நாம் காணலாம். ஆதலால் மேற்கண்டவற்றைக் கொண்டு அத்தாட்சி என்றால் என்ன என்பதை தெளிவாக புரிந்திருப்பீர்கள் என நினைக்கின்றொம்.
அத்தாட்சி என்றால் என்னவென்பதற்கு இதுவரையில் பதிவு செய்யப்பட்ட ஆதாரங்களை உற்று நோக்குவீர்களாக இருந்தால் அவற்றில் இரண்டு வசனங்களில் இரண்டு பொருட்கள் குறித்துப் பேசும் போது அவை தெளிவான அத்தாட்சிகள் என்று கூறியதைப் படித்தீர்கள். ஒன்று மகாமு இப்ராஹீமாகும். மற்றது நமது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலி வசல்லம் அவர்களாகும்.
தெளிவான இவ்விரு அத்தாட்சிகளில் ஒன்றான மகாமு இப்ராஹீம் குறித்துப் பேசும் போது அந்த இடத்தை நபித் தோழர் ஸெய்யிதுனா உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் ஆலோசனையின் அடிப்படையில் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களும் தோழர்களும் தொழும் இடமாக எடுத்துக் கொண்டதாக அல் குர்ஆன் சொன்னது. இது உங்கள் ஞாபகத்தில் இருக்கும் என நினைக்கின்றொம்
மகாமு இப்ராஹீம் என்ற தெளிவான அத்தாட்சி இருக்கும் இடம் அல்லாஹ்வின் மாளிகையில் பாதுகாக்கப்பட்டு அவ்விடத்தில் தொழுது கொள்வதும் ஸுன்னத்தான அமலாக இருக்கிறது என்பதை அடிப்படையாக வைத்து எந்தப் பொருட்களெல்லாம் அல்லாஹ்வின் அத்தாட்சிகளாக இருப்பதாக அடையாளம் காணப்படுமோ அவை அனைத்தும் பாதுகாக்கப்பட வேண்டும். அவை யாவும் கண்ணியப்படுத்தப்பட வேண்டும் என்று அல்லாஹ்வின் அருளைச் சுமந்த அஹ்லுஸ் ஸுன்னத் வல்ஜமாஅத் அறிஞர்கள் அறிவுறுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.
எனவே, நமது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் அல்லாஹ்வின் பிரதான சின்னமாகவும் அவனின் பிரதான மிக முக்கிய அத்தாட்சியாகவும் இருக்கின்றார்கள். இதனடிப்படையில் அவர்களும் அவர்களது பொருட்களும் பாதுகாகக்கப்படல் வேண்டும். அவை யாவும் கௌரவிக்கப்படல் வேண்டும். இதனடிப்படையில்தான் நபித் தோழர்கள் தொடக்கம் இன்று வரையுள்ள அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கைவாதிகள் நபிமார் மற்றும் ஸாலிஹீன்களின் சகல வஸ்துக்களையும் சங்கைப்படுத்தி வருதைப் பார்க்கலாம். இது தக்வாகும்.
عن عبد الله بن عمر رضي الله عنهما قال رأيت رسول الله صلى الله عليه وآله وسلم يطوف بالكعبة ويقول ما أطيبك وأطيب ريحك ما أعظمك وأعظم حرمتك والذي نفس محمد بيده لحرمة المؤمن اعظم عند الله حرمة منك ماله ودمه وان نظن به إلى خيرا
கஃபாவை விட ஒரு முஃமின் அல்லாஹ்விடத்தில் மிகவும் கண்ணியம் பொருந்தியவன் என்று இந்த நபி மொழி சொல்லிக் கொண்டிருக்கிறது.
எனவே கஃபா கண்ணியமானது என்பதற்காக அதனோடு தொடர்புள்ள சகல பொருட்களையும் சங்கை செய்திட முன்னிற்கும் நாம் அந்த கஃபாவை விட கண்ணியம் பொருந்திய முஃமினுடன் தொடர்புள்ள பொருட்களை கண்ணியப்படுத்தி வைப்பதில் நம்மத்தியில் கவணக் குறைவு ஏற்பட்டது எதனால்? என்று சிந்தியுங்கள்.
கஃபத்துல்லாஹ்வும் அதனைச் சூழவுள்ள பிரதேசங்களும் பரிசுத்த புண்ணிய பூமிகளாகும். அப்பகுதிகள் அல்லாஹ்வின் சின்னங்களாகும். அவை பாக்கியம் நிறைந்த பிரதேசங்களாகும். எனவே அவை கண்ணியப்படுத்தப்படவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
கஃபதுல்லாஹ்இ ஹஜருல் அஸ்வத்இ நபிய்யுல்லாஹ் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பாதச் சுவடு என்பனபோன்று மதீனா முனவ்வராவும் அதனைச் சூழவுள்ள பிரதேசங்களும் ஆகும். இருந்த போதிலும் அங்குள்ள மா நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் மண்ணறையை ஏன் நம்மவர்கள் கண்ணியப்படுத்துகின்றார்களில்லை. மாறாக நபிமார் மற்றும் வலிமார்களின் கப்ருகளை கண்ணியப்படுத்தும் போது அதனைச் சிலர் மிக மோசமாகச் சித்திரிக்கின்றார்கள்.
மதீனா மக்காவை விட அதிகம் பரகத் உள்ள இடம்.
عن أنس رضي الله عنه عن النبي صلى الله عليه وآله وسلم اللهم اجعل بالمدينة ضعفي ما جعلت بمكة من البركة. البخاري
மதீனா மக்காவை விட மதிக்கப்பட வேண்டும்.
عن أم المؤمنين عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وآله وسلم اللهم حبب إلينا المدينة كحبنا مكة أو أشد. البخاري ومسلم.
மக்கா முகர்ரமாவில் புனித ஆலயத்தினை கட்டி முடித்த பின்னர் அந்த ஊரைப் பரிசுத்தமான ஊராக ஆக்கிவிடுமாறு நபிய்யுல்லாஹ் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பிரார்த்தித்திருக்கின்றார்கள். அவ்வாறே மதீனா முனவ்வறாவில் மஸ்ஜிதுந் நபவியை கட்டி முடித்துவிட்டு அந்த ஊரை பரிசுத்தமான ஊராக பிரகடணம் செய்தது மட்டுமல்லாமல் மக்கா எங்களுக்கு நேசம் உள்ளதொரு பிரதேசமாக இருப்பது போன்று அல்லது அதை விட அதிகம் நேசம் உள்ளதொரு பிரதேசமாக மதீனாவை ஆக்கி விடு என்று நமது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்துள்ளார்கள். அவ்வாறான மதீனா முனவ்வராவையும் அதனோடு தொடர்புள்ளவைகளையும் நாம் நேசிப்பதோடு அவற்றினூடாக அருள் பெற்றிட முயற்சிப்போமாக! எனக் கூறி இக்கட்டுரையை முடித்துக் கொள்கின்றோம்.
யா அல்லாஹ் உனது பேருளான பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் பெருமைகளையும் அகமியங்களையும் சொல்வதற்கும் எழுதுவதற்கும் உடலிலும் உள்ளத்திலும் முழுமையான ஆரோக்கியத்தினைத் தந்தருள்வாயாக! அகத்திலும் புறத்திலும் உண்டாகும் சகல வியாதிகளை விட்டும் எம்மனைவரையும் பாதுகாப்பாயாக!
பேரருளான பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் பொருட்டினால் எமது இப்பணியை ஏற்றுக் கொள்வாயாக! எமது பெற்றோர்கள் உற்றார் உறவினர்கள் முஹிப்பீன்கள் மனைவி மக்களின் பாவங்களை மன்னித்து அவர்கள் எல்லோரின் மண்ணறைகளையும் மன்னர் மஹ்மூதரசர் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் மனம் கமழும் கப்ருகளாக அமைத்துவிடுவாயாக!
விழிப்பிலும் உறக்கத்திலும் உன் ஹபீபின் உயர் சிந்தனையை எங்களில் ஏற்படுத்துவாயாக! அதன் வழியே எமது குழந்தைகளும் மாணவ மாணவிகளும் பயணிப்பதற்கு பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் பொருட்டினால் தௌபீக் செய்தருள் புரிவாயாக! ஆமீன் பிஜாஹி ஸெய்யிதில் ஆலமீன் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம்.
اللهم نور بالعلم قلوبنا واستعمل بطاعتك أبداننا وخلص من الفتن أسرارنا واشغل بالإعتبار أفكارنا وقنا شر وساوس الشيطان واجرنا من النيران. اللهم اعصمنا من شر الفتن وعافنا من جميع المحن وأصلح منا ما ظهر وما بطن ونق قلوبنا من الحقد والحسد ولا تجعلنا علينا تباعة لأحد. اللهم يا رب بجاه نبيك المصطفى ورسولك المرتضى طهر قلوبنا من كل وصف يباعدنا عن مشاهدتك ومحبتك وامتنا على عقيدة أهل السنة والجماعة والشوق إلى لقائك ياذاالجلال والإكرام والحمد لله رب العالمين
صلى الله على محمد
صلى الله عليه وسلم
صلى الله على محمد
صلى الله عليه وسلم
صلى الله على محمد
يارب صل عليه وسلم
முற்றும்
தொகுப்பசிரியர்
அல் ஹாஜ் மௌலவி பஸீர் அஹ்மத்
அதிபர்
அந் நிலாமிய்யதுல் மஹ்பிய்யா அரபுக் கால்லூரி




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக