வெள்ளி, 1 மார்ச், 2019

அல் குர்ஆனும் நூர் அண்ணலாரும் நூர்


அல் குர்ஆனும் நூர் அண்ணலாரும் நூர்.




அல் குர்ஆனை நாம் நமது கண்களினால் பகலிலும் பார்க்கின்றோம். இரவிலும்பார்க்கின்றோம். கரங்களினால் பிடிக்கின்றோம். ஓதுகின்றோம். எழுதுகின்றோம். அச்சிடுகின்றோம். அழிக்கின்றோம். எரிக்கின்றோம். கரைக்கின்றோம். கரைத்துக்குடிக்கின்றோம்.  இத்தனை கருமங்களையும் அல் குர் ஆனில் புரிந்து கொண்ட பிறகும் அல் குர் ஆனை இஸ்லாமியர்களான நாமனைவரும் கருத்து முரண்பாடுகள் கடந்து நூர் என்றே சொல்கின்றோம். ஆனாலும்கூட அதில் இருந்து பிரகாசம் வெளிப்பட்டதை நாம் கண்டதில்லையே!

நாம் அல் குர் ஆனில் இருந்து பிரகாசம் வெளிப்பட்டதைக் காணவில்லை என்ற காரணத்திற்காக அது நூர் இல்லையென்று சொல்ல முடியுமா?.

ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் தாயின் வயிற்றில் இருந்து பிறந்தார்கள். திருமணம் செய்துள்ளார்கள். குழந்தைகளைப் பெற்றுள்ளார்கள். உண்ணுவார்கள். உறங்குவார்கள். ஓடியாடிவிளையாடியுள்ளார்கள். யுத்தங்களில் காயமுற்று ரத்தம் சிந்தியுள்ளார்கள். சுகவீனம் அடைந்துள்ளார்கள். மரணத்தினை தழுவியுள்ளார்கள். குளிப்பாட்டி நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். எனவே ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் மனிதரே தவிர நூர் அல்ல வென்று குற்றம் சுமத்து கின்றவர்கள் மேற் கூறிய காரணங்களைக் கூறி அல் குர் ஆன் நூர் என்பதை ஏன் மறுக்க வில்லை?.

அல் குர் ஆன் நூராகும் என்றால் அது நமது புலன்களுக்குப் புலப்படுகின்ற சூரிய சந்திரனின் நூரைப் போன்ற தென்று நாம் எவ்வாறு சொல்ல வில்லையோ அவ்வாறே ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் நூராகவே இருக்கின்றார்கள் என்றால் சாதாரன நூர் என்று நம்மில் யாரும் சொன்னதில்லை. நூரினால் படைக்கப் பட்டிருக்கும் அல் குர் ஆனில் இருளும் இருப்பதாக அல்குர்ஆன் சொல்லிக் கொண்டிருக்கிறது. உலக அழிவு நாள் நெருங்கும் போது அல்குர் ஆனில் எழுத்துக்கள் மட்டுமே மீதமாக இருக்கும். அப்போது அதில் நூர் இருக்காது என்றும் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் அறிவித்துள்ளர்கள். ஆனால் நூரினால் படைக்கப்பட்டிருக்கும் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களில் இருளுக்கே இடமில்லாமல் முழுமையாக நூரினால் ஆனவர்களாக இருக்கின்றார்கள். ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் நூர் நொடிக்கு நொடி அதிகரித்துச் செல்லுமே தவிர ஒரு கணப் பொழுதில் கூட நூர் நீங்கியவர்களாக அவர்கள் இருக்க மாட்டார்கள். எனவே அல்குர் ஆனைவிடவும் அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் அதிகூடிய அந்தஸ்த்தும் அகமியமும் நிறைந்தவர்களாக காணப்படுகின்றார்கள்.  அல்குர்ஆன் அண்ணலாரின் குணங்களாகும்.“நூருன்”என்ற சொல் அல்குர் ஆனில் சுமார். 45 இடங்களில் வெவ்வேறு விதமான அர்த்தங்களில் உபயோகம் செய்யப்பட்டுள்ளது. எனவே நூருன் என்ற வார்த்தைக் குரிய வெளிப்படையான தமிழாக்கத்தினை மட்டும் அதற்குரிய அர்த்தம் என எண்ணிக் கொண்டு ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் நூராகவே இருக்கின்றார்கள் என்ற வாதத்தை வெறுத்து விட வேண்டாம். மாறாக ஸல்லல்ல்லாஹு அலைஹிவ ஆலிஹி வசல்லம் அவர்கள் நூராகும் என்று நொடிக்கு நூறு விடுத்தங்கள் கூறுங்கள். ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் நூராக இருக்கின்றார்கள் என்ற கருத்தினைக் கூறுவதற்கு அஞ்சாதீர்கள். ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் நூராகவே இருக்கின்றார்கள் என்பது சூபிச செய்தியல்ல. அது இஸ்லாத்தின் அடிப்படை அகீதாவுடன் தொடர்புள்ள தகவலாகும். அதற்காக ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் நூராகும் என்ற செய்தி அகீதாவின் எந்த நூலில் பதிவாகி இருக்கிறது என்று கேட்டு உங்கள் முட்டாள் தனத்தினை வெளிப்படுத்தி வைத்துவிடாதீர்கள். இப்படியொரு கேள்வியினை கேட்பவர்கள் அகப்பார்வை அற்ற குருடர்களிடம் கல்வி கற்றுள்ளார்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். 
தொடரும்...........

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கட்டுரைகள்

“வஹ்ஹாபிகள்” இந்தக் காலத்தின் “க்வாரிஜ்கள்”

  இப்னு அப்தில் வஹ்ஹாபும் இப்னு தைமிய்யாவும்   இப்னு தைமிய்யா என்ற தனி நபரால் விதைக்கப்பட்ட பொய்யான, பிழையான, மார்க்கத்துக்கு ...