செவ்வாய், 5 பிப்ரவரி, 2019

இலங்கையில் முதன் முதலில் ஸ்தாபிக்கப்பட்ட வழிகெட்ட அமைப்பு.

இலங்கையில் முதன் முதலில் ஸ்தாபிக்கப்பட்ட வழிகெட்ட அமைப்பு.



புத்தளம் நகரத்தில் இருந்து சுமார் 100 கி.மீ தூரத்தில் பரகஹதெனிய என்றதொரு அழகிய ஊர் இருக்கிறது. பரகஹதெனிய குருணாகல் மாவட்டத்தில் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் ஒரு கிராமம். இந்த கிராமத்தின் தற்போதய பெரிய ஜும்ஆப் பள்ளி 1820ஆம் வருடம் தென்னிந்தியா கோட்டாரைச் சேர்ந்த காதிரிய்யா தரீக்கா வழிமுறையில் வந்த அஷ்ஷெய்கு சுலைமான் காதிரி என்பவருக்கு அன்பளிப்புச் செய்யப்பட்ட காணியில் அவரின் முயற்சியினால் கட்டப்பட்ட பள்ளியாகும். 

இந்தப் பள்ளி வாசலில் தரீக்காக்களின் ஷெய்குமார்களின் கந்தூரி இடம் பெற்றிருக்கிறது. குறிப்பாக ஷஃபான் மாதம் தலைப்பிறையில் ராத்திப் முழக்கத்துடன் கொடியேற்றப்பட்டு எட்டாம் நாள் பெரிய கந்தூரி வருடாந்தம் கொடுக்கப்பட்டு வந்திருக்கிறது. இது இலங்கை நாட்டில் பிரபலமானதொரு கந்தூரியாக இருந்திருக்கிறது. ஒவ்வொரு வெள்ளிக் கிழமை இரவும் கௌதிய்யா, ஹத்தாதிய்யா, ஜலாலிய்யா ராதிபுகளும் இங்கு இடம் பெற்றிருக்கின்றன.

புத்தளம் நகரத்திற்கு அருகாமையில் உள்ள குருணாகல் மாவட்டத்திலுள்ள பரகஹதெனிய என்னும் கிராமத்தில் தர்வேஷ் என்பவரால் 1948ஆம் வருடம் துவக்கம் பெற்ற ஒரு அமைப்புத்தான் அன்ஸார் சுன்னத் முஹம்மதிய்யா என்னும் இயக்கமாகும். சவுதி அரேபியாவில் படிக்கச் சென்று வந்த பின்னரே இவர் இதனை ஆரம்பித்திருக்கிறார். 

இலங்கை அன்ஸார் சுன்னத்து முஹம்மதிய்யாவின் கொள்கை.


“அல்லாஹ் அர்ஷில் இருக்கின்றான். ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களுக்கு ஷஃபாஅத் கிடையாது. மௌலித் ஓதுவது கூடாது. தராவீஹ் எட்டு ரக்அத்துக்களே. இமாம் பூசீரி போன்றவர்கள் காபிர்கள் (நஊதுபில்லாஹ்). கப்ருகள் தரிசிப்பது ஹராம். கிழ்ர் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இறந்துவிட்டார்கள். தரீக்காக்கள் அனைத்தும் வழிகேடு. நபிமார்,வலிமார்களுக்கு நேர்ச்சை செய்வது தெய்வ வணக்கமாகும். கப்ரைக் கட்டுவது ஹராமாகும். கப்ருகளில் குறிப்பிட்ட நாட்களில் ஒன்று சேர்ந்து கந்தூரி கொடுப்பது வழிகேடு. கொடியேற்றுவது ஷிர்க்காகும். ஜனாஸா கொண்டு செல்லும்போது திக்ர்இ ஸலவாத் சொல்வது வழிகேடு. தல்கீன்இ கத்தம் பாத்திஹா ஓதுவது வழிகேடு. ஜும்ஆவில் மஹ்ஷர் ஓதுவது வழிகேடு. கூட்டுப் பிரார்த்தனை வழிகேடு. குனூத் ஓதுவது வழிகேடு. நேர்ச்சை செய்யப்பட்ட பிராணிகளை உண்பது ஹராம்.” ஆகிய அம்சங்களை தர்வேஷ் பிரச்சாரம் செய்தார்.  
தொடரும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கட்டுரைகள்

“வஹ்ஹாபிகள்” இந்தக் காலத்தின் “க்வாரிஜ்கள்”

  இப்னு அப்தில் வஹ்ஹாபும் இப்னு தைமிய்யாவும்   இப்னு தைமிய்யா என்ற தனி நபரால் விதைக்கப்பட்ட பொய்யான, பிழையான, மார்க்கத்துக்கு ...