சனி, 9 பிப்ரவரி, 2019

இலங்கையில் தப்லீக் ஜமாஅத்.

இலங்கையில் தப்லீக் ஜமாஅத்.




தப்லீக் ஜமாஅத்தின் ஸ்தாபகர் மௌலவி இல்யாஸ் 1885ல் காந்தலவி என்னும் ஊரில் பிறந்து 13-07-1944ல் டில்லியில் மரணமானார். 1920ல் தப்லீக் ஜமாஅத்தை மேவாத் என்ற ஊரில் உண்டாக்கினார். இவரின் கப்ர் டில்லி மர்கஸ் பள்ளி வாசலின் உட்பகுதியில் பாதுகாப்பாக இப்பொழுகூட பராமரிக்கப்படு வருகின்றது.
தப்லீக் ஜமாஅத் என்னும் புதிய சரக்குக் கப்பல் 1948ல் காலியைச் சேர்ந்த அல்ஹாஜ் முஹம்மது புகாரி என்ற தனவந்தரினால் இலங்கைத் துறைமுகத்தில் நங்கூரமிட்டது. இந்தக் கப்பலுக்கு முந்திய கப்பல்களின் மாலுமிகள் யார்? அது சுமந்துள்ள பொதிகளின் பெறுமதிகள் என்னவென்பதை இந்நாட்டு உலமாக்கள் கண்டு பிடித்திருந்ததார்கள். அதற்கெதிராக உழைத்தார்கள். குரல் கொடுத்தார்கள். வழிகேடர்கள் என்று எழுதி வைத்தார்கள். ஃபத்வாக்கள் வெளியிட்டார்கள் என்றால் தப்லீக் ஜமாஅத்தின் உண்மை நிலையினை மட்டும் இந்நாட்டு உலமாக்கள் கண்டுகொள்ளாது அவர்களை அங்கீகரித்து அவர்களின் வளர்ச்சிக்கு பங்களிப்புச் செய்ததற்கான காரணம் இதுதான் என்பதை இறக்குமதியும் குழப்பமும் என்ற நூல் பின்வருமாறு தெளிவாக எடுத்துரைத்திருக்கிறது. 
(1953ல் டில்லியில் இருந்து மௌலானா ரஹ்மதுல்லாஹ் (டில்லி ஸாஹிப்) என்பவர் இலங்கைக்கு வந்தார். அப்பொழுது பஹ்ஜதுல் இப்ராஹீமிய்யா கல்லூரி அதிபர் மர்ஹும் அல்ஆலிமுல் ஃபாழில் அல்ஹாஜ் அல்உஸ்தாத் அப்துல் ஹமீது ஹழ்ரத் அவர்களின் முயற்சியில் காலி கழுவல்லையில் இஜ்திமாவொன்று ஏற்பாடு செய்யப்பட்டது. 

அந்த இஜ்திமாவில் அல்ஆலிமுல் ஃபாழில் அல்உஸ்தாத் அப்துல் ஹமீது ஆலிம் ஹழ்ரத் (கண்டி அக்குரனை அலவத்தகொடை மறைவு 1971) அல்ஆலிமுல் ஃபாழில் அல்உஸ்தாத் அப்துல்லாஹ் ஹழ்ரத் (காலி தடாலி மறைவு 1955) அல்ஆலிமுல் ஃபாழில் அல்உஸ்தாத் முஹம்மது அஜ்வாத் ஆலிம் ஹழ்ரத் (வெலிகாமம் புதுத்தெரு மறைவு 1986) அல்ஆலிமுல் ஃபாழில் அல்உஸ்தாத் அப்துஸ் ஸமத் ஆலிம் ஹழ்ரத் (உடுகொட ருக்கஹவில  மறைவு 1996) ஆகிய ஐந்து பேரும்இ மௌலானா ரஹ்மதுல்லாஹ் அவர்களிடம் தப்லீக் ஜமாஅத்தின் கொள்கைகோட்பாடு பற்றி வினவ, தப்லீக் ஜமாஅத்தின் உஷுல் நான்கு மத்ஹபுகளில் ஒன்றைப் பின்பற்றவேண்டும். நான் ஹனபி மத்ஹபைச் சார்ந்தவன். நீங்கள் இலங்கையில் ஷாபிஈ மத்ஹபைச் சார்ந்தவர்கள். அஷ்அரிய்யா, மாதுரூதிய்யாவை அகீதாவில் பின்பற்றவேண்டும் என்று அவர் சொன்னார்.) பக்கம்: 84,85. 

இதன் பின்னர்தான் இலங்கையில் உள்ள தப்லீக் ஜமாஅத்தில் வஹ்ஹாபிஷம் இல்லையென்று அல்உஸ்தாத் அப்துல் ஹமீத் ஹழ்ரத் அவர்களும் தப்லீக் ஜமாஅத் தரீக்காவாகுமென்று அல்உஸ்தாத் அப்துஸ் ஸமத் ஹழ்ரத் அவர்களும் கூறியுள்ளனர். 
கவனிக்க வேண்டிய குறிப்பு
இலங்கை ஜமாஅதுத் தப்லீகின் பயான், தஃலீம்களில் விசுவாசக் கொள்கையிலோ செயலாற்றும் விஷயங்களிலோ ஷரீஅத்திற்கு விரோதமாக (ஷாபிஈ மத்ஹபின் தீர்புக்கு விரோதமாக) இருந்தால் அவற்றைத் தடை செய்து கொள்ள வேண்டும் என்றதொரு குறிப்பினையும் சங்கைக்குரிய அல்-உஸ்தாத் அப்துஸ் ஸமத் ஆலிம் பெருந்தகை அவர்கள் குறிப்பிட்டுக் கூறியுள்ளார்கள். (இலங்கை முஸ்லிமின் மத்ஹப் பக்கம் 35)

தப்லீக் ஜமாஅத்தினை எதிர்க்காமல் அவர்களுக்கு பக்கபலமாக இந்நாட்டு உலமாக்கள் இருந்தமைக்கான  காரணத்தினை யாரிடமிருந்து நேரடியாக கேட்டறியலாம் என்று நாம் யோசித்துப் பார்த்தோம். மேற்குறிப்பிட்ட அறிஞர் பெருமக்களிடம் கல்வி பயிண்றவர்களில் இன்று யார் யார் இருக்கின்றார்கள்? என்று தேடினோம். அதனடிப்படையில் கொழும்பு,காலி,அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்றுஇ ஏறாவூர், மன்னார் போன்ற பிரதேசத்து மூத்த பஹ்ஜிகளை இதற்கென்று தொடர்புகொண்டு மேற்சொன்ன வினாவை அவர்களிடம் கேட்டோம். 

அதற்கு, (நாங்கள் மத்ஹபுகளைப் பின்பற்றவேண்டும் என்று வலியுறுத்துகின்றொம். அதனடிப்படையில் நாம் ஹனபி மத்ஹபை முழுமையாக பின்பற்றுகின்றொம். அத்துடன் சூபிச தரீக்காக்களை ஆதரிக்கின்றொம். அந்தவகையில் நாங்கள் சிஷ்திய்யா, ஸாபிரிய்யா, நக்ஷபந்திய்யா போன்ற தரீக்காக்களை பின்பற்றுகின்றொம் என்று தப்லீக் ஜமாஅத்தினர்கள் பிரசாரம் செய்தார்கள். நேரடி சந்திப்புக்களிலும் இதனை ஊர்ஜிதம் செய்ததை நாம் எமது கண்காளால் கண்டோம். செவிகளால் செவியுற்ரறொம்) என்று அவர்கள் எமக்கு பதில் கூறினார்கள்.
இதுவொன்றுதான் அன்றிருந்த எங்களது மதிப்புக்குரிய ஆசான்கள் தப்லீக் ஜமாஅத்திற்கு ஆதரவு நல்கியதற்கான காரணமாகும் என்று கூறிவிட்டு இப்படியும் ஒரு செய்தியைச் சொன்னார்கள். அதாவது, (இன்றிருக்கும் தப்லீக் ஜமாஅத்தினர்கள்போன்று அன்றிருந்தவர்கள் இருந்திருப்பின் நிச்சயமாக தப்லீக் கூட்டத்தினை அவ்வுலமாக்கள் நிராகரித்திருப்பார்கள்) என்று ஆவேசத்துடன் நாம் தொடர்பு கொண்ட அன்றைய மாணவர்கள் இன்றைய மூத்த உலமாக்கள் நம்மிடம் தெரிவித்தார்கள்.

தப்லீக் ஜமாஅத்தின் டில்லி ஸாஹிபை நேரில் சந்திக்கச் சென்றவர்களில் அல்உஸ்தாத் அப்துல்லாஹ் ஆலிம் பெருந்தகையும் ஒருவராகும். கிழக்கிலங்கை அரபிக் கல்லூரியின் (1954) ஸ்தாபகரான இவர், அக்கரைப்பற்றைச் சேர்ந்த தன்னுடைய மாணவர்களில் ஒருவரான அல் ஆலிமுல் ஃபாழில் அல்உஸ்தாத் புகாரி (மறைவு 1992) ஆலிம் பஹ்ஜி என்பவரிடம், தப்லிக் ஜமாஅத் பார்வைக்கு நன்றாக இருக்கிறது. இதில் வஹ்ஹாபிசம் இல்லாதிருக்க அல்லாஹ் துணை இருக்கவேண்டும் என்று சொன்னதாக அவரின் சகோதரர் ஒருவர் நம்மிடம் சொன்னார். இவரும் பழைய பஹ்ஜிகளில் ஒருவராகும்.

அல்ஆலிமுல் ஃபாழில் அஷ்ஷெய்குல் வாஸில் அஷ்ஷெய்கு அப்துல் காதிர் ஸஷுபி ஸித்தீக்கி கத்தசல்லாஹு சிர்ரஹுல் அஸீஸ் (மறைவு 1982) நாயகம் அவர்கள் ஜமாஅத்தே இஸ்லாமிய இயக்கம் பற்றி எழுதிய ஃபத்வாவினை அங்கீகரித்துவிட்டு “தப்லீக் ஜமாஅத்தில் வஹ்ஹாபியத்தின் விஷக் கிருமிகள், தப்லீக் என்றால் என்ன? அல் முஹன்னதின் அண்டப் புளுகு, தப்லீக் ஜமாஅத்தில் ஏன் சேரக்கூடாது? காதியானி தேவபந்தி சம்பாசனை, தன்னறிவில்லா தக்க பதிலுக்கு தகுந்த விதமாக தலையில் தட்டு, புலியைக் கண்டு ஓட்டம், சுவர்க்க நகைகளா? அல்ல நரக விலங்குகள், உலமாக்களின் உண்மை ஃபத்வா, இழ்ஹாருல் ஹக்இ இல்யாஸி தப்லிக் ஜமாஅத் பற்றி உலமாக்களின் உண்மைத் தீர்ப்பு”  ஆகிய நூற்களைத் தொகுத்து தப்லீக் ஜமாஅத்தும் வழிகெட்டதொரு நவீன இயக்கமாகுமென்று சொன்னதை உங்கள் ஆசான்கள் ஏன் கண்டுகொள்ளவில்லையென்றும் ஸஷுபி நாயகம் அவர்கள் தப்லீக் பற்றி சொன்ன கருத்துக்களை இன்றுள்ள தப்லீக் ஜமாஅத்தினர்களிடம் நம்மால் கண்கூடாக காண முடிகின்றதல்லவா? என்றும் பஹ்ஜிகளிடம் நாம் கேட்டோம். பதில் இல்லை. 
அல்லாஹ், சூபி ஹழ்ரத் நாயகத்தின் அளப்பெரிய சேவையினூடாக  இந்த நாட்டினைப் பாதுகாத்துவிட்டான். சூபி ஷெய்கு நாயகம் அவர்கள் மட்டும் அன்று தப்லீக் ஜமாஅத்தின் முகத்திரையினை கிழித்திருக்காவிட்டால் இன்று முழு நாடும் வஹ்ஹாபிசத்திற்குப் பலியாகி இருந்திருக்கும். 

1967-68ஆம் ஆண்டளவில் பஹ்ஜதுல் இப்ராஹீமிய்யாவில் கல்வி பயின்றுகொண்டிருந்த மாணவக் குழுவொன்று கிழக்கிலங்கையைச் சேர்ந்த பிரபல மதிப்பக்குரிய பஹ்ஜி ஹழ்ரத் ஒருவரின் தலைமையில் மாத்தறை கொட்டுவக்கொடை ஜும்ஆப் பள்ளிவாயிலில் தங்கியிருந்த தப்லீக் ஜமாஅத்தினை சந்திக்கச் சென்றிருக்கிறது. அதுஇ தப்லீக் ஜமாஅத்தின் ஸ்தாபகர் மௌலவி இல்யாசின் நெருங்கிய நண்பர் ஒருவரின் தலைமையில் வந்திருந்தது. அச்சந்தர்ப்பத்தில் உங்களைப் பற்றி சொல்லுங்கள் என்று அமீர் அவர்களிடம் வினவியிருப்பதும் குறிப்பிடத்தக்கதொரு அம்சமாகும். 
அந்தக் காலத்தில் அவர்கள் வஹ்ஹாபிசக் கருத்துக்கள் எதனையும் பிரசாரம் செய்யவில்லை. தொழுகைக்கு அழைக்கும் செயல் மக்களைக் கவர்ந்திருந்தது. அவர்களின் கொள்கைகள் என்னவென்பதை கேட்டறிந்துகொண்டதன் பின்னரே எமது மதிப்புக்குரிய ஆசிரியர்கள் அவ்வமைப்பினை ஆதரித்தனர் என்றே இவர்களும் நம்மிடம் தெரிவித்தனர். இந்தப் பள்ளி வாசலில் பிரபலமான தர்கா ஒன்று இருந்ததாகவும் பஹ்ஜிகள் தெரிவித்தனர். 

இலங்கையில் உள்ள தப்லீக் ஜமாஅத்தினருக்கும் அன்றிருந்த இந்நாட்டின் பிரபல அறிஞர்களுக்குமிடையில் இடம்பெற்ற நேர்காணலின் பின்னர் இந்தியாவில் இருந்து நம்நாட்டுக்கு வருகை தந்துள்ள தப்லீக் ஜமாஅத்தினர் வழிகேடர்கள் இல்லை. அவர்களும் தரீக்காவாதிகளாகும் என்ற அவர்களின் முடிவானது, பலஸ்தீனம் பறிபோனால் என்ன? சிரியா முஸ்லிம்கள் சீரழிந்தால் என்ன? பர்மா முஸ்லிம்கள் பாழடிக்கப்பட்டால் என்ன? அவர்கள் பற்றி நாம் நம்நாட்டில் பேசவேண்டிய அவசியம் நமக்கில்லை. நாம் நம்நாட்டில் நன்றாக இருந்தால் சரி என்ற நிலைப்பாடுடையவர்கள் போல் தெரிகிறது.   

தப்லீக் ஜமாஅத் இரு வழியில் பயணிக்குமோர் பயணக்குழுவாகும்.  அதாவது சூபிச அஹ்லுஸ் ஸுன்னத் வல்ஜமாஅத்தினை ஆதரித்து வஹ்ஹாபிசத்தினை ஆரம்பத்தில் வண்மையாக கண்டித்துவிட்டு இறுதியில் அஹ்லுஸ் ஸுன்னத் வல்ஜமாஅத்தினை ஷீஆக்கள் என்று கூறி வஹ்ஹாபிச கொள்கைகளை பிரசாரம் செய்தனர். இது சூபிசமும் வஹ்ஹாபிசமும் கலந்த கலவை ஜமாஅத்தாகும்.
தொடரும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கட்டுரைகள்

“வஹ்ஹாபிகள்” இந்தக் காலத்தின் “க்வாரிஜ்கள்”

  இப்னு அப்தில் வஹ்ஹாபும் இப்னு தைமிய்யாவும்   இப்னு தைமிய்யா என்ற தனி நபரால் விதைக்கப்பட்ட பொய்யான, பிழையான, மார்க்கத்துக்கு ...