சனி, 9 பிப்ரவரி, 2019

தப்லீக் ஜமாஅத்தின் கொள்கைகள்.

தப்லீக் ஜமாஅத்தின் கொள்கைகள்.

நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் மறைவான சங்கதிகளை அறிவார்களென்று நம்புவது சுத்தமான ஷிர்க்காகும். ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் மௌலிதை ஓதுவது ஹிந்துக்களின் நிகழ்வுகளுக்கு நிகரானது. எந்த விதத்திலும் மௌலித் மீலாது நடத்துவது கூடாது. ஸல்லல்லாஹு  அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் பரிசுத்த ரவ்ழா ஷரீபை தரிசிப்பதற்காக மட்டும் போவது ஷிர்க்காகும்.” போன்றவை தப்லீக் ஜமாஅத்தின் உண்மையான கொள்கைகளாகும். 

தப்லீக் இயக்கமானது வஹ்ஹாபிச இயக்கமாகுமென்று நாம் ஏன் சொல்கின்றொம்? என்பதற்கான காரணத்தினை அறிந்திட ஆவலுள்ளவர்கள் “இரு வழிக்கு ஒரு வழிப் பயணனம்” என்ற நமது நூலைப் படித்துப் பாருங்கள். அத்தோடு தப்லீக் ஜமாஅத்தின் பிந்திய வழிகெட்ட பாதையினை தெளிவாகவும் விரிவாகவும் படிக்க விருப்பம்கொள்வோர் சூபி ஷெய்கு நாயகம் அவர்கள் தொகுத்தளித்த நூற்களைப் படித்துப் பாருங்கள். (சூபி மன்ஸில் என்ற இணைய தளத்தில் இப்புத்தகங்களை தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.)

இது வரையில் சொல்லப்பட்ட இயக்கங்கள்தான் இலங்கைக்குள் புகுந்த பிரபல அமைப்புக்களாகும். இவ்வியக்கங்களின் கொள்கைகளைப் படிக்கும்போது அருமை நாயகம் முஜ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களை நிந்தித்து அவமதித்து அசிங்கப்படுத்தி வைப்பது ஒன்றுதான் இந்த அமைப்புக்களின் அடிப்படை அம்சமாக இருக்கிறதென்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. இவற்றின் வருகையினைத் தொடர்ந்து இலங்கை முஸ்லிம்களின் பாரம்பரிய கொள்கைக் கோட்பாடுகளில் பாரிய சரிவு ஏற்பட்டது. பெயரளவில் இவர்களெல்லாம் மாறுபட்டிருந்தாலும் கொள்கையளவில் ஒன்றுபட்டிருந்தார்கள் என்பதே உண்மை.

இலங்கையில் முதன் முதலாக “தர்வேஷ்” என்பவரால் உருவாக்கப்பட்ட அமைப்பு முதல்தொட்டு வெளிவந்த ஜமாஅத்தே இஸ்லாமி, தப்லீக் ஜமாஅத் ஆகிய அமைப்புக்களின்  கொள்கைள் இஸ்லாமிய கொள்கைகள் அல்ல. மாறாக வழிகெட்ட வஹ்ஹாபிசக் கொள்கைகளென்று 1938ஆம் ஆண்டிலிருந்து இன்று வரைக்கும் சொல்லப்பட்டுக்கொண்டே வருகிறது. அதனால் வீணான விதண்டாவாதங்கள் வளர்ந்ததே தவிர அவ்வணியினர்களில் உண்மையை யாரும் விளங்கிக்கொண்டதாக இல்லை. மாறாக நாங்கள் சரியான நிலைப்பாட்டில்தான் இருக்கின்றொம்.
நீங்கள்தான் பிழையான நிலைப்பாட்டில் இருந்துகொண்டிருக்கின்றீர்கள் என்று நம்மைப் பார்த்து குரல் கொடுத்துக்கொண்டிருக்கின்றார்கள். என்றொ ஒரு நாள் தீமை ஒழிந்து உண்மை நிலை நிலைக்கும். இது சத்தியம்.

ஷீஆக்கள்
 இவர்கள் வழிகேடர்கள் என்பதில் நம்மிடம் மாற்றுக்கருத்து இல்லை. ஷீஆக்களும் அவர்தம் கொள்கைகளும், அஹ்லுல் பைத்துக்களை அன்பு கொள்வோம் என்ற இரு நூற்களைத் தொகுத்து ஷீஆக்கள் யார்? என்பதை நாம் தெளிவுபடுத் தியுள்ளோம். 

காதியானிகள்



 இதுவொரு இஸ்லாமிய இயக்கமல்ல என்பது நமது நிலைப்பாடு. அதனால் அவர்கள் பற்றி இவ்விடத்தில் கருத்துக்கூற நாம் விரும்பவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கட்டுரைகள்

“வஹ்ஹாபிகள்” இந்தக் காலத்தின் “க்வாரிஜ்கள்”

  இப்னு அப்தில் வஹ்ஹாபும் இப்னு தைமிய்யாவும்   இப்னு தைமிய்யா என்ற தனி நபரால் விதைக்கப்பட்ட பொய்யான, பிழையான, மார்க்கத்துக்கு ...