வியாழன், 14 மார்ச், 2019

ஹிதாயத் - நேர்வழி காட்டுவது அல்லாஹ்வா? அண்ணலாரா?


ஹிதாயத் - நேர்வழி காட்டுவது அல்லாஹ்வா? அண்ணலாரா?

அல்லாஹ்வின் பேரருளான பெருமானார் முஜ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் பஷரிய்யத்தினால் வடிவமைக்கபட்ட நூராகும்.. அதாவது நேர்வழிகாட்டியாக வந்துதித்த   மனிதராகும். இதனடிப்படையில் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களை ஹாதின் நேர்வழியிற் செலுத்துபவர் என்று பெயர் சூட்டி நபியவர்களை அழைக்கமுடியுமா? அல்லது முடியாதா?.
அல் குர்ஆனில் ஏராளமான இறைவசனங்கள் அல்லாஹ் ஒருவன்தான் அவன் நாடுபவருக்கு ஹிதாயத் நேர்வழி காட்டுபவன் என்று சொல்கிறது. அதற்கான ஒரு சில வசனங்கள் பின்வருமாறு.
1- எவரை அல்லாஹ் வழிகெடுக்க நாடுகின்றானோ அவரை வழி தவறச் செய்கின்றான். இன்னும் எவரை அவன் நேர்வழிகாட்ட நாடுகின்றானோ அவரை நேரான பாதையின் மீது ஆக்குகின்றான். (சூரத்துல் அன்ஆம் வசனம் 39.)
2- எவரை அல்லாஹ் வழி கெடுத்து விடுகின்றானோ அவரை நேர்வழியிற் சேர்ப்பவர் யாரும் இல்லை. (சூரத்துல் அஃராப் வசனம் 186.)
3- உங்களுடைய இணையர்களில் (விக்ரகங்களில்) சத்தியத்தின்பால் நேர்வழி காட்டுபவர் எவரேனும் இருக்கிறார்களா? என்று (நபியே) நீர் கூறுவீராக. அல்லாஹ் (தான்) உண்மையின் பால் வழி கட்டுகிறான். (சூரத்து யூனுஸ் வசனம் 35.)
4- இன்னும் நிச்சயமாக அல்லாஹ் அவன் நாடுகிறவர்களை நேர்வழியில் சேர்ப்பான்.  (சூரத்துல் ஹஜ் வசனம் 16.)
5- நிச்சயமாக நீர் விரும்பியவரை(யெல்லாம் உம்மால்) நேர்வழியில் செலுத்திவிட முடியாது. எனினும் அல்லாஹ் தான் நாடுகிறவரை நேர்வழியில் சேர்ப்பான். (சூரத்துல் கஸஸ் வசனம் 56.)
6- எங்களுக்கு நேர்வழியினைக் காட்டுவாயாக. (சூரத்துல் பாத்திஹா.வசனம் 6)
இவ்விறைவசனங்கள் யாவும் அல்லாஹ் ஒருவன்தான் நேர்வழி காட்டுபவன். அவனல்லாது இன்னுமொருவரால் நேர்வழி காட்டிட முடியாதென்று மட்டும் சொல்லி முடித்துவிடாது உங்களில் நேர்வழி காட்டுபவர் எவராவது இருக்கின்றார்களா? என்றும் கேட்கிறது. அத்துடன் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி  வசல்லம் அவர்களுக்கும் அல்லாஹ்தான் நேர்வழி காட்டியிருக்கின்றான் என்றும் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் விரும்பும் ஒருவருக்குக்கூட அவர்களால் நேர்வழியிற் செலுத்திவைக்க முடியாது என்றும் இவ்வசனங்கள் கூறிகொண்டிருக்கின்றன.
இவை தவிர யா அல்லாஹ் எனக்கும் நேர்வழி காட்டுவாயாக என்று அல்லாஹ்விடம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களும்கூட பிரார்த்தித்தார்கள். எனவே ஹாதின் நேர்வழி காட்டுபவன் என்ற பெயர் அல்லாஹ் ஒருவனுக்கே சொந்தமானது என்பதனை இவ்விறை வசனங்கள் விவரமாக விளக்கிவிட்டன. இதனடிப்படையில் நூரி (ஹிதாயத்தி) னால் வடிவமைக்கபட்ட வான்மறை போற்றும் வள்ளல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களுக்குக்கூட ஹாதின் நேர்வழி காட்டுபவர் என்ற பெயரைச் சூட்டக்கூடாது என்பது சந்தேகத்திற்கிடமின்றி சிறப்பாகப் புரிந்துவிட்டது.
ஹிதாயத் - நேர்வழி காட்டுவது அல்லாஹ்வும் அண்ணலாரும் ஆகும்.

அல்லாஹ்வின் பேரருளான பெருமானார் முஜ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் முதல், அல்லாஹ் விரும்புகின்ற சகலருக்கும் அவன் ஒருவனே யதார்த்தத்தில் நேர்வழி காட்டுபவனாக இருந்தாலும்கூட ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களுக்கு வழங்கப்பட்ட நேர்வழிக்கும் எங்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்ற நேர்வழிக்குமிடையில் சமநிலைப்படுத்த முடியாதளவுக்கு  வேறுபாடுகள் இருக்கின்றன. இதனை ஓரளவுக்காவது விளங்கிக்கொள்ள வேண்டுமானால் பின்வரும் கருத்துக்களைக் கவனியுங்கள்.
1- இன்னும் மூசாவுடைய சமூகத்தாரில் இருந்து ஒரு வர்க்கத்தார் இருக்கிறார்கள். உண்மையைக்கொண்டு அவர்கள் நேர்வழி காட்டுகிறார்கள். (சூரத்துல் அஃராப் வசனம் 159.)
2- இன்னும் நாம் படைத்தவர்களில் ஒரு கூட்டத்தார் இருக்கிறார்கள். சத்தியத்தைக் கொண்டு (ஜனங்களுக்கு) நேர்வழி காட்டுகிறார்கள். (சூரத்துல் அராப் வசனம் 181.)
3- அது, நிச்சயமாக அவர்களிடம் அவர்களுடைய ரசூல்மார்கள் அத்தாட்சிகளைக் கொண்டு வருகிறவர்களாக இருந்தார்கள். அப்போது மனிதரா எங்களுக்கு நேர்வழி காட்டுவார்? என்று அவர்கள் கூறி அவர்கள் நிராகரித்து பின்வாங்கி விட்டார்கள். (சூரத்துத் தகாபுன் வசனம் 6)
4- இன்னும் எனது சமூகத்தினரே என்னைப் பின்பற்றுங்கள். நேரிய வழியை உங்களுக்கு நான் காண்பிக்கின்றேன் என்று விசுவாசங் கொண்டோரே என்று விழித்து அவர் கூறினார். (சூரத்து غافر  காபிர்  வசனம் 38.)
5- நமது கட்டளையைக்கொண்டு நேர்வழி காட்டுகின்ற தலைவர்களை அவர்களில் இருந்து நாம் ஏற்படுத்தினோம். (சூரத்துஸ் சஜ்தா வசனம் 24)
6- இன்னும் உமது ரப்பின்பால் உமக்கு நேர்வழி கண்பிக்கின்றேன். (சூரத்துன் நாஸிஆத். வசனம் 19.)
7-இன்னும் நிச்சயமாக நீர் நேர்வழியின் பக்கம் வழி காட்டுகிறீர். (சூரத்துஸ் ஷூரா வசனம் 52)
8- ஒவ்வொரு சமூகத்தாருக்கும் வழிகாட்டி இருக்கிறார். (சூரத்துர் ரஅத் வசனம் 7) 
இவ்வசனங்களெல்லாம் நேர்வழி காட்டுவோர் பலர் இருக்கின்றார்கள் என்று கூறிக்கொண்டிருக்கின்றன. ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களைப் பார்த்து நீங்களும்தான் நேர்வழி காட்டுகின்றீர்கள் என்றும் கூறுகிறது. உங்களுக்கு என்னின் மூலமாகத்தான் அல்லாஹ் நேர்வழி காட்டினான் என்று ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களே தோழர்களிடம் கூறியும் இருக்கின்றார்கள். (புகாரி).
இந்த உம்மத்தின் நேர்வழி காட்டி என்று ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களை நபித்தோழர் ஹழ்ரத் ஹஸ்ஸான் பின் தாபித் ரலியல்லாஹு அன்ஹு புகழ்ந்துள்ளார்கள். (இப்னு ஸஃத்.)
எனக்கு ஐந்து பெயர்கள் இருக்கின்றன. அதில் ஒன்று மாஹி என்பதாகும். அதாவது என் மூலமாக அல்லாஹ் குஃப்ரினை அழிக்கின்றான் (புகாரி) என்றும் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் நவின்றுள்ளார்கள். அதாவது நான் ஹாதியாக இருக்கின்றேன் என்று சொல்கின்றார்கள்.
இதனடிப்படையில் அல்லாஹ் ஒருவனையே ஹாதின் என்று சொல்லமுடியும். அவனல்லாத இன்னுமொருவரை அவனுக்குச் சொந்தமான ஹாதின் என்ற பெயர் கொண்டு அழைக்க முடியாது. அவ்வாறு அழைத்தால் அது ஷிர்க்காகும் என்று சொல்வதா? அல்லது அண்ணலார்  அவர்களையும் ஹாதின் என்று சொல்லமுடியும். அதனால் ஷிர்க் ஏற்பட்டுவிடப்போவதில்லை என்று சொல்வதா?
அல்லாஹ்வை ஹாதின் என்ற நாமத்தினால் அவனை அழைப்பதுபோல் அண்ணலாரையும் ஹாதின் என்ற நாமத்தினால் அவர்களை அழைக்க முடியும் என்பதே அஹ்லுஸ் சுன்னத் வல்ஜமாஅத்தினர்களான எங்களின் கருத்தாகும். இதில் இருவரின் பெயர்தான் ஒன்றே தவிர அந்தப் பெயர் தாங்கியிருக்கும் தன்மைகளை ஒன்றென்று நாம் சொல்லவில்லை. இதனை நாங்கள் தாத்தி, அதாஈ என்றும் ஹகீகி, மஜாசி என்றும் சொல்கின்றோம். தவிர இருவரிடமும் ஒரே நிலையான தன்மைகள் இருக்கிறதென்று சொல்லவில்லை. அவ்வாறு சொல்வதை வண்மையாக கண்டிக்கின்றோம். அதனை முற்றிலுமாக நிராகரிக்கின்றோம்.
ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் மனிதராகும். மனிதராக இருக்கும் ஒருவர் ஹாதியாக இருக்கமுடியாது என்ற காரணத்திற்காக அவரை நபியாக ஏற்றுக்கொள்ள மறுத்தவர்கள் காபிர்களாகவும் முஷ்ரிக்குகளாகவும் ஆனார்கள் என்றால் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் மனிதராகும். மனிதராக இருக்கும் ஒருவர் ஹாதியாக இருக்கலாம் என்றுகூறி  அவரை நபியாக ரசூலாக விசுவாசித்துக்கொண்ட பின்னர் அவரை நாம் ஹாதின் என்று பெயர் கூறி அவரை நாம் அழைக்கமாட்டோம் என்று சொல்பவர்களுக்குப் பெயர்தான் என்ன? முனாபிக்குகள்???.
 தொடரும்..........

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கட்டுரைகள்

“வஹ்ஹாபிகள்” இந்தக் காலத்தின் “க்வாரிஜ்கள்”

  இப்னு அப்தில் வஹ்ஹாபும் இப்னு தைமிய்யாவும்   இப்னு தைமிய்யா என்ற தனி நபரால் விதைக்கப்பட்ட பொய்யான, பிழையான, மார்க்கத்துக்கு ...