அல்ஹதீதின் பார்வையில் அருள் பொருந்திய பொருட்கள்
உணவின் மூலமாக அருள் பெறுதல்
تسحروا فإن فى السحور بركة
“ஸஹர் செய்து கொள்ளுங்கள். நிச்சயமாக அதில் பரகத் இருக்கிறது.” புகாரி, முஸ்லிம்
عن أنس رضي الله عنه أن رسول الله صلى الله عليه وآله وسلم كان إذا أكل طعاما لعق اصابعه الثلاث قال وقال إذا سقطت لقمة أحدكم فليمط عنها الأذى وليأكلها ولا يدعها للشيطان وأمرنا أن نسلت القصعة قال فإنكم لا تدرون فى أي طعامكم البركة. مسلم وابوداود والترمذي
“நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் உணவு சாப்பிட்டால் தனது மூன்று விரல்களையும் சூப்பிக் கொள்வார்கள். உங்களது உணவு கீழே விழுந்தால் அதனை எடுத்து அதிலுள்ள அசுத்தங்களை நீக்கிவிட்டு மீதத்தை சாப்பிடுங்கள். அதை ஷைத்தானுக்கு கொடுத்து விடாதீர்கள் என்று சொன்னார்கள். இன்னும் உணவுப் பாத்திரத்தில் உணவு மீதமில்லாதவாறு அதிலுள்ள சகலதையும் நன்றாகச் சாப்பிடுமாறும் உத்தரவிட்டார்கள். உங்களது உணவில் எந்தப் பகுதியில் அருள் இருக்கிறதென்று தெரியாது என்றும் சொன்னார்கள்.”
முஸ்லிம், அபூதாவூத்,திர்மிதி
عن ابن عباس رضي الله عنهما أن النبي صلى الله عليه وآله وسلم قال إذا أكل أحدكم طعاما فلا يأكل من أعلى الصحفة ولكن ليأكل من أسفلها فإن البركة تنزل من أعلاها. أحمد وابودود
“உங்களில் யாராவது உணவூ உண்டால் உணவுப் பாத்திரத்தின் மேற் பக்கமாக சாப்பிடாதீர்கள். மாறாக கீழ் பக்கம் இருந்து சாப்பிடுங்கள். ஏனெனில் அருள் அதன் மேற் பக்கமாக இறங்குகிறதென்று ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் நவின்றார்கள்.”
அஹ்மத், அபூதாவூத்
وعن ابن عباس رضي الله تعالى عنهما عن النبي صلى الله عليه وآله وسلم قال البركة تنزل وسط الطعام فكلوا من حافتيه ولا تأكلوا من وسطه. أبوداود والترمذي والنسائي وابن حبان
“உணவின் நடுப் பகுதியில் அருள் இறங்குகிறது. எனவே நடுவில் இருந்து உண்ணாமல் ஓரப் பகுதிகளில் இருந்து உண்ணுங்கள் என்று சொன்னதாகவூம் மற்றுமொறு தகவல் பதிவாகியுள்ளது.”
அபூதாவூத்,திர்மிதி, நசாயி, இப்னு ஹிப்பான்
பேரித்தம் பழத்தின் மூலமாக அருள் பெறுதல்
قال رسول الله صلى الله عليه وآله وسلم إذا أفطر أحدكم فليفطر على تمر فإنه بركة.
أحمد والترمذي وأبوداود وابن ماجة والدارمي
“உங்களில் ஒருவர் நோன்பு திறப்பதாக இருந்தால் அதற்காக ஈச்சம் பழத்தினை உபயோகம் செய்து கொள்ளுங்கள். ஏனெனில் அது அருளாகும்.” அஹ்மத், திர்மிதி, அபூதாவூத், இப்னு மாஜா, தாரமீ
நேரத்தின் மூலமாக அருள் பெறுதல்
عن على رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم اللهم بارك لأمتي فى بكورها. أحمد
“யா அல்லாஹ் எனது உம்மத்திற்கு அதிகாலையில் அருள் புரிவாயாக என்று ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் துஆ செய்துள்ளார்கள்.”
அஹ்மத்
பிரார்த்தனை மூலமாக அருள் பெறுதல்
اللهم بارك لهم فيما رزقتهم. مسلم
“உணவூ வழங்கியவருக்கு அருள் புரிவாயாக என்று ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் பிரார்த்தனை புரிந்துள்ளார்கள்.” முஸ்லிம்
بارك الله لك وبارك عليك وجمع بينكما فى الخير. الدارمي والترمذي
“திருமண தம்பதிகளுக்கு அருள் புரியுமாறு ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் துஆ செய்துள்ளார்கள்.”
திர்மிதி, தாரமீ
மிருகங்களின் மூலமாக அருள் பெறுதல்.
اتخذوا الغنم فإنها بركة. والغنم بركة. صلوا فيها فإنها بركة.
“ஆடு வளருங்கள். நிச்சியமாக அது அருளாகும். ஆட்டுத் தொழுவத்தில் தொழுது கொள்ளுங்கள். ஏனெனில் அது அருளாகும் என்று ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் நவின்றுள்ளார்கள்.”
குர்ஆன் ஓதுவன் மூலமாக அருள் பெறுதல்
قال رسول الله صلى الله عليه وآله وسلم اقرءوا سورة البقرة فإن أخذها بركة. مسلم
“அல் பகரா அத்தியாயத்தினை ஓதுங்கள். அது அருளாகும்.” முஸ்லிம்
அல்குர்ஆன் கூட்டாக ஓதி அருள் பெறுதல்
ما اجتمع قوم فى بيت من بيوت الله تعالى يتلون كاب الله ويتدارسونه بينهم إلا نزلت عليهم السكينة وغشيتهم الرحمة. أبوداؤد
“அல்லாஹ்வின் ஏதாவதொரு வீட்டில் மக்கள் ஒன்றிணைந்து அல்லாஹ்வின் வேதத்தினை ஓதி அது தொடர்பாக பாடங்கள் இடம் பெறும் போது அவர்கள் மீது அமைதி இறங்குகிறது. அருள் அவர்களைச் சூழ்ந்து கொள்கிறது என்று ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் சொன்னார்கள்.” அபூதாவூத்
அல்குர்ஆன் தமாம் வைபவத்தின் மூலமாக அருள் பெறுதல்
عن أنس رضي الله تعالى عنه أنه إذا ختم القرآن جمع أهله ودعا.الدارمي
“நபித் தோழர் அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் குர்ஆனை தமாம் செய்தால் குடும்பத்தினர்களை அழைப்பார். துஆச் செய்வார்.” தாரமீ
عن مجاهد قال كانوا يجتمعون عند ختم القرآن ويقولون إن الرحمة تنزل عند ختم القرآن. أذكار النووي
“அவர்கள் (ஸஹாபாக்கள்) அல்குர்ஆனை ஓதி முடிக்கின்றபோது ஒன்று சேருவார்கள். கத்முல் குர்ஆனின் போது அருள் இறங்குகிறது என்று சொல்வார்கள் என முஜாஹித் ரஹ்மதுல்லாஹி அலைஹி கூறுகிறார்கள்.” அல்அத்கார்
عن الحكم بن عتيبة قال أرسل إلي مجاهد وعبدة بن أبي لبانة فقالا إنا أرسلنا إليك لأننا أردنا أن نختم القرآن والدعاء مستجاب عند ختم القرآن.أبوداؤد
“கத்முல் குர்ஆன் நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு ஹகம் பின் உதைபா (என்ற மிகப் பெரிய தாபிஈ) அவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டிருக்கிறது. துஆ அந்நேரத்தில் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.”
அபூதாவூத்
கத்தம் ஓதலாமா?
“கத்ம்” என்ற வார்த்தை காலப்போக்கில் கத்தம் என்றாகிவிட்டது. எனவே கத்தம் ஓதுவதற்கு ஆதாரம் இருக்கிறதா? என்று கேட்பவர்களுக்கு இதனை காண்பித்தாலும் அவர்கள் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை. கத்தம் ஸஹாபாக்கள் ஓதியூள்ளார்கள். தாபிஊன்கள் ஓதியுள்ளார்கள். அதனால் நாமும் ஓதுகின்றொம்.
கத்முல் குர்ஆன் நிகழ்வு ஸஹாபாக்கள் காலத்தில் இடம் பெற்றுள்ளது. கத்முல் குர்ஆன் நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அவர்கள் காலத்தில் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.
கத்முல் குர்ஆன் நிகழ்வில் விசேட துஆ பிரார்த்தனை இடம் பெற்றிருக்கிறது. உணவூ பரிமாறப்பட்டிருக்கிறது. அதனால் நாமும் கத்முல் குர்ஆன் நிகழ்வினை ஏற்பாடு செய்கிறொம். அதற்காக பிறர்களை அழைக்கின்றொம். விசேட துஆ பிரார்த்தனையில் ஈடுபடுகின்றோம். உணவளிக்கின்றொம். இது அஹ்லுஸ் ஸுன்னத் வல்ஜமாஅத்தினரின் நடை முறைகளில் ஒன்றாகும்.
தொடரும்....







கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக