தூதுவர் என்றால் அவர்
யார்? நிர்வாகிகளுக்கு நாளைய நிகழ்வு
தெரியுமா? தெரியாதா?
தூதுவர் என்ற தமிழ் மொழிச் சொல்லுக்கு அரபியில்
“ரசூலுன்” என்று சொல்லப்படும். தூதுவர்களை ரசூல்மார்கள் என்று
சொல்வோம். தூதுவர்கள் என்று அழைக்கப்படுகின்ற ரசூல்மார்கள் மனித இனத்தில் உள்ளவர்களாகத்தான்
இருப்பார்களா? அல்லது வேற்றுக்கிரக
வாசிகளும் தூதுவர்களாக இருப்பார்களா?.
முஃமினுல் கைப் – மறைவானவற்றை விசுவாசம் கொண்டவன் வானவர்கள் என்றழைக்கப்படும்
அமரர்களையும் விசுவாசிக்கவேண்டும். பின்வரும் இறை வசனங்கள் அமரர்களை, அடியார்கள் என்றும் தூதுவர்கள் என்றும் சொல்கின்றன.
மலக்குகள் கண்ணியமிக்க அடியார்கள். (சூரத்துல் அன்பியா
வசனம் 26.)
வானங்களையும் பூமிகளையும் படைப்பவனும் இரண்டிரண்டாக,
மும்மூன்றாக, நன்னான்காக இறக்கைகைகள் உள்ளவர்களாக மலக்குகளை தூதர்களாக்கியவனுமாகிய
அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும்.
(சூரத்துல் ஃபாத்திர் வசனம் ௦1)
அல்லாஹ் மலக்குகளில் இருந்தும் மனிதர்களில் இருந்தும்
தூதர்களை அவன் தேர்ந்தெடுத்துக் கொள்கிறான், (சூரத்துல் ஹஜ் வசனம் 75)
நிச்சயமாக அது கண்ணியமான தூதுவரின் சொல். (சூரத்துத்
தக்வீர் வசனம் 19)
இன்னும் அவன்தான் அடியார்களை அடக்கியாள்பவன். இன்னும்
உங்களில் ஒருவருக்கு மரணம் வந்துவிடுமாயின் அவரை நமது தூதுவர்கள் மரணிக்கச் செய்யும்
வரையில் உங்களுக்குப் பாதுகாவலர்களை அனுப்புகிறான். (சூரத்துல் அன்ஆம் வசனம் 61.)
இவ்விறை வசனங்களின் அடிப்படையில் சகல மலக்குகளும்
அல்லாஹ்வின் சிறப்பான அடியார்களாக இருக்கிறார்கள் என்பதோடு மனிதர்களின் வாழ்வோடும்
சாவோடும் தொடர்புள்ள அமரர்கள், ரசூல்மா (தூதுவ) ர்களாக நியமனம் பெற்றிருக்கிறார்கள் என்பதையும் புரிந்துகொண்டோம்.
அந்த வகையில் வானவர்களான ஜிப்ரீல், மீக்காயில்,
இஸ்ராஃபீல், இஸ்ராயில், முன்கர் நகீர், ரகீப், அதீத், காலை, மாலை பாதுகாப்புப் பணியில் அமர்த்தப்பட்டவர்கள்,
திக்ருடைய அமர்வுகளுக்கு வருவோர்
போவோர் முதலானோர் முக்கியமான தூதுவர்களாக இருக்கிறார்கள். சகல மலக்குகளும் தூதுவர்கள்தான்
என்று தெரிவிக்கும் பெருமக்களும் உண்டு. இந்த
தூதுவர்கள் வானம், பூமிகளின் நிர்வாகிகளாவர்.
நிர்வாகிகளுக்கு நாளைய நிகழ்வு
தெரியுமா? தெரியாதா?
மறைவானவற்றை அறியும் ஞானம் தன்னிடம் மட்டும்தான் இருப்பதாக அறிக்கையிட்ட இறைவன், தான் பொருந்திக்கொண்ட தூதர்களுக்கு மறைவானவற்றை வெளிப்படுத்திக்கொண்டிருக்கின்றான் என்று கீழ் வரும் வாக்கியங்களில் அவன்தான் அறிவித்துள்ளான்.
மறைவானவற்றை அறிந்தவன். தன்னால் மறைக்கப்பட்டதை ஒருவருக்கும் வெளிப்படுத்த மாட்டான். அவன் பொருந்திக்கொண்ட தூதரைத் தவிர மற்ற எவருக்கும் அதனை வெளியிட மாட்டான்.”
(சூரத்துல் ஜின் வசனம் 27.)
மேலும் உங்களுக்கு அல்லாஹ் மறைவானவற்றை அறிவிப்பவனாகவும் இல்லை. எனினும் அல்லாஹ் தன் தூதர்களில் தான் நாடியவர்களைத் தெரிந்தெடுத்துக் கொள்கின்றான்.” (சூரத்து ஆல இம்ரான் வசனம் 179.) எனவே அல்லாஹ் அல்லாத இன்னுமொருவருக்கு மறைவான அம்சங்கள் தெரியாதென்று மூஃமின் சொல்லமாட்டான்.
“அதில் உறுதி செய்யப்பட்ட காரியம் ஒவ்வொன்றும் பிரிக்கப்படுகிறது.” என்ற சூரத்துத் துகான் நான்காவது வசனத்தின் அடிப்படையில் இந்த இரவில் இருந்து அடுத்த வருடத்தில் வருகின்ற இவ்விரவு வரைக்குமான யாவும் நிர்ணயம் செய்யப்பட்டு தூதுவர்களுக்கு பகிர்ந்து கொடுக்கப்படுகிறது. எனவே ஒரு வருடத்திற்குள் நிகழும் நிகழ்வுகளை தூதுவர்கள் தெரிந்துகொள்கிறார்கள் என்றும் அல்லாஹ் சொன்னான்.
அடியார்களுக்குத் தேவையான சகல அம்சங்களையும் வானம், பூமிகளைப் படைப்பதற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் அல்லாஹ் படைத்துவிட்டான். வானம், பூமிகள் மட்டுமல்லாமல் அதில் உள்ளவைகளையும் அல்லாஹ் அடியார்களுக்கென்றே அமைத்தும் உள்ளான். அவை அனைத்தையும் அமரர்கள் கண்காணித்துக்கொண்டு நிர்வகித்துக்கொண்டிருகின்றனர். இதையே,
அடியார்கள் சம்பந்தமான இம்மை, மறுமைக் காரியங்களை நிர்வகிகுக்கும் வானவர்கள் மீது சத்தியமாக” (சூரத்துன் நாஸிஆத். வசனம் 5.) என்று அல்லாஹ் அமரர்கள் மீது சத்தியம் செய்கின்றான். எனவே,
1- இவ்வுலகம் அழிந்து நியாத்தீர்ப்புநாள் எப்பொழுது வரும் என்பது
2- மழை பெய்வது
3- கர்ப்பத்திலிருப்பது
4- நாளை நடக்கும் காரியம்
5- மரணிக்கும் இடம்
ஆகிய ஐந்து அம்சங்களும் அடியார்களாகவும் தூதுவர்களாகவும் நிர்வாகிகளாகவும் இருக்கின்ற அம்ரர்களுக்குத் தெரியுமா? தெரியாதா?
இவ்வைந்து காரியங்களும் அல்லாஹ் ஒருவனுக்கே தான் தெரியும். அவனல்லாத யாருமே இவற்றினை அறியமாட்டார்கள். அல்லாஹ் அல்லாத யாராவது ஒருவர் மறைவானவற்றை அறிவார் என்று சொன்னால், சொன்னவர் முஷ்ரிக் ஆகி விடுவார் என்ற வாதம் ஈமானிய வாதமல்ல. மாறாக அது முனாஃபிக்குகள் வாதமாகும் என்பதைப் புரியுங்கள்.
கடலிலும் கரையிலும் விண்ணிலும் மண்ணிலும் நிகழ்கின்ற சகல நிகழ்வுகளையும் அல்லாஹ் தூதுவர்கள் மூலமாகத்தான் நிர்வகித்துக்கொண்டிருக்கின்றான். எனவே அகிலங்களின் அனைத்து அசைவுகளையும் தூதுவர்கள் தெரிந்துகொள்கின்றார்கள். மட்டுமல்ல அகிலங்களை அவதானத்துடன் கண்காணித்தும் வருகின்றார்கள். அதாவது தூதுவர்கள் ஹாழிராகவும், நாழிராகவும் காணப்படுகின்றார்கள்.
தொடரும்....



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக