செவ்வாய், 9 ஏப்ரல், 2019

தூதுவர் ஆலிமுல் கைப் மட்டுமன்றி ஹாழிர் நாழிருமாகும்.சிலதை விசுவாசித்து சிலதை மறுக்கும் கூட்டம்.


தூதுவர் ஆலிமுல் கைப் மட்டுமன்றி  ஹாழிர் நாழிருமாகும்.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களிடம் வருகை தந்த வானவத் தூதுவத் தலைவர் அமரர் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நியாயத் தீர்ப்புக்குரிய நாள் எப்பொழுது? என்று கேட்டதற்கு என்னைவிட நீங்கள் அதனை அறிந்தவராக இருக்கின்றீர்கள் என்று பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் கூறியதற்க்கிணங்க இவ்வுலகம் அழிந்து நியாயத் தீர்ப்புநாள் எப்பொழுது வரும் என்பது  வானவத் தூதுவருக்கும் தெரியும். அது, சூர் ஊதும் தூதருக்கும் தெரியும்.
ஒருவர் நல்ல காரியம் ஒன்றைச்செய்ய அவரது உள்ளத்தில் நினைத்துவிட்டால் அவர் ஒரு நன்மை செய்த கூலி அவருக்கு எழுதப்படுகிறது என்ற நபி வாக்கின் அடிப்படையில் மனிதனின் உள்ளத்தில் எழுகின்ற நல்ல, தீய எண்ணங்களையும் அமரர்கள் அறிகின்றார்கள். பார்க்கின்றார்கள்.
ஒரு குழந்தை தாயின் கர்ப்பத்தில் உருவாகி நாற்பதாவது நாளாகின்றபோது அந்தக் குழந்தைக்குத் தேவையான ஆயுள், உணவு போன்ற அம்சங்களை தூதுவர் எழுதிவிடுகின்றார் (முஸ்லிம்) என்ற நபி வாக்கின் அடிப்படையில் கருவில் இருக்கின்ற அந்த சிசு ஆணா? அல்லது பெண்ணா? அந்த சிசு எந்த இடத்தில் எப்பொழுது பிறக்கும், இறக்கும்? போன்ற அம்சங்களை அமரர்கள் அறிகின்றார்கள். பார்க்கின்றார்கள்.
தூதுவர்கள் மனிதர்களின் பிடரி நரம்பைவிட மிக நெருக்கமாக இருக்கின்றார்கள். இரவிலும் பகலிலும் அவர்கள் நம்மோடு இருக்கின்றார்கள். நமது அமல்களை, அசைவுகளை மட்டுமன்றி உள்ளத்தின் ஊசலாட்டங்களையும் உற்று நோக்கிக்கொண்டு இருக்கின்றார்கள். அவர்கள் தூதராகவும் இருக்கின்றனர் என்பதாக அல்குர்ஆனும் அல்ஹதீதும் ஆணித்தரமாக அறிவித்துக்கொண்டிருக்கும்போது விளக்கமும் விரிவும் கூறாமல் அல்லாஹ் ஒருவன்தான் மறைவானவற்றை அறிவான். தூதரை நூர் என்று சொல்லக்கூடாது. அவன் ஒருவனே ஹாழிர், நாழிர் என்றும் முனாபிக்குகள் கூறுகின்றனர். இவர்களின் சிந்தனைகளை அல்லாஹ் சாகடித்துவிட்டான். இவர்கள் அகப்பார்வை அகற்றப்பட்ட குருடர்களாகும்.

சிலதை விசுவாசித்து சிலதை மறுக்கும் கூட்டம்.

தான் மட்டுமே ஹாதி. என்னல்லாத இன்னுமொருவரால் ஹிதாயத் வழங்க முடியாது என்று அறைகூவிய அல்லாஹ்தான் அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களையும் ஹாதி என்றான்.
இதில் ஹகீகி மஜாசி, தாத்தி, அதாஈ  என்று ஒன்று இருப்பதை அல்லாஹ் அறிவித்துக் காண்பித்து வைத்தான். ஆனாலும்கூட இவ்விரண்டுக்கும் இடையிலான வேறுபாடுகளை விளக்காமல், விபரிக்காமல் அல்லாஹ் மட்டும்தான் ஹாதி. அவனல்லாத இன்னுமொருவரை ஹாதி என்று கூற மாட்டோம் என்கின்றது நயவஞ்சக் கூட்டம். ஹகீகியை கைப்பற்றிக்கொண்டு மஜாசியை மறைத்துவிட்டார்கள். தாத்தியை தெரிவிக்கின்றார்கள். அதாயியை அழித்துவிட்டா ர்கள்.
நான் நூராகும். தனது கலாமும் நூராகும் என்று அறைகூவிய அல்லாஹ்தான் அண்ணலாரும் நூர் என்றான். இதிலும் ஹகீகி மஜாசி, தாத்தி அதாஈ  என்பன இருப்பதாக விளக்கப்படுத்தினான். இவற்றுக்கிடையே காணப்படுகின்ற வேறுபாடுகளை விளக்காமல் விவரிக்காமல் அல்லாஹ்வும் அவனது கலாமும்தான் நூரே தவிர அண்ணலார் நூர் அல்ல என்று கூறுகிறது நயவஞ்சக் கூட்டம். இங்கும் ஹகீகியை கைப்பற்றிக்கொண்டு மஜாசியை மறைத்துக்கொண்டார்கள். தாத்தியை தெரிவிக்கின்றார்கள். அதாயியை அழித்து விட்டார்கள்.
நான் ஆலிமுல் கைப் ஆகும். தன்னிடமுள்ள மறைவானவற்றை எவருக்கும் வெளிபடுத்தி வைப்பதில்லை என்று சொன்ன அல்லாஹ்தான், அவன் விரும்பிய தூதுவர்களுக்கு தன்னிடமுள்ள மறைவானவற்றை தெரிவித்துக்கொடுப்பதாகச் சொன்னான். இதனடிப்படையில், வருடந்தோறும் தூதுவர்களுக்கு பிரபஞ்சங்களின் நிகழ்ச்சி நிரலை பங்கிட்டுக்கொடுப்பதாகவும் அவனே சொன்னான். பிரபஞ்சங்களின் நிகழ்வுகளை நிர்வகிக்கின்ற தூதுவர்கள் மீது சத்தியமும் செய்தான். அவற்றினை முறைப்படி விநியோகம் செய்கின்ற தூதுவர்கள் மீதும் சத்தியம் செய்தான். தூதுவர்கள் அடியார்களுக்கென்று பாதுகாவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்றான். கண்ணியமான எழுத்தாளர்கள் அடியார்கள் செய்கின்ற ஒவ்வொன்றையும் அறிகின்றார்கள் என்றான்.
இதிலும் ஹகீகி மஜாசி, தாத்தி அதாஈ  என்று ஒன்று இருப்பதாக அல்லாஹ் விளக்கப்ப டுத்தினான். பின்னரும் இவற்றுக்கிடையே காணப்படுகின்ற வேறுபாடுகளை விளக்காமல் விவரிக்காமல் அமரர்கள் மறைவானவற்றை அறிகின்றார்கள் என்று சொன்னாலும் அண்ணலார் அறிகின்றார்கள் என்று சொல்லிவிடக்கூடாது என்கிறது இந்த நயவஞ்சகக் கூட்டம். இங்கும்தான் ஹகீகியை கைப்பற்றிக்கொண்டு மஜாசியை மறைத்துக்கொண்டார்கள். தாத்தியை தெரிவிக்கின்றார்கள். அதாயியை அழித்துச் செல்கின்றார்கள். இவர்கள் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் அகமியங்ககளை அழிக்கப் புறப்பட்டவர்கள். எனவே இவர்களிடம் எச்சரிக்கையாக இருந்துகொள்ளுங்கள்.
 தொடரும்....

கட்டுரைகள்

“வஹ்ஹாபிகள்” இந்தக் காலத்தின் “க்வாரிஜ்கள்”

  இப்னு அப்தில் வஹ்ஹாபும் இப்னு தைமிய்யாவும்   இப்னு தைமிய்யா என்ற தனி நபரால் விதைக்கப்பட்ட பொய்யான, பிழையான, மார்க்கத்துக்கு ...