வியாழன், 27 ஆகஸ்ட், 2020

ஆஷூரா தினத்தில் நோன்பிருங்கள் தன் குடும்பத்தினர்களுக்கு தாராளமாக செலவு செய்யுங்கள்.

 

ஆஷூரா தினத்தில் நோன்பிருங்கள் தன் குடும்பத்தினர்களுக்கு தாராளமாக செலவு செய்யுங்கள்.


 

 

 ‘ரமழானின் நோன்பிற்கு பிறகு மிக சிறப்பான நோன்பாக அல்லாஹ்வின் மாதமான முஹர்ரம் மாதத்தின் நோன்பாகும்என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

 

(அறிவிப்பவர்: அபூஹூரைரா ரழியல்லாஹு அன்ஹு  நூல்: முஸ்லிம்)

 

இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆஷூரா நோன்பை தானும் நோற்று அதை மற்றவர்கள் நோற்கவும் கட்டளையிட்டார்கள்’.                    (ஆதாரம்: புகாரி)

 

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஆஷூரா நோன்பைப் பற்றி கேட்கப்பட்டது, அதற்கு  நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘அது கடந்த கால பாவங்களை மன்னிக்கும்எனக் கூறினார்கள்.

 

(அறிவிப்பாளர்: அபூகதாதா ரழியல்லாஹு அன்ஹு. நூல்: முஸ்லிம்)

 

ஆஷுரா நோன்பு அதற்கு முந்திய வருடத்தின் பாவங்களுக்கு பரிகாரமாக அமையும் என நான் கருதுகிறேன் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)



 

ஆஷூரா நோன்பை நோற்க ஆர்வமூட்டல்

 

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆஷுரா தினத்தின் காலையில் அன்ஸாரிகளின் கிராமங்களுக்கு ஆளனுப்பி யார் நோன்பாளியாக காலைப் பொழுதை அடைந்தாரோ அவர் நோன்பை தொடரட்டும், யார் நோன்பு நோற்காதவராகக் காலைப் பொழுதை அடைந்தாரோ அவர் இன்றைய தினத்தின் மீதியுள்ள நேரத்தை உண்ணாமல் இருக்கட்டும் என அறிவிக்கச் செய்தார்கள். நாங்கள் அதன் பின் நோன்பு வைக்கலானோம். எங்கள் சிறுவர்களையும் நோன்பு நோற்க வைப்போம். இன்னும் நாங்கள் பள்ளிக்கும் செல்வோம், கம்பளியாலான விளையாட்டுப் பொருட்களை அவர்களுக்காக நாங்கள் செய்வோம். அவர்களில் யாரும் அழுதால் நோன்பு திறக்கும் வரை அந்த விளையாட்டுப் பொருளை அவர்களுக்காக கொடுப்போம்.என்று றுபைய்யிஃ பின்த் முஅவ்வத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள். (புகாரி, முஸ்லிம்)

 

இன்னும் ஒரு அறிவிப்பில்: அவர்கள் எங்களிடம் உணவு கேட்டால் அவர்களின் நோன்பை முழுமைபடுத்தும் வரை அவர்களின் பசியை போக்கும் அளவுக்கு அவர்களுக்கு அந்த விளையாட்டுப் பொருளை கொடுப்போம் என்று வந்திருக்கின்றது.

 

(பின்வரும் அறிவிப்பை) மக்களுக்கு அறிவிக்கும்படி அஸ்லம் கோத்திரத்தைச் சேர்ந்த ஒருவருக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள், யாராவது உணவு உண்டிருந்தால் மீதியுள்ள நேரத்தை உண்ணாமல் இருக்கட்டும். யாராவது (இதுவரை) உண்ணவில்லையானால் அவர் நோன்பை நோற்கட்டும், காரணம் இன்றைய தினம் ஆஷுரா தினமாகும். (புகாரி, முஸ்லிம்)

 

முஸ்லிமின் இன்னும் ஒரு அறிவிப்பில்: கைபர் வாசிகள் (யூதர்கள்) ஆஷுரா தினத்தில் நோன்பு நோற்பவர்களாக இருந்தார்கள், அதை பெருநாள் தினமாகவும் கொண்டாடுவார்கள். அவர்களின் பெண்களுக்கு ஆபரணங்களையும் அழகிய ஆடைகளையும் அணிவிப்பார்கள். ஆகவே! நீங்கள் அந்த நாளில் நோன்பு நோற்றுக் கொள்ளுங்கள் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

ஆஷூரா தினத்தில் நோன்பிருங்கள்; தன் குடும்பத்தினர்களுக்கு தாராளமாக செலவு செய்யுங்கள்.

 

 ரமழானின் நோன்பிற்கு பிறகு மிக சிறப்பான நோன்பாக அல்லாஹ்வின் மாதமான முஹர்ரம் மாதத்தின் நோன்பாகும்என நபி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். நூல்: முஸ்லிம்

 

நபி நாயகம் ரசூல் ஸல்லல்லாஹூ அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்- “எவர் ஆஷூரா தினத்தில் தன் குடும்பத்தினர்களுக்காக தாராளமாக செலவு செய்வாரோ அவருக்கு அந்த வருடம் முழுவதும் அல்லாஹ் செழிப்பை ஏற்படுத்துவான்.”

அறிவிப்பாளர்: ஹழ்ரத் அபூ ஹுரைரா, ஹழ்ரத் ஜாபிர், ஹழ்ரத் இப்னுஸ் ஸுபைர்  ரழியல்லாஹு அன்ஹும். நூல்: பைஹகீ, தபரானீ, அல்-இஸ்தித்கார், மஜ்மஉஸ் ஸவாயித்

 

இத்தகவலின் அறிவிப்பாளர்களான ஹழ்ரத் ஜாபிர் மற்றும் இப்னு ஸுபைர் ஆகிய இரு நபித் தோழர்கள் இதனை சோதனை செய்து பார்த்து உணர்வுபூர்வமாகக் கண்டதாகக் கூறியுள்ளார்கள். நூல்: அல்-இஸ்தித்கார்

 

இதனை நாம் பரீட்சித்துப் பார்த்து உண்மையெனக் கண்டோம் என்று  நபித் தோழர் ஹழ்ரத் ஜாபிர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியுள்ளார்கள் . நூல்: ஃபைழுல் கதீர்

இதனை நாங்கள் ஐம்பது அல்லது அறுபது ஆண்டுகள் சோதனை செய்து பார்த்து உண்மையெனக் கண்டோம்என்று சுப்யான் இப்னு உயைனா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியுள்ளார்கள். நூல்: ஷரஹ் நைலுல் மராம்

 

கட்டுரைகள்

“வஹ்ஹாபிகள்” இந்தக் காலத்தின் “க்வாரிஜ்கள்”

  இப்னு அப்தில் வஹ்ஹாபும் இப்னு தைமிய்யாவும்   இப்னு தைமிய்யா என்ற தனி நபரால் விதைக்கப்பட்ட பொய்யான, பிழையான, மார்க்கத்துக்கு ...