செவ்வாய், 26 மார்ச், 2019

அவன் மட்டும்தான் அல்லாஹ்.


அவன் மட்டும்தான் அல்லாஹ்.


அல்லாஹ்வின் தாத்தும் ஸிபாத்தும் தானானவைகள். வாஜிபானவைகள். அவனுக்கு  ஆரம்பமும் இல்லை. முடிவும் இல்லை. அவன் என்றென்றும் ஒரே நிலையில் உள்ளவன். படைப்புக்களைப் படைக்கும் முன்னர் அவன் யார்? அவன் ஸிபாத்துக்கள் எத்தகையது? என்பன அறியப்படாத, வெளிப்படாத ஒருவனாக இருந்தான். எப்பொழுது படைப்புக்களைப் அவன் படைத்தானோ அப்பொழுது அவன் வெளிப்பட்டுவிட்டான். அறியப்பட்டான். எனவே  படைப்புக்கள் அனைத்தும் படைப்பாளி ஒருவன் இருக்கின்றான் என்பதற்கான அத்தாட்சிகளாகும். கண்ணாடிகளாகும். மழாஹிர்களாகும்.
படைப்புக்களிடமுள்ள எந்தவொன்றும் தானானவைகள் அல்ல. சொந்தமானவைகளுமல்ல. அவற்றுக்கு ஆரம்பமும் முடிவும் இருக்கிறது. அவற்றில் மாற்றங்கள் இடம்பெறுகின்றன. எனவே தாத்தும் ஸிபாத்தும் வாஜிபான ஒருவனுக்கு சொல்லப்படுகின்ற அல்லாஹ் என்ற நாமத்தினை அவனது எந்தவொரு படைப்புக்கும் உபயோகம் செய்துகொள்ளக்கூடாது. அவ்வாறே படைப்புக்களுக்கு அவனால் வழங்கப்பட்டுள்ள எந்தவொரு தன்மையும் அவனிடமுள்ள தன்மைக்கு நிகராகாது.
உதாரணமாக, ரஹ்மத் என்ற ஸிபத்தும் ரஹீம் என்ற நாமமும் அல்லாஹ்வுக்குச் சொந்தமானது. இந்த ஸிபத்தினையும் நாமத்தினையும் அவன்தான் தன் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களுக்கு வழங்கியுள்ளான். ஆனாலும்கூட ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் ரஹ்மத் என்ற ஸிபத்தும் ரஹீம் என்ற நாமமும் அல்லாஹ்வின் ஸிபத்துக்கும் நாமத்திற்கும் எவ்வாறு நிகராகும்?.
அல்லாஹ்வின் படைப்புக்களில் அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களை விடச் சிறந்ததொரு படைப்பு இல்லவேயில்லை. இவ்வாறு மொத்த சிறப்புக்களும் வழங்கப்பட்ட நபிகள் நாயகத்திற்குகூட  இலாஹிய்யத் என்ற தன்மையினை அல்லாஹ் வழங்கிடவில்லை. இலாஹியத்துடைய தன்மை அல்லாஹ்வுக்கு மட்டுமே சொந்தமானது. எனவே அந்த தன்மை உள்ள ஒருவனே அல்லாஹ் என்று அழைக்கப்படுவான். இதுதான் உண்மையான அஹ்லுஸ் சுன்னத் வல்ஜமாஅத் கொள்கையாகும்.

அல்லாஹ் எவ்வாறு உண்டானான்?. அவனுக்கு ஸிபாத்துக்கள் எவ்வாறு உண்டானது?. அவ்வாறே படைப்புக்களைப் படைக்கவேண்டும் என்ற எண்ணமும் அந்த படைப்புக்களுக்கென்று அவனால் உருவாக்கப்பட்டவைகளும் அவனுக்கு எவ்வாறு உருவானது? போன்ற விடயங்களை அவன் ஒருவன்தான் அறிவான்.
படைப்புகளைப் படைக்கவேண்டும் என்ற எண்ணம் அவனுக்கு உருவானதைத் தொடர்ந்து அதற்குத் தேவையான சகலதையும் வானங்களும் பூமிகளும் படைக்கப்படுவதற்கு முன்னர் அந்தப் படைப்புக்களோடு  தொடர்புள்ள  முழு ஞானங்களையும் உம்முல் கிதாப்  பிரதான ஏட்டில் அவன் பதிவு செய்துகொண்டான். அந்த அறிவுகளை அல்லாஹ், இன்னுமொருவருக்கு தெரிவித்துக் கொடுத்தானா? இல்லையா?
உம்முல் கிதாபி (தாய் ஏட்டி) ல் பதிவாகியுள்ளதாகச் சொல்லப்படுகின்ற தூதுக்கள்  தூதுவர்களுக்குத் தெரியுமா? அல்லது தெரியாதா? என்று நம்மிடம் கேட்டால், அந்த தூதுக்களில் எதையெதை யார் யாருக்குத் தெரிவிக்க அல்லாஹ் நாடினானோ அந்தந்தத் தூதுவர்களுக்கு அது தெரியும் என்று தெரிவிப்போமே தவிர எந்தவொரு தூதுவரும் மறைவானவற்றை உருவாக்கியவர்கள் என்றோ, அல்லது அவற்றினை தாமாகத் தெரிந்துகொண்டவர்கள் என்றோ தெரிவிக்கமாட்டோம்.
தொடரும்..


கட்டுரைகள்

“வஹ்ஹாபிகள்” இந்தக் காலத்தின் “க்வாரிஜ்கள்”

  இப்னு அப்தில் வஹ்ஹாபும் இப்னு தைமிய்யாவும்   இப்னு தைமிய்யா என்ற தனி நபரால் விதைக்கப்பட்ட பொய்யான, பிழையான, மார்க்கத்துக்கு ...