புதன், 2 ஜனவரி, 2019

தபர்ருக் என்பதன் பொருள்

தபர்ருக் என்பதன் பொருள்
بسم الله الرحمن الرحيم وبه أستعين

الحمد لله الذي خص أولياءه بجزيل عطائه وأولى أصفياءه بجليل عطائه وشغلهم بمراقبته وذكره والتفكر فى عظمته وكبريائه وأفاض عليهم من سحائب بركاته وآلائه أشهد أن لاإله إلا الله وحده لا شريك له فى أرضه ولا سمائه وأشهد أن سيدنا محمدا عبده ورسوله أرسله رحمة للعالمين وذخيرة للمتبركين وبركة لأهل ولائه وفضله على خاصة أحبابه وختم بمسكه رحيق أنبياءه صلى الله عليه وعلى آله وصحبه وخلفائه وارزقنا الله بركته ومحبته واحشرنا تحت زمرته ولوائه

தபர்ருக் என்பதன் பொருள்



தபர்ருக் என்ற சொல் “தபர்ரக யதபர்ரகு தபர்ருகன்” என்ற அரப் சொல்லில் இருந்து பிறந்ததொரு சொல்லாகும். பரகத் - அருள் தேடுதல் என்பது இதற்கான சொல் அர்த்தமாகும். எனினும் அறிஞர் பெருமக்கள் பின்வரும் கருத்துக்கள் இதற்கு இருப்பதாகவூம் சொல்கின்றனர்.



1.  நிலைத்திருத்தல்



“அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின்” என்று நாம் சொல்கின்றௌம். அதாவதுஇயா அல்லாஹ்! ஸெய்யிதுனா முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் மீதும் அவர்கள் கிளையார் மீதும் நீ வழங்கிய சிறப்பு மற்றும் சங்கைகளை நிலைத்திருக்கச் செய்வாயாக என்பது இதன் பொருளாகும்.



2.  நிலையான சீதேவித்தனம்



“வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு அலைக்கும்” என்ற திரு மறை வசனத்திற்கு விளக்கமளிக்கும் அறிஞர்கள். அல்லாஹ்வின் அருளும் சீதேவித்தனமும் உண்டாகட்டுமாக என்று இதற்கு விளக்கமளிக்கின்றனர் 



“அஸ்ஸலாமு அலைக்க அய்யூஹந்நபிய்யூ வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு” என்பதற்கு விளக்கமளிக்கும்போது அல்லாஹ்வின் அருளும் நிலையான சீதேவித்தனமும் உண்டாகட்டுமாக என்று பொருள் கூறுகின்றனH.



3.  அதிகப்படுத்துதல்



“வபாரிக் லீ ஃபீமா அஃதைத” மேலும் நீ எனக்கு வழங்கியவற்றில் பரகத் செய்திடுவாயாக என்றால் அதிகப்படுத்துதல் என்பது பொருளாகும்.



எனவே எந்தப் பொருளை அல்லாஹ்வூம் அவனது திருத் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களும் பரகத் பொருந்திய பொருட்கள் என்று கூறினார்களோ அந்தப் பொருட்களின் பொருட்டினால் எங்களுக்கு நீ வழங்கிய அருட்கொடைகளில் அபிவிருத்தியை வழங்கிடுவாயாக என்று அல்லாஹ்விடம் பிராHத்திப்பதற்குப் பெயHஅருள் பெறுதல் என்பதாகும்.



தபHருகின் வகைள்



1-    அருமை நாயகம் முஜ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் வாயிலாக அருள் பெறுதல்

2-    நபிமார்கள் மற்றும் ஸாலிஹீன்கள் வாயிலாக அருள் பெறுதல்

3-    குர்ஆன் மற்றும் ஹதீத்கள் வாயிலாக அருள் பெறுதல்

4-    வணக்கங்கள் வாயிலாக அருள் பெறுதல்

5-    துஆக்கள் வாயிலாக அருள் பெறுதல்

6-    இடங்களின் வாயிலாக அருள் பெறுதல்

7-    காலங்களின் வாயிலாக அருள் பெறுதல்

8-    உணவூப் பொருட்கள் வாயிலாக அருள் பெறுதல்

9-    கப்ருகளின் பொருட்டால் அருள் பெறுதல்

10-  உயிருள்ள ஒருவர் மரணித்த ஒருவர் வாயிலாகவூம் மரணித்த ஒருவர் உயிருள்ள ஒருவர் வாயிலாகவூம் அருள் பெறுதல். இவ்வாறு அருள் பெறும் வழிகளை நாம் பட்டியலிட்டுள்ளோம்.

அருள் என்பது எந்தவொரு பொருளிலும் தாமாக உண்டாகுவதில்லை. அல்லாஹ் ஒருவனே அருள்மிக்கவன். அவன் ஒருவனே அருள்பாளிப்பவனாகும். இன்னுமொருவர் அல்லது இன்னுமொரு பொருள் அருள்மிக்கதாக இருக்குமாக இருந்தால் அது அல்லாஹ் ஒருவனால் அந்தப்பொருளுக்கு வழங்கப்படும் சன்மானமே தவிர வேறில்லை. அப்பொருட்களுக்கு அல்லாஹ் அவ்விசேட சிறப்பினை  கொடுக்கவில்லையென்றிருந்தால் அப்பொருட்கள் சாதாரண பொருட்களாகி விடும்.   



எந்தப்பொருளுக்கு அல்லாஹ் அவ்வாறானதொரு தகுதி தராதரத்தினை வழங்கி அப்பொருளை கௌரவப்படுத்தி வைத்தானோ அவ்வாறான பொருளினால் பிறர்கள் அருள் பெற்றுக் கொள்வதற்கே தபர்ருக் அருள் பெறுதல் என்றும் கூறப்படும்.



ஒருவர் இன்னுமொருவர் மூலமாக அல்லது அவர் உபயோகம் செய்த பொருட்களினூடாக அல்லது அவருடன் தொடர்புள்ள பொருட்களினூடாக பரகத் பெற முடியாது. அவ்வாறு பிறரின் மூலமாக பரகத் பெறுதலானது ஷிர்க்காகும் என்ற கருத்துக் கணிப்பீடானது புறம்தள்ளப்படவேண்டியதொரு கருத்தாகும்.



இது சாதாரண பாமர மக்களை மட்டுமன்றி நபிமார்கள்> ஸஹாபாக்கள்> அவ்வாறே தாபிஊன்கள்> இமாம்கள் போன்றவர்களெல்லாம் ஷிர்க் செய்தவர்களாக கருதப்பட வேண்டி வரும். ஷிர்க்கை ஒழித்து ஏகத்துவத்தை உலகத்தில் உரக்கச் சொன்ன உத்தமர்களே ஷிர்க்கான ஒரு விடயத்திற்கு துணை நின்றார்கள் என்று முஸ்லிம்கள் ஒருபோதும் சொல்லப்போவதில்லை. இவ்வாறான பிழையான கருத்துக் கணிப்பீட்டில் நின்றும் நம்மை அல்லாஹ் பாதுகாப்பானாக!



எனவே நபிமார் மற்றும் நல்லடியார்களுடன் சம்பந்தமுள்ள பொருட்களினூடாக தபர்ருக் - அருள் பெறுவதற்கு மார்க்கத்தில் அனுமதி இருக்கிறதென்ற நிலைப்பாட்டை நிறுவி அதுவொரு ஈமானிய அம்சமாகும் என்பதை வலியூறுத்துவதுடன் அது ஷிHக்கான காரியமாகும் என்ற கருத்தைக் குழி தோண்டிப் புதைப்பதற்கு  இந்நூல் போதுமானதாக இருக்கும் என்று கருதுகின்றௌம். அந்த வகையில் எதையெதையெல்லாம் அருள் பொருந்திய பொருட்கள் என்று அல்லாஹ்வாகவே அறிமுகம் செய்துள்ளான் என்பதை முதலில் பட்டியலிட்டுக் காட்ட வேண்டிய பொறுப்பு நமக்கு இருப்பதை உணர்கின்றொம். அந்த வகையில் பின்வரும் பொருட்களை அருள் மிக்க பொருட்களாக அல்லாஹ் அடையாளப்படுத்துகின்றான்.

தொடரும்.......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கட்டுரைகள்

“வஹ்ஹாபிகள்” இந்தக் காலத்தின் “க்வாரிஜ்கள்”

  இப்னு அப்தில் வஹ்ஹாபும் இப்னு தைமிய்யாவும்   இப்னு தைமிய்யா என்ற தனி நபரால் விதைக்கப்பட்ட பொய்யான, பிழையான, மார்க்கத்துக்கு ...