செவ்வாய், 5 பிப்ரவரி, 2019

இலங்கையில் நவீன கொள்கையின் துவக்க வரலாறு.

இலங்கையில் நவீன கொள்கையின் துவக்க வரலாறு.

இலங்கை முஸ்லிம்களின் பூர்வீக குடியிருப்பானது மாற்று மத சகோதரர்களால் நிராகரிக் கப்படுவதை விட இஸ்லாமிய மத வெறியர்களால்தான் கூடுதலாக நிராகரிக்கப்படுவதைப் பார்க்கின்றொம். 

இதே மத வெறியாளர்கள்தான் இஸ்லாமியர்களின் பூர்வீக கொள்கையினையும் குழி தோண்டிப் புதைத்துக்கொண்டிருக்கின்றார்கள். 
புத்தளம் பிரதேசமானது இலங்கை முஸ்லிம்களின் பூர்வீக குடியிருப்புக்கு துவக்க பூமியாக இருப்பதுபோன்று பூர்வீக கொள்கையினை தெளிவுபடுத்துவதற்குத் தேவையான அநேக அம்சங்களை இப்பிரதேசம் தன்னகத்தில் கொண்டிருக்கிறது. தற்போது நவீன கொள்கைக்கான துவக்க பூமியாகவும்  இப்பிரதேசம் இருப்பது ஆச்சரியமாகவும் அதிசயமாகவும் இருக்கிறது.

புத்தள பள்ளி வாசல் பரிபாலனம் அண்மைக்காலம் வரை செல்வாக்குப் பெற்றிருந்த மரைக்கார் குடும்பத்தினரின் கைகளிலேயே இருந்து வந்தது. 1877ஆம் ஆண்டிலிருந்து முதலாளி குடும்பம் என்ற குடும்பத்தினரும் பள்ளிவாசல் பரிபாலனத்தில் பங்கேற்கத் தொடங்கினர். இதனையடுத்து கந்தூரி கொடுத்தல், சந்தணக்கூடு ஏற்றுதல், தர்காக்களை பராமரித்தல் போன்ற விடயங்களில் இவ்விரு குடும்பத்தினர்களுக்கும் மத்தியில் தகராறு ஏற்படத் தொடங்கியது. 

1913 முதல் 1935 வரை இரு தரப்பாருக்கும் புத்தளம் நீதி மன்றத்திலும் இலங்கை உயர் நீதி மன்றத்திலும் வழக்குகள் இடம் பெற்றன. இறுதியில் வழக்கமாக நடத்தப்பட்டு வந்த நிகழ்வுகள் தொடர்ந்தும் நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இது மரைக்கார் குடும்பத்துக்கு சார்பான தீர்ப்பாக அமைந்தது. எனினும் பிரச்சினைக்கு இது ஒரு தீர்வினைக் கொண்டு வரவில்லை.

தர்கா உடைக்கப்பட்டு அங்கு புதிய பள்ளிவாசல் கட்டப்படவேண்டும் என்று கூட்டு எதிர்ப்பாளர்கள் வலியுறுத்தி வந்தனர். ஊரில் ஏற்பட்டு வந்த குழப்பங்களுக்கு தீர்வு காணும் முகமாக 1927ஆம் ஆண்டு புகழ் பெற்ற முஸ்லிம் தலைவர்களான நீதிபதி ஏ.ரி. அக்பர், டி.பி. ஜாயா, என்.எச்.எம். அப்துல் காதர், சேர். மாக்கான் மாக்கார் ஆகியோரைக் கொண்ட விசாரணைக் குழுவை தேசாதிபதி நியமித்தார். 

புத்தளத்தில் விசாரணை மேற்கொண்ட இக்குழுவினர் தர்காவை உடைக்கவேண்டாம் என்றும் வேறொரு இடத்தில் புதிய பள்ளி வாசல் கட்டப்பட வேண்டும் என்றும் தமது ஆலோசனையை வெளியிட்டனர். தர்கா இடிக்கப்பட வேண்டும் என்ற பிரிவைச் சேர்ந்தவர்கள் இம்முடிவை ஏற்றுக்கொள்ளவில்லை. மீண்டும் குழப்ப நிலை தோன்றியது. தர்காவை இடிக்கவேண்டும் என்ற கோரிக்கை படிப்படியாக வெற்றி பெற்றது. 
ஏறத்தாள 500 வருடங்கள் பழைமையான பல வெளிநாட்டு யாத்திரிகர்களின் கவனத்தையும் கண்டி மன்னர்களின் கௌரவத்தையும் ஈர்த்ததோடு புத்தளம் மக்களின் ஆரம்ப குடியேற்ற வரலாற்றிற்கு ஒரு முக்கியத்துவத்தையும் வழங்கி வந்த முஹ்யித்தீன் தர்கா 1933-34ல் இடிக்கப்பட்டது. இது புத்தளம் வரலாற்றில் மட்டுமன்றி இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் அக்கறையுள்ளவர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய சம்பவமாகும். பார்க்க: புத்தளம் முஸ்லிம்கள் வரலாறும் வாழ்வியலும்- கலாநிதி எம்.எஸ்.எம்.அனஸ். 
தொடரும்.........

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கட்டுரைகள்

“வஹ்ஹாபிகள்” இந்தக் காலத்தின் “க்வாரிஜ்கள்”

  இப்னு அப்தில் வஹ்ஹாபும் இப்னு தைமிய்யாவும்   இப்னு தைமிய்யா என்ற தனி நபரால் விதைக்கப்பட்ட பொய்யான, பிழையான, மார்க்கத்துக்கு ...