பெண்கள் மூலமாக அருள் பெறுதல்
قال رسول الله صلى الله عليه وآله وسلم أعظم النساء بركة أيسرهن مهرا وتكلفة. أحمد
“இலகுவான மஹர் கொடுக்கப்பட்ட பெண்ணும் குறைவான செலவீனங்கள் உள்ள பெண்ணும் அதிக அருள் நிறைந்த பெண்ணாகும் என்று பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் நவின்றார்கள்.”
அஹ்மத்
ஸலாம் சொல்வதன் மூலமாக அருள் பெறுதல்
أن رسول الله صلى الله عليه وآله وسلم قال يابني إذا دخلت على أهلك فسلم يكون بركة عليك وعلى أهل بيتك. الترمذي
“நீங்கள் உங்கள் குடும்பங்களிடம் சென்றால் அவர்களுக்கு சலாம் சொல்லுங்கள். அது உங்களுக்கும் அவர்களுக்கும் அருளாகும்.”
திர்மிதி
இரத்தம் குத்தி எடுப்பதன் மூலமாக அருள் பெறுதல்
قال رسول الله صلى الله عليه وآله وسلم الحجامة على الريق أمثل وفيه شفاء وبركة. البيهقي
“இரத்தம் குத்தி எடுங்கள். அது நோய் நிவாரணியூம் அருளுமாகும்.”
பைஹகீ
ஸம்ஸம் மூலமாக அருள் பெறுதல்
قال رسول الله صلى الله عليه وآله وسلم إن ماء زمزم مباركة
“நிச்சயமாக ஸம்ஸம் நீரானது அருள் நிறைந்ததொரு நீராகும்.”
பெருநாள் மூலமாக அருள் பெறுதல்
كنا نؤمر أن نخرج يوم العيد حتى تخرج البكرمن خدرها ويخرج الحيض فيكن خلف الرجال يرجون بركة ذلك اليوم
“பெருநாள் தினத்தின் அருளைப் பெற்றிடுவதற்காக கண்ணிப் பெண்கள் அவ்வாறே ஹைழுடைய நிலையில் உள்ள பெண்களும் தொழுமிடம் செல்லுமாறு நாம் வேண்டப்பட்டிருந்தோம்.”
சாப்பிடுவதற்கு முன்னும் பின்னும் வுழுச் செய்து கொள்வது அருளாகும். சூடான உணவூகளைத் தவிர்த்து குளிரானவற்றை உண்ணுங்கள். அது அருளாகும்.
நாளின் மூலமாக அருள் பெறுதல்
عن جابر بن عبد الله رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وآله وسلم دعا فى مسجد الفتح ثلاثا يوم الإثنين ويوم الثلثاء ويوم الأربعاء فاستجيب له يوم الأربعاء بين الوقوف فعرف البشر فى وجهه قال جابر فلم ينزل بي أمر مهم غليظ إلا توخيت تلك الساعة فأدعوا فيه فأعرف الإجابة. أحمد والبزار ومجمع الزوائد
“அருமை நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் மஸ்ஜிதுல் ஃபத்ஹில் திங்கள், செவ்வாய், புதன் ஆகிய மூன்று தினங்கள் பிரார்த்தனை செய்தார்கள். புதன் கிழமைதான் பிரார்த்தனை அங்கீகரிக்கப்பட்டது. அவர்களின் வதனத்தில் சந்தோசம் தெரிந்தது என்று இதனை அறிவிப்புச் செய்யும் நபித் தோழர் ஜாபிர் ரழியல்லாஹு அன்ஹு பின்வருமாறு கூறினார்கள். அதாவது: எனக்கு ஏதாவது சிரமம் ஏற்பட்டால் அந்த நேரத்தை கவணத்தில் கொண்டு பிரார்த்திப்பேன். சிரமம் நீங்கிவிடுவதையும் கண்டுள்ளேன்.”
அஹ்மத்,பஸ்ஸார், மஜ்மஉஸ் ஸவாயித்
நல்லடியார்களை நினைவு கூர்வதன் மூலமாக அருள் பெறுதல்
عند ذكر الصالحين تنزل الرحمة
“நல்லடியார்கள் நினைவு கூறப்படுகின்ற போது அருள்கள் இறங்குகின்றன” என்று ஹழ்ரத் சுப்யான் பின் உயைனா ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் சொல்ல நான் செவியுயூற்றேன் என்று இமாமுனா அஹ்மத் பின் ஹன்பல் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
கூட்டாக இருப்பது மூலமாக அருள் பெறுதல்
وَاعْتَصِمُوا بِحَبْلِ اللَّهِ جَمِيعًا وَلَا تَفَرَّقُوا ۚ وَاذْكُرُوا نِعْمَتَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ كُنتُمْ أَعْدَاءً فَأَلَّفَ بَيْنَ قُلُوبِكُمْ فَأَصْبَحْتُم بِنِعْمَتِهِ إِخْوَانًا وَكُنتُمْ عَلَىٰ شَفَا حُفْرَةٍ مِّنَ النَّارِ فَأَنقَذَكُم مِّنْهَا ۗ كَذَٰلِكَ يُبَيِّنُ اللَّهُ لَكُمْ آيَاتِهِ لَعَلَّكُمْ تَهْتَدُونَ (103)
“நீங்கள் அனைவரும் (ஒற்றுமை எனும்) அல்லாஹ்வின் கயிற்றைப் பலமாக பற்றிப் பிடியூங்கள். நீங்கள் பிரிந்து விடாதீர்கள். நீங்கள் பகைவர்களாக இருந்த போது உங்களது உள்ளங்களுக்கிடையில் இணைப்பை ஏற்படுத்தி அவனது அருளினால் நீங்கள் சகோதரர்களாக மாறியதையும், நீங்கள் நரகக் குழியின் விளிம்பில் இருந்த போது அதைவிட்டும் உங்களை அவன் காப்பாற்றி, உங்கள் மீது அல்லாஹ் புரிந்த அருட்கொடையை நினைவு கூருங்கள்.”
ஆல இம்ரான் 103
قال رسول الله صلى الله عليه وآله وسلم الجماعة بركة والفرقة عذاب. أحمد والطبراني والبيهقي
“ஒற்றுமையுடன் இருப்பது அருளாகும். பிரிந்து வாழ்வது வேதனையாகும் என்று ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.”
அஹ்மத் , தபரானி, பைஹகீ
يد الله مع الجماعة. الترمذي
“ஒற்றுமையுடன் கூட்டாக இருப்பவர்களுக்கு அல்லாஹ்வின் உதவி கிடைக்கிறது.” திர்மிதி
பிரிந்து பிளவுபட்டு முஷ்ரிகீன்களுக்கு ஒப்பாகாதீர்கள்.
ولا تكونوا من المشركين من الذين فرقوا دينهم وكانوا شيعا كل حزب بما لديهم فرحين. الروم 31-32
“எவர்கள் தங்கள் மார்க்கத்தைப் பிரித்து பல குழுக்களாக ஆக்கிவிட்டார்களோ அவர்களில் நீங்கள் ஆகிவிட வேண்டாம்.” என்று அல்லாஹ் சொன்ன பின்னரும் நாம் இன்று பல குழுக்களாக காணப்படுகின்றொம்.
தப்லீக், ஜமாஅதே இஸ்லாமி, காதியானி, கர்ணீ போன்ற நவீன வழிகெட்ட கூட்டங்கள் நம்நாட்டுக்குள் நுழையூம் வரை இந்நாட்டு மக்கள் ஒற்றுமையூடன் வாழ்ந்திருக்கிறார்கள். அவ்வாறு ஒற்றுமையுடன் சந்தோசமாக வாழ்ந்த மக்கள் மத்தியில் இக்கூட்டங்களின் வருகை பாரிய விரிசலை ஏற்படுத்தியது. பிரிந்து செல்வதும் பிரிவை ஏற்படுத்துவதும் முஷ்ரிகீன்களின் செயலாகும்.
ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களையும் நபிமார்கள் வலிமார்ளையும் அஹ்லுஸ் ஸுன்னத் வல்ஜமாஅத்தினர்களான நாம் அளவு கடந்து புகழ்வதாக குற்றம் சாட்டி ஒற்றுமையாக இருந்த நம்மைப் பிரித்து சின்னாபின்னமாக்கி விட்டனர். இவர்களால் ஏற்படுத்தப்பட்ட இப்பாரிய இழப்பு, பிளவு நீங்கி மீண்டும் இந்த உம்மத் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று உங்களுக்கு ஆசை இருக்குமாக இருந்தால் அந்த ஆசை அருமை நாயகம் முஜ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் ஒருவரால் மாத்திரமே அது சாத்தியப்படும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
அப்படியானால் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் மீண்டும் வருவார்கள் என்று கூறுகின்றீர்களா? என்று நம்மைப் பார்த்துக் கேட்டால் ஆம் என்றே நாம் அதற்கு பதில் கூறுவோம். அதாவது ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் பெயர் தாங்கிய மஹ்தி அலைஹிஸ்ஸலாம் தோன்ற வேண்டும் என்று சொல்கின்றொம்.
ஒற்றுமையாக இருக்கும் இருவருக்கு மத்தியில் பிரிவினையை ஏற்படுத்துவது இப்லீசுக்கு மிக விருப்பமான செயலாகும் என்று ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் நவின்றுள்ளார்கள்.
பார்க்க- முஸ்லிம்
நாம் நபிமார் வலிமார் அருளால் நலம் என்று கூறலாமா?
...وَاذْكُرُوا نِعْمَتَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ كُنتُمْ أَعْدَاءً فَأَلَّفَ بَيْنَ قُلُوبِكُمْ فَأَصْبَحْتُم بِنِعْمَتِهِ إِخْوَانًا وَكُنتُمْ عَلَىٰ شَفَا حُفْرَةٍ مِّنَ النَّارِ فَأَنقَذَكُم مِّنْهَا...
மேற்சொன்ன இறை வசனத்தில் சொல்லப்பட்ட அல்லாஹ்வின் அருள் என்பது அருமை நாயகம் முஜ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் அன்றி வேறு யாருமில்லை. அந்த அருளினால்தான் நாம் ஒற்றுமையாக இருந்தோம். அந்த அருள்தான் நம்மை நரக விளிம்பில் இருந்தும் பாதுகாத்தது.
எனவேஇ நாம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் பரக்கத்தினால் ஈமான் உள்ளவர்களாக இருக்கின்றொம். அவர்களின் ஷஃபாஅத்தின் அருளினால் சுவனமும் செல்ல இருக்கின்றோம். அவர்களது துஆவின் அருளினால் நாங்கள் அழிக்கப்படாது பாதுகாக்கப்படுகின்றோம். எனவே தான் நாம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் பரக்கத்தினால் அல்லது வலிமார்கள் பரக்கத்தினால் நலமாக இருக்கின்றொம் என்று மகிழ்ச்சியுடன் கூறி வருகின்றொம்.
மாலையின் பரகத்
தண்ணீர் கிடைக்கப் பெறாத சந்தர்ப்பத்தில் மண்ணின் மூலமாக தயம்மம் செய்து கொள்வது தொடர்பான இறை வசனம் உம்முல் முஃமினீன் அன்னை ஆயிஷா ஸித்தீக்கா ரழியல்லாஹு அன்ஹா அன்னவர்களின் மாலை தொலைந்து போன சந்தர்ப்பத்தில் இறங்கியிருக்கிறது. அப்பொழுது
ما كان أعظم بركة قلادتك
“உங்கள் மாலையின் பரகத்தின் அற்புதம்தான் என்ன” வென்று ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் ஆச்சரியப்பட்டிருக்கிறார்கள்.
தொடரும்.....










கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக