புதன், 2 ஜனவரி, 2019

نحن فى بركة الرسول صلى الله عليه وآله وسلم ( பரகத்)

முன்னுரை 

بسم الله الرحمن الرحيم

عن أم المؤمنين عائشة رضي الله تعالى عنها قالت سمعت رسول الله صلى الله عليه وآله وسلم يقول: إن المؤمن ليدرك بحسن خلقه درجة الصائم القائم.

“பகலில் நோன்பு நோற்று இரவில் நின்று வணக்கம் புரிபவரின் அந்தஸ்த்தினை தனது நற்குணத்தின் மூலமாக ஒரு முஃமின் பெற்றுக் கொள்கிறார்  என்று பெருமானார்  ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் கூறியூள்ளார்கள்” அறிவிப்பாளர்: உம்முல் முஃமினீன் அன்னை ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா. நூல்: அபூ தாவூத், அஹ்மத்

ஒரு மனிதன் சகதோழனுடைய உரிமைக மற்றும் கடமைகளைப் பேணி அழகிய பன்பாட்டுடன் நடந்து கொள்கின்ற ஒருவருக்கு இவ்வாறானதொரு அந்தஸ்தினை அல்லாஹ் அள்ளி வழங்குகின்றான் என்றால் அல்லாஹ்வின் உரிமைகளை மற்றும்  கடமைகளைப் பேணிப் பாதுகாப்பவருக்கு என்ன அந்தஸ்த்து அவனிடம் கிடைக்கும் என்று எண்ணிப் பாருங்கள். 

நற்குணத்தின் மறு பெயர் தஸவ்வூஃபாகும். நற்குணம் என்ற சூபித்துவ தன்மை உள்ள ஒருவர் பிறர்களையூம் பிறர்களது உடமைகளையூம் கடமைகளையூம் மதிக்கின்ற கௌரவிக்கின்ற மனப்பாங்கு கொண்டவராகத் திகழ்வார். இதுஇ நபிமார் மற்றும் நல்லடியார்களின் நெருக்கத்தினால் உண்டாகின்றதொரு உளவியல் மாற்றமே தவிர ஏட்டுப் படிப்புக்களால் ஏற்படும் ஒன்றல்ல.   

உள்ளமை மற்றும் பன்புகள் என்பன வாஜிப் - கட்டாயமாக இருப்பவனுக்குப் பெயர் அல்லாஹ் என்பதாகும். எனவே அகிலங்களை அல்லது அதிலுள்ளவைகளைப் பார்த்து அல்லாஹ் என்று சொல்வது நற்குணம் ஆகாது. அவ்வாறே அல்லாஹ்வின் அடியார்களான நபிமார் மற்றும் நல்லடியார்களின் நினைவுச் சின்னங்களை தவறான கண்கொண்டு பார்ப்பதும் தவறாக சித்தரிப்பதும் சிறந்த நற்குணமாகாது.

நபிமார் மற்றும் நல்லடியார்கள் அல்லாஹ்வின் சின்னங்கள். அவனின் அத்தாட்சிகள். அவனால் அருள்பாளிக்கப்பட்டவர்கள். எனவே அவர்களும் அவர்களுடன் தொடர்புள்ளவைகளும் கண்ணியப்படுத்தப்படல் வேண்டும்.  அதனூடாக அருள் பெற வேண்டும். இது  தக்வா எனும் நற்பண்பாகும். 

அல்லாஹ்வின் பேரருளான பெருமானார் முஜ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் மண்ணில் பிறப்பதற்கு முன் அவ்வாறே பிறந்த பின் மற்றும் மறைந்த பின் என முக்காலத்திலும் பிறர்களுக்கு அருளாக இருந்துள்ளார்கள் என்பதற்கு “உம்மை அருளாகவே அன்றி நாம் அனுப்பி வைக்கவில்லை” என்ற இறை வசனம் ஒன்றே போதுமானது.


ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض. الأعراف 96
“நிச்சயமாக இந்த கிராமங்களில் உள்ளவர் கள் நம்பிக்கை கொண்டு (அல்லாஹ்வை) அஞ்சி நடந்தால் அவர் களுக்கு வானம் மற்றும் பூமியில் இருந்து பரக்கத்துக்களைத் திறந்து விடுவோம்”. 
அல்அஃராஃப் வசனம் 96

நபிமார்  மற்றும் நல்லடியார் கள் வானம் மற்றும் பூமியில் உள்ள பரக்கத்துக்களில் உள்ளடங்குகின்றார் கள். எனவே அந்த பரக்கத்துக்கள் எம்மை வந்தடைய வேண்டுமாக இருந்தால் நாம் ஈமான்தாரிகளாகஇலங்குவதுடன் அல்லாஹ்வை அஞ்சி அவனது கடமைகளை ஒழுங்காக நிறைவேற்றுபவHகளாகவூம் இருக்க வேண்டும். இதுஇ அல்லாஹ்வின் அருள் நம்மை வந்தடைவதற்காக அவன் விதித்த நிபந்தனைகளாகும்.

எனவே ஈமான் கொள்ளாமல் அமல்கள் புரியாமல் அல்லாஹ்வின் அருள் எவ்வழியிலும் எம்மை வந்தடையாதென்பதையும் நாம் புரிந்து கொள்ள கடமைப்பட்டுள்ளோம். அவ்வாறே எவ்வழிகளிலெல்லாம் அருள் கிடைக்கும் என்று அடையாளப்படுத்தப்படுமோ அவ்வழிகள் யாவும் நல்லமல்கள் என்ற பட்டியலுக்குள் உள்ளடங்கப்பட்டு விடுகிறது.ஆகவே அவ்வமல்களில் இருந்து எவர்கள் பிறர்களைத் தடுப்பவர்களோ அவர்கள் அநியாயக்காரர்கள் ஆகும்.

وأقيموا الصلاة وآتوا الزكاة وأطيعوا الرسول لعلكم ترحمون. النور 56

“நீங்கள் அருள் செய்யப்படும் பொருட்டு தொழுகையை நிலைநாட்டுங்கள். ஸகாத்தையும் கொடுங்கள். இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்.” 
அந்நூர்  வசனம் 56

எனவே, அல்லாஹ்வின் அருளைப் பெற வேண்டும் என்ற ஆசை கொண்டோர்  தொழுகையை நிலை நாட்டுங்கள்.ஸகாத் கடமையை நிறைவேற்றுங்கள். அத்துடன் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர் களுக்கு கட்டுப்பட்டு நடந்து கொள்ளுங்கள். அப்பொழுதுதான் அவனது அருள் நம்மை வந்தடைவதற்கு நாம் தகுதி பெறுவோம்.

பட்டம், பதவி, பணம், சொத்து, சுகம் இவைகள் மேலோட்டமான அருளாகும். இவ்வாறான அருள் சகலருக்கும் கிடைக்கும். இவ்வருள் கிடைப்பதற்கு மேற்கூறிய நிபந்தனைகள் எதுவூம் அவசியம் இல்லை. 

إن قارون كان من قوم موسى فبغى عليهم وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بالعصبة أولى القوة. القصص.76

“நிச்சயமாக காரூன் மூசாவின் சமூகத்தைச் சார்ந்தவனாக இருந்தான். அவன் அவர்கள் மீது வரம்பு மீறினான். மேலும் நாம் அவனுக்கு பல பொக்கிஷங்களை வழங்கியிருந்தோம்.” 
சூரத்துல் கஸஸ் வசனம் 76

அல்லாஹ்வூக்கு முற்றிலும் மாறு செய்த காரூனுக்கு பல பொக்கிஷங்களைக் கொடுத்ததாக இங்கே அல்லாஹ் குறிப்பிடுவதைப் பார்க்கும் போது பணம், பட்டம் என்பன பிரதானமான அருள் அல்ல என்பது தெளிவாகிறது. அப்படியானால் உண்மையானயதார்த்தமான அருள் எது? என்று கேட்கத் தூண்டுகிறதல்லவா!

وأما الذين ابيضت وجوههم ففى رحمة الله هم فيها خالدون. آل عمران 107

“இன்னும் எவர்களது முகங்கள் வெண்மையாகி விட்டனவோ அவர்கள் அல்லாஹ்வின் அருளில் இருப்பார்கள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.”
ஆல இம்ரான் 107ஆம் வசனம்.

இவ்வசனத்தில் குறிப்பிடப்பட்ட முகங்கள் வெண்மையானவர் என்பதற்கு நபித் தோழர் ஸெய்யிதுனா இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் கருத்தின் அடிப்படையில் அவர்கள் அஹ்லுஸ் ஸஷுன்னத் வல் ஜமாஅத்தினர்களாகும். எனவே உண்மையான யதாHத்தமான அருள் என்றால் அதுஇ அஹ்லுஸ் ஸஷுன்னத் வல் ஜமாஅத் கொள்கையாகும் என்பது தெளிவானது.

ما يفتح الله للناس من رحمة فلا مسك لها وما يمسك فلا مرسل له من بعده وهو العزيز الحكيم.

“அல்லாஹ் தனது அருளை மனிதHகளுக்குத் திறந்து விட்டால் அதனைத் தடுப்பவர் எவருமில்லை. அவன் தடுத்து விட்டால் அவனுக்குப் பிறகு அதனை அனுப்புவர் எவருமில்லை. அவன் யாவற்றையூம் மிகைத்தவன். ஞானமிக்கவன்.” 
ஃபாதிர் வசனம் 02

இதனடிப்படையில் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் என்ற அருளை அல்லாஹ் எவருக்கு வழங்கி விட்டானோ அந்த அருளை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. அவ்வாறே அவ்வருளை எவருக்கு அல்லாஹ் வழங்காது விட்டு விட்டானோ அதனை யாராலும் வழங்கவும் முடியாது. 

إن رحمت الله قريب من المحسنين. الأعراف 56

“நிச்சயமாக அல்லாஹ்வின் அருள் முஹ்ஸினீன்களுக்கு நெருக்கமாக இருக்கிறது.” 
அல்அஃராப் வசனம் 56

முஹ்ஸின் என்ற சொல் இஹ்ஸான் என்ற சொல்லைச் சார்ந்ததாகும். இஹ்ஸான் என்பது சூபிசமாகும். எனவேஅஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்தினர் என்றால் அவர்கள் சூபிகளாகும். அதாவது நற்குணம் கொண்டவர்களாகும். ஆகவே படைப்புக்களை மதிக்க வேண்டும். அவ்வாறே படைப்பாளனையும் மதிக்க வேண்டும்.  

அல்லாஹ்வின் அருளைப் பெற்ற அருமைத் தோழர்கள் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்தினர்கள் ஆகும். அவர்கள் யாவரும் அருமை நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களை அல்லாஹ்வின் பேரருளாகப் பார்க்கின்றார்கள். அல்லாஹ்வின் பிரதான அத்தாட்சியாகப் பார்க்கின்றார்கள். மிக முக்கியமான அல்லாஹ்வின் சின்னமாகப் பார்க்கின்றார்கள். அதனால் அவர்களின் உச்சந் தலையிலிருந்து உள்ளங் கால் வரையிலான சகலதையூம் அருளாகப் பார்த்தார்கள். மட்டுமல்லாமல் அவற்றினூடாக அருளையும் பெற்றுக் கொண்டார்கள். இந்த நம்பிக்கை இன்று எவரிடம் இருக்குமோ அவரே அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்தினராக கருதப்படுவார்

ஆரம்பம் முடிவு மாற்றம் என்பன அற்ற வாஜிபுல் வுஜுத் உள்ள ஒருவனுக்குச் சொந்தமான “அல்லாஹ்” என்ற நாமத்தினை ஆரம்பம் முடிவூ மற்றும் மாற்றங்கள் உள்ள அவனால் வூஜுத் வழங்கப்பட்ட படைப்புக்களைப் பார்த்து அப்பெயர் கொண்டு அழைப்பது அதப் - நல்லொழுக்கம் அல்ல. அவ்வாறே அருமை நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களை சாதாரண ஒருவராகக் கருதி பிற வஸ்துக்களையும் அவர்களையும் ஒன்றாகப் பார்ப்பதும் அதப் - நல்லொழுக்கம் அல்லவென்பதைத் தௌளிவாகப் புரிந்து கொள்ளும் பாக்கியத்தினை வல்லவன் அல்லாஹ் நம்மனைவருக்கும் வழங்கி அருள் புரிவானாக! 

ورحمت ربك خير مما يجمعون. الزخرف 32

“அவர்கள் ஒன்று திரட்டியிருப்பதை விட உமது இரட்சகனின் அருள் மிகச் சிறந்ததாகும்.” 
அஸ்ஸஷுக்ருப் வசனம் 32

இலங்கைத் திரு நாட்டின் வரலாற்றுக்கு முற்பட்ட காலப் பகுதியில் இருந்து இங்கே அரேபிய குடியேற்றம் இடம் பெற்று விட்டது. கிரேக்கர்கள் இந்த நாட்டின் அடையாளத்தினை அரபிகளிடம் இருந்தே பெற்றிருக்கிறார்கள். வர்த்தக நோக்கத்திற்காகவே அரேபிகள் இந்த நாட்டில் குடியேறியதாக மாற்று மத சகோதரர்கள் கருதுகின்றனர். ஆனாலும் அவர்களின் வருகைக்குரிய குறிக்கோல் வர்த்தகம் அல்ல. மாறாக முதல் மனிதர் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பாதச் சுவட்டினைத் தரிசிக்க வந்தவர்கள் தான் பின்னர் வர்த்தகத்திலும் ஈடுபட்டுக் கொண்டனர். இதனடிப்படையில்தான் இப்னு பதூதாவின் இலங்கைக்கான வருகையூம் இடம் பெற்றிருக்கிறது. நபிமார் மற்றும் நல்லடியார்களின் நினைவூச் சின்னங்கள், பனூ இஸ்ரவேலர்களின் குடும்ப வாரிசான வஹ்ஹாபிஷம் தோற்றமெடுக்கும் வரை உலகம் பூராகவூம் அச்சின்னங்கள் பாதுகாக்கப்பட்டு சங்கை செய்யப்பட்டிருக்கிறது. அவற்றைத் தேடித் தேடி இஸ்லாமியர்கள் தரிசித்து அருள் பெற்றிருக்கிறார்கள்.

இப்னு பதூதா தனது பயணக் குறிப்புக்களில் தான் மக்கமா நகருக்குச் சென்ற சமயம் தான் கண்ட காட்சிகளை இப்படி விபரிக்கின்றார். உலகின் பல பாகங்களில் இருந்தும் ஹஜ்ஜுக்காக அங்கு வருகின்ற மக்கள் ஸஹாபாக்களின் குடியிருப்புக்களை கண்ணுற்ற போது கதறி அழுதார்கள். இதோ இங்கேதான் ஹம்ஸா ரழியல்லாஹு அன்ஹு குடியிருந்தார்கள். இது ஹழ்ரத் அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் பிறந்த வீடு. இதுதான் இறைத் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் ஹிஜ்ரத்திற்கு முன் வாழ்ந்த வீடு. இது ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் திருப் பாதம் பட்ட இடம் என்று கூறி அவ்விடத்தை முத்தமிட்டு பேரன்பினால் அழுவார்கள். அருளை எதிர்பார்த்தார்கள் என்று குறிப்பிடுகிறார்

இவ்வாறு இஸ்லாமிய உம்மத்தினரால் பாதுகாக்கப்பட்டு அருள் பெறப்பட்ட ஸஹாபாக்களின் புராதன குடியிருப்புக்கள் அவர்கள் நல்லடக்கம் செய்யப்பட்ட புனித அடக்கஸ்தளங்கள் எல்லாம் இடித்துத் தரைமட்டமாக்கிய வஹ்ஹாபிகள் ஐக்கிய நாட்டு சபையின் மேற்பார்வையில் சவூதியில் உள்ள யூதர்களின் குடியிருப்புக்கள், கைபர்நிலப்பரப்பில் காணப்பட்ட யூதர்களின் கல்லறைகளை அவர்களின் மதச் சின்னங்களை அதிக கரிசனை எடுத்து பாதுகாக்கின்றனர்

வஹ்ஹாபிகளின் தலை நகரான ரியாதில் மன்னர் பஹ்த் பல்கலைக் கழகத்தில் இஸ்ரேலின் தொல்பொருள் மையம் இருக்கிறது. யூதர்களின் புராதனச் சின்னங்களை மற்றும் கல்லறைகளைப் பாதுகாக்கும் முகமாகஇ The American, Arab Archaeological Center என்ற பெயரில் செயல்படுகின்றமை இங்கு அவதானிக்கத் தக்கது.

இஸ்ரேலின் இரத்த உறவான அரபு மொழி பேசும் அல்மசாலிஹ் கோத்திரமும் நஜ்தைச் சேர்ந்த அல்தமீமி காட்டறபிக் கோத்திரமும் திருமண ஒப்பந்தம் மூலம் உருவாக்கிய ஒரு தீய சந்ததியில் இருந்தே அல்மர்த்காயின் மகன் சவூத் தோன்றினான். சவூத் என்பது யூதர்களின் கடவூளுக்கு வழங்கும் பெயர்களில் ஒன்றாகும். இதன் பொருள் மறைந்திருந்து யூதர்களை இரட்சிப்பவன் என்பதாகும். இப்னு அப்தில் வஹ்ஹாப் தவறான வழியில் கருவூற்று பிறந்தவர். சவூத் மற்றும் இப்னு அப்தில் வஹ்ஹாப் ஆகிய தம்பதிகளினால் தோற்றம் பெற்றது வஹ்ஹாபிஷம்.

யா அல்லாஹ்! உன்னோடும் உனது ஹபீபான நாயகம் முஜ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களோடும் அவ்வாறே ஏனைய ஸாலிஹான நல்லடியார்களோடும் அதபோடு நடந்து கொள்ளும் அருள் பெற்ற அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் கூட்டத்துடன் எங்களையும் எங்களது பெற்றார்கள் உற்றார் உறவினர்கள் மனைவி மக்கள் மாணவ மாணவிகளையும் சேர்த்து விடுவாயாக! அவ்வாறே இது போன்ற நற்பணியில் எம்மோடு கரம் கோருத்துள்ள அனைத்து இதயங்களுக்கும் இதமான வாழ்க்கையாக ஈருலக வாழ்க்கையினையும்  வழங்கி சிறப்பிப்பாயாக! ஆமீன் பிஜாஹி ஸெய்யிதில் ஆலமீன் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம்.


njhlUk;.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கட்டுரைகள்

“வஹ்ஹாபிகள்” இந்தக் காலத்தின் “க்வாரிஜ்கள்”

  இப்னு அப்தில் வஹ்ஹாபும் இப்னு தைமிய்யாவும்   இப்னு தைமிய்யா என்ற தனி நபரால் விதைக்கப்பட்ட பொய்யான, பிழையான, மார்க்கத்துக்கு ...