திங்கள், 18 நவம்பர், 2019

12 றபீஉல் அவ்வல், மன்னர் மஹ்மூத் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸஹ்பிஹி வஸல்லம் அவர்கள் மண்ணில் மலர்ந்த நாளா? மறைந்த நாளா?

12 றபீஉல் அவ்வல்,


மன்னர் மஹ்மூத் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸஹ்பிஹி வஸல்லம் அவர்கள் மண்ணில் மலர்ந்த நாளா? மறைந்த நாளா?


بسم الله الرحمن الرحيم

الحمد لله الذي جعل محمدا رحمة للعالمين وأغاث برحمته عموم العالمين والصلاة والسلام على سيدنا محمد صاحب الكمال خير من تضرب له أكباد المطي وتشد إليه الرحال وعلى آله وصحبه وآل 

அல்லாஹ்வின் பேரருளான பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸஹ்பிஹி வஸல்லம் அவர்கள், யானை வருடம், றபீஉல் அவ்வல் மாதம், 12 ஆம் நாள்  திங்கட்கிழமை அதிகாலை நேரத்தில் மக்கத்து மண்ணில் மனித கோலத்தில் மலர்ந்தார்கள். இதுவே மிகச் சரியான செய்தியாகும்.

عن عفان عن سعيد بن ميناء عن جابر وابن عباس رضي الله عنهما قالا ولد رسول الله صلى الله عليه وآله وسلم عام الفيل يوم الإثنين الثاني عشر من شهر ربيع الأول

நபித் தோழர்களான ஹழ்ரத் இப்னு அப்பாஸ், ஹழ்ரத் ஜாபிர் ரழியல்லாஹு அன்ஹுமா ஆகிய இருவரும் அறிவிக்கின்றார்கள்: அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸஹ்பிஹி வஸல்லம் அவர்கள் திங்கட்கிழமை யானை வருடம் றபீஉல் அவ்வல் மாதம் 12 ஆவது தினத்தில் மலந்தார்கள். நூல்: முஸன்னஃப் இப்னி ஷைபா, ஸீரத் இப்னி கஸீர், புலூகுல் அமானி, அல்பிதாயா வந்நிஹாயா

ولد رسول الله صلى الله عليه وآله وسلم يوم الإثنين عام الفيل لإثنتي عشرة ليلة من شهر ربيع الأول

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸஹ்பிஹி வஸல்லம் அவர்கள் திங்கட்கிழமை யானை வருடம் றபீஉல் அவ்வல் மாதம் 12 ஆவது இரவில் மலந்தார்கள். நூல்: தாரீக் தபரி 

ولدرسول الله صلى الله عليه وآله وسلم عام الفيل لإثنتي عشرة ليلة خلت من ربيع الأول

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸஹ்பிஹி வஸல்லம் அவர்கள் திங்கட்கிழமை யானை வருடம் றபீஉல் அவ்வல் மாதம் 12 ஆவது இரவில் மலந்தார்கள். நூல்: தாரீக் இப்னு கல்தூன்

ولد رسول الله صلى الله عليه وآله وسلم يوم الإثنين لإثنتي عشرة ليلة من شهر ربيع الأول عام الفيل

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸஹ்பிஹி வஸல்லம் அவர்கள் திங்கட்கிழமை யானை வருடம் றபீஉல் அவ்வல் மாதம் 12 ஆவது இரவில் மலந்தார்கள். நூல்: அஸ்ஸீரா அந்நபவிய்யா இப்னு ஹிஷாம்

لأنه ولد بعد خمسين يوما من الفيل وبعد موت أبيه فى يوم الإثنين الثاني عشر من شهر ربيع الأول

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸஹ்பிஹி வஸல்லம் அவர்கள் யானை வருடத்தின் ஐம்பது நாட்களின் பின்னர் அவர்கள் தந்தையின் மரணத்தின் பின்னர் றபீஉல் அவ்வல் மாதம் 12 ஆவது நாளில் மலந்தார்கள். நூல்: இஃலாமுந் நுபுவ்வதி

இவ்வாறு, நமது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸஹ்பிஹி வஸல்லம் அவர்கள் றபீஉல் அவ்வல் மாதம் 12 ஆம் நாளில் மண்ணில் மலர்ந்தார்கள் என்பதை ஏற்றுக் கொள்ளும் அறிஞர் பெருமக்களின் பெயர் பட்டியல்  நீண்டு செல்கிறது. அந்த வகையில்,

அல்லாமா இப்னு ஜவ்ஸி அவர்கள் - நூல்:  அல்-வஃபா, பயானு மீலாதிந் நபிய்யி
அல்லாமா முஹம்மத் பின் முஹம்மத் அவர்கள் நூல்: உயூனுல் அஸர்
அல்லாமா முஹம்மத் ரஸா அவர்கள் நூல்: முஹம்மத் ரசூலில்லாஹ்
அல்லாமா இப்னு கஸீர் அவர்கள் ஸீரத் இப்னு கஸீர், அல் பிதாயா வந்நிஹாயா
அல்லாமா ஹாகிம் அவர்கள் நூல்: முஸ்தத்ரக்
அல்லாமா  முஹம்மத் அபூ ஸஹ்ரா அவர்கள் காதிமுந் நபி
அல்லாமா அப்துல் ஹக் முஹத்திஸ் திஹ்லவி அவர்கள் மா ஸபத மினஸ் ஸுன்னதி
அல்லாமா முல்லா அலி காரி அவர்கள் அல்மவ்ரிதுர் ரவி
அல்லாமா யூசுப் நப்ஹானி ஹுஜ்ஜதுல்லாஹி அலல் ஆலமீன், அன்வாருல் முஹம்மதிய்யா
அல்லாமா கஸ்தலானி அவர்கள் நூல்: மவாஹிபுல் லதுந்நிய்யா
அல்லாமா முஹம்மத் ஷஃபீஉ ஸீரத் காதிமுல் அந்பியாயி
அல்லாமா முஹம்மத் ஸப்பான் அவர்கள் நூல்: நூருல் அப்ஸார்
நவாப் ஸித்தீக் ஹஸன் பூபாலி  – நூல்: அஷ்ஷமாயிமுல் அந்பரியா
இப்னு அப்தில் வஹ்ஹாப் அந்நஜ்தி நூல்: முக்தஸர் ஸீரதுர் ரஸூல்

ஆகியோர், நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸஹ்பிஹி வஸல்லம் அவர்கள் றபீஉல் அவ்வல் மாதம் 12 ஆம் நாளில் மண்ணில் மலர்ந்தார்கள் என்பதை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டுள்ளனர்.

அந்தவகையில், அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸஹ்பிஹி வஸல்லம் அவர்கள் திங்கட்கிழமை யானை வருடம் றபீஉல் அவ்வல் மாதம் 12 ஆவது இரவில் மலந்தார்கள் என்பதை தேவ்பந்த் உலமாக்கள் ஏற்றுள்ளார்கள். அவ்வாறே கைரு முகல்லிதீன்களின் தலைவர்  ஜனாப் நவாப் ஸித்தீக் ஹஸன் பூபாலி இக்கருத்தை ஏற்றுள்ளார். ஜமாஅத்தே இஸ்லாமி இயக்கத் தலைவர் ஜனாப் மெளதூதி ஏற்றிருக்கிறார். வஹாப்வாதத் தலைவர் இப்னு அப்தில் வஹ்ஹாப் ஏற்றிருக்கிறார். ஹதீஸில் இருந்தால் மட்டுமே நாம் ஏற்றுக் கொள்வோம் என்று சொல்வர்களுக்கு ஹதீஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதுவொரு ஸஹீஹான ஹதீஸாகும்.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸஹ்பிஹி வஸல்லம் அவர்கள் திங்கட்கிழமை யானை வருடம் றபீஉல் அவ்வல் மாதம் 12 ஆவது இரவில் மலந்தார்கள் என்பதே அதேக அறிஞர்களின் கருத்தாக இருக்கிறது. நூல்: அஸ்ஸீரா அல்ஹலபிய்யா, மவாஹிபுல் லதுந்நிய்யா, அல்ஃபத்ஹுர் ரப்பானி

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸஹ்பிஹி வஸல்லம் அவர்கள் திங்கட்கிழமை யானை வருடம் றபீஉல் அவ்வல் மாதம் 12 ஆவது இரவில் மலந்தார்கள் என்னும் கருத்தின் அடிப்படையில் புண்ணிய நகரவாசிகளான மக்கத்து மக்களும் மதீனத்து மக்களும், மன்னர் மஹ்மூத் மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸஹ்பிஹி வஸல்லம் அவர்கள், மண்ணில் மலர்ந்த நேரத்தில் மலர்ந்த இடத்திற்குச் சென்று அருள் பெற்றுக் கொள்ளும் வழமையுள்ளவர்களாக இருந்துள்ளனர். நூல்: மவாஹிபுல் லதுந்நிய்யா, அஸ்ஸீரா அல்ஹலபிய்யா, மாஸபத மினஸ் ஸுன்னதி, மதாரிஜுன் நுபுவ்வதி

وهذا هو المشهور عند الجمهور وهو الذي عليه العمل وبالغ ابن الجوزي وابن الجزاز فنقلا فيه الإجماع

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸஹ்பிஹி வஸல்லம் அவர்கள் றபீஉல் அவ்வல் மாதம் 12 ஆவது இரவில் மலந்தார்கள் என்பதே பெரும்பான்மை அறிஞர்களிடம் பிரபலமான தகவலாகும். இதுதான் நடைமுறையில் இருக்கிறது. இப்னு ஜவ்ஸி, இப்னுல் ஜஸ்ஸாஸ் ஆகிய இருவரும் இதுவொரு இஜ்மாவான செய்தியாகும் என்று சொல்கிறார்கள். நூல்: அஸ்ஸீரா அந்நபவிய்யா, மவாஹிபுல் லதுந்நிய்யா, மதாரிஜுன் நுபுவ்வதி, மீலாதுந் நபி, உயூனுல் அஸர், மஆரிஜுந் நுபுவ்வதி, காதமுந் நபிய்யீன், தலாயிலுந் நுபுவ்வதி, மாஸபத மினஸ் ஸுன்னதி

12 றபீஉல் அவ்வல், மண்ணை விட்டும் மறைந்த நாளல்ல

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸஹ்பிஹி வஸல்லம் அவர்கள் றபீஉல் அவ்வல் மாதம் 12 ஆவது தினத்தில் மண்ணை விட்டும் மறைந்து, மறுவுலக வாழ்க்கையைத் தெரிவு செய்து, மண்ணறை சென்ற நாள் ஆகும் என்றதொரு தகவல் பாமரர்கள் மத்தியில் பரவலாகப் பேசப்படுவதைக் காண முடிகிறது. இக்கருத்து, மீலாத் நிகழ்வை நிராகரிக்கும் நண்பர்கள் மத்தியில் முக்கிய கருத்தாக காணப்படுகிறது. இதற்கு எந்தவொரு ஸஹீஹான ஹதீஸும் கிடையவே கிடையாது.

நாம், ஸஹீஹான ஹதீஸ்களை மட்டுமே ஏற்றுக் கொள்வோமென்று சொல்வோர் இதற்கான ஸஹீஹான ஹதீஸைக் காண்பிக்கட்டும் பார்ப்போம். எனினும் இக்கருத்திற்கு, அல்பிதாயா வந்நிஹாயா என்னும் நூலில், நபித் தோழர் ஸெய்யிதுனா இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அறிவித்ததாகப் பதிவாகியுள்ள தகவலை மேற்கோள் காட்டுகின்றனர். உண்மையில் அதுவொரு ஏற்றுக் கொள்ளத் தகுந்த தகவல் அல்ல.

அல்லாஹ்வின் பேரருளான பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸஹ்பிஹி வஸல்லம் அவர்கள் திங்கட்கிழமை இவ்வுலக மண்ணை விட்டும் மறைந்தார்கள் என்று, ஹழ்ரத் ஸித்தீக்குல் அக்பர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்ததாக புகாரியில் பதிவாகியுள்ளதென்பது உண்மைதான். ஆனாலும் அந்த நாள் றபீஉல் அவ்வல் மாதத்தின் 12 ஆம் நாள் என்பதற்கு எவ்வித சான்றும் அதில் இல்லை. அப்படி இருக்குமாக இருந்தால் இது விடயத்தில் கருத்து முரண்பாடு ஏற்பட்டிருக்காது.

அல்லாஹ்வின் தூதர் அருமை நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸஹ்பிஹி வஸல்லம் அவர்கள் தங்களது வாழ்வில் ஒரே ஒரு முறைதான் ஹஜ் கடமையை நிறைவேற்றியுள்ளார்கள். அந்த ஹஜ்ஜுக்கு, ‘ஹஜ்ஜதுல் வதாஃ பிரியாவிடைக்கான ஹஜ்என்று சொல்லப்படுகிறது. இது ஹிஜ்ரி 10 ஆம் ஆண்டில் நிகழ்ந்துள்ளது. அந்த ஹஜ்ஜின் அன்றைய அறபாவுடைய தினம் வெள்ளிக் கிழமை. 

ஹிஜ்ரி 10 ஆம் ஆண்டு துல் ஹஜ் மாதம் அறபாவுடைய தினமான வெள்ளிக் கிழமையில் இருந்து றபீஉல் அவ்வல் மாதம் வரை மொத்தம் மூன்று மாதங்களாகும். இம்மூன்று மாதங்களையும் 29 நாட்கள் கொண்டதாக வைத்துக் கொள்ளுங்கள். அல்லது 30 நாட்கள் கொண்டதாக எடுத்துக் கொள்ளுங்கள். அல்லது ஒரு மாதத்தை 29 ஆகவும் அடுத்த மாதத்தை 30 ஆகவும் கணக்கெடுத்துப் பாருங்கள். அல்லது இரு மாதங்களை 30 ஆகவும் ஒரு மாதத்தை 29 ஆகவும் அல்லது இரு மாதங்களை 29 ஆகவும் ஒரு மாதத்தை 30 ஆகவும் வைத்துக் கணக்கிட்டுப் பாருங்கள். இவ்வாறு எவ்வகையில் கணக்கெடுத்தாலும்  றபீஉல் அவ்வல் மாதத்தின் 12 ஆம் நாள் திங்கட்கிழமையாக வரவில்லையென்று வரலாற்றாசிரியர்கள் விளக்குகிறார்கள்.

றபீஉல் அவ்வல் மாதம் 12 ஆம் நாள் திங்கட்கிழமை என்பது பிழையான கணக்காகும். நூல்: நஷ்ருத் தீபி - மௌலவி அஷ்ரஃப் அலி தானவி

மெளலவி அஷ்ரப் அலி தானவி சொல்வதுபோலவே, மெளலானா ஸகரிய்யா ஸாஹிபும் ஃபழாயிலுல் அஃமால்என்னும் நூலில் குறிப்பிடுகிறார்.

றபீஉல் அவ்வல் மாதம் 12 ஆம் நாள் திங்கட்கிழமை என்ற கணக்கை எவ்விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாதென்றுதான் மெளலான அப்துல் ஹை லக்னவி அவர்களும் கூறுகிறார்.

இமாம்களான ஸுஹைலி, சம்ஹூதி, தஹபி, இப்னு கதீர், ஹலபி, யாபியீ, இப்னு ரஜப் ஹன்பலி ஆகியோரும் இதே நிலைப்பாட்டில் காணப்படுகிறார்கள். இதுவே உண்மையான கணிப்பீடாகும்.

அதாவது: ரபீஉல் அவ்வல் மாதம் 12 ஆம் நாள் திங்கட்கிழமை அதிகாலைப் பொழுதில் பிறந்த, அல்லாஹ்வின் பேரருளான பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸஹ்பிஹி வஸல்லம் அவர்கள், றபீஉல் அவ்வல் மாதம் 2 ஆம் நாள் திங்கட்கிழமை மண்ணை விட்டும் மறைந்தார்கள் என்பதாகும்.

ஹாபிழ் இப்னு ஹஜர் அஸ்கலானி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் சொல்கிறார்கள்:

مات في ثاني شهرربيع الأول فتغيرت فصارت ثاني عشر واستمر الوهم بذلك يتبع بعضهم بعضا من غير تأمل
றபீஉல் அவ்வல் மாதம் 2 ஆம் நாள் வபாத்தானார்கள் என்றுதான் சொல்லப்பட்டது. (இதுதான் உண்மையும் கூட) ثانى شهر ربيع الأول   என்று எழுதப்பட்டிருந்த வாசகம், ثانى عشر ربيع الأول   என்றாகிவிட்டது. பின்னர் சிந்திக்காது மாற்றப்பட்டதையே ஒருவர் பின் ஒருவராக பின்பற்றிக் கொண்டனர். நூல்: ஃபத்ஹுல் பாரி, அவ்ஜஸுல் மஸாலிக் அலா முஅத்தா மாலிக், ஸகீரதுல் உக்பா ஷரஹ் ஸுனன் நசாயீ, மவாஹிபுல் லதுன்னிய்யா, உம்ததுல் காரி

ஹிஜ்ரி 11 றபீஉல் அவ்வல் மாதம் பிறை 2 திங்கட்கிழமை என்று எழுதப்பட்டிருந்த வாசகத்தைச் சிலர் பிறை 12 என்று தவறுதலாக எழுதி விட்டனர். இந்தத் தவறுதான் இன்று வரை பேசப்படுவதைக் காண முடிகிறது. எனவே, பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸஹ்பிஹி வஸல்லம் அவர்கள் மண்ணில் மலர்ந்ததும் மறைந்ததும் ஒரே மாதமாகவும் ஒரே நாளாகவும் இருந்த போதிலும் இரு நிகழ்வுகளின் திகதி ஒன்றல்ல. அதாவது றபீஉல் அவ்வல் மாதம் பிறை 12 திங்கட்கிழமை மண்ணில் மலர்ந்துள்ளார்கள். ரபீஉல் அவ்வல் மாதம் பிறை 02 திங்கட்கிழமை மண்ணை விட்டும் மறைந்துள்ளார்கள்.

பெருமானார் பிறந்த நாள்  பெரு நாளாகுமா?

وَمَا أَرْسَلْنَاكَ إِلا رَحْمَةً لِلْعَالَمِينَ

மேலும், அகிலத்தாருக்கு ரஹ்மத்தாக அல்லாமல், உங்களை நாம் அனுப்பவில்லை.சூரத்துல் அன்பியா வசனம் 107

நபிகள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸஹ்பிஹி வஸல்லம் அவர்கள் அகிலங்கள் அனைத்துக்கும் அருளாக உள்ளார்களென்று, அகிலங்கள் அனைத்தின் இரட்சகனான அல்லாஹ் இவ்வாயத்தில் அறிவித்துக் கொண்டிருக்கின்றான். அகிலம்என்றால், அல்லாஹ் தவிரவுள்ள அனைத்துமாகும். அந்த வகையில் அல்லாஹ்வைத் தவிரவுள்ள அனைத்துலகிலுள்ள அனைத்து வஸ்துக்களுக்கும் நபியவர்கள் அருளாக  உள்ளார்கள்.

அகிலத்தாருக்கு அருளாகவே தவிர உங்களை நாம் அனுப்பவில்லைஎன்று அல்லாஹ் கூறியுள்ளான். தங்களுக்கு இந்த அருளில் இருந்து ஏதேனும் கிடைத்ததா? என்பதாக ஹழ்ரத் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸஹ்பிஹி வஸல்லம் அவர்கள் வினவினார்கள். அதற்கவர் ஆம், காரியத்தின் முடிவு எப்படியோ என்று பயந்து கொண்டே இருந்தேன். தங்களின் பொருட்டால் நான் அச்சம் தீர்ந்தேன், ஏனெனில், தங்களுக்கு அருளப்பட்ட வேதத்தில் என்னைக் குறித்து அல்லாஹுதஆலா சக்தியுள்ளவர், அர்ஷை உடையவனிடத்தில் இருப்பவர், கீழ்படிபவர், விடயத்தில் நம்பிக்கைக்குரியவர்என்பதாகக் கூறிப் புகழ்ந்துள்ளான்என்று கூறினார்கள். நூல்: தப்ஸீருல் ஹமீத்

இன்னும் அருமை நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸஹ்பிஹி வஸல்லம் அவர்கள், அகிலங்கள் அனைத்திற்கும் அருளாக  உள்ளார்கள் என்ற கூற்றின் அடிப்படையில், அவர்கள் பிறப்பதற்கு முன் அருளாக இருந்துள்ளார்கள். பிறந்த பின் அருளாக இருந்துள்ளார்கள். அவ்வாறே மறைந்த பின்னும் அருளாகவே உள்ளார்கள். அவர்கள் என்றென்றும் அருளாகவே உள்ளார்கள்.

حَيَاتِي خَيْرٌ لَكُمْ  تُحْدِثُونَ وَيَحْدُثُ لَكُمْ  وَوَفَاتِي خَيْرٌ لَكُمُ  تُعْرَضُ عَلَيَّ أَعْمَالُكُمْ فَمَا كَانَ مِنْ حَسَنٍ حَمِدْتُ اللَّهَ  وَمَا كَانَ مِنْ سَيِّءٍ اسْتَغْفَرْتُ اللَّهَ لَكُمْ

 “எனது வாழ்வும் உங்களுக்கு அருளாகயிருக்கிறது. எனது மரணமும் உங்களுக்கு அருளாகயிருக்கிறது”  என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸஹ்பிஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள். அப்பொழுது ஸஹாபாக்கள் தங்களது வாழ்வில் இது எங்களுக்கு அருளாக இருக்கிறது. தங்களது மரணத்தால் எங்களுக்கு நன்மையாக இருப்பது எது?” என்பதாக வினவினர். அதற்கு, நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸஹ்பிஹி வஸல்லம் அவர்கள் உங்களது கிரியைகள் ஒவ்வொரு வியாழன், திங்கள் இரவுகளில் எனக்குக் காண்பிக்கப்படும். நன்மையாக இருக்கிற காரியங்களுக்கு அல்லாஹுதஆலாவைப் புகழ்வேன். தீமையாக இருக்கிற காரியங்களுக்கு உங்களுக்காக அல்லாஹ்தஆலாவிடத்தில் பிழை பொறுக்கத் தேடுவேன்என்றார்கள். நூல்: பஸ்ஸார்.

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களின் வரிசைப் பட்டியல் நல்லதென்கிறார் ஹாபிழ் அல்- இராகி. நூல்: தர்ஹுத் தஸ்ரீப்

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களின் வரிசைப் பட்டியல் ஸஹீஹானதாகுமென்று இமாம்களான ஹைதமீ, கஸ்தலானி, சுயூத்தி, அலிய்யுல் காரி, குஃபாஜீ ஆகியோரும் கூறியுள்ளார்கள். ஆகவே, நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸஹ்பிஹி வஸல்லம் அவர்கள்  இம்மையிலும் மறுமையிலும் அருளாக இருக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லலை.

إذا أراد الله تعالى رحمةَ أمةٍ قبض نبيَّها قبلها فجعله لها فَرَطًا وسلفًا بين يديها

வல்லமையும் மாண்புமுடைய அல்லாஹ் தன் அடியார்களில் ஒரு சமூகத்தாருக்கு அருள் புரிய நாடினால் அதற்கு முன்னரே அதன் தூதரை கைப்பற்றி அவரை அந்த சமுதாயத்தாருக்கு முன்பே சென்று (தக்க ஏற்பாடுகளுடன்) காத்திருக்கச் செய்கிறான் என்று கருனைக் கடல் காத்தமுன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸஹ்பிஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள். நூல்: முஸ்லிம்

ஆகவே, அருமை நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸஹ்பிஹி வஸல்லம் அவர்கள் மண்ணில் மலர்ந்தது மட்டுமல்ல அருள், மண்ணை விட்டும் மறைந்திருப்பதும் அருள்தான் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். அவ்வாறு புரிந்து கொண்டோரைப் பார்த்து, நபியே நாயகமே இவ்வாறு சொல்லுங்கள் என்று அல்லாஹ்  கூறுகின்றான்.

قُلْ بِفَضْلِ اللَّهِ وَبِرَحْمَتِهِ فَبِذَٰلِكَ فَلْيَفْرَحُوا هُوَ خَيْرٌ مِّمَّا يَجْمَعُونَ

அல்லாஹ்வின் கிருபையாலும், அவனது அருளாலும் (கிடைத்துள்ளதாகும்) அதனைக் கொண்டே அவர்கள் ஆனந்தமடைய வேண்டும். அது அவர்கள் சேர்த்து வைத்திருப்பதைப் பார்க்கினும் மேலானது. சூரத்து யூனுஸ் வசனம் 58

இந்த வசனத்தில் சொல்லப்பட்டுள்ள அருள்என்பது, அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸஹ்பிஹி வஸல்லம் அவர்களையே குறிக்கிறதென்று ஹழ்ரத் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அறிவிக்கின்றார்கள். நூல்: தப்ஸீர் துர்ருல் மன்ஸூர்

ஆகவே, அந்த அருளுக்காக ஆனந்தமடைய வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான். யார் இதைப் புரிந்து கொள்ளும் பாக்கியம் பெறுகிறாரோ அவர், பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸஹ்பிஹி வஸல்லம் அவர்களின் பிறந்த நாளை பெருநாளாகக் கொண்டாடலாமா? என்று கேள்வி கேட்கமாட்டான்.

إِنَّ مِنْ أَفْضَلِ أَيَّامِكُمْ يَوْمَ الْجُمُعَةِ  فِيهِ خُلِقَ آدَمُ عَلَيْهِ السَّلَام  وَفِيهِ قُبِضَ  وَفِيهِ النَّفْخَةُ  وَفِيهِ الصَّعْقَةُ

நாட்களிலேயே மிகவும் சிறந்த நாள் ஜும்ஆ நாளாகும். அதில்தான் ஆதம் அலைஹிஸ்ஸலாம் படைக்கப் பட்டார்கள். அந்நாளில்தான் அவர்கள் சொர்க்க(தோட்ட)த்தில் தங்க வைக்கப் பட்டார்கள். அந்நாளில்தான் மரணமாக்கப்பட்டார்கள். யுக முடிவு நாளும் வெள்ளிக்கிழமை தான் ஏற்படும் என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸஹ்பிஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். நூல்: அபூ தாவூத்

إن هذا يوم عيد جعله الله للمسلمين

நிச்சயமாக இந்நாளை (வெள்ளிக் கிழமையை) அல்லாஹ் முஸ்லிம்களுக்குப் பெருநாளாக ஆக்கியுள்ளான். நூல்: இப்னு மாஜா

ஆதி பிதா ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் எந்நாளில் படைக்கப்பட்டார்களோ அந்நாளிலேயே மரணமாகியும் இருக்கிறார்கள். அந்நாள் முஸ்லிம்களுக்குப் பெருநாள். அப்படியென்றால், (பிறை 12 இல் மறைந்தார்கள் என்னும் உங்கள் கருத்தின் அடிப்படையில்) அருமை நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸஹ்பிஹி வஸல்லம் அவர்கள் மறைந்த நாள், பெருநாளாக ஆக முடியாதா? என யோசித்துப் பாருங்கள்.

இமாம் அஹ்மத் பின் ஹன்பல் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள், வெள்ளிக் கிழமை நாளின் இரவினை, லைலதுல் கத்ருடைய இரவை விடச் சிறந்ததென்று கூறுகிறார்கள். வெள்ளிக் கிழமை இரவுதான் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸஹ்பிஹி வஸல்லம் அவர்களின் நூர், தாயாரின் கருவறையைச் சென்றடைந்ததென்று அதற்கு விளக்கமளிக்கின்றார்கள்.

இமாம் அவர்களின் இக்கூற்றினை அஷ்ஷைக் அப்துல் ஹக் முஹத்திஸ் திஹ்லவி அவர்கள் அஷிய்யதுல் லம்ஆத்என்னும் நூலிலும், மெளலவி அஷ்ரப் அலி தானவி ஜும்ஆக்கே ஃபஸாயில் வஅஹ்காம்என்னும் நூலிலும் பதிவு செய்துள்ளார்கள். நூல்: மஹ்ஃபிலே மீலாத் பர் இஃதிராஸாத் கா இல்மி முஹாஸபா பக்கம்: 89,90

மெளலித் என்றால் என்ன?

إن أصل المولد الذي هو اجتماع الناس وقراءة ما تيسر من القرآن ورواية الأخبار الواردة فى مبدأ أمر النبي صلى الله عليه وآله وسلم وما وقع فى مولده من الآيات

மக்கள் ஒன்றுகூடுதல். அவ்வாறு ஒன்றுகூடியதும் முடியுமான குர்ஆன் வசனங்களை ஓதுவார்கள். அதைத்தொடர்ந்து நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸஹ்பிஹி வஸல்லம் அவர்கள் தொடர்பான செய்திகளைச் சொல்வதற்குப் பெயர் மெளலித்ஆகும். நூல்: அல்ஹாவி லில் ஃபதாவா

இதுதான் மெளலித் சபைகளில் நிகழ்கிறதே தவிர மார்க்கத்திற்கு விரோதமான எதுவும் அங்கு இடம் பெறுவதில்லை. அருமை நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸஹ்பிஹி வஸல்லம் அவர்கள் முன்னிலையில் அவர்கள் உத்தரவின் அடிப்படையில் பள்ளிவாயிலில் அவர்களைப் புகழ்ந்து அருமைத் தோழர்கள் கவி பாடியுள்ளார்கள். கவி பாடிய தோழருக்கு பொன்னாடையும் போர்த்தியுள்ளார்கள். எனவே, கவி பாடலாமா? பள்ளியில் கவி பாட முடியுமா? என்றெல்லாம் கேள்வி கேட்டு காலத்தை வீணடிக்காதீர்கள்.

மெளலித், மீலாத் நிகழ்வுகளுக்கு நன்மையுண்டா?

ஹழ்ரத் இப்னு தர்தா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒரு முறை நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸஹ்பிஹி வஸல்லம் அன்னவர்களோடு தோழர் ஆமிருள் அன்சாரி ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் வீட்டிற்குச் செல்கிறார்கள். அந்நேரத்தில் ஆமிருள் அன்சாரி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அவர்களது வீட்டில் அவர்களின் பிள்ளைகள் குடும்பத்தார்களைக் கூட்டி கண்மணி நாயகத்தின் பிறந்த தினத்தின் மகிமைகள் அன்னவர்களின் சிறப்புக்கள் பிறப்பின் சிறப்புக்களை சொல்லிக்கொண்டு இருந்தார்கள், அத்தோடு சொல்கிறார்கள் அந்த நாள் இன்றைய நாள் தான் (மீலாத் தினம்) என்று குறிப்பிடுகிறார்கள்.

அப்போது அங்கே வருகை தந்த கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸஹ்பிஹி வஸல்லம் அன்னவர்கள் ஆமிருள் அன்சாரி ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு துஆ செய்கிறார்கள், “அல்லாஹுத்தஆலா உங்களுக்கு ரஹ்மத்துடைய வாயில்களை திறந்து தருவானாக.! அதேபோன்று மலக்குமார்கள் உங்களுக்காகப் பாவமன்னிப்புத் தேடக்கூடியவர்களாக ஆக்குவானாக.! அத்தோடு நீர் செய்ததை போன்று யார் செய்கிறாரோ அவர்களுக்கு நீர் எவ்வாறு வெற்றி பெறுகிறீரோ அதே போன்று அவர்களும் வெற்றிபெறுவார்என்று நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸஹ்பிஹி வஸல்லம் துஆ செய்தார்கள். நூல்: அத்தன்வீர் ஃபீ மௌலிதி பஷீரின் நஸீர், மஜ்முஅதுல் ஃபதாவா அல் அஸீஸியா

கண்மணி நாயகத்தின் மீலாதைக் கொண்டாட இந்த ஒரு ஹதீஸ் போதுமானது என்பதாகவும் மேற்சொன்ன நூலில் பதிவாகியுள்ளது.

மெளலித் கிதாபுகளில் ஷிர்கான கருத்துக்கள் உள்ளதாகச் சொல்லப்படுவது வடிகட்டிய சுத்தப் பொய்யாகும். அவ்வாறே, ‘புதிதாக ஆரம்பிக்கப்பட்ட அனைத்தும் வழிகேடாகும்என்ற ஹதீஸைக் காண்பித்து, மெளலித் மற்றும் மீலாத் நிகழ்வுகளை நிராகரிப்பது அறியாமையாகும். இவ்வாறான முட்டாள்களின் மூடத்தனமான விளக்கங்களில், வளரும் இளம் சமூகம் சிக்குண்டு சீரழியாமல் பாதுகாக்கப்பட வேண்டும். அவ்வாறு சிறப்பாக வாழ்ந்து மறைய வல்லவன் அல்லாஹ் தெளஃபீக செய்வானாக! 

யா அல்லாஹ் வள்ளல் நபி நாதர் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸஹ்பிஹி வஸல்லம் அவர்கள் பொருட்டினால் எம்மையும் எமது மனைவி மக்களையும் மாணவ மாணவிகளையும் முரீதீன்களையும் முஹிப்பீன்களையும் உள்ளம் செத்த அடிப்படைவாத இயக்கங்களின் சகவாசத்தில் இருந்து எம்மனைவரையும் பாதுகாப்பானாக!

யா அல்லாஹ்! நீ எமக்கு வாக்களித்த இறைத் தூதரின் வாரிசான இமாம் மஹ்தியின் வருகையை துரிதப்படுத்து! மேய்ப்பார் அற்ற மந்தைகளாகிவிட்ட இஸ்லாமிய உம்மத்தை ஓநாய்களிடம் இருந்தும் அரக்க குணம் பிடித்த பொல்லாத விச ஜந்துக்களிடம் இருந்தும் பாதுகாத்தருள்.

எமது குழந்தைகளை மார்க்க ஞானமுள்ளவர்களாக ஆக்குவாயாக! மாணவ மாணவிகளுக்கு முழுமையான மனன ஆற்றலையும் ஈருலக வெற்றியையும் வழங்கியருள். உடலிலும் உள்ளத்திலும் ஏற்பட்டுள்ள வியாதிகளை விலக்கிவிடு!.

யா அல்லாஹ்! உனது பேரருளான பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸஹ்பிஹி வஸல்லம் அவர்களின் பெருமைகளையும் அகமியங்களையும் அகிலத்தில் அள்ளிச் சொரிவதற்கு எமக்கு தெளபீக் செய்து அருள் புரிந்திடு! அகத்திலும் புறத்திலும் உண்டாகும் சகல வியாதிகளை விட்டும் எம்மனைவரையும் பாதுகாப்பாயாக!

பேரருளான பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸஹ்பிஹி வஸல்லம் அவர்கள் பொருட்டினால் எமது இப்பணியை ஏற்றுக் கொள்வாயாக! எமது ஷைகுமார்கள், பெற்றோர்கள், உற்றார் உறவினர்கள், முஹிப்பீன்கள், மனைவி மக்களின் பாவங்களை மன்னித்து அவர்கள் அனைவரின் அடக்கஸ்தலங்களையும் அண்ணல் நபியின் அருமையான மணம் கமழும் கப்றுகளாக அமைத்துவிடுவாயாக!

விழிப்பிலும் உறக்கத்திலும் உன் ஹபீபின் மீது ஸலவாத் சலாம் சொல்லும் பாக்கியத்தை எம்மனைவருக்கும் தந்தருள் புரிவாயாக! ஆமீன் பிஜாஹி ஸெய்யிதில் ஆலமீன் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸஹ்பிஹி வஸல்லம்.

اللهم نور بالعلم قلوبنا واستعمل بطاعتك أبداننا وخلص من الفتن أسرارنا واشغل بالإعتبار أفكارنا وقنا شر وساوس الشيطان واجرنا من النيران. اللهم اعصمنا من شر الفتن وعافنا من جميع المحن وأصلح منا ما ظهر وما بطن ونق قلوبنا من الحقد والحسد ولا تجعلنا علينا تباعة لأحد. اللهم يا رب بجاه نبيك المصطفى ورسولك المرتضى طهر قلوبنا من كل وصف يباعدنا عن مشاهدتك ومحبتك وامتنا على عقيدة أهل السنة والجماعة والشوق إلى لقائك ياذاالجلال والإكرام والحمد لله رب العالمين

صلى الله على محمد
صلى الله عليه وسلم
صلى الله على محمد
صلى الله عليه وآله وسلم
صلى الله على محمد
يارب صل عليه وسلم


கட்டுரைகள்

“வஹ்ஹாபிகள்” இந்தக் காலத்தின் “க்வாரிஜ்கள்”

  இப்னு அப்தில் வஹ்ஹாபும் இப்னு தைமிய்யாவும்   இப்னு தைமிய்யா என்ற தனி நபரால் விதைக்கப்பட்ட பொய்யான, பிழையான, மார்க்கத்துக்கு ...