செவ்வாய், 29 ஜனவரி, 2019

இலங்கை முஸ்லீம்களின் பூர்வீக குடியிருப்பு வரலாறு(வாப்புச்சி மரைக்கார்)

வாப்புச்சி மரைக்கார்.


கி.பி.1016ல் அரப் நாட்டில் இருந்து (இற்றைக்கு சுமார் 1000 வருடங்களுக்கு முன்பு) இலங்கைக்கு வருகை தந்த பெருமக்களில் அஷ்ஷெய்கு ஃபரீத் என்பவர் சிறந்த மருத்துவராகும். இவரின் பரம்பரையில் உள்ளவர்களே வாப்புச்சி மரைக்கார், சேர் ராஸிக் பரீத் போன்றவர்கள். சேர் ராஸிக் பரீத் அரூஸிய்யத்துல் காதிரிய்யா தரீக்காவின் தலைவராக இருந்துள்ளார். கொழும்பு அரும்பொருள் காட்சி சாலை, தலைமைத் தபால் நிலையம், நகர மண்டபம் போன்றவைகளை வாப்பிச்சி மரைக்கார் கட்டிக்கொடுத்திருக்கிறார். (இஸ்லாமியக் கலைக் களஞ்சியம் 4-473)

இலங்கையின் முதல் அரபுக் கல்லூரி.


இலங்கையில் முதல் அரபுக் கல்லூரி 1870ஆம் வருடம் காலி மாநகரில் மக்கிய்யா என்ற பெயரில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இதன் ஸ்தாபகர்களாக அஹ்மத் ஸாலிஹ் அல் யமானியும் அபூ பக்கர் மிஸ்கீன் அல் காஹிரி ஆகிய இருவரும் விளங்குகிறார்கள்.


தொடர்ந்து 1884ல் வெலிகம மத்ரஸதுல் பாரி அரபுக்கல்லூரி நிறுவப்பட்டுள்ளது.
இதன் ஸ்தாபகர் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்களாகும்.
இக்காலப்பகுதிகளில் தரீக்காக்கள் அல்லாத வேறு எந்த தஃவா அமைப்புக்களும் இலங்கையில் செயற்படவில்லையென்பதை இலங்கை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் உறுதிப்படுத்துகிறது.


இதன் அடிப்படையில் கி.பி1844 புத்தளத்தில் காஸிமிய்யா அரபிக் கல்லூரி ஐதுரூஸிய்யா தரீக்கத்தின் அடிப்படையில் ஆரம்பிக்கட்டுள்ளது. 1892ல் காலியில் பஹ்ஜதுல் இப்ராஹீமிய்யா ஷாதுலிய்யா தரீக்கத்தின் அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. இதே வருடம் கிண்ணியாவில் சஃதிய்யா அரபிக் கல்லூரி ஆரம்பிக்கட்டிருக்கிறது.


கி.பி1912ல் மாத்தறையில் மின்ஹத்துல் ஃபாஸிய்யா அரபிக் கல்லூரியும் 1918 தர்கா நகரில் முஅய்யிதுல் இஸ்லாம் என்ற பெயரிலும் 1922ல் வெலிகம மாத்தறையில் கிழ்ரிய்யா அரபிக் கல்லூரி 1935ல் மஹறகமையில் கபூரிய்யா அரபிக் கல்லூரியும் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. இது அலவிய்யதுல் காதிரிய்யா தரீக்கத்தின் முக்கியஸ்தர் அல்ஹாஜ் என்.டி.எச். அப்துல் கபூர் என்பவரால் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. இவர் கொழும்பு மருதானை ஜும்ஆ பெரிய பள்ளிவாயிலின் பரிபாலன சபைத் தலைவராகவும் கடமையாற்றிருக்கின்றார். இப்பள்ளிவாயலின் முற்றத்தில் காணப்படுகின்ற மண்ணறை இவரது மண்ணறையாகும்.

இலங்கைத் திருநாட்டில் பதிவு செய்யப்பட்ட அரபு மத்ரசாக்களில் மேற்குறிப்பிட்ட அரபு மத்ரசாக்களைத் தவிரவுள்ள அனைத்து அரபு மத்ரசாக்களும் 1940க்குப் பிறகுதான் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன.

தொடரும்....

திங்கள், 28 ஜனவரி, 2019

இலங்கை முஸ்லீம்களின் பூர்வீக குடியிருப்பு வரலாறும் ஆதம் (அலைஹிஸ்ஸலாம்)மலையும்.

ஆதம் (அலைஹிஸ்ஸலாம்)மலை.


கி.பி.1187 முதல் 1196 வரை ஆண்ட இலங்கை மன்னன் (திஸ்ஸங்க மல்ல) என்ற அரசர் ஆதம் மலையினைத் தரிசித்துள்ளார். அங்குள்ள பாதச் சுவட்டை அவ்வரசர் கைகூப்பி வணங்கிக்கொண்டிருப்பதுபோன்றும் அங்குள்ள கல்லொன்றில் செதுக்கப்பட்டிருக்கின்றது. அதன் அருகே அரபியில் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம்) அவர்களை அல்லாஹ் ஆசிர்வதிப்பானாக!.... மனித இனத்தின் தந்தை என்று பொறிக்கபட்டுள்ளது. பார்க்க: இஸ்லாமியக் கலைக் களஞ்சியம் 02-313.


ஆதம் (அலைஹிஸ்ஸலாம்)மலையைத் தரிசித்த பெருமக்கள்.

நபிமார், வலிமார்களுடன் தொடர்புள்ள சகல வஸ்துக்களும் பாதுகாக்கப்படவேண்டும். பராமரிக்கப்படவேண்டும். தரிசிக்கப்படவேண்டும். இது இஸ்லாம் கற்றுத் தரும் பாடமாகும். அந்த வகையில் நபியுல்லாஹ் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பாதம் இலங்கையில் இருக்கிறதென்பதே ஊர்ஜிதம் செய்யப்பட்ட வரலாற்றுத் தகவலாகும். இதனை பன்னாட்டு முஸ்லிம்களும் தரிசித்துள்ளனர்.

கிரேக்கர்களும் ரோமர்களும் இலங்கையினை அரேபியர்களிடம் இருந்து அடையாளம் கண்டு கொண்டதாக வரலாறு கூறிக் கொண்டிருக்கிறது. அந்தக் காலத்து அரபிகள் இலங்கையில் தங்கிச் சென்றுள்ளார்கள். ஆதம் மலை இலங்கையில் இருந்ததே அவர்கள் இப்பிரதேசம் நாடி வந்ததற்கான காரணங்களில் ஒன்றாகச் சொல்லப்படுகிறது.

கி.பி.1153க்குப் பிற்பட்ட காலப்பகுதியில் கௌதுல் அஃழம் குத்புல் அக்தாப் ஷெய்குல் மஷாயிக் அஷ்ஷெய்கு முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி கத்தசல்லாஹு சிர்ரஹுல் அஸீஸ் அவர்கள் மார்க்கப் பணியாற்ற இலங்கைக்கும் வந்திருக்கிறார்கள். அந்தக் கால கட்டத்தில் பாவா ஆதம் மலைக்கு பலாங்கொடை வழியாக பயணித்திருக்கின்றார்கள். தப்தர் ஜெய்லானி என்று சொல்லப்படுகின்ற இடத்தில் சுமார் 12 ஆண்டுகள் தியானத்தில் இருந்திருக்கிறார்கள். இது தொடர்பான பல தகவல்கள் தப்தர் ஜெய்லானி என்ற வரலாற்று நூலில் பார்வையிடலாம்.

இலங்கைக்கு வந்த மற்றொர் இறைநேசச் செல்வர் அப்துல்லாஹ் இப்னு கஃபீஃப் என்பவராகும். அவரைப் பற்றி இப்னு பதூதா தம்முடைய பிரயாண நூலில் குறிப்பிடு கின்றார். 

நாகூரில் அடங்கப்பட்டிருக்கும் ஷாஹுல் ஹமீத் வலிய்யுல்லாஹ் அவர்களும் ஆதம் மலையைத் தரிசிப்பதற்காக இலங்கைக்கு வந்து சென்றுள்ளார். இவர்களுடன் வந்த செய்யிதுனா ஷிஹாபுத்தின் வலிய்யூல்லாஹ் இலங்கையிலேயே தங்கி கண்டியில் அடங்கப்பெற்றார்கள். கி.பி.1855ல் இவர்களுக்கு தர்கா கட்டப்பட்டுள்ளது.

அரபாத்திலிருந்து ஆதம் மலையை தரிசிப்பதற்காக வந்த செய்யிதுனா அஷ்ஷெய்கு உஸ்மான் ஸித்தீக் இப்னு அப்திர் ரஹ்மான் வலிய்யுல்லாஹ் என்பவராகும்.
மாத்தறையில் அடங்கப்பட்டுள்ள யஹ்யா ஹாஜியார் அப்பா, அழுத்காமத்தில் அடங்கப்பட்டுள்ள ஷெய்கு ஹஸன் பின் உஸ்மான் மக்தூமி நாயகம் அவர்கள், கம்பளையில் அடங்கப்பட்டுள்ள பாபா கௌஃபி (கூஃபி பாவா) அவர்கள் மக்காவில் இருந்து வந்திருக்கின்றார்கள். வியாங்கொடைப் பகுதியில் உள்ள கஹட்டவிட்டவில் அடங்கப்பட்டிருக்கும்

ஷெய்கு இப்னு உமர் பாதிப் நாயகம் அவர்கள் யமனில் இருந்து கி.பி.1840ல் வந்துள்ளனர். இவ்வாறு இன்னும் பலர் பாவா ஆதம் மலையைத் தரிசிப்பதற்காக அரப் நாடுகளில் இருந்து இலங்கை வந்திருக்கின்றார்கள். மார்க்கப் பணியாற்றியுள்ளனர். பார்க்க: இஸ்லாமியக் கலைக் களஞ்சியம் 2-313. 

தொடரும்.....

சனி, 26 ஜனவரி, 2019

இலங்கையின் முதல் இறை இல்லம்.

இலங்கையின் முதல் இறை இல்லம். 

காலி தலாப்பிடியா சோலை முஹ்யித்தீன் ஜும்ஆப் பள்ளி வாயில்


இலங்கையின் முதல் இறை இல்லம் பேருவளை தர்கா நகர் சீனா துறை ஜும்ஆப் பள்ளி வாசல் என்றதொரு தகவலினை சோலை மலர் சொல்லியிருப்பதைக் காண முடிகிறது. ஆனாலும் அருமை நாயகம் முஜ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் காலத்தில் அவர்களாகவே தமது தோழர்களில் இருவரை இலங்கைக்கு அனுப்பி வைத்திருந்தார்கள் என்ற வரலாற்றுத் தகவலின்படி அருமைத் தோழர்கள் தங்களது வணக்க வழிபாடுகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக நிச்சயம் வணக்கஸ்தலங்களை அமைத்திருக்கவேண்டும். ஸஹாபாக்கள் இலங்கைக்கு வந்தடைந்த பின்னர் அப்பகுதி அரசன் அவர்களுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறார். தமது மார்க்கப் பணியினை மேற்கொள்வதற்கு முழுமையான ஆதரவும் வழங்கியிருக்கின்றார். 

காலி தலாப்பிடியா சோலை முஹ்யித்தீன் ஜும்ஆப் பள்ளி வாயில் கி.பி.1604ல் புனர் நிர்மாணம் செய்யப்பட்டபோது ஹிஜ்ரி 8-9-139 என்று எழுதப்பட்ட மீசான் கல் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டது. இதனடிப்படையில் இப்பள்ளிவாயில் இன்றைக்கு 1299 வருடங்கள் பழமையானது. 

இப்பள்ளிவாயில் 27-06-1986 ஆம் வருடம் மீண்டும் புனரமைப்புப் பணிகள் ஆரம்பமாயின. 03-03-1987ஆம் திகதி இப்புனரமைப்பு பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது அதிசயச் சம்பவம் ஒன்று நடைபெற்றது. அதனை நேரில் கண்டவர் அப்பிரதேசத்தில் அமைந்துள்ள இஸ்லாமிய இளைஞர் முன்னணி, ஜனாப் எம்.எச்.எம். வஹாப் (சமாதான நீதிபதி) முன்னிலையில் விசாரித்து பதிவு செய்து கொண்டது. அந்த நிகழ்வு வருமாறு.


பள்ளியின் மிகப் பழைய இடங்களில் ஒன்றான மிம்பரை உடைப்பதற்காக கையில் இருந்த ஆயுதத்தினால் அடித்தேன். அப்போது அதை உடைக்காதே என்றதொரு சப்தம் கேட்டது. அதேநேரம் எனது கையில் இருந்த ஆயுதத்தினை அவர் பறித்தும் எடுத்தார், பிரம்பால் என்னை அடிக்கத் தொடங்கினார். தாடியுடன் காணப்பட்ட அவர் நீண்ட வெள்ளை நிற ஆடை அணிந்திருந்தார். பின்னர் அவர் மறைந்துவிட்டார். பார்க்க: சோலை மலர்.

இது  இலங்கையை வந்தடைந்த அருமைத் தோழர்களான ஸஹாபாக்களுடன் தொடர்புபட்ட இடம் என்று சொல்லப்படுகிறது. அதன் அடிப்படையில் இந்தப் பள்ளி வாயில் இலங்கையின் முதல் பள்ளியெனலாம். இதன் அடிப்படையில் இப்பள்ளி வாயில்  1436 ஆண்டுகள் பழமை வாய்ந்த பள்ளியென்பது குறிப்பிடத்தக்கது. 
தொடரும்...

பேருவளை வரலாறு.

பேருவளை வரலாறு.
அல்ஆலிமுல் ஃபாழில் ழிஆவுத்தீன் அல் உஸ்மானீ அல்மஹ்ழரி


கி.பி. 700ல் துருக்கி நாட்டு சுல்தான் ஜமாலுத்தீன் பின் அலாவூத்தீன் என்பவர் பதினொரு தோழர்களுடன் கப்பலொன்றில் சுற்றுலாப் பயணம் மேற்கொண்டிருந்தார். நீண்ட நாட்களாக கடலில் பயணித்துக்கொண்டிருந்த கப்பல் இறுதியாக கரையொதுங்கிய சந்தர்ப்பத்தில் கரையைக் கண்ட மகிழ்ச்சியில் பர்பர் - தரை தரை என்று கூறியிருக்கிறார்கள். பர்பர் என்ற சொல் இன்று பேருவளை என்றாகிட்டது. சுல்தான் ஜமாலுத்தீன் நபித் தோழர் ஸெய்யிதுனா உஸ்மான் ரழியல்லாஹு அன்ஹு அன்னவர்களின் பதினோராவது தலைமுறையில் உள்ள ஒருவராகும்.

சுல்தான் ஜமாலுத்தீன் பேருவலைப் பிரதேசத்தில் தரை இறங்கிய அச்சந்தர்ப்பத்தில் அப்பிரதேச அரசன் வத்ஹிமியின் பாதுகாப்பு பிரிவினர் அவர்களை அழைத்துக்கொண்டு அரசவைக்கு செல்கின்றனர். பேருவளை அரசனுக்கு துருக்கி அரசர் தன்னுடைய நிலைமைகளை விளக்கிய பின்னர் துருக்கிய அரசரை பேருவளை அரசர் அரச மரியாதை செய்து அவர் வீட்டில் தங்குமாறும் கூட வந்தவர்களை மார்க்கப் பணியாற்ற தாம் விரும்பும் பிரதேசம் செல்வதற்கும் அனுமதி வழங்கினார்.



பேருவளை அரசன் வத்ஹிமி தன்னுடைய சகோதரி ஒருவரை துருக்கிய மன்னருக்கு திருமணமும் இஸ்லாமிய முறைப்படி செய்து வைத்தார். உஸ்மான் என்ற ஆண் குழந்தை அத்தம்பதியினருக்குக் கிடைத்தது. இந்த உஸ்மானின் பரம்பரையினர் இன்று வரை பேருவளைப் பிரதேசத்தில் சீரும் சிறப்புடனும் வாழ்ந்து வருகின்றனர். இந்தச் செய்திகள்கூட அப்பரம்பரையினரில் ஒருவரான அல்ஆலிமுல் ஃபாழில் ழிஆவுத்தீன் அல் உஸ்மானீ அல்மஹ்ழரி என்பரிடம் மேற்கொண்ட நேர்காணலில் பெற்றுக் கொள்ளப்பட்ட தென்பது குறிப்பிடத்தக்கது.

துருக்கிய மன்னருக்கு பேருவளை மன்னன் தனது சகோதரி ஒருவரை திருமணம் முடித்துக் கொடுத்த வரலாற்றுப் பின்னணியுடன் மன்னரின் மகள் ஒருவர் இஸ்லாத்தினை தழுவும் வரலாறும் ஆரம்பிக்கிறது. இஸ்லாத்தினை ஏற்றுக்கொண்ட பேருவளை மன்னனின் மகளை இரண்டாவது புவனேகபாகு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்குப் பிறந்த அரச குமாரர் குருணாகல் பிரதேச முஸ்லிம் மன்னன் வத்ஹிமி கலே பண்டார என்றழைக்கப்படும் குறைஷான் இஸ்மாயீல் ஆகும். பார்க்க: இலங்கை சோனக வரலாறு.

துருக்கிய மன்னன் ஜமாலுத்தீன் என்பரவால் பேருவளை பிரதேசத்தில் பள்ளிவாயில் ஒன்றும் கட்டப்பட்டது. அது தர்கா நகர் சீனாதுறை ஜும்ஆப் பள்ளிவாசலாகும். இந்தப்பள்ளிவாசல் 1000 ஆயிரம் ஆண்டுகளை பூர்த்தி செய்துகொண்டபோது சோலை மலர் என்ற பெயரில் சஞ்சிகையொன்று வெளியிடப்பட்டது. இதிலும் மேற்குறிப்பிட்ட வரலாற்று நிகழ்வுகள் பதிவாகியிருப்பதைக் காணலாம்.
தொடரும்....

ஞாயிறு, 20 ஜனவரி, 2019

இலங்கை முஸ்லீம்களின் பூர்வீக குடியிருப்பு வரலாற்றுத் தொடர்....

இலங்கையின் முஸ்லிம் மன்னர்.


இரண்டாவது புவனேகபாகுவின் மகன் வத்ஹிமி கலேபண்டார இலங்கையில் ஆட்சி செய்த முஸ்லிம் மன்னனாவார் மன்னன் புவனேகபாகு முஸ்லிம் பெண் ஒருத்தியை மணம் செய்திருந்தார் என்பது பிரபலமான வரலாற்றுச் செய்தி. வத்ஹிமி கலேபண்டாரவின் ஆட்சி கீர்த்தியற்ற கலவரச் சூழல் கொண்ட குறுகிய கால ஆட்சியாக முடிவுற்றது. அரச மந்திரிப் பிரதானிகளும் பிக்குமார்களும் இவர் அரசனானதை விரும்பவில்லை.

மூன்று வருடங்கள் அல்லது ஐந்து வருடங்களுக்கு உட்பட்ட ஒரு சிறிய காலப்பகுதியில் நடந்த அவரது ஆட்சின்போது குருனாகல் எத்துக்கள் மலை உச்சியில் இருந்து அவர் வீழ்த்தப்பட்டு கொலைசெய்யப்பட்டார் இது பிக்குமார்களின் சதித்திட்டத்தின் அடிப்படையில் அரங்கேறியது.

வத்ஹிமி வீழ்ந்து இறந்த மலையடிவாரத்தில் முஸ்லிம்களின் சமய முறைப்படி அவர் அடக்கம் செய்யப்பட்டார். கலேபண்டார அவ்லியா என்ற பெயரில் அவரது அடக்கஸ்தலம் அழைக்கப்பட்டு வருகிறது. அவ்வடக்கஸ்தலம் இன்று வரை முஸ்லிம் குடும்பம் ஒன்றின் தொடர்ச்சியான பராமரிப்பில் இருந்து வருகிறது. முஸ்லிம்கள் மட்டுமன்றி பெருந்தொகையான சிங்கள மக்களும் இங்கு வந்து பிராHத்தனைகளிலும் வழிபாடுகளிலும் ஈடுபடுகின்றனர்.

“வத்ஹிமி கலேபண்டார” போன்ற வார்த்தைப் பிரயோகங்கள் சிங்கள அரச வம்ச பின்னணிக்குரிய பட்டப்பெயர்களாகும். வத்ஹிமி அரசரின் இயற் பெயர் குறைஷான் இஸ்மாயீல் ஆகும். இவரின் தாய் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடமும் எத்துக்கள் மலைக்கு மிக அருகிலேயே அமைந்துள்ளது. தெல்லியாக்கோனை என்ற பாரம்பரிய முஸ்லிம் கிராமத்தின் மத்தியில் இது காணப்படுகிறது. இவர் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடம் “ஒற்றை மீசான் கபுறடி” என்று அழைக்கப்படுவதுடன் அதுவும் ஒரு தர்காவாக பராமரிக்கப்பட்டு வருகிறது. இவர் பேருவளை வத்ஹிமி ராஜாவின் மகளாகும்.

தொடரும்....

இலங்கை முஸ்லீம்களின் பூர்வீக குடியிருப்பு வரலாறு. கட்டம் 04

 கட்டம் 04



முதல் மனிதர் ஆதம் அலைஹிஸ்ஸலாம், முதல் நூஹ் அலைஹிஸ்ஸலாம் ,உலகை ஆண்ட இஸ்லாமிய மன்னர்களில் சுலைமான் அலைஹிஸ்ஸலாம் ஆகியோர் பிரசாரம் செய்த அதே ஓறிறைக் கொள்கையினையே அல்லாஹ்வின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களும் பிரசாரம் செய்தார்கள். நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களை நேரில் கண்டு விசுவாசித்தவர்களான ஸஹாபாக்கள் அண்டை நாடுகளுக்கு மார்க்கப் பிரசாரத் தூதுவர்களாக அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றார்கள். 

அந்த வகையில் நம் தாய் நாடான இலங்கையும் அருமையான ஸஹாபாப் பெருமக்களின் சிறப்பான பாதங்கள் படும் பாக்கியம் பெற்றிருக்கிறது. அவ்வாறே அந்த அருமைத் தோழர்களைக் கண்ட தாபிஊன்கள்,தபஉத் தாபிஈன்கள் இந்நாட்டில் வாழ்ந்து இறையடி சேர்ந்து நல்லடக்கமும் செய்யப்பட்டிருக்கின்றார்கள். 


ஹிஜ்ரி 135ம் வருடத்தில் அதாவது இற்றைக்கு சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்னர் மத்திய மாகாணத்தின் ஹெம்மாதகமவெனும் ஊரில் கண்டு பிடிக்கப்பட்ட சமாதியில் எழுதப்பட்டிருந்த அரப் எழுத்து இதற்கான ஆதாரமாக இருக்கின்றது. ஹிஜ்ரி 3-3-133 என்ற இலக்கங்கள் பொறிக்கப்பட்ட சமாதியொன்றும் மன்னார் பிரதேசங்களில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் வாழ்ந்து வந்த முஸ்லீம்கள் தமக்கு மார்க்க சட்டதிட்டங்களை கற்றுக்கொடுப்பதற்காக ஒரு போதகரை அனுப்பி வைக்குமாறு அப்பாஸிய கலீபா ஹாரூன் ரஷீதை வேண்டிக்கொண்டபோது அவர் காலித் இப்னு பகாயாவை ஹிஜ்ரி 300களில் இலங்கைக்கு அனுப்பி வைத்தார். அவர் தான் அனுப்பி வைக்கப்பட்ட நோக்கத்தினை சிறப்பாக நிறைவேற்றிய பின் ஹிஜ்ரி 317இல் வபாத்தாகி கொழும்பில் நல்லடக்கம் செய்யப்பட்டார்.

அவரது மண்ணறையில் பதிப்பதற்காக கலீபா ஹாரூன் ரஷீத் அவர்களால் அனுப்பப்பட்ட நடுகல் நம்நாட்டு அரும்பொருட்காட்சிச்சாலையில் உள்ளது. இது போன்ற இன்னும் பல நடுகற்கள் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவை இலங்கையில் இஸ்லாம் பரவியதை அறிவிக்கும் சாதனங்களாகவுள்ளன. 

2012-09-15ல் இங்கை முஸ்லிம் சமயஇ பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட “அல்ஆலிம் முதவஸ்ஸிதா மற்றும் அல்ஆலிம் ஸானவிய்யா பரீட்சைகளுக்கான பிரமானங்களும் திருத்தியமைக்கப்பட்ட பாடத்திட்டங்களும்” என்ற நூலின் 35ம் பக்கத்தில் இவ்விடயம் பதிவாகியுள்ளது. 

இறைத் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் கடிதத்தினை எடுத்துக்கொண்டு இலங்கையை வந்தடைந்த நபித் தோழர் ஹழ்ரத் வஹ்ப் இப்னு ஹப்ஸ் ரழியல்லாஹு அன்ஹு அன்னவர்கள் இலங்கையில் பல வருடங்கள் தம்மார்க்கத்தினைப் பரப்பியதாகவும் இறையில்லங்களை கட்டிக்கொண்டதாகவும் வரலாறு பதிவாகியுள்ளது. பார்க்க: இலங்கை முஸ்லிம்களின் வரலாறும் கலாசாரமும் - எம்.ஐ.எம்.அமீன்.
 தொடரும்...........

வெள்ளி, 18 ஜனவரி, 2019

இலங்கை முஸ்லிம்களின் பூர்விக குடியிருப்பு வரலாறும் கலாசாரமும்.



بسم الله الرحمن الرحيم

அன்பார்ந்த உலமாக்களே! புத்திஜீவிகளே! மாணவர்களே! பொதுமக்களே!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு

இலங்கை முஸ்லீம்களின் பூர்வீக குடியிருப்பு வரலாறு.

 கட்டம் 01



இஸ்லாத்தின் பார்வையில் உலகத்திலுள்ள ஒட்டு மொத்த மனித இனமும் ஆதம் ஹவ்வா (அலைஹிமஸ்ஸலாம்) ஆகிய இருவரின் வழித்தோன்றல்களாகும். இவ்விருவரும் உருவ மற்ற ஓரிறைக் கொள்கையுடையவர்களாகும். இதில் ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) இலங்கை யராகவும் ஹவ்வா (அலைஹஸ்ஸலாம்) சவூதி அரேபியாவைச் சேர்ந்தவராகவும் இருக் கின்றார்கள். இவ்விருவருக்கும் பிறந்த பிள்ளைகளிடத்தில் காலப்போக்கில் ஓரிறைக் கொள்கை ஒழிக்கப்பட்டு உருவ வழிபாடென்னும் சிலை வணக்கம் தோற்றம் பெறு கிறது. நெருப்பு வணக்கமும் உருவாகிறது. இதனால் நூஹ் (அலைஹிஸ்ஸலாம்) என்ற ஒருவர் தூதுவராக அவர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்......



கட்டம் 02

இவர், ஓரிறைவனை வணங்குமாறு சுமார் 950 வருடங்கள் உலக மக்களை அழைத்திருக்கிறார். ஆனாலும் அவரை ஒருசிலர்தான் ஏற்றுக்கொண்டனர். உருவ வழிபாட்டில் இருந்து அவரின் புதல்வரும் விடுபடவில்லையென்றால் எந்தளவுக்கு அன்றிருந்த மக்கள் மத்தியில் அவ்வழிபாடு புரையோடிப்போய் இருந்திருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். அவரை ஏற்றுக்கொள்ளாத காரணத்தினால் அவரை விசுவாசித்தவர்களைத் தவிரவுள்ள முழு மனித இனமும் பாரிய வெள்ளப் பிரளயத்தினால் அழிக்கப்படுகின்றனர். இந்தப் பிரளயத்தினை அடுத்து ஆதம் ஹவ்வா (அலைஹிமஸ்ஸலாம்) அவர்களினூடாக வெளிப்பட்ட மனித இனம், நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய பிள்ளைகளின் வாரிசுகளாக மாற்றம் பெற்றது. இது அரப் தேசத்தில் இருந்து புறப்பட்டது.
முதல் கட்ட மனித பெருக்கத்திற்கு நம் நாடான இலங்கையும் சவூதி அரேபியாவும் சம்பந்தம் இருப்பதை மறுக்க முடியாததுபோன்று இரண்டாம் கட்ட மனித வளர்ச்சிக்கு அரப் நாடு ஒன்றுதான் அதற்கு சம்பந்தப்பட்டதென்பதை மறுக்க முடியாதுள்ளது. ஆக இன்றைய மொத்த மனித இனம் இஸ்லாமியர்களுக்குப் பிறந்தவர்கள் மட்டுமல்லாது அரப் தேசத்தில் இருந்து உருவானவர்கள் என்பதுமே யதார்த்தமாகும்.


 கட்டம் 03


இலங்கையின் வரலாற்றுக்கு முற்பட்ட காலப்பகுதிகளில் யக்ஷ, நாக, தேவ இனத்தினர் வாழ்ந்து வந்ததாக இலங்கையின் வரலாற்றுத் தொகுப்பு நூலான மஹாவம்சம் கூறுகிறது. இவர்கள் பிறநாட்டில் இருந்து வந்தவர்கள். இந்நாட்டின் பழங்குடி மக்களாக கருதப்படுகின்ற இவ்வினத்தினர்கள்தான் காலப்போக்கில் தாம் விரும்பிய மதங்களைப் பின்பற்றியுள்ளனர். ஆக இந்த நாட்டின் இன்றைய முழு மனிதர்கள் மட்டுமல்லாது மதங்களும் பிற நாட்டில் இருந்து வந்தவைகளே.
இலங்கை நாட்டின் தொன்மையான குடியிருப்புக்களில் புத்தள மாவட்டமும் ஒன்றாகும். இலங்கையில் பௌத்த மதத்திற்கு வித்திட்ட விஜயனின் வருகைக்கு முன்னரே நாகரிகம் நிறைந்து கட்டுக்கோப்பான சமுதாய அமைப்பொன்று இப்பகுதியில் நிலவியிருக்கிறது. இது யக்ஷயர்களின் தேசம் என்று சொல்லப்படுமளவுக்கு விஜயனின் வருகைக்கு முன்னர் யக்ஷயர்கள் ஆட்சி இப்பிரதேசங்களில் இடம் பெற்றதாக வரலாறுகள் சொல்கிறது. விஜயனின் ஒழுக்கமற்ற செயல்பாட்டினால் அவன் அவனது தந்தையினால் நாடுகடத்தப்பட்டிருந்தான். இவனே இலங்கையில் புத்தமதத்தை தோற்றுவித்தான்.


விஜயன் புத்தளக் கரையோரத்தினை கி.மு.544ல் வந்தடைகின்றான். ஆனால் கி.மு.326-327களில் இலங்கையின் புவியியல் படத்தை வரைந்த கிரேக்க மாலுமியான ஓனோஸ் கிறிட்டோஸ் இன்றைய புத்தளம் மற்றும் அதைச்சுற்றியுள்ள பாகத்துடன் தொடர்பான பகுதிகளில் “சோனாள்கள்” குடியேற்றம் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். விஜயன் இலங்கையில் பிரவேசிக்கும் முன்னர் இது நடைபெற்றுள்ளது.

அநுராதபுர நகரம் பராக்கிரமபாகு காலத்தில் (கி.மு.437-407) யோனகர்களுக்கென தனியான பகுதி என ஒதுக்கப்பட்டிருந்ததாக இலக்கியத் தரவுகள் குறிப்பிடுகிறன. சிங்களவர்கள் முஸ்லிம்களை “யொன்னு” என்றும் தமிழர்கள் “யோனகர்” என்றும் அழைத்துள்ளனர். இதுவே “சோனகர்” என்றும் சொல்லப்படுகிறது. இவர்கள்தான் அன்றைய யக்ஷயர்கள். இன்றைய இஸ்லாமியர்கள்.

தெதுரு ஓயா, சோனா நதி அல்லது அரேபியர் நதி என்று கூறப்படுகிறது. தெதுரு ஓயாவிற்கு வடபாகத்தில் சோனாள்கள் வாழ்ந்துள்ளனர்.

இலங்கையின் புத்தளம் பிரதேசத்தில் விஜயனும் அவனது தோழர்களும் கரையொதுங்கிய சந்தர்ப்பத்தில் இப்பிரதேசத்தில் நல்லாட்சி புரிந்துவந்த யோனர்களான யக்ஷயர்கள் சோனகர்கள் என்று இன்றும் அழைக்கப்படுகின்றனர்.

கி.மு. 985-932 காலத்தில் வாழ்ந்த மன்னர்களில் ஒருவர் நபியுல்லாஹ் சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களாகும். அல்லாஹ் காற்றை இவர்களின் கைவசமாக்கினான். விலங்கினங்கள், பூச்சி புழுக்கள் ஆகியவற்றின் மொழிகளையெல்லாம் இவர்களுக்கு கற்றுக்கொடுத்து அவற்றையூம் இவர்களின் ஆதிபத்தியத்தின் கீழ் அல்லாஹ் ஆக்கினான். ஜின்களும் இவர்களுக்கு வசப்படுத்திக்கொடுக்கப்பட்டது.

இவர் முழு உலகத்தினையும் ஆட்சி செய்திருக்கின்றார் என்ற அடிப்படையில் இலங்கைக்கும் இவர் வந்திருக்கவேண்டும். அவ்வாறு இலங்கைக்கு வந்தபோது சாம்பிராணி, மாணிக்கக்கற்கள், கருங்காலி, யானைத் தந்தம், மயில் முதலியவற்றை இங்கிருந்து பெற்றுச் சென்றுள்ளனர்.

காலி பழமை மிக்கதொரு நகர். இலங்கையில் பழைய தலை நகரங்களான அநுராதபுரம், பொலன்னறுவை, தம்புள்ளை, யாப்பாகுவ, சீகிரிய ஆகிய இடங்களைவிட ஆயிரம் வருடங்கள் பழைமை மிக்க நகரம். இங்கிருந்துதான் இலங்கையின் வரலாறு ஆரம்பிக்கின்றது.

நபியுல்லாஹ் சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவஉகள் ஜெரூஸலத்தில் கட்டிய அரண்மனைக்கு காலி துறை முகத்தினூடாக அரேபிய வணிகர்கள் பெறுமதிமிக்க இரத்தினக் கற்கள் கொண்டு செல்லப்பட்ட வரலாற்றுத் தகவல் 13-08-1989 அன்று காலி தலாப்பிடியா முஹ்யித்தின் ஜும்ஆ மஸ்ஜிதில் வெளியிடப்பட்ட சோலை மலர் சுமந்துள்ளதுடன் புத்தளம் முஸ்லிம்கள் வரலாறு, காத்தான்குடி வரலாறு போன்ற பல வரலாற்று நூற்களில் பதிவாகியுள்ளது.

இந்தியா கேரள மலையாளக் கரைப் பகுதிகளில் நபியுல்லாஹ் சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கப்பல்கள் வந்து சென்றுள்ளதாக மானா மக்கீன் என்பவர் குறிப்பிடுகிறார். பார்க்க: வரலாற்றில் இலங்கை கண்ட குமரி பக்கம் 19.


இலங்கையில் அரேபியர்களுடைய வர்த்தகத் தொடர்பு, சிங்கள மக்களுடன் கொண்டிருந்த அவர்களது உறவு, மன்னர்களிடம் அவர்களுக்கிருந்த செல்வாக்கு பரவலாக இலங்கையில் அவர்களால் மேற்கொள்ளப்பட்ட குடியேற்றங்கள் காரணமாகத்தான் டெனன்ட் (கிறிஸ்துவ சக்தியொன்று  இலங்கைக்கு வராதிருந்தால் பிரித்தானியர் கைக்குள் அது வந்திருக்காது அது அரேபியர்களால் ஆளப்படும் ஒரு முஸ்லிம் நாடாக மாறியிருக்கும்) என்று குறிப்பிடுகிறார். பார்க்க: காத்தான்குடி வரலாறு பக்கம் 11.
இது இந்நாட்டு முஸ்லீம்களின் குடியிருப்புப் பூர்வீக வரலாறாகும். இந்த வரலாறு இன்று நம்மில் எத்தனை பேர்களுக்குத் தெரியும்? அவ்வாறு தெரிந்து கொண்டவர்களில் இதனை ஏற்றுக்கொண்டவர்களைவிட நிராகரித்து பொய்பிப்பவர்கள்தான் அநேகர்களாக இருக்கின்றனர்.
தொடரும்....


புதன், 16 ஜனவரி, 2019

அல்லாஹ்வின் அத்தாட்சிகள்

அல்லாஹ்வின் அத்தாட்சிகள்


ولنجعله آية للناس ورحمة منا. مريم 21


“அவரை (ஹழ்ரத் நபி ஈசா அலைஹிஸ்ஸலாம் அவர்களை) மக்களுக்கு ஓர் அத்தாட்சியாகவும் நம்முடைய அருளாகவும் நாம் ஆக்குவதற்காகவே (இவ்வாறு செய்துள்ளோம்.)” இவ்வசனம் நபி ஈசாவை அல்லாஹ்வின் அத்தாட்சி எனக் கூறுகிறது. மர்யம் 21


وانظر إلى حمارك ولنجعلك آية. البقرة 259

உமது கழுதையையும் பார்ப்பீராக! என்றான். மனிதர்களுக்கு உம்மை அத்தாட்சியாக ஆக்குவதற்காக (நாம் இவ்வாறு செய்தோம்).” அல்பகரா 259. இவ்வசனம் நபி உஸைர் அவர்களை அல்லாஹ்வின் அத்தாட்சி எனக் கூறுகிறது.

أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا. الكهف 9

“நிச்சயமாக குகைவாசிகளும் ஏட்டையுடையோரும் நமது அத்தாட்சிகளில் ஆச்சரியத்திற்குரியோராக இருந்தனர் என (நபியே) நீங்கள் எண்ணுகிறீர்களா?.”அல்கஹ்ஃப் 9 இவ்வசனம் குகைவாசிகளான வலிமார்களை அல்லாஹ்வின் அதிசயமான அத்தாட்சி எனக் கூறுகிறது.

وجعلناها وابنها آية للعالمين.الانبياء 91

“மேலும் அவரையும் அவரது மகனையும் அகிலத்தார்களுக்கு அத்தாட்சியாக்கினோம்.”அல்அந்பியா 91. இவ்வசனம் நபி ஈசாவையும் அவரது தாயான மர்யமையும் அல்லாஹ்வின் அத்தாட்சி எனக் கூறுகிறது.

فيه آيات بينات مقام ابراهيم
“அதில் தெளிவான அத்தாட்சிகளும் மகாமு இப்ராஹீமும் இருக்கிறது.”ஆல இம்ரான் 97. இவ்வசனம் கஃபாவில் பல தெளிவான அத்தாட்சிகள் இருப்பதாக அறிவித்துவிட்டு அதில் ஒன்றாக நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பாதச் சுவடுகள் பதிவாகியுள்ள கல்லை அல்லாஹ்வின் தெளிவான அத்தாட்சி எனக் கூறுகிறது.

وقال لهم نبيهم إن آية ملكه. البقرة 248

“நிச்சயமாக அவரது ஆட்சிக்கான அத்தாட்சியானது வானவர்கள் சுமந்து வரும் பேழை உங்களிடம் வருவதாகும்.”அல்பகரா 248. இவ்வசனம் நபி மூசா மற்றம் ஹாரூன் அலைஹிமஸ்ஸலாம் ஆகிய இருவரின் பாதணிகள், கைத்தடி, தலைப்பாகை போன்ற இன்னும் பல பொருட்களை உள்ளடடிக்கிய ஒரு பெட்டியை அல்லாஹ்வின் அத்தாட்சி எனக் கூறுகிறது.

قال رب اجعل لى آية قال آيتك أن لا تكلم الناس ثلاثة أيام إلا رمزا. آل عمران 41

“என் இரட்சகனே! எனக்கு ஒரு அடையாளத்தை ஏற்படுத்துவாயாக! என்று அவர் கேட்டார். அதற்கு மூன்று நாட்கள் சைகை மூலமாகவே தவிர மனிதர்களுடன் நீர் பேசாமல் இருப்பதே உமக்குரிய அத்தாட்சியாகும் என (அல்லாஹ்) கூறினான்.”ஆல இம்ரான் 41. இவ்வசனம் மூன்று நாட்கள் பேசாமல் இருப்பதை அல்லாஹ்வின் அத்தாட்சி எனக் கூறுகிறது.

ولقد آتينا موسى تسع آيات بينات. بني إسرائيل 101

“நிச்சயமாக நாம் மூசாவுக்கு தெளிவான ஒன்பது அத்தாட்சிகளை வழங்கினோம்.”பனூ இஸ்ராயீல் வசனம் 101. இவ்வசனம் நபியவர்களின் கை, தடி, நாவு, கடல், வெள்ளம், வெட்டுக் கிளி, பேன், தவளை, இரத்தம் ஆகியவைகளை அல்லாஹ்வின் அத்தாட்சி எனக் கூறுகிறது.

هذه ناقة الله لكم آية. الأعراف 73

“இந்த அல்லாஹ்வின் ஒட்டகம் உங்களுக்கு அல்லாஹ்வின் அத்தாட்சியாகும்.”அல்அஃராப் வசனம் 73. இவ்வசனம் ஒட்டகத்தை அல்லாஹ்வின் அத்தாட்சி எனக் கூறுகிறது.



إن الصفا والمروة من شعائر الله.البقرة158

“நிச்சயமாக ஸபாவும் மர்வாவும் அல்லாஹ்வின் சின்னங்களாகும்.”அல்பகரா வசனம் 158. இவ்வசனம் ஸபா மற்றும் மர்வா எனும் மலைக் குன்றுகளை அல்லாஹ்வின் சின்னம் எனக் கூறுகிறது.








والبدن جعلناها لكم من شعائر الله. الحج 36

“குர்பானிகளுக்கான மாடு மற்றும் ஒட்டகங்களை அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களில் உள்ளவைகளாக உங்களுக்கு நாம் ஆக்கினோம்.”அல்ஹஜ் வசனம் 36. இவ்வசனம் ஆடு, மாடு, ஒட்டகங்களை அல்லாஹ்வின் சின்னங்கள் எனக் கூறுகிறது.

  لم يكن الذين كفروا من أهل الكتاب والمشركين منفكين حتى تأتيهم البينة رسول من الله. البينة1-2

“வேதத்துடையவர்களிலும் இணை வைப்பாளர்களிலும் எவர்கள் நிராகரித்தார்களோ அவர்கள் தம்மிடம் தெளிவான அத்தாட்சி வரும் வரை (நிராகரிப்பை விட்டும்) விலகுபவர்களாக இருக்கவில்லை. (அவ்வத்தாட்சி) அல்லாஹ்வின் தூதராகும்.” அல்பய்யினா வசனம் 1-2. இவ்வசனம் நமது நாயகம் முஜ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களை அல்லாஹ்வின் தெளிவான அத்தாட்சி எனக் கூறுகிறது.

இவ்வாறு இன்னும் எத்தனையோ வஸ்துக்களை தனது அத்தாட்சி என அல்லாஹ் சொல்வதை திருமறையில் நாம் காணலாம். ஆதலால் மேற்கண்டவற்றைக் கொண்டு அத்தாட்சி என்றால் என்ன என்பதை தெளிவாக புரிந்திருப்பீர்கள் என நினைக்கின்றொம். 

அத்தாட்சி என்றால் என்னவென்பதற்கு இதுவரையில் பதிவு செய்யப்பட்ட ஆதாரங்களை உற்று நோக்குவீர்களாக இருந்தால் அவற்றில் இரண்டு வசனங்களில் இரண்டு பொருட்கள் குறித்துப் பேசும் போது அவை தெளிவான அத்தாட்சிகள் என்று கூறியதைப் படித்தீர்கள். ஒன்று மகாமு இப்ராஹீமாகும். மற்றது நமது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலி வசல்லம் அவர்களாகும்.

தெளிவான இவ்விரு அத்தாட்சிகளில் ஒன்றான மகாமு இப்ராஹீம் குறித்துப் பேசும் போது அந்த இடத்தை நபித் தோழர் ஸெய்யிதுனா உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் ஆலோசனையின் அடிப்படையில் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களும் தோழர்களும் தொழும் இடமாக எடுத்துக் கொண்டதாக அல் குர்ஆன் சொன்னது. இது உங்கள் ஞாபகத்தில் இருக்கும் என நினைக்கின்றொம்

மகாமு இப்ராஹீம் என்ற தெளிவான அத்தாட்சி இருக்கும் இடம் அல்லாஹ்வின் மாளிகையில் பாதுகாக்கப்பட்டு அவ்விடத்தில் தொழுது கொள்வதும் ஸுன்னத்தான அமலாக இருக்கிறது என்பதை அடிப்படையாக வைத்து எந்தப் பொருட்களெல்லாம் அல்லாஹ்வின் அத்தாட்சிகளாக இருப்பதாக அடையாளம் காணப்படுமோ அவை அனைத்தும் பாதுகாக்கப்பட வேண்டும். அவை யாவும் கண்ணியப்படுத்தப்பட வேண்டும் என்று அல்லாஹ்வின் அருளைச் சுமந்த அஹ்லுஸ் ஸுன்னத் வல்ஜமாஅத் அறிஞர்கள் அறிவுறுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

எனவே, நமது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் அல்லாஹ்வின் பிரதான சின்னமாகவும் அவனின் பிரதான மிக முக்கிய அத்தாட்சியாகவும் இருக்கின்றார்கள். இதனடிப்படையில் அவர்களும் அவர்களது பொருட்களும் பாதுகாகக்கப்படல் வேண்டும். அவை யாவும் கௌரவிக்கப்படல் வேண்டும். இதனடிப்படையில்தான் நபித் தோழர்கள் தொடக்கம் இன்று வரையுள்ள அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கைவாதிகள் நபிமார் மற்றும் ஸாலிஹீன்களின் சகல வஸ்துக்களையும் சங்கைப்படுத்தி வருதைப் பார்க்கலாம். இது தக்வாகும்.

عن عبد الله بن عمر رضي الله عنهما قال رأيت رسول الله صلى الله عليه وآله وسلم يطوف بالكعبة ويقول ما أطيبك وأطيب ريحك ما أعظمك وأعظم حرمتك والذي نفس محمد بيده لحرمة المؤمن اعظم عند الله حرمة منك ماله ودمه وان نظن به إلى خيرا

கஃபாவை விட ஒரு முஃமின் அல்லாஹ்விடத்தில் மிகவும் கண்ணியம் பொருந்தியவன் என்று இந்த நபி மொழி சொல்லிக் கொண்டிருக்கிறது.

எனவே கஃபா கண்ணியமானது என்பதற்காக அதனோடு தொடர்புள்ள சகல பொருட்களையும் சங்கை செய்திட முன்னிற்கும் நாம் அந்த கஃபாவை விட கண்ணியம் பொருந்திய முஃமினுடன் தொடர்புள்ள பொருட்களை கண்ணியப்படுத்தி வைப்பதில் நம்மத்தியில் கவணக் குறைவு ஏற்பட்டது எதனால்? என்று சிந்தியுங்கள்.

கஃபத்துல்லாஹ்வும் அதனைச் சூழவுள்ள பிரதேசங்களும் பரிசுத்த புண்ணிய பூமிகளாகும். அப்பகுதிகள் அல்லாஹ்வின் சின்னங்களாகும். அவை பாக்கியம் நிறைந்த பிரதேசங்களாகும். எனவே அவை கண்ணியப்படுத்தப்படவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

கஃபதுல்லாஹ்இ ஹஜருல் அஸ்வத்இ நபிய்யுல்லாஹ் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பாதச் சுவடு என்பனபோன்று மதீனா முனவ்வராவும் அதனைச் சூழவுள்ள பிரதேசங்களும் ஆகும். இருந்த போதிலும் அங்குள்ள மா நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் மண்ணறையை ஏன் நம்மவர்கள் கண்ணியப்படுத்துகின்றார்களில்லை. மாறாக நபிமார் மற்றும் வலிமார்களின் கப்ருகளை கண்ணியப்படுத்தும் போது அதனைச் சிலர் மிக மோசமாகச் சித்திரிக்கின்றார்கள்.


மதீனா மக்காவை விட அதிகம் பரகத் உள்ள இடம்.


عن أنس رضي الله عنه عن النبي صلى الله عليه وآله وسلم اللهم اجعل بالمدينة ضعفي ما جعلت بمكة من البركة. البخاري

மதீனா மக்காவை விட மதிக்கப்பட வேண்டும்.

عن أم المؤمنين عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وآله وسلم اللهم حبب إلينا المدينة كحبنا مكة أو أشد. البخاري ومسلم.

மக்கா முகர்ரமாவில் புனித ஆலயத்தினை கட்டி முடித்த பின்னர் அந்த ஊரைப் பரிசுத்தமான ஊராக ஆக்கிவிடுமாறு நபிய்யுல்லாஹ் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பிரார்த்தித்திருக்கின்றார்கள். அவ்வாறே மதீனா முனவ்வறாவில் மஸ்ஜிதுந் நபவியை கட்டி முடித்துவிட்டு அந்த ஊரை பரிசுத்தமான ஊராக பிரகடணம் செய்தது மட்டுமல்லாமல் மக்கா எங்களுக்கு நேசம் உள்ளதொரு பிரதேசமாக இருப்பது போன்று அல்லது அதை விட அதிகம் நேசம் உள்ளதொரு பிரதேசமாக மதீனாவை ஆக்கி விடு என்று நமது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்துள்ளார்கள். அவ்வாறான மதீனா முனவ்வராவையும் அதனோடு தொடர்புள்ளவைகளையும் நாம் நேசிப்பதோடு அவற்றினூடாக அருள் பெற்றிட முயற்சிப்போமாக! எனக் கூறி  இக்கட்டுரையை முடித்துக் கொள்கின்றோம்.

யா அல்லாஹ் உனது பேருளான பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் பெருமைகளையும் அகமியங்களையும் சொல்வதற்கும் எழுதுவதற்கும் உடலிலும் உள்ளத்திலும் முழுமையான ஆரோக்கியத்தினைத் தந்தருள்வாயாக! அகத்திலும் புறத்திலும் உண்டாகும் சகல வியாதிகளை விட்டும் எம்மனைவரையும் பாதுகாப்பாயாக!

பேரருளான பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் பொருட்டினால் எமது இப்பணியை ஏற்றுக் கொள்வாயாக! எமது பெற்றோர்கள் உற்றார் உறவினர்கள் முஹிப்பீன்கள் மனைவி மக்களின் பாவங்களை மன்னித்து அவர்கள் எல்லோரின் மண்ணறைகளையும் மன்னர் மஹ்மூதரசர் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் மனம் கமழும் கப்ருகளாக அமைத்துவிடுவாயாக!

விழிப்பிலும் உறக்கத்திலும் உன் ஹபீபின் உயர் சிந்தனையை எங்களில் ஏற்படுத்துவாயாக! அதன் வழியே எமது குழந்தைகளும் மாணவ மாணவிகளும் பயணிப்பதற்கு பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் பொருட்டினால் தௌபீக் செய்தருள் புரிவாயாக! ஆமீன் பிஜாஹி ஸெய்யிதில் ஆலமீன் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம்.

اللهم نور بالعلم قلوبنا واستعمل بطاعتك أبداننا وخلص من الفتن أسرارنا واشغل بالإعتبار أفكارنا وقنا شر وساوس الشيطان واجرنا من النيران. اللهم اعصمنا من شر الفتن وعافنا من جميع المحن وأصلح منا ما ظهر وما بطن ونق قلوبنا من الحقد والحسد ولا تجعلنا علينا تباعة لأحد. اللهم يا رب بجاه نبيك المصطفى ورسولك المرتضى طهر قلوبنا من كل وصف يباعدنا عن مشاهدتك ومحبتك وامتنا على عقيدة أهل السنة والجماعة والشوق إلى لقائك ياذاالجلال والإكرام والحمد لله رب العالمين                             

صلى الله على محمد
صلى الله عليه وسلم
صلى الله على محمد
صلى الله عليه وسلم
صلى الله على محمد
يارب صل عليه وسلم


 முற்றும்
தொகுப்பசிரியர்
அல் ஹாஜ் மௌலவி பஸீர் அஹ்மத்
அதிபர் 
அந்  நிலாமிய்யதுல் மஹ்பிய்யா அரபுக் கால்லூரி

ஞாயிறு, 13 ஜனவரி, 2019

அல்லாஹ்வின் சின்னங்களை சங்கைப்படுத்துவோம்

அல்லாஹ்வின் சின்னங்களை சங்கைப்படுத்துவோம்



படைப்பாளி ஒருவன் உள்ளான். அவனுக்கு உள்ளமை உள்ளது. பண்புகள் இருக்கிறது. பெயர்கள் இருக்கிறதென்பதற்கான ஆதாரம் இந்த உலகமாகும். இந்த உலகத்தை ஒரு கணம் சிந்தித்துப் பார்த்தால் மேற்சொன்னது புரிந்து விடும். இந்த உலகத்திலுள்ள ஒவ்வொரு பொருளும் அதைப் படைத்த ஒருவன் இருக்கின்றான் என்பதற்கான சான்றாக சின்னங்களாக இருந்து கொண்டிருக்கிறது.

இவ்வாறு உலகமே அவன் ஒருவன் உள்ளான் என்பதை ஊர்ஜிதப்படுத்துவதற்கான ஆதாரமாக அத்தாட்சியாக சின்னமாக இருந்தபோதிலும் அல்லாஹ் சில பொருட்களைத் தெரிந்தெடுத்து அவை தன்னுடைய சின்னம், தன்னுடைய அத்தாட்சி என்று அடையாளப்படுத்திக் காண்பித்து அப்பொருட்களை அவனாகவே புனிதமான பொருட்கள் என்று பிரகடனம் செய்திருக்கின்றான்.

அல்லாஹ் எந்தெந்த வஸ்துக்களை அவனது சின்னங்கள், அத்தாட்சிப் பொருட்கள் என்று கூறி புனிதப்படுத்தி வைத்தானோ அவற்றினை மனிதனும் புனிதப்டுத்தி வைக்க வேண்டும். அவ்வாறு யார் அப்பொருட்களை சங்கைப்படுத்தி புனிதப்படுத்துகிறாரோ அவர் தக்வா உள்ள ஒருவர்என்பதற்கான ஆதாரமாகும் என்றும் அல்லாஹ் அறிவித்திருக்கின்றான்.

அல்லாஹ்வின் சின்னங்களாக அத்தாட்சிப் பொருட்களாக அடையாளப்படுத்தப்படுபவைகளும் அவற்றொடு தொடர்புள்ளவைகளும் என்றென்றும் புனிதப்படுத்தப்படவேண்டியவைகள்தான் என்பது இதிலிருந்து விளங்குகிறது.

அல்லாஹ்வின் அத்தாட்சிப் பொருட்களில் அதி விசேடமான மிகப் பெரிய அத்தாட்சியாக சின்னமாக எது இருக்கும்? என்று தேடிப் பார்த்தால் அது நமது நாயகம் முஜ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களைத் தவிர வேறில்லையென்பதை அறியலாம்.

எனவே நமது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் முக்காலத்திலும் மதிக்கப்பட வேண்டிய ஓர் அல்லாஹ்வின் அடையாளச் சின்னமாக இருக்கின்றார்கள்.

ومن يعظم حرمات الله فهو خير له عند ربه. الحج 30

“அல்லாஹ் புனிதப்படுத்தியவைகளை யார் கண்ணியப்படுத்துகிறாரோ அதுவே அவரது இரட்சகனிடத்தில் அவருக்கு மிகச் சிறந்ததாகும்.”
அல்ஹஜ் 30

ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب. الحج 32

“எவர் அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களை கண்ணியப்படுத்துகிறாரோ நிச்சயமாக அது உள்ளங்களின் பயபக்தியில் உள்ளதாகும்.” அல்ஹஜ் 32

எனவே அல்லாஹ் புனிதப்படுத்தியவைகளை அடையாளம் கண்டு அவற்றை கண்ணியப்படுத்தி வைப்பதனூடாக நாம் தக்வாதாரிகளாக மாறுவதற்கு முயற்சிக்க வேண்டும்.



சனி, 12 ஜனவரி, 2019

நல்லோர்களின் அருளினால்தான் உலகம் நிலைத்திருக்கிறது

நல்லோர்களின் அருளினால்தான் உலகம் நிலைத்திருக்கிறது


பால் குடிக்கும் குழந்தைகளும் மேய்கின்ற பிராணிகளும் வணக்கத்தில் ஈடுபடும் ஷெய்குமார்களும் இல்லையென்றால் அல்லாஹ்வின் தண்டனை கொட்டோ கொட்டென்று கொட்டிடும் என்றார்கள் முஜ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள்.


هل تنصرون وترزقون إلا بضعافكم بدعائهم وصلاتهم وإخلاصهم


“உங்களில் பலவீனமானவர்களின் பிரார்த்தனையின் அருளினால்தான் உங்களுக்கு உணவு வழங்கப்படுவதுடன் வெற்றியும் கிடைக்கின்றெதென்றும் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் நவின்றுள்ளார்கள்.” பார்க்க: புகாரி


إنما ينصر الله هذه الأمة بضعيفها بدعوتهم وصلاتهم


“இந்த உம்மத்தின் பலவீனமானவர்களின் தொழுகை மற்றும் பிரார்த்தனையின் அருளினால்தான் இந்த உம்மத்தினருக்கு அல்லாஹ் வெற்றியினை வழங்கிக் கொண்டிருக்கின்றான்” என்ற ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் அருள் வாக்கு நசாயியில் பதிவாகியுள்ளது.


لو تزيلوا لعذبنا الذين كفروا منهم عذابا أليما. الفتح 25


“நம்பிக்கையாளர்கள் மக்காவில் இருந்து நீங்கியிருந்தால் அவர்களில் நிராகரித்தோரை நோவினை தரும் வேதனையால் நாம் தண்டித்திருப்போம்.”அல்ஃபத்ஹ் வசனம் 25

ولولا دفع الله الناس بعضهم ببعض لفسدت الأرض ولكن الله ذو فضل على العالمين. البقرة 251


“அல்லாஹ் மனிதர்களில் சிலரைச் சிலர் மூலம் தடுக்காது இருந்தால் இந்த பூமி சீர் கெட்டிருக்கும். எனினும் அல்லாஹ் அகிலத்தார் மீது அருள் பாளிப்பவனாகும்.” அல்பகரா 251

இவ்வாறு நல்லோர்களின் பொருட்டினால்தான் இந்த உலகம் தண்டனையில் இருந்து பாதுகாக்கப்படுகிறது என்பதைப் புரிந்து கொண்டோம். இது இந்த உம்மத் பெற்றுக் கொண்ட வரமாகும். அந்த வரமானது வள்ளல் நபி முஜ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் அருளே அன்றி வேறில்லை.

இந்த உலகத்தில் கூடுதலான சோதனைகளையும் வேதனைகளையும் சந்தித்தவர்கள் உலுல் அஸ்ம் எனப்படும் ஐந்து நபிமார்களுமாகும். நபிமார்களான இப்ராஹீம், மூசா,ஈசாஇ நூஹ் ஆகிய நால்வருடன் நமது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் ஆகியோரை உலுல் அஸ்ம் எனப்படும். இவர்களில் நமது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் பிற நால்வரையும் விடக் கூடுதலான சோதனைச் சந்தித்தவர்களாகும். அவ்வாறிருந்தபோதும் நமது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களைத் தவிர மற்ற நால்வரும் சோதனையும் வேதனையும் அளவு மீறிச் சென்ற சந்தர்ப்பத்தில் அவரவர் சமூக மக்களுக்கு எதிராக பின்வருமாறு பிரார்த்தனை புரிந்ததாகஅல்குர்ஆன் அறிவித்துக் கொண்டிருக்கிறது.


நபிய்யுல்லாஹ் நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பிரார்த்தனை




فدعا ربه أني مغلوب فانتصر. القمر10

“நிச்சயாமாக நான் தோற்கடிக்கப்பட்டவன். எனவே எனக்கு உதவி புரிவாயாக! என தனது இரட்சகனிடம் பிரார்த்தனை புரிந்தார்கள்.” அல் கமா வசனம் 10

وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا. نوح 29

“எனது இரட்சகனே! நிராகரிப்பாளர்களில் எவரையும் நீ இப்பூமியில் வசிக்கவிட்டு விடாதே! என்று நூஹ் (அலைஹிஸ்ஸலாம்) கூறினார்.”நூஹ் வசனம் 29

நபிய்யூல்லாஹ் மூசா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பிரார்த்தனை


ربنا اطمس على أموالهم واشدد على قلوبهم فلا يؤمنوا حتى يروا العذاب الأليم. يونس 88

“எங்கள் இரட்சகனே! அவர்களின் செல்வங்களை அழித்து அவர்களது உள்ளங்களைக் கடினமாக்குவாயாக! நோவினை தரும் வேதனையை அவர்கள் காணும் வரை நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள் என மூசா (அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ) கூறினார்.” யூனுஸ் வசனம் 88

நபிய்யுல்லாஹ் தாவூத் மற்றும் ஈசா அலைஹிமஸ்ஸலாம் அவர்களின் பிரார்த்தனை



لعن الذين كفروا من بني اسرائيل على لسان داوود وعيسى ابن مريم ذالكبما عصوا وكانوا يعتدون. المائدة 78

“இஸ்ராயீலின் சந்ததிகளில் நிராகரித்தோர், தாவூத் மற்றும் மர்யமின் மகன் ஈசா ஆகியோரின் நாவால் சபிக்கப்பட்டனர். ஏனெனில், அவர்கள் மாறு செய்து வரம்பு மீறிக்கொண்டிருந்ததே இதற்குக் காரணமாகும்.” 
அல்மாயிதா 78

நபிய்யுல்லாஹ் ஸாலிஹ் அலைஹிஸ்ஸலாம் லைஹிமஸ்ஸலாம் அவர்களின் பிரார்த்தனை


فقال لهم رسول الله ناقة الله فسقياها فكذبوه فعروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها. الشمس 13-14

“அவர்களிடம், அல்லாஹ்வின் தூதர் (ஸாலிஹ்) அல்லாஹ்வின் பெண் ஒட்டகத்தையூம் அது தண்ணீர் அருந்துவதையும் (விட்டு விடுங்கள்) என்று கூறினார். அவர்கள அவரைப்  பொய்ப்பித்து அதனை அறுத்து விட்டனர் எனவே அவர்களின் பாவத்தின் காரணமாக அவர்களது இரட்சகன் அவர்கள் மீது வேதனையை இறக்கி வைத்து அவர்களைப் பூண்டோடு அழித்து (தரை) மட்டமாக்கினான்.”

நபிய்யுல்லாஹ் இப்ராஹீம்அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பிரார்த்தனை



وإذ قال إبراهيم رب اجعل هذا بلدا آمنا وارزق أهله من الثمرات من آمن منهم بالله واليوم الآخر قال ومن كفر فأمتعه قليلا ثم أضطره إلى عذاب النار وبئس المصير.

“என் இரட்சகனே! இதை அபயமளிக்கும் நகரமாக ஆக்குவாயாக!மேலும் இதில் வசிப்போரில் யார் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொள்கின்றாரோ அவர்களுக்குக் கனிவர்க்கங்களில் இருந்து உணவளிப்பாயாக! என்று இப்ராஹீம் பிரார்த்தனை புரிந்ததை நினைத்துப் பாருங்கள்.”அல்பகரா 126

நபிய்யுல்லாஹ்  லூத் அலைஹிஸ்ஸலாம் லைஹிமஸ்ஸலாம் அவர்களின் பிரார்த்தனை 


قال رب انصرني على القوم المفسدين. العنكبوت 30

“எனது இரட்சகனே! குழப்பம் விளைவிக்கும் இக்கூட்டத்தாருக்கெதிராக நீ எனக்கு உதவி செய்வாயாக! என அவர் கூறினார்.”அல்அன்கபூத் 30

இவ்வாறு மேற்சொன்ன நபிமார்களெல்லாம் அவரவர் சமூக மக்களின் தொல்லைகள் எல்லை மீறிச் சென்றபோது அம்மக்களுக்கெதிராக அல்லாஹ்விடம் பிரார்த்தனை புரிந்திருக்கிறார்கள். அதனால் அச்சமூக மக்கள் அழிந்துபோனார்கள்.

நபிமார்களில் வேறெவரும் பெற்றிடாத வேதனைகளையூம் சோதனைகளையும் நமது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் பெற்றிருக்கிறார்கள். அவ்வாறான சந்தர்ப்பங்களில்,

يا رسول الله صلى الله عليه وآله وسلم الا تلعن بما أتوا إليك؟ فقال لم أبعث لعانا إنما بعثت رحمة يقول الله : وما ارسلناك إلا رحمة للعالمين.

“அல்லாஹ்வின் தூதரே! இவர்களுக்கெதிராக நீங்கள் பிரார்த்தனை புரியக்கூடாதா? என்று தோழர்கள் கேட்பார்கள். அப்பொழுது, நான் சபிப்பவராக அனுப்பப்படவில்லை. நிச்சயமாக நான் அருளாகவே அன்றி அனுப்பி வைக்கப்படவில்லையென்று அல்லாஹ் சொல்வதாகச் சொல்வார்கள்.”

ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் தன்னுடைய சமூக மக்களின் எதிர்கால நலனுக்காக பிரார்த்தனை புரிந்திருக்கிறார்கள். பசியால் எனது சமூகத்தை அழித்திடாதே! அவ்வாறே யூத நசாராக்களை அவர்களுக்கு எதிராக சாட்டி விடாதே என்றும் பிரார்த்தனை புரிந்துள்ளார்கள். அந்தவொரு பிரார்த்தனையின் அருளால்தான் இந்த சமூகம் இதுவரை அழியாமல் இருந்து கொண்டிருக்கிறது. 

وما كان الله ليعذبهم وأنت فيهم وما كان الله معذبهم وهم يستغفرون. الأنفال 33

“நபியே! நீங்கள் அவர்களுடன் இருக்கும் வரை அல்லாஹ் அவர்களைத் தண்டிப்பவனாக இல்லை. மேலும் அவர்கள் பாவமன்னிப்புக் கோரும் நிலையிலும் அல்லாஹ் அவர்களைத் தண்டிப்பவனாக இல்லை.”என அல்லாஹ் வாக்குறுதியளித்து விட்டான். அல்அன்பால் 33

அன்பான சகோதரர்களே!

கடந்த காலங்களை விட அண்மைக் காலமாக நாம் ஏராளமான பிரச்சினைகளையும் அழிவுகளையும் சந்தித்து வருவதைக் காண முடிகிறது. ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் தம்முடன் இருக்கின்றார்கள் என்ற ஆணித்தரமான நம்பிக்கை கடந்த காலத்து மக்களிடம் காணப்பட்டது அதன் பொருட்டினால் அல்லாஹ் அவர்களைப் பாதுகாத்தான். ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் நம்முடன் இல்லை. அவ்வாறு இருப்பதாக நம்புவது இஸ்லாத்திற்கு மாற்றமான சிந்தனையாகும் என்ற மார்க்க விரோத கருத்துக்கள் வெளிப்பட்டதையடுத்து அல்லாஹ்வின் பாதுகாப்பு நம்மை விட்டும் தூரமாகி விட்டது. 

இந்த உலகம் முழுமையாக அழிய வேண்டுமாக இருந்தால் இங்கு அல்லாஹ்வின் அருள் இறங்குவதில் தடங்கள் ஏற்பட வேண்டும். அல்லாஹ்வின் அருள் எப்பொழுது தடைப்பட்டுப்போகுமோ அப்பொழுது இந்த உலகம் அழிந்து விடும்.

அல்லாஹ்வின் அருள் தடைப்பட வேண்டுமாக இருந்தால் எந்தெந்த வாயில் வழியாக அவனது அருள் வந்துகொண்டிருக்குமோ அவ்வழிகள் அனைத்தும் மூடப்பட வேண்டும். இதற்கான பணியைத்தான் தப்லீக், ஜமாஅத்தே இஸ்லாமி, கர்ணி போன்ற வழி கெட்ட கூட்டங்கள் மார்க்கப்பணி என்ற பொய்யான லேபலில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.  அல்லாஹ்வின் அருள் வாயில்கள் இழுத்து மூடப்பட்டு இந்த உலகம் அழிந்து போவதற்குரிய பாதையில் அவர்கள் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள்.
 தொடரும்..........

வியாழன், 10 ஜனவரி, 2019

நேர் வழி

நேர் வழி 


اهدنا الصراط المستقيم

யா "அல்லாஹ் எம்மை நேர்வழியில் நிலைத்திருக்கச் செய்வாயாக!"

நேர் வழி என்பது நபிமார்கள்
,ஸித்திகீன்கள்,ஷுஹதாக்கள்,ஸாலிஹீன்கள் சென்ற பாதையாகும். (அல்குர்ஆன்)
யூத நஸாராக்கள் வழி முறை, முறனான பிழையான பாதையாகும். அந்தப் பாதைகளில் எம்மை செலுத்தி விடாதே. (அல்குர்ஆன்)
நபிமார்கள் சென்ற பாதை எதுவோ அதுவே தோழர்கள்,தாபிஊன்கள், தபஉத் தாபியீன்கள் சென்ற பாதையாகும். எனவே அந்தப் பாதையில் செல்லும் பாக்கியம் பெற வேண்டும். அது அஹ்லுஸ் ஸுன்னத் வல்ஜமாஅத் பாதையாகும்.
ஸஹாபாக்கள்,தாபிஊன்கள்,தபஉத் தாபியீன்கள் சென்ற பாதையில் செல்ல விடாது தடுப்பவர்கள் யூத நஸாராக்கள் ஆகும். இது தவறான பாதையாகும். இதுவே வஹ்ஹாபியிச பாதையாகும்.
மஃஹ்பிய்யா அதிபர்: அல் உஸ்தாத் பஸீர் அஹ்மத் (அல் மஹ்ளரி )
மீசான் கட்டையின் மூலமாக அருள் பெறுதல்


ஏறாவூர் மக்களால் “சேமன் அவ்லியா” என மதிக்கப்படும் யூ.வி. மீராலெப்பை என்பவர் 30-10-1907ல் பிறந்து 24-09-1954ல் காலமானார். பல்லாக்கு வலிய்யூல்லாஹ் எனப்படும் இறை நேசரிடம் விஷக் கடிக்கு வைத்தியம் செய்வதற்காக இவர் வாக்குப் பெற்றிருக்கிறார்.

விஷ வைத்தியத் துறையில் பிரபல்யம் பெற்றிருந்த இவர் மரணமடைந்து நல்லடக்கம் செய்யப்பட்ட கபுரடியின் இரு பக்கங்களிலும் நட்டப்பட்டுள்ள மீசான் மரக்கட்டைகளுள் ஒன்று விஷத்தை உறிஞ்சிக் கொள்ளும் தன்மையுடையதாக இருப்பதால் விஷக்கடிக்குட்பட்ட பல்லின மக்களும் விஷத்தை இறக்கி அருள் பெறுவதற்காக இவரின் கபுரடிக்கு இன்றும் மக்கள் இரவு பகலாக வந்து செல்கின்றனர். இவரது கபுரடி மண்ணை அருளை நாடி எடுத்துச் செல்லும் வழமையும் உள்ளது.

1990 ஆம் ஆண்டளவில் ஏறாவூர் நகரம் தமிழீழ பயங்கரவாத கும்பல் ஒன்றினால் தாக்குதலுக்கு உள்ளான சமயத்தில் அவர்களால் வீசி எறியப்பட்ட குண்டுகள் ஊருக்குல் விழுந்து பாதிப்பை ஏற்பட்டுத்தாத விதத்தில் பச்சை நிற ஆடை அணிந்த ஒருவர் அக்குண்டுகளைப் பிடித்துப் பிடித்து தம் சட்டைப் பைக்குள் போட்டதைக் கண்ணுற்றதாக அக்காலப் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மாற்றுமத பொலிஸ் தரப்பினர் கூறியிருக்கிறார்கள். அவ்வாறு பச்சை நிற ஆடை அணிந்த அப்பெரியார் மீராலெப்பை அவ்லியாதான் என்று அவ்வூர் மக்கள் இன்றும் கூறுவதைக் காணலாம்.

விஷக் கல்லின் மூலமாக அருள் பெறுதல்

இது தவிர ஏறாவூர் ஷுபி மன்ஸிலில் சங்கைக்குரிய அஷ்ஷெய்கு ஜலாலுத்தீன் பூக்கோயா தங்கள் அவர்களினால் ஓதி நடப்பட்டுள்ள ஒரு கல் உள்ளது. விஷம் தீண்டப்பட்டவர்கள் இக்கல்லில் வைத்து விஷமிறக்குவதற்காக வருகின்றனர். எனினும் மீராலெப்பை அவ்லியாவுடைய கபுரடியில் உள்ள கட்டையைப் போன்று இது பிரபல்யம் பெறவில்லை.

கௌரவ பூக்கோயாத் தங்கள் அவர்களினால் ஓதி நடப்பட்ட விஷக் கல்லைப் போன்று பல விஷக் கற்கள் மதிப்புக்குரிய அஷ்ஷெய்கு அஸ்ஸெய்யிது அப்துர் ரஷீத் தங்கள் அவர்களினால் நாட்டின் பல பாகங்களில் வைக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

தொடரும்...

புதன், 9 ஜனவரி, 2019

கப்ருகள் வாயிலாக அருள் பெறுதல்


அல்லாஹ்வின்பேரருளான அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் அருளின் முழு வடிவமாகும். அவர்களில் அருள் இல்லாத எதுவுமே இல்லையென்பதை இதுவரை சொல்லப்பட்ட தலைப்புக்களில் காணக் கிடைத்தது. ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களை நீங்கள் நபியாக ஏற்றிருந்தால் இந்த நம்பிக்கை உங்களிடம் இருக்க வேண்டும். 

நபியாக ஏற்றுக் கொண்ட பின்னும் மேற்கூறிய விடயத்தில் உங்களுக்கு நம்பிக்கை இல்லையென்றால் நீங்கள் முனாபிக் ஆக இருக்கின்றீர்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். பனூ இஸ்ரவேலர்களின் பரம்பரையில் வந்த இயக்கங்களுடன் உங்களுக்கு தொடர்பு இருந்தால் மட்டுமே இது விடயத்தில் உங்களுக்கு மனக்கசப்பு உருவாகும் என்பதையூம் அறிந்து கொள்ளுங்கள்.

ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் மண்ணில் பிறப்பதற்கு முன் வாழ்ந்தவர்களுக்கு அருளாக இருந்திருக்கிறார்கள். மண்ணில் வாழும்போது அக்காலத்து மக்களுக்கு அருளாக இருந்துள்ளார்கள். அவ்வாறே மண்ணில் இருந்து மறைந்த பின்னும் அவர்கள் அருள் பொருந்தியவர்கள் என்பதில் ஏகத்துவாதிகளிடத்தில் இரண்டாம் கருத்துக்கு இடமில்லை. எனவே அன்னவர்களின் மண்ணறையும் அருள் பொருந்தியதென்பதில் உண்மையான ஏகத்துவவாதிகள் சந்தேகம் கொள்ளத் தேவை இல்லை. 

ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் மண்ணறை அருள் பொருந்தியது என்பதற்காகத்தான் அதனைத் தரிசிப்பது அல்லாஹ்வின் அருளைப் பெற்றுத் தரும் வணக்கங்களில் விசேடமானதென்று அவ்வருளைப் பெற்றிட்ட அறிஞர்கள் அறிக்கையிட்டனர். ஆயினும் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் மண்ணறையைத் தரிக்கச் செல்வது பற்றிய பாடத்தில் இஸ்லாமிய ஷரீஅத்தின் சாயலற்ற அசிங்கமான கருத்தை அரங்கேற்றி அசிங்கமடைந்த முதல் நபர் இப்னு தைமிய்யா என்ற ஒரு நபராகும். இதனால் அவர் இன்றும் விமர்சிக்கப்படுகிறார். அஹ்லுஸ் ஷுன்னத் வல்ஜமாஅத்தினரால் அசிங்கப்படுத்தப்படுகிறார். நபிமார் மற்றும் ஸாலிஹான நல்லடியார்களை தரக்குறைவாக யார் பேசினாலும் அவர்களுக்கு சாபக் கேடுதான்.

ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் சிறப்பான மேனியைச் சுமந்துள்ள பூமியைவிடச் சிறந்ததொரு பூமி அகிலங்களில் எங்கும் இல்லை. 

நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் மண்ணறையை முதன் முதலில் முத்தமிட்டவர்கள் நபித் தோழர்களாகும். ஹழ்ரத் அபூ அய்யூபுல் அன்ஸாரி ரழியல்லாஹு அன்ஹு அன்னவர்கள் அண்ணலாரின் மண்ணறையை முத்தமிட்டவர்களில் ஒருவராகும். 

நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் அருமைத் தோழர்கள் மத்தியில் இம்மண்ணில் வாழ்ந்து கொண்டிருந்த தருணத்தில் பஞ்சம் ஏற்படுகிறது. அப்பொழுது நேரடியாக நாயகத்தின் திருச் சபைக்குச் சென்று நாயகமே மழையைத் தாருங்கள் என்று கூறிய அருமைத் தோழர்கள்தான் மண்ணில் இருந்து மறைந்த பின்னும் பஞ்சம் ஏற்பட்டபோது “நாயகமே உங்கள் சமூகம் அழிகிறது. மழையைத் தாருங்கள்” என்றும் சொன்னார்கள்.

“வா முஹம்மதாஹ்!” மற்றும் “யா முஹம்மத்” என்று கூறி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களிடம் நேரடியாக உதவி தேடியவர்கள் அருமைத் தோழர்கள். ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் மண்ணறையின் முகட்டினைத் திறந்து வைத்து அருள் பெறுங்கள் என்று சொன்னது ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் அருமை மனைவி நமது அண்ணை ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அன்னவர்களே அன்றி வேறு யாருமல்ல. 

يا خير من دفنت بالقاع أعظمه
فطاب من طيبهن القاع والأكم
نفسي الفداء لقبر أنت ساكنه
فيه العفاف وفيه الجود والكرم

இது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் நல்லடக்கம் செய்யப்பட்டு மூன்று நாட்களின் பின் அவ்விடத்திற்கு வருகை தந்த கிராமத்து அரபி ஒருவர் அங்குள்ள மண்ணை தன் தலை மீது அள்ளிக் கொட்டி அழுது புலம்பி மன்னிப்புத் தேடிப் படித்த பாடல் வரிகளாகும். 

இப்பாடல் வரிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் மண்ணறையைச் சூழவுள்ள சுவரில் எழுதப்பட்டிருந்தது. தூரத்தில் இருந்து பார்த்தாலும் தெளிவாக விளங்கும் அளவுக்கு குறிப்பிடத்தக்க காலம் வரை அது காணப்பட்டிருந்து. ஆனால் அண்மைக் காலமாக அது பார்வையாளர்களுக்குத் தெளிவாக விளங்காத அளவுக்கு நிறம் தீட்டி மறைக்கப்பட்டு வருவது வேதனையான விடயமாகும். 

எனக்கு ஏதாவது உபாதை ஏற்பட்டால் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் கப்ரின் பொருட்டினால் உதவி தேடுவேன் என்று இப்னுல் முன்கதிர் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறிய தகவலை ஹாபிழ் தஹபி தாரீகுல் இஸ்லாம் என்ற நூலில் பதிவு செய்துள்ளார்.

இவ்வாறு ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் மண்ணறையை முத்தமிடலாம், அவ்விடத்தில் தொழலாம்இ அவர்களிடம் நேரடியாக உதவி கோரலாம் என்ற நம்பிக்கை அருமைத் தோழர்கள் காலம் தொட்டு இஸ்லாமிய உம்மத்திடம் இருந்து வருகிற நம்பிக்கையாகும். இது ஏகத்துவப் பிரச்சாரத்தின் ஒரு அங்கமாகும். இதற்கெதிரான பிரச்சாரம் பித்அத்தாகும். ஆனாலும் தற்காலத்தில் பித்அத்தான ஒன்று ஏகத்துவமாகவும் ஏகத்துவமானதொன்று பித்அத்தானதாகவும் புரண்டு போய் விட்டது. அதனால் கப்ர் வணக்கம் என்று கொச்சைப்படுத்தப்படுமளவுக்கு நிலமை மோசமாகி விட்டது.   

இமாமுனா புகாரி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் தம்முடைய அத்தாரீக் என்ற நூலினை ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் கப்ரடியில் வைத்து தொகுத்திருந்தார்கள். அவ்வாறே ஸஹீஹுல் புகாரி என்ற ஹதீத் கிரந்தத்தின் அறிவிப்பாளர் பட்டியலை ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் கப்ருக்கும் மிம்பருக்கும் இடைப்பட்ட இடத்தில் வைத்து தொகுத்திருக்கிறார்கள். ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் அருளை நாடியே இவ்வாறு இமாம் அவர்கள் நடந்து கொண்டார்கள்.

நபிமார்கள் மூலமாக எவ்வாறு அருள் பெற்றிட முடியுமோ அவ்வாறே ஸாலிஹீன்கள் மூலமாகவும் அருள் பெற்றிட முடியும். அந்த வகையில் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் மண்ணறையின் மூலமாக அருள் பெறப்படுவதுபோன்று ஸாலிஹீன்களின் மண்ணறைகள் மூலமாகவும் அருள் பெற முடியூம். 

அந்த வகையில் நபித் தோழர் ஸெய்யிதுனா அபூ அய்யூப் அல் அன்ஸாரி ரழியல்லாஹு அன்ஹு அன்னவர்களின் கப்ரின் பரக்கத்தினால் பஞ்ச காலங்களில் அவ்வூர் மக்கள் மழையைப் பெற்றிருக்கிறார்கள். அருளை நாடி பல பகுதிகளில் இருந்து வந்து அவரது கப்ரைத் தரிசித்து சென்றுள்ளனர். 

திருமன வாழ்வில் ஒன்றினையும் இஸ்தன்பூல் நாட்டு முவஹ்ஹிதீன்களான புதுத் தம்பதிகள் நபித் தோழரின் கபுரடிக்கு வந்து அருள் பெற்றுச் செல்லும் பழக்கம் அம்மக்கள் மத்தியில் இருந்ததாக அல்ஹாபிழ் தஹபி குறிப்பிடுகிறார். 

இமாமுனா புகாரி ரஹ்மதுல்லாஹி அலைஹி அன்னவர்களின் கப்ரில் இருந்து கஸ்தூரியை விட அழகிய மணம் வீசியிருக்கிறது. அதன் காரணத்தினால் அவ்வூர் மக்கள் இமாம் அவர்களின் கபுரடி மண்ணை அருளுக்காக எடுத்துச் சென்றிருக்கின்றார்கள். இமாம் அவர்களுக்கு எதிரிகளாக காணப்பட்டவர்களெல்லாம் கப்ரடிக்குச் சென்று தவ்பா செய்திருக்கிறார்கள்.

இமாம் அவர்களின் கப்ரின் பரக்கத்தினால் பஞ்ச காலங்களில் மழையைப் பெற்றிருக்கிறார்கள் என்ற தகவலை இமாம் சுபுகி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் தமது “அத்தபகாத்” என்ற நூலில் பதிவிடுகிறார்.

இப்னு பக்கார் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் கப்ர் துஆக்கள் அங்கீகரிக்கப்படும் இடம் என்று அறியப்பட்டிருந்தாக இப்னு கல்கான் ரஹ்மதுல்லாஹி அலைஹி அன்னவர்கள் “அல்வஃபிய்யாத்” என்ற நூலில் பதிவிட்டுள்ளார்.

அல்ஹாபிழ் அபூ அலி அந்நைஸாபூரி அவர்கள் கூறுகிறார்கள். நான் கடுமையான கவலையில் இருந்து கொண்டிருந்த சந்தர்ப்பம் ஒன்றில் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களைக் கனவில் கண்டேன். யஹ்யா பின் யஹ்யா என்பவரின் கபுரடிக்குச் சென்று பாவமன்னிப்புக் கோரி அல்லாஹ்விடம் உங்கள் தேவைகளை நிறைவேற்றித் தருமாறு கேளுங்கள் என்று கூறியதுபோன்று எனக்குத் தெரிந்தது. அதனால் கண் விழித்த நான் எனக்குச் சொன்னதை நிறைவேற்றினேன். எனது தேவைகளும் தீர்க்கப்பட்டது. இத்தகவலை ஹாபிழ் தஹபி “தாரீகுல் இஸ்லாம்” என்ற நூலில் பதிவிட்டுள்ளார். 

இமாமுனா இப்னுல் பெஃளரக் ரஹ்மதுல்லாஹி அலைஹி அன்னவர்களின் கப்ரடியின் பரக்கத்தினால் துஆக்கள் ஏற்றுக்கொள்ளப்படும். மழை பொழியும்.

ஹதீத் கலையில் பிரபலமான இப்னு குஸைமா ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் அலி பின் மூசா ரிழா ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் கப்ரின் மூலமாக அருள் பெற்றிருக்கிறார்கள்.

ஹழ்ரத் மூசா ரிழா நாயகம் அவர்களின் மண்ணறையை நான் பல முறை தரிசித்திருக்கிறேன். எனக்கு ஏதாவது பிரச்சினைகள் கஷ்டங்கள் ஏற்படுமானால் நான் அவ்விடம் சென்று அல்லாஹ்விடம் பிரார்த்திப்பேன். உடனே அப்பிரச்சினைகள் நீங்கிவிடுவதை நான் நன்கு பரீட்சித்துப் பார்த்திருக்கின்றேன் என அல்ஹாபிழ் இப்னு ஹிப்பான் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகிறார்கள்.

இமாம் மூசா ரிழா அவர்களின் மண்ணறையை மக்கள் நாடிச் சென்று தரிசிக்கின்றனர் என்ற தகவலை ஹாபிழ் தஹபீ அவர்களும் தம்முடைய “ஸியர் அஃலாமிந் நுபலா” எனும் நூலில் பதிவிடுகிறார்.

இமாம் தாரகுத்னீ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் அபுல் ஃபத்ஹ் அல்கவ்வாஸ் என்பவரின் கப்ரின் மூலமாக அருள் பெற்றதாக குறிப்பிடுகிறார்.

அல்லாமா இப்னுல் ஜஸரீ அவர்கள்,“அல்ஹிஸ்னுல் ஹஸீன்” என்ற நூலில் பிரார்த்தனைகள் ஏற்றுக் கொள்ளப்படும் இடங்களைக் குறிப்படும் போது அவ்விடங்களில் ஒன்றாக நபிமார் வலிமார்களின் கப்ருகளையும் குறிப்பிடுகிறார்.

ஸெய்யிதா நஃபீஸதுல் மிஸ்ரிய்யா ரழியல்லாஹு அன்ஹா அவர்களின் கப்ரடியில் கேட்கப்படும் பிரார்த்தனைகள் அங்கீகரிக்கப்படும் என்று ஹாபிழ் தஹபி குறிப்பிட்டு விட்டு பொதுவாக நபிமார் மற்றும் வலிமார்களின் கப்ரடிகளில் பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படும் என்று அதில் பதிவிட்டுள்ளார்.  

இமாமுனா ஷாபிஈ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் அருளை நாடி இமாம் அபூ ஹனீபா ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் கப்ரைத் தரிசித்திருக்கிறார்கள். தனது தேவைகள் நிறைவேற அவ்விடத்தில் வைத்து அல்லாஹ்விடம் துஆ செய்திருக்கிறார்கள். குறுகிய நேரத்திற்குள் அந்த தேவை நிறைவேறியும் இருந்திருக்கிறதென்று கூறப்பட்ட இமாம் அவர்களின் கூற்று “தாரீக் பக்தாத்” என்ற நூலில் பதிவாகியுள்ளது.

ஹன்பலீ மத்ஹபின் பிரபல அறிஞர்களில் ஒருவரான அபு அலி அல்கலால் அவர்கள் தனது அத்தியாவசியத் தேவைகள் நிறைவேற இமாம் மூசா காழிம் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் கப்ருக்கு சென்று அல்லாஹ்விடம் பிரார்த்தித்து நிறைவேற்றிக் கொண்டதாக கூறிய தகவலும் மேற்சொன்ன நூலில் பதிவாகியூள்ளது. 

மஃரூபுல் கர்கீ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் கபுர் பிரார்த்தனைகள் அங்கீகரிக்கப்படும் ஓர் இடமென்பது மிகப் பிரபலமானதொரு தகவலாகும்.

இமாம் அஹ்மத் பின் ஹன்பல் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் கப்ரை தொட்டு தடாவி நோய் நிவாரணம் பெற்றதாக அல்ஹாபிழ் அபூ முஹம்மத் அப்துல் கனீ பின் அப்துல் வாஹித் பின் அலி அல்முகத்திஸி அவர்கள் கூறியுள்ளார்கள். 

அஷ்ஷெய்கு அபுல் அலி பின் முஹம்மத் பஷ்ஷார் ரஹ்மதுல்லாஹி அலைஹி அன்னவர்களின் கப்ர் அருள் பெறப்படும் இடம் என்பது பிரபலமான தகவலாகும் என தாரீக் பக்தாத், தபகாதுல் ஹனாபிலா,  அல் மக்ஸிதுல் அர்ஷத், அல் முன்தழம் ஃபீ தாரிகில் முலூகி வல் உமம் போன்ற நூட்களில் பதிவாகியுள்ளது.

அஷ்ஷெய்கு அஹ்மத் அல் கஸ்வீனி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் கப்ர் அருள் பெறும் நோக்கில் தரிசிக்கப்படுவதாக இப்னுல் ஜௌஸி குறிப்பிடுகிறார்.

அஷ்ஷெய்கு இப்னு அபீ அந்நுமைர் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் கப்ரடியில் கேட்கப்படும் பிரார்த்தனை அங்கீகரிக்கப்படுவதாக இப்னுல் அதீம் என்பவர் “புக்யதுத் தலப் ஃபீ தாரீகி ஹலப்” என்ற நூலில் பதிவு செய்துள்ளார்.

இதுபோன்ற இன்னும் பல தகவல்கள் “அல்பரகது வத்தபர்ருக்” என்ற நூலில் திரட்டப்பட்டிருக்கிறது. கட்டுரையின்  நலன் கருதி இத்தோடு நின்று விட்டேன்.

இமாமுனா ஷாபிஈ ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் ஆடையினை கழுவி எடுத்து அதன் நீரை அருளை நாடி இமாமுனா அஹ்மத் பின் ஹன்பல் அவர்கள் அருந்தியுள்ளார்கள். இது உம்ததுல் காரியில் பதிவாகியுள்ளது.

ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் அணிந்த ஆடையினை கழுவிய நீரை நோயாளர்களுக்கு மருந்தாகப் பாவித்து நோய்களில் இருந்து பாதுகாப்புப் பெற்றது போன்று ஸாலிஹீன்களின் ஆடைகளையும் அருள் பெறும் நோக்கத்தில் கழுவிக் குடிக்க முடியும் என இமாமுனா நவவி ரஹ்மதுல்லாஹி அலைஹி முஸ்லிமுடைய விரிவுரையில் பதிவிடுகிறார்கள்.

இமாம் அஹ்மதுடைய ஆடையினை இமாம் ஷாபி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் அருள் பெறும் நோக்கில் கழுவி அருந்தியதாக தபகாதுஷ் ஷாபியிய்யா அல் குப்ரா என்ற நூலில் பதிவாகியுள்ளது.

இமாம் அஹ்மத் அவர்களின் ஆடையினை அருளை நாடி அவரது பிள்ளைகள் அணிந்துள்ளதாக மனாகிபுல் இமாமி அஹ்மத என்ற நூல் குறிப்பிடுகிறது. 

ஹஜருல் அஸ்வத் கல்லினை முத்திடலாம் என்ற ஆதாரத்தின் அடிப்படையில் கௌரவமான அனைத்து வஸ்துக்களையூம் முத்தமிடலாம். எனது பாட்டனார் அல்குர்ஆனை முத்தமிட்டுள்ளார். நபி மொழிகளை முத்தமிட்டுள்ளார் அவ்வாறே ஸாலிஹீன்களின் கப்ருகளையும் முத்தமிட்டுள்ளதாக இமாமுனா தபரி கூறிய கருத்தும் உம்ததுல் காரியில் பதிவாகியுள்ளது.

எவர் மூலமாக அருள் பெறலாம் என்று கருதப்படுகிறதோ அவ்வாறானவரின் கப்ரைத் தொட்டும் அருள் பெற முடியும் என்று “காயத்துல் முன்தஹா” என்ற நூலாசிரியர் கூறுகிறார். இவர் ஹன்பலீ மத்ஹபை சார்ந்ததொரு அறிஞராகும்.

ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் அறையை முத்தமிடலாம் என்று கஷ்ஃபுல் கினாயி அன் மத்னில் இக்னாயி என்ற நூலில் பதிவாகியுள்ளது. இதன் ஆசிரியரும் ஹன்பலி மத்ஹபை சார்ந்தவராகும்.

ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் அணிந்த ஆடையில் தான் கபனிடப்பட வேண்டும் என்பதற்காக அதனைக் கேட்டுப் பெற்றுக் கொண்ட அருமைத் தோழர் சுவனத்தைக் கொண்டு நன்மாராயம் கூறப்பட்ட பத்து ஸஹாபாக்களில் ஒருவராகும் என அஸ்ராருல் ஆதாரிந் நபவிய்யதி என்ற நூலின் 16 ஆம் பக்கத்தில் பதிவாகியுள்ளது.

ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் திரு முடி ஒன்று நபித் தோழர் ஸெய்யிதுனா அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடம் இருந்திருக்கிறது. நான் மரணித்து விட்டால் எனது நாக்கின் கீழே அதனை வைத்து என்னை நல்லடக்கம் செய்யுங்கள் என்று தாபிதுல் புனானி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களிடம் வஸிய்யத் செய்துள்ளார்கள். அவ்வாறே நல்லடக்கமும் செய்யப்பட்டிருக்கிறார். அவர் அடக்கம் செய்யப்பட்ட பின் அவரது பரிசுத்த உடல் அழியாது. அவரது உடலில் மாற்றங்கள் ஏற்படாது என்ற நம்பிக்கை அவரிடம் இருந்திருந்தாக அஸ்ராருல் ஆதாரிந் நபவிய்யதி என்ற நூலின் 24 ஆம் பக்கத்தில் பதிவாகியூள்ளது. 

ஸல்லலாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் வியர்வைகள் தனது கபன் ஆடையில் பூசுமாறும் தோழர் அவர்கள் வஸிய்யத் செய்ததாக புகாரியில் பதிவாகியுள்ளது.

இமாம்களான புகாரி மற்றும் அஹ்மத் போன்றவர்கள் தங்களது ஆடைகளினுள் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் திரு முடியை வைத்துத் தைத்து அவ் ஆடையினை மௌத்து வரை அணிந்து வந்திருக்கிறார்கள். இது நபித் தோழர் காலித் பின் வலீத் ரழியல்லாஹு அன்ஹு அன்னவர்கள் காண்பித்துக் கொடுத்த ஒரு ஷுன்னத்தாகும்.

நபியூல்லாஹ் யூசுப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மரணமான பின்னர் அவரின் மூலமாக அருளை நாடி ஒவ்வொரு பிரதேச வாசிகளும் தங்களது பிரதேசத்தில் அவர் நல்லடக்கம் செய்யப்பட வேண்டும் என்று ஆசைப்பட்டதாக தப்சீருல் காஸினில் பதிவாகியுள்ளது.

ஸாலிஹீன்களின் கப்ருகள் மூலமாக மக்கள் காலம் காலமாக அருள் பெற்று வருகிறார்கள் என்றதொரு தகவலை இமாம் ராஹுனி அவர்கள் கூறுகிறார்கள்.

ஒருவர் மரணிக்கும் முன் அவர் மூலமாக அருள் பெறப்பட்டடிருந்தால் அவர்மரணமான பின்னரும் அவர் மூலமாக அருள் பெறலாம் என்று இமாமுனா கஸ்ஸாலி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் கூற்று அல்ஃபஜ்ருஸ் ஸாதிக் என்ற நூலில் பதிவாகியுள்ளது.

இமாம் ஷம்சுத்தீன் முஹம்மத் அல்ஜஸரீ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள், இமாம் முஸ்லிம் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் கப்ரைத் தரிசித்திருக்கிறார். அருள் பெறும் நோக்கில் அவ்விடத்தில் ஹதீத்களை வாசித்திருக்கிறார். அவ்விடத்தில் துஆக்கள் ஏற்றுக் கொள்ளப்படுவதைக் கண்டிருக்கிறார். 

கப்ருகள் மூலமாக அருள் பெறுதல் என்ற இத்தலைப்பில் இதுவரை அரபுலகில் வாழ்ந்து மறைந்த ஸாலிஹீன்களில் ஒரு சிலரைக் குறிப்பிட்டோம். அது தவிர இந்தியா மற்றும் இலங்கை போன்ற தேசங்களில் இதற்கான சான்றுகள் சொல்லி முடிக்க இயலாத அளவுக்கு இத்தலைப்புக்குப் பொருத்தமான நிகழ்வுகள் பதிவாகியிருப்பதைக் காண முடிகிறது. இருப்பினும் இந்தியா மற்றும் இலங்கை நாடுகளில் இடம் பெற்றதாக அப்பரதேச வரலாற்று நூற்களில் பதிவாகியுள்ள ஒரு சில தகவல்களை இவ்விடத்தில் பதிவு செய்வது நல்லதென்று கருதுகின்றொம். 

அந்த வகையில்இ மாபெரும் மார்க்க மேதையும் சீர்திருத்தவாதியுமான ஹழ்ரத் முஜத்தித் அல்ஃபுஸ் ஸானீ ரஹ்மதுல்லாஹி அலைஹி, ஷாஹ் வலியுல்லாஹ் போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். 

முஜத்தித் அல்ஃபுஸ் ஸானி அவர்கள் வலிமார்களின் தர்காக்களைத் தரிசிக்கச் சென்றால் அங்கே நீண்ட நேரம் முராகபாவில் மூழ்கிப்போய் இருப்பது அவரின் வாடிக்கையாக இருந்துள்ளது. கவ்துல் அஃழம் அஷ்ஷெய்கு முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களை கராமத்தின் அடிப்படையில் தரிசித்து அவர்களின் இரு பாதங்களையும் முத்தமிட்டு அருள் பெற்றிருப்பது இவரின் பிரபல அற்புதங்களில் ஒன்றாக சொல்லப்படுகிறது.

ஷாஹ் வலிய்யூல்லாஹ் அவர்களின் தந்தை அஷ்ஷாஹ் அப்துர் ரஹீம் நாயகம் அவர்களின் நலன் விசாரிக்க அருமை நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் வருகை தந்திருக்கிறார்கள். அச்சந்தர்ப்பத்தில் தங்களது அருள் நிறைந்த இரு முடிகளை வழங்கியிருக்கிறார்கள். அவ்விரண்டும் ஒட்டியே காணப்படும். ஸலவாத் ஓதினால் இரண்டும் பிரிந்து விடும். அவ்விரண்டில் ஒன்றை என்னிடம் தந்தார்கள் என்று அஷ்ஷாஹ் வலிய்யுல்லாஹ் “அன்ஃபாசுல் ஆரிபீன்” என்ற நூலில் பதிவு செய்துள்ளார்கள். 

அஷ்ஷாஹ் அப்துர் ரஹீம் அவர்கள், சுல்தான் நிழாமுத்தீன் அவ்லியாவின் தர்காவுக்குச் சென்றால் முராகபாவில் நீண்ட நேரம் இருப்பார்கள். ஹழ்ரத் நிழாமுத்தீன் அவ்லியாவுடன் உரையாடுவார்கள். சந்தேகங்கள் ஏதாவது இருப்பின் அவற்றுக்கான தெளிவை பெற்றுக்கொள்வார்கள் என்ற தகவலை மௌலவி அஷ்ரப் அலி தானவீ  தனது “பஷன்தீதா வாக்கிஆ” என்ற தனது நூலில் பதிவிடுகிறார்

மௌலானா ஸகரிய்யா ஸாஹிபின் குருவான மௌலானா கலீல் அஹ்மத் தனது கலீபாக்களுடன் அஜ்மீர் ஷரீப் சென்று காஜா கரீப் நவாஸின் தர்காவைத் தரிசித்து வரும் பழக்கம் உள்ளவர்களாக இருந்துள்ளதாகச் சொல்லப்படும் தகவல் “தத்கிரதுல் கலீல்” என்ற நூலில் பதிவாகியுள்ளது. 

மௌலவி ரஷீத் அஹ்மத் கொன்கோயிடம் பைஅத் செய்து கொள்ளுங்கள் என ஷாஹ் அப்துர் ரஹீம் ராய்ப்பூரிக்கு உத்தரவிட்டவர் கல்யரீ ஷரீபில் அடக்கம் செய்யப்பட்ட ஸாபிர் பியா ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களாகும். உத்தரவிடட்டவர் ஹிஜ்ரி 690 லும் உத்தரவிடப்பட்டவர் 1919 லும் இறையடி சேர்ந்தவர்களாகும்.

மௌலவி காசிம் நாநூத்தவி என்பவர் மரணித்த பின்னும் அவரது அரப் கல்லூரிக்கு வந்து சென்றிருக்கிறார். பிறர்களுக்கு உதவியுள்ளார். 

மௌலவி அஷ்ரப் அலி தானவீ, பாகிஸ்தான் நாட்டின் லாகூரில் சமாதி கொண்டுள்ள தாதா கன்ஞ் பக்ஸ் நாயகத்தின் தர்காவுக்கு சென்று அருள் பெற்ற ஒருவராகும். தர்காவில் ஆயிரக்கணக்கான வானவர்கள் வந்து செல்வதை நான் கண்டேன் என்றும் அவர் கூறியிருக்கிறார். பார்க்க: ஆலம் பர்ஸக் - மௌலவி காரி முஹம்மத் தய்யிப்.

இவ்வாறு இந்தியாவில் நல்லடக்கம் செய்யப்பட்ட இறை நேசர்களின் கப்ருகளில் இருந்து அருள் பெற்றதாகக்  குறிப்பிட்ட சம்பங்கள் யாவும் தப்லீக் ஜமாஅத்தின் ஸ்தாபகர்களால் அங்கீகரிக்கப்பட்ட நல்லடியார்களின் சம்பவங்கள் என்பது கவனிக்கத்தக்கதாகும். தப்லீக் ஜமாஅத்தின் ஸ்தாபகர் மௌலவி இல்யாஸ் காந்தலவீ, இரவு நேரங்களில் தனிமையில் மணித்தியாலக்கணக்கில் அஷ்ஷெய்கு அப்துல் குத்தூஸ் நாயகத்தின் தர்காவில் முராகபாவில் இருந்திருக்கிறார். அங்கிருந்து அருள்களைப் பெற்றிருக்கிறார். 

தொடருகம்...........

கட்டுரைகள்

“வஹ்ஹாபிகள்” இந்தக் காலத்தின் “க்வாரிஜ்கள்”

  இப்னு அப்தில் வஹ்ஹாபும் இப்னு தைமிய்யாவும்   இப்னு தைமிய்யா என்ற தனி நபரால் விதைக்கப்பட்ட பொய்யான, பிழையான, மார்க்கத்துக்கு ...