செவ்வாய், 5 மார்ச், 2019

அல்லாஹ்வும் நூர். அண்ணலாரும் நூர்.


அல்லாஹ்வும் நூர். அண்ணலாரும் நூர்.

அல்லாஹ் வானங்கள் பூமிகளின் நூர்ஆகும். (சூரத்துன்நூர்35ம்வசனம்.)

பூமி அதன் ரப்பின் நூரினால் பிரகாசிக்கும். (சூரத்துஸ்சுமர்வசனம் 69)

நீ வானம் பூமிகளின் நூராக இருக்கின்றாய். (புகாரி)


நூருன்”  என்ற அரப் வார்த்தைக்கு பிரகாசம், ஒளி, வெளிச்சம் என அதற்குப் பொருள்கள் கூறப்படுவது போன்று படைத்தல், பராமரித்தல், நீதி செலுத்துதல், நேர்வழி காட்டுதல் போன்ற கருத்துக்களும் நூருன் என்ற வார்த்தைக்கு விரிவுரையாக சொல்லப்படுகிறன.

வெளிச்சமானது புறவெளிச்சம் அகவெளிச்சம் என இருவகை வெளிச்சங்கள் உண்டு. புற வெளிச்சம் இல்லாமல் மனிதன் எவ்வாறு அவனது சடவுலக வாழ்கையில் வெற்றியினை அடைந்து கொள்ள முடியாதிருக்கிறதோ அவ்வாறே அகவெளிச்சம் பெறாமல் ஆத்மீக வெற்றியினை அவனால் அடைந்து கொள்ள முடியாது. இவ்விரு வெளிச்சங்களினையும் அல்லாஹ்தான் வெளிப்படுத்தி வைக்கின்றான். என்றாலும் கூட அவற்றினை வசீலாவின் ஊடாக வெளிப்படுத்தி வைத்தானே தவிர நேரடியாக அவன் அவற்றினை வெளிப்படுத்தி வைக்க வில்லை.

மனித சடவுலக வாழ்கையின் வெற்றிக்குத் தேவையான புற வெளிச்சங்களை பெற்றுக் கொள்வதற்கு சூரியன், சந்திரன், நச்சத்திரங்களை அதற்கான வசீலாவாக அல்லாஹ் மனிதனுக்காகப் படைத்திருப்பது போன்று மனித ஆத்மீக வாழ்க்கையின் வெற்றிக்குத் தேவையான அகப்பிரகாசங்களைப் பெற்றுக் கொள்வதற்காக அல்குர் ஆனையும் அஸ்ஸுன்னாவினையும் அல்லாஹ் வஸீலாவாக ஏற்படுத்தித் தந்துள்ளான்.

சூரியனும் சந்திரனும் நட்சத்திரங்களும் புலனுக்குப் புலப்படுகின்ற வெளிச்சங்களை வெளிப்படுத்திக்  கொண்டிருந்தாலும் ஒவ்வொன்றும் வெவ்வேறுபட்ட தன்மைகளைக் கொண்டிருக்கிறதே தவிர மூன்றினதும் யதார்த்தம் ஒன்றென்று எண்ணி விடக்கூடாது . சந்திரனும் நட்சத்திரங்களும் சூரியனின் ஒளியினை உள்வாங்கிக் கொண்ட பின்னரே அவ்விரண்டும் ஒளியினை வெளிப்படுத்துகிறது. இவ்வாறே அகவெளிச்சத்தினை வெளிப்படுத்தி வைக்கும் சாதனங்களான அல் குர்ஆனும் அல் ஹதீதும் அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களினூடாக வெளிப்படும் பிரகாசங்களாக இருந்து கொண்டிருக் கின்றன.
சூரியன் ஊடாக சந்திரனும் நட்சத்திரங்களும் ஒளியினைப் பெற்றுக் கொண்டாலும் சூரியனுக்குப் பிரகாசம் வழங்கியவன் அல்லாஹ்வாகும். அவ்வாறே ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் ஊடாக அல்குர்ஆனும் அல்ஹதீஸும் ஒளியினை வெளிப்படுத்திக் கொண்டிருந்தாலும் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களுக்கு பிரகாசம் வழங்குபவன் அல்லாஹ் ஒரு வனாகும்.

மனிதனுக்குத் தேவையான புறவெளிச் சங்களை அல்லாஹ் சூரிய சந்திரனூடாக வெளிப்படுத்தி வைத்த பிறகும் அவ்விரு பொருட்களையும் பிரகாசமிக்கவைகளென்று சொல்ல முடியுமாக இருந்தால் அம் மனிதனுக்குத் தேவையான அக வெளிச்சங்களை வெளிப்படுத்தி வைப்பதற்கு அல்லாஹ் வினால் தெரிவு செய்யப்பட்ட செம்மல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களைப் பிரகாசமிக்கவர்கள் என்று பிரசாரம் பண்ணுவதில் என்ன பிரச்சினை இருக்கிறது?


எனவே அல்லாஹ்வும் நூர். சந்திரனும் நூர். அல்லாஹ்வும் நூர். அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களும் நூராகும். அல்லாஹ்வுக்கு உபயோகிக்கப் படுகின்ற நூர் என்ற வார்த்தையினை சந்திரனுக்கு உபயோகிக்கின்ற சந்தர்ப்பத்தில் சங்கடமும் சந்தேகமும் எவ்வாறு உருவாக வில்லையோ அவ்வாறே அல்லாஹ்வுக்கு உபயோகம் செய்யப்படுகின்ற நூர் என்ற வார்த்தையினை அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களுக்கு உபயோகிப்பதிலும் எவ்விதப் பிரச்சினையும் ஏற்பட்டு விடப் போவதில்லை.

நூருன் என்பது அல்லாஹ்வின் திருநாமங்களில் ஒன்றாக இருக்கிறது. அவ்வாறே அவனது ஸிஃபத்தாகவும் இருந்து கொண்டிருக்கிறது. எனவே அவனது மார்க்கமும் நூர். அவனது தூதரும் நூர். அவனது இல்லமும் நூர். அந்த நூரினால் விசுவாசிகளின் உள்ளங்கள் பிரகாசம் பெறுகின்றன. அந்தப் பிரகாசம் விசுவாசிகளின் நாவுகளிலும் முகங்களிலும் வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் என இப்னுல் கைடயும் ஜவ்சி என்ற அறிஞர்  ஷிபாஉல்அலீல்” என்ற நூலில் பதிவு செய்துள்ளார்.

தொடரும்............

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கட்டுரைகள்

“வஹ்ஹாபிகள்” இந்தக் காலத்தின் “க்வாரிஜ்கள்”

  இப்னு அப்தில் வஹ்ஹாபும் இப்னு தைமிய்யாவும்   இப்னு தைமிய்யா என்ற தனி நபரால் விதைக்கப்பட்ட பொய்யான, பிழையான, மார்க்கத்துக்கு ...