சனி, 9 பிப்ரவரி, 2019

இலங்கையில் முஸ்லிம்களின் வரலாற்றுத் தொடர்(இலங்கையில் வழிகேடர்களுக்கு முதன் முதலாக வழங்கப்பட்ட ஃபத்வா

இலங்கையில் வழிகேடர்களுக்கு முதன் முதலாக வழங்கப்பட்ட ஃபத்வா.

02-10-1948ல் கல்முனை ஆறாம் குறிச்சி தைக்காப் பள்ளிவாயிலில் வைத்துத்தான் தர்வேஷ் என்பவருக்கு முதன் முதலில் வஹ்ஹாபி என்ற ஃபத்வா வழங்கப்பட்டது.


13-07-1951ல் கல்முனைக் குடி கடற்கரைப் பள்ளிவாயில் முற்றத்தில் வைத்து ஒரு மாநாடு இடம்பெற்றது. அந்த மாநாட்டைப் பற்றி “இரு வழிக்கு ஒரு வழித் தேர்வு” என்ற பெயரில் ஃபத்வா ஒன்று கொடுக்கப்பட்டது. இந்த மாநாட்டிற்கு நீதிபதியாக கடமையாற்றியவர் 1922ல் ஆரம்பிக்கப்பட்ட கிழ்ரிய்யா அரபிக் கல்லூரியின் அதிபரான மௌலானா மௌலவி ஏ.எச்.ஏ.எம். அலியார் மரைக்கார் ஆலிம் என்பவராகும்.




இலங்கை பரகஹதெனிய ஜும்ஆப் பள்ளி வாயில் இருந்த தர்கா உடைக்கப்பட்ட வரலாறு.

காலப்போக்கில் தௌஹீத் ஜமாஅத், தப்லீக் ஜமாஅத்தினர்களின் வருகையினை அடுத்து இந்த கிராமத்தில் இடம் பெற்ற மேற்கூறிய அம்சங்கள் மெல்லமெல்ல மறையத் தொடங்கியன. 18-10-2011ல் பெரிய பள்ளி வாசலில் இருந்த இரு தர்காக்களும் அகற்றப்பட்டு விட்டன. பரகஹதெனிய கிராமத்தில் முஸ்லிம்களின் எழுற்ச்சிக்கும் பள்ளி வாசலோடு ஜமாஅத்தாரின் தொடர்பைப் பேணுவதிலும் காதிரிய்யா தரீக்காவின் தோற்றம் ஒரு காரணமாய் அமைந்திருந்தது என்பதை எவராலும் மறுக்க இயலாது, (1987 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட பறகஹதெனிய பெரிய பள்ளிவாசல் நூற்றாண்டு மலருக்கென அப்போதைய நிர்வாக சபையின் செயலாளராகக் கடமையாற்றிய மர்ஹும்களான சீ.எஸ்.எம். ஸவாஹிர், மற்றும் இணைச் செயலாளர் ஏ.எம்.நிசார் அவர்கள் எழுதிய வரலாற்றுக் கட்டுரையில் இருந்து இது தரப்படுகிறது.

இலங்கையில் ஜமாஅத்தே இஸ்லாமி.


ஜமாஅத்தே இஸ்லாமிய இயக்கத்தின் ஸ்தாபகர் அபுல் அஃலா மௌதூதி ஸாஹிப் 25-09-1903 ஆம் வருடம் அன்றைய இந்தியாவின் அவ்ரங்காபாத் என்ற ஊரில் பிறந்தவர் அமெரிக்காவிலுள்ள தம் மகளைப் பார்ப்பதற்காக அங்கே சென்றபோது 22-09-1979ல் அவர் மலசலக் கூடத்தில் மரணமானார். 1941ல் அன்றைய இந்தியாவில் ஜமாஅத்தே இஸ்லாமி - இஸ்லாமிய கூட்டம் என்ற அமைப்பினை தோற்றுவித்தார்.


இலங்கையில் 1945க்குப்பின் தடம்பதித்து காலூன்றி காட்டுத் தீ பரவுவதுபோலும், உடலில் விஷம் சென்றேறுவதுபோலும் மௌதூதி ஸாஹிப் உண்டாக்கிய ஜமாஅத் இஸ்லாமி பரவிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் அதன் அடிநாதம் அறிந்து அதன் வலையில் சிக்கவிடாது “மௌதூதி ஸாஹிபும் ஜமாஅத்தே இஸ்லாமியும்” என்றதொரு நூலைத் தொகுத்து 1976ஆம் ஆண்டளவில் வெளியிட்ட அல்ஆலிமுல் ஃபாழில் அஷ்ஷெய்கு அப்துல் காதிர் ஷெய்கு ஸஷுபி ஹழ்ரத் நாயகம் அவர்களையும் இந்த நூல் வெளியாகி சுமார் பத்து வருடங்களின் பின்னர் அதாவது 1987, 88 களில்  “இறக்குமதியும் குழப்பமும்” என்ற நூலைத் தொகுத்தளித்த மௌலானா மௌலவி அல்ஹாஜ் அல்உஸ்தாத் எம்.ஐ. அப்துஸ் ஸமத் மக்தூமி ஹழ்ரத் அவர்களையும் நன்றியுடன் நினைவுகூர்கின்றொம்.


கி.பி.1915க்குப் பின் இலங்கையில் புதிதாக இயக்கங்கள் இறக்குமதியாக ஆரம்பித்தன. இதனால் 1936க்குப் பின் இலங்கையின் பல பகுதிகளில் முஸ்லிம்களுக்கு மத்தியில் குழப்பங்களும் அடிதடிகளும் ஆரம்பித்தன. 1938ல் இருந்து இங்கு இறக்குமதியாகும் கொள்கைளிலுள்ள தவறுகள் வழிகேடுகளைக் குறித்து பெரும் பெரும் ஸாலிஹான உலமாக்கள் எச்சரிக்கை செய்து வந்துள்ளனர்.

தமிழ்பேசும் முஸ்லிம்கள் இந்த இறக்குமதிகளிலுள்ள தவறுகளை, வழிகேடுகளை அறிந்து அவற்றை ஏற்றுக்கொள்ளாமல் தள்ளிவிட்டு நேர் வழி பெறுவதற்காக குழப்பவாதிகள் ஜாக்கிறதை, ஜமாஅத்தே இஸ்லாமியும் அஹ்லே சுன்னாஹ்வும், முஸ்லிம் குரல் ஆகியவற்றுடன் சில துண்டுப் பிரசுரங்கள், ஃபத்வாக்கள் தமிழில் பகிரங்கமாகவே வெளி வந்துள்ளன.

இஸ்லாமிய ஷரீஅத்தின்படி நடந்துகொண்டிருக்கின்ற தரீக்காக்களை மட்டம் தட்டியிருக்கிறார்கள். நான்கு இமாம்களில் எவரையும் பின்பற்றத் தேவையில்லை என்றிருக்கின்றார்கள். அல்குர்ஆன் அல்ஹதீதை நேரடியாகப் பின்பற்றவேண்டும் என்று பிரசாரம் செய்துள்ளார்கள். இவைதான் அந்த இயக்கங்கள் செய்த மாபெரும் தவறாகும். 

இதற்காகத்தான் அவர்கள் வழிகேடர்கள். அவர்களுடன் சேரவேண்டாம் என்று ஸாலிஹான உலமாக்களால் 1938ல் இருந்து பிரசாரம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறதென்று அல்உஸ்தாத் மர்ஹும் அப்துஸ் ஸமத் ஹழ்ரத் அவர்கள் இறக்குமதியும் குழப்பமும் என்ற நூலில் பதிவு செய்திருக்கின்றார்.


ஜமாஅத்தே இஸ்லாமி அமைப்பின் கொள்கைகள்.


“றசூல்மார்கள் தங்களின் கடமையில் தப்புத் தவறுகள் செய்துள்ளனர். நபிமார்கள் பாவம் செய்துள்ளனர். ஸஹாபா, தாபிஈன்கள், நான்கு மத்ஹப் இமாம்களைப் பின்பற்றத்தேவையில்லை. ஒற்றைக் கண்ணன் தஜ்ஜால் வெளி வருவதைப் பற்றி வந்த ஹதீத்கள் பொய்யாகும். சுபுஹ் தொழுகையில் குனூத் இல்லை. கூட்டு துஆ கூடாது. தராவீஹ் எட்டு ரக்அத்துக்கள். கூட்டு திக்ர், ஸலவாத் கூடாது. அதானுக்கு முன்னால் ஸலவாத் சொல்லக்கூடாது.” இவை ஜமாஅத்தே இஸ்லாமியின் கொள்கைகளாகும். பார்க்க: இறக்குமதியும் குழப்பமும்.


ஷபாஅத்துல் குப்ராவை நிராகரிப்பது வழிகேடாகும். சங்கையான புர்தா ஷரீபில் குர்ஆனுக்கும்,  ஹதீஸுக்கும் விரோதமானவைகள் இருப்பதாகவும் அதில் “யா அக்ரமல் கல்கி மாலீ மன் அலூது பிஹி – சிவாக இந்த ஹுலூலில் ஹாதிதில் அமிமி” என்ற கவியில் பெரிய ஷிர்கு இருப்பதாகவும் இதைச் சொன்ன பூஸரி என்பவர் நரகத்தில் அவர் (எக்காலமும்) தங்கி இருப்பார் என்றும் ஒரு முஸ்லிம் விசுவாசம் கொண்டால் அல்லது சொன்னால் சந்தேகமின்றி அவன் மதம் மாறிய சுத்தமான முர்தத்தாக இருப்பான் என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறேன் என் மர்ஹூம் அல்-ஆலிம் எம்.வை.அப்துஸ் ஸமத் மக்தூமி ஹழ்ரத் அவர்கள் இலங்கை முஸ்லிமின் மத்ஹப் எனும் நூலின் 19ஆம் பக்கத்தில் குறிப்பிடுகிறார்.


அன்ஸார் ஷுன்னத் முஹம்மதிய்யா வழிகெட்ட அமைப்பென்று சொல்லபட்டு. பத்வாக்கொடுப்பட்டது. திருந்தினார்களா? இல்லை. குறைந்தார்களா? அழிந்தார்களா? இல்லை. மாறாக வளர்ந்தார்கள். அத்துடன் அஹ்லுஸ் ஷுன்னத் வல்ஜமாஅத்தினர் தம்மீது பழி சுமத்துவதாக குற்றம் சாட்டினார்கள். அஹ்லுஸ் ஷுன்னத் வல்ஜமாஅத்தினர்தான் வழிகேடர்கள். பித்அத்வாதிகள் என்று தர்வேஷின் அமைப்பு பிரச்சாரம் செய்கின்றது. அவ்வாறே ஜமாஅத்தே இஸ்லாமி வழிகெட்ட இயக்கமென்று சொல்லப்பட்டது. அவர்களது மார்க்கவிரோதக் கருத்துக்கள் சுட்டிக் காண்பிக்கப்பட்டது. அவர்களுக்கு எதிராக நூற்கள் எழுதப்பட்டன. அவர்கள் திருந்தினார்களா? குறைந்தார்களா? அழிந்தார்களா? இல்லை. மாறாக தர்வேஷின் அமைப்பு எவ்வாறு நடந்துகொண்டதோ அவ்வாறே அஹ்லுஸ் ஸுன்னத் வல்ஜமாஅத்தினர் அவர்களின் கருத்துக்களை தவறாக விளங்கிக்கொண்டதாகவே சொன்னார்கள். அஹ்லுஸ் ஸுன்னத் வல்ஜமாஅத்தினர்தான் வழிகேடர்கள், பித்அத்வாதிகள் என்றார்கள்.

தொடரும்.....


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கட்டுரைகள்

“வஹ்ஹாபிகள்” இந்தக் காலத்தின் “க்வாரிஜ்கள்”

  இப்னு அப்தில் வஹ்ஹாபும் இப்னு தைமிய்யாவும்   இப்னு தைமிய்யா என்ற தனி நபரால் விதைக்கப்பட்ட பொய்யான, பிழையான, மார்க்கத்துக்கு ...