புதன், 9 ஜனவரி, 2019

மதீனத்து மண்ணின் அருள்

மதீனத்து மண்ணின் அருள்


عن أم المومنين عائشة رضي الله تعالى عنها أن رسول الله صلى الله عليه وآله وسلم كان إذا اشتكى الإنسان الشيء منه أو كانت به قرحة أو جرح قال النبي صلى الله عليه وآله وسلم بإصبعه هكذا ووضع سبابته بالأرض ثم رفعها باسم الله تربة أرضنا بريقة بعضنا ليشفى بها سقيمنا بإذن ربنا. متفق عليه

“யாராவது ஒருவர் தனக்கு பரு அல்லது காயம் அல்லது வருத்தம் இருப்பதாக முறையிட்டால் தனது சுட்டு விரலினால் மண்ணைத் தொட்டு இந்த மண்ணின் அருளினால் அல்லாஹ் சுத்தை வழங்குவான் என்று சொல்வார்கள்.”
புகாரி, முஸ்லிம்

غبار المدينة شفاء

“மதீனத்துப் புழுதி நோய் நிவாரணியாகும் என்று ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் நவின்றார்கள்.”

நபிமார் மற்றும் நல்லடியார்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள பூமியில் அடக்கம் செய்யப்படுவது மூலமாக அருள் பெறுதல்


عن أبي هريرة رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وآله وسلم أخبر عن موسى عليه السلام حين جاءه ملك الموت أنه سأل الله أن يدنيه من الأرض المقدسة رمية بحجر. البخاري ومسلم.

“நபிய்யுல்லாஹ் மூசா அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் மலகுல் மௌத் வந்தபோது பைத்துல் முகத்தஸ் அருகில் அவரைக் கொண்டு செல்லுமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தனை புரிந்ததாக ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் நவின்றுள்ளார்கள்.”
புகாரி, முஸ்லிம்

واجعل موتى فى بلد رسولك صلى الله عليه وآله وسلم. البخاري

“ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் ஊரில் எனது மரணத்தை ஏற்படுத்து என்று ஹழ்ரத் உமர் ரழியல்லாஹு அன்ஹு துஆ செய்துள்ளார்கள்.”
புகாரி

மதீனத்து பழத்தின் மூலமாக அருள் பெறுதல்


قال النبي صلى الله عليه وآله وسلم من أكل سبع تمرات مما بين ربتيها حين يصبح لم يضره سم حتى يمسى. مسلم

“மதீனத்து ஈச்சம் பழத்தில் ஏழு பழங்களை யாரொருவர் காலையில் சாப்பிடுகிறாரோ அவருக்கு மாலை வரை விசம் ஏறாது என்றார்கள் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள்.”
முஸ்லிம்

பாதங்களை முத்தமிட்டு அருள் பெறுதல்


ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் பாதங்களை நபித் தோழர்கள் பலர் முத்தமிட்டுள்ளார்கள். அந்த வகையில் உமர் ரழியல்லாஹு அன்ஹு முத்தமிட்டிருக்கிறார்கள். அவ்வாறே தல்ஹா ரழியல்லாஹு அன்ஹு முத்தமிட்டுள்ளார்கள்.

ஸெய்யிதுனா அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் பாதங்களை முத்தமிட்டிருக்கிறார்.

இமாம் முஸ்லிம் அவர்கள் இமாம் புகாரி அவர்களை சந்திக்கச் செல்லும் சந்தர்ப்பத்திலெல்லாம் உங்கள் இரு பாதங்களையும் முத்திடுவதற்கு தாருங்கள் என்று கூறியிருக்கிறார்கள்.

ஸெய்யிதுனா உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் நபித் தோழர்அபூ உபைதா ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் பாதத்தினை முத்தமிட எத்தனித்தபோது அவர் தடுத்துவிட்டார். 
பார்க்க: அத்தபர்ருக் பிஸ்ஸாலிஹீன வஆதாரிஹிம் பக்கம் 91-93

ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் திருச் சபையில் அமர்வதன் மூலமாக அருள் பெறுதல்



عن أنس رضي الله تعالى عنه قال كان أخوان على عهد رسول الله صلى الله عليه وآله وسلم فكان أحدهما يأتي النبي صلى الله عليه وآله وسلم والآخر يحترف فشكا المحترف أخاه إلى النبي صلى الله عليه وآله وسلم فقال لعلك ترزق به. الترمذي

“நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவdகள் காலத்தில் இரு சகோதரர்கள் இருந்தனர். அதில் ஒருவர் தொழிலுக்குச் செல்பவராகவும் மற்றவர் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களுடன் அமர்வதையும் வழக்கமாக கொண்டிருந்தார். தொழிலுக்குச் செல்பவர் தனது மற்ற சகோதரர் பற்றி முறைப்பாடு செய்தபோது அவரின் அருளினால்தான் உங்களுக்கு உணவளிக்கப்படுகிறதென்று உரைத்தார்கள்.”
திர்மிதி

ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் பாதணிகள் வாயிலாக அருள் பெறுதல்


நபித் தோழர் ஷத்தாத் பின் அவ்ஸ் அல்அன்ஸாரி ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடம் இருந்த ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் பாதணியின் இரட்டை சோடிகளையும் தன்னுடைய மகன் முஹம்மத் என்பவரிடம் ஒப்படைத்திருந்தார். பின்னர் அதில் ஒன்றை அவரது சகோதரி தனது பிள்ளைகள் அதன் வாயிலாக அருள் பெறவேண்டும் என்று கூறி எடுத்துச் சென்ற செய்தியினை ஹாபிழ் தஹபி குறிப்பிடுகிறார்.

عن صالح بن درهم يقول انطلقنا حاجين فإذا رجل فقال لنا إلى جنبكم قرية يقال لها الأبلة قلنا نعم. قال من يضمن لي منكم أن يصلى لي فى مسجد العشار ركعتين أو أربعا ويقول هذه لأبي هريرة سمعت خليلي أبا القاسم صلى الله عليه وآله وسلم يقول إن الله عز وجل يبعث من مسجد العشار يوم القيمة شهداء لا يقوم مع شهداء بدر غيرهم. أبوداؤد                                 

“இப்ராஹீம் பின் ஸாலிஹ் பின் திர்ஹம் என்பவர் தனது தந்தை சொன்னதாகச் சொல்கிறார். நாங்கள் ஹஜ்ஜுக்காக வெளிப்பட்டுக் கொண்டிருந்தோம். அப்பொழுது (அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு) ஒருவர்  உங்களது ஊருக்கு அருகாமையில் “உபுல்லா” என்றதொரு கிராமம் இருக்கிறதா? என்று கேட்டார். (இது பஸராவுக்கு அருகில் பிரபலமானதொரு கிராமத்தின் பெயர்) ஆம் என்றொம். (அங்குள்ள) மஸ்ஜிதுல் இஷார் என்ற பள்ளிவாயிலில் அபூ ஹுரைராவாகிய எனக்காக இரண்டு அல்லது நான்கு ரக்அத்துக்கள் தொழுது கொள்வதற்கு உங்களில் யார் பொறுப்பேற்றுக் கொள்வீர்கள் என்று கேட்டார். (காரணம்) அப்பள்ளியில் இருந்து மறுமையில் சில ஸுஹதாக்கள் எழுப்பாட்டப்படுவார்கள். பத்ர் ஷுஹதாக்களுடன் அவர்களைத் தவிர வேறு எவரும் எழுப்பாட்டப்பட மாட்டார்கள் என்று எனது நண்பர் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள் என்று அவர் சொன்னார்.”
 பார்க்க: அபூ தாவூத்.

இந்த ஹதீதுக்கு விளக்கமளிக்கும் மௌலானா கலீல் அஹ்மத் ஸஹாரன்பூரி அவர்கள், பிறர்களுக்காக நாம் உடல் ரீதியான வணக்கங்களையும் மேற்கொள்ள முடியும். மேலும் வலிமார்களின் நினைவுச் சின்னங்கள் தரிசிக்கப்பட்டு அருள் பெறப்படவேண்டும் என்றும் குறிப்பிடுகிறார். 

பார்க்க: பத்லுல் மஜ்ஹுத். மஃபாஹீம் யஜிபு அன் துஸஹ்ஹஹ பக்கம் 254

அபூ தாவூத் ஹதீத் கிரந்தத்தின் மற்றுமொரு விரிவுரையாளரான மௌலானா அபுத் தீப் அவர்கள் “அவ்னுல் மஃபூத்” என்று தனது நூலில், மஸ்ஜிதுல் இஷார் என்ற பள்ளிவாயிலானது அருள் பெறுவதற்காக தொழப்படும் பள்ளிவாயில் என்று பிரபல்யமான பள்ளியாகும் என்று குறிப்பிடுகிறார்.
(மஃபாஹீம் பக்கம் 254)

இஸ்திக்ஃபார் மூலமாக கப்ராளி அருள் பெறுதல்


كان النبي صلى الله عليه وآله وسلم إذا فرغ من دفن الميت وقف عليه فقال استغفروا لأخيكم وسلوا له بالتثبيت فإنه الآن يسأل. ابو داؤد
 
“ஒரு மைய்யித் நல்லடக்கம் செய்யப்பட்டு முடிவுற்றால் அவ்விடத்தில் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் நின்று கொண்டு உங்களது சகோதரனுக்காக இஸ்திஃபார் செய்யுங்கள். கலிமாவில் நிலைத்திருக்கப் பிரார்த்தியுங்கள். நிச்சயமாக அவர் இப்பொழுது கேள்வி கேட்கப்படப் போகிறார் என்று சொல்பவர்களாக இருந்தார்கள்.” அபூ தாவூத்

தாவரங்களின் மூலமா கப்ராளி அருள் பெறுதல்

لعله يخفف عنهما ما لم ييبسا. البخاري ومسلم

“நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் கப்ரில் வேதனை செய்யப்பட்டுக் கொண்டிருந்த இருவரின் கப்ருகளில் ஈச்ச மர ஓலையை வைத்து நட்டி விட்டு இவ்விரண்டும் காயாமல் இருக்கும் காலமெல்லாம் இவற்றின் அருளால் அவர்களின் வேதனைகள் குறைக்கப்படும் என்று சொன்னார்கள்.” புகாரி, முஸ்லிம் 

மண்ணின் உள்ளே வாழும் ஒருவரின் மூலமாக மண்ணின் மேலே வாழும் ஒருவர் அருள் பெறுதல்


“உங்களது செயல்கள் எனக்குக் காண்பிக்கப்படுகிறது. அதில் நல்லதைக் கண்டால் அல்லாஹ்வைப் புகழ்கின்றேன். தீயதைக் கண்டால் அல்லாஹ்விடம் உங்களுக்காகப் பிரார்த்திக்கின்றேன் என்று ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் நவின்றுள்ளார்கள்.” பார்க்க: பஸ்ஸார், ஜாமிஉஸ் ஸகீர், தபகாதுல் குப்ரா, மஜ்மஉஸ் ஸவாயித்.

நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் இந்த மண்ணின் மேலே வாழ்ந்து கொண்டிருந்த காலப் பகுதியில் யார் தனக்குத் தானே அநியாயம் செய்து கொண்டார்களோ அந்தப் பாவிகள் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களிடம் செல்ல வேண்டும். அவ்வாறு செல்கின்றவர் அல்லாஹ்விடம் அவர் பாவமனிப்புக் கோர வேண்டும். அவ்வாறே ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களும் அவருக்காகப் பாவ மன்னிப்புக்கோர வேண்டும். அப்பொழுதுதான் அவர் அல்லாஹ்வை மன்னிப்பாளனாகவும் இரக்கமுள்ளவனாகவும் பெற்றுக் கொள்வார் என்று இந்த உம்மத்தினருக்கு அருள் செய்த அல்லாஹ், இப்பொழுது நாம் செய்யும் அமல்களை ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களுக்கு எடுத்துக் காண்பித்து நமக்காக அவர்கள் அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோரி நமக்கு அருள் புரிந்து கொண்டிருக்கின்றான்.

إن أعمالكم تعرض على أقاربكم وعشائركم من الأموات فإن كان خيرا استبشروا به وإن كان غير ذلك قالوا اللهم لا تمتهم حتى تهديهم كما هديتنا. أحمد وصححه الألباني بعد أن كان ضعفه. الصحيحية   2758       


“நிச்சயமாக உங்களது செயல்கள் உங்களது மரணித்தவர்களுக்கு எடுத்துக் காண்பிக்கப்படுகிறது. அதில் நல்லதைக் கண்டால் அவர்கள் சந்தோசப்படுகிறார்கள். தீயதைக் கண்டால் எங்களுக்கு நேர் வழி காட்டியது போல அவர்களுக்கும் நேர் வழி காட்டாத வரை அவர்களை மரணிக்கச் செய்து விடாதே என்று அவர்கள் (மண்ணின் உள்ளே வாழ்பவர் மண்ணின் வெளியே வாழ்பவருக்கு) பிரார்த்திக்கின்றார்கள் என்று நபித் தோழர் அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அறிவித்தார்கள்.”

 பார்க்க: அஹ்மத். இதுவொரு ழயீபான ஹதீத் என்று சொன்ன பிறகு ஸஹீஹ் என்று தீர்ப்பளித்துள்ளார் ஜனாப் அல்பானி.

முதல் அறுவடைக்கு அருள் பெறுதல்

عن أبي هريرة رضي الله تعالى عنه كان الناس إذا رأوا أول الثمر جاءوا به إلى رسول الله صلى الله عليه وآله وسلم فإذا أخذه رسول الله صلى الله عليه وآله وسلم قال اللهم بارك لنا فى ثمارنا وبارك لنا فى صاعنا ومدنا. الترمذي وصححه الألباني

“கணிகளின் முதல் அறுவடையை நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களிடம் கொண்டு வருவார்கள். அப்பொழுது அதனைப் பிடித்து யா அல்லாஹ் எங்களது கணிகளிலும் அளவையிலும் அருள் புரிவாயாக என்று துஆச் செய்வார்கள்.” திர்மிதி.

இந்த ஹதீதின் அடிப்படையில்தான் நெல் போன்ற தானியங்கள் முதன் முதலில் அறுவடை செய்யப்படும் போது விசேட துஆப் பிரார்த்தனைகள் ஏற்பாடு செய்யப்பட்டு வந்த வழமை நமதூர்களில் ஒன்று இரண்டாவது இன்றும் காணப்படுகிறது.

முதன் முதலாக பயிர்கள் விதைக்கப்படும் போதும் அவ்வாறே அறுவடை செய்யப்படும் போதும் துஆக்கள் ஓதப்பட்டு வந்த காலப்பகுதிகளில் நாம் கண்ட அருட்கொடைகளை அவ்விசேட துஆக்கள் நிறுத்தாட்டப்பட்ட பின்னர் காண முடியாதுள்ளது.

ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் திரு முடிகளில் ஒரு முடி தன்னிடம் இருப்பதானது இந்த உலகத்தையும் அதிலுள்ளவைகளையும் விடச் சிறந்ததென்று ஸஹாபாக்கள் கருதி இருக்கின்றார்கள் என்றால் அந்த திரு முடியை தனி விமானத்தில் எடுத்துச் செல்லுதல், அதனை ஆயிரம் கிலோ தங்கப் பேழையில் வைத்துப் பாதுகாத்தல் என்பன சாதாரண விடயமே தவிர வீண் விரயமாக கருதப்பட மாட்டாது. அவ்வாறு கருதுபவர் வீணாப் போன ஒருவராகும்.

ஸாலிஹீன்களின் கப்ரை தொட்டுத் தடாவி முத்தமிட்டு அருள் பெறலாம். இதுவே ஸாலிஹான அறிஞர்களின் கருத்தாகும் என்ற இமாம் தபரியின் கருத்தினை இமாம் சம்ஹுதி அவர்கள் வஃபாஉல் வஃபாவில் பதிவிட்டுள்ளார்.

அருமை நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் பின் மரணித்தவர்களின் ஜனாஸாக்கள் அருளை நாடி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் உபயோகம் செய்த கட்டிலில் வைத்து சுமந்து செல்லப்பட்டதாக இப்னு ஸைய்யிதுந் நாஸ் என்பவர் தனது அஸ்ஸீரா என்ற நூலில் பதிவிடுகிறார்.

மதீனா முனவ்வராவின் பிள்ளைகளுக்கு பேசுவதில் ஏதாவது பிரச்சினை இருக்குமானால் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் ரௌழாவின் வாயிலுக்கு வருவார்கள். அங்குள்ள திறப்பை எடுத்து அப்பிள்ளையின் வாயில் வைத்து விடுவார்கள். அல்லாஹ்வின் உதவியினால் பிரச்சினைகள் பறந்து விடும். இவ்வாறானதொரு வழமை மதீனத்து மக்களிடம் இருந்து வந்ததை நான் கண்டேன் என்கிறார் அல்லாமா பர்ஸன்ஜீ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள். இதனை நுஸ்ஹதுந் நாழிரீன ஃபீ மஸ்ஜிதி ஸெய்யிதில் அவ்வலீன வல் ஆகிரீன என்ற அவரது நூலில் பதிவூ செய்துள்ளதாக  “அஸ்ராருல் ஆதாரிந் நபவிய்யதி” என்ற நூலின் 56 ஆம் பக்கத்தில் பதிவாகியுள்ளது.

இவ்வாறானதொரு வழமை மக்கத்து மண்ணிலும் இருந்து வந்ததை தான் கண்டதாகக் கூறுகிறார் இமாம் ஃபாகிஹீ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள். நாங்கள் எங்கள் குழந்தைக்கு இவ்வாறு செய்திருக்கின்றொம்; என்ற தகவலும் பதிவாகியூள்ளது.

மதீனத்து மண்ணில் குழ்தையொன்று பிறந்து நாட்பதாம் நாளாகின்றபோது அக்குழந்தையைத் தூக்கிக் கொண்டு தாய்மார்கள் வெள்ளிக் கிழமை மற்றும் திங்கள் கிழமை மஃரிப் தொழுகைக்குப் பின் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் வாயிலுக்கு வருவார்கள். ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் ரௌழாவில் பணி புரிபவர்கள் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் ரௌழாவில் உள்ள போர்வையை அவர்கள் தலை மேல் வைத்து துஆச் செய்யும் பழக்கமும் இருந்ததைக் கண்டதாக அல்லாமா பர்ஸன்ஜீ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் மேற்சொன்ன நூலில் பதிவு செய்கின்றார்கள்.

ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் பரிசுத்த ரௌழா ஷரீபின் மேல் கண்ட மண்ணை அஷ்ஷெய்கு உமர் அஷ்ஷஷுனாயீ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் தனது தாடியினால் துடைத்து அருள் பெற்றதாகவூம் இமாம் பர்ஸன்ஜீ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகின்றார்கள்.

ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களைப் புகழ்ந்து பாடுவதனாலும் அல்லாஹ்வின் அருள் கிடைக்கிறது.




ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் பள்ளி வாயில் சுத்தம் செய்யப்படுவதற்காக உபயோகம் செய்யப்பட்ட துடைப்பத்தினை ஸலாஹுத்தீன் அய்யூபி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் தமது தலையில் வைத்து முத்திக் கொண்டதாக “அஸ்ராருல் ஆதாரிந் நபவிய்யதி” என்ற நூலின் 62 ஆம் பக்கத்தில் பதிவாகியுள்ளது.

இவ்வாறு நமது உயிரிலும் மேலான உத்தம நபி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களையும் அவர்களுடன் தொடர்புள்ள வஸ்துக்களையும் மதித்து கௌரவித்து அருள் பெற்று வந்திருப்பதுதான் இஸ்லாமிய வரலாறாகவும் கலாசாராமாகவும் இருந்திருக்கிறது. இஸ்லாமிய வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்யப்பட்ட நிகழ்வுகள் பல இன்றுள்ள நவீன நயவஞ்சகர்களினால் பரிகாசம் செய்யப்படும் அளவுக்கு நிலமை மாறிவிட்டது. இவ்வாறானவர்களின் சகவாசத்தில் இருந்து எம்மையும் எமது சந்ததிகளையும் மாணவ மாணவிகளையும் அல்லாஹ் பாதுகாப்பானாக!

வஹ்ஹாபிஷம் என்ற பனூ இஸ்ரவேலர்களின் பிள்ளையின்பிள்ளைகளான தப்லீக், ஜமாஅத்தே ,இஸ்லாமி, கர்ணீ ஆகியோர்களுக்கு நபிமார் மற்றும் ஸாலிஹீன்களின் பிறந்த வாழ்ந்த அடக்கம் செய்யப்பட்ட இடங்கள் வாயிலாக அருள் பெறுவது அணாச்சாரமாக பித்அத்தாக மூட நம்பிக்கையாக மட்டுமல்ல அது கப்ர் வணக்கமாகவும்அவர்கள் பார்வைக்குத் தெரிகிறது.பன்றியோடு சேர்ந்த கன்றும் பீ தின்னும் என்றாற்போல அன்று பனூ இஸ்ரவேலர்கள் செய்த அதே அநியாயத்தினை இன்று அவர்களின் மேற்சொன்ன பரம்பரையினர் செய்து கொண்டிருக்கின்றனர்.

எனவே நபிமார் மற்றும் வலிமார்களோடு தொடர்புள்ள பொருட்களை கண்ணியப்படுத்தி அவற்றைத் தரிசித்து அருள் பெற்றுக் கொள்ளுங்கள். இது அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்தினருக்கான விசேட அடையாளமாகும்.


ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் கப்ரின் மூலமாக அமரர்கள் அருள் பெறுதல்.


والله يعصمك عن الناس

“நபியே நாயகமே! உங்களை அல்லாஹ் மனிதர்களின் தீங்குகளில் இருந்து பாதுகாக்கின்றான்.”அல்மாயிதா வசனம் 67.

இந்த ஆயத்தின் அடிப்படையில் பாவிகளின் கரம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் திருவுடலையும் அதனைத் தாங்கி நிற்கும் அர்ஷை விட சிறப்பான பகுதியிலும் பட்டுவிடாது வஹ்ஹாபிகளைக் கொண்டு அல்லாஹ் பாதுகாக்கின்றான்.

ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களைத் தரிசிப்பதற்கென்று பயணம் மேற்கொள்வதையும் அவர்களது ரௌழாவைத் தொட்டு தடாவி அங்கங்களில் பூசி அருள் பெறுவதுபோன்ற அம்சங்களை கப்ர் வணக்கம் என்று கேடுகெட்ட நல்லொழுக்கமற்ற வஹ்ஹாபிகள் கூறி சமூகத்தை சீரழித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

யூத நஸாராக்களின் தோழமையில் அவர்கள் காணப்படுவதனால் ஷரீஅத் அனுமதிக்கின்ற பல விடயங்களை பித்அத் என்றும் ஷிர்க் என்றும் அவர்கள் கூறிக்கொண்டு வருகின்றனர். இருந்தாலும் அமரர்கள் மூலமாக அல்லாஹ் அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களைத் தரிசிக்க வைக்கின்றான். அவர்களின் ரௌழாவைத் தொட்டு தடாவி அருள் பெறும் பாக்கியத்தினை அல்லாஹ் அமரர்களுக்கு வழங்கி இருக்கின்றான்.

أن كعبا دخل على عائشة رضي الله تعالى عنها فذكروا رسول الله صلى الله عليه وآله وسلم فقال كعب ما من فجر يطلع إلا نزل سبعون ألفا من الملائكة حتى يحفوا بالقبر يضربون بأجنحتهم القبر (أي يتبركون بقبر النبي صلى الله عليه وآله وسلم ويتمسحون) ويصلون على النبي صلى الله عليه وآله وسلم حتى إذا أمسوا عرجوا وهبط سبعون ألفا حتى يحفوا بالقبر يضربون بأجنحتهم ويصلون على النبي صلى الله عليه وآله وسلم بالليل وسبعون ألفا بالنهار حتى إذا انشقت عنه الأرض خرج فى سبعين ألفا من الملائكة يزفون.         

“ஹழ்ரத் கஃபு ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் உம்முல் முஃமினீன் ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களைச் சந்தித்தபோது ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் பற்றிப் பேசிக் கொண்டார்கள். அப்பொழுது ஹழ்ரத் கஃபு அவர்கள்  ஒவ்வொரு நாள் காலையிலும் 70 ஆயிரம் அமரர்கள் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் கப்ருக்கு வருகின்றார்கள். ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் ரௌழாவை தமது இறக்கைகளால் தடாவி அருள் பெறுகின்றார்கள். இன்னும் ஸலவாத் சொல்கின்றார்கள். மாலையானதும் அவர்கள் சென்று விடுகிறார்கள். பின்னர் மாலை 70 ஆயிரம் அமரர்கள் அவ்விடம் வருகின்றார்கள். அவர்களும் தமது இறக்கைகளால் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் ரௌழா மூலமாக அருள் பெறுகின்றார்கள். ஸலவாத்தும் சொல்லிக் கொண்டு இருக்கின்றார்கள்.

இவ்வாறு மறுமை நாள் வரை காலையிலும் மாலையிலும் அமரர்கள் வந்து செல்வார்கள். மறுமை நாள் உண்டானதும் 70 ஆயிரம் அமரர்கள் முன்னிலையில் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் கப்ரில் இருந்து எழுப்பாட்டி அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று கூறினார்.”

இத்தகவலை இமாம்களான சகாவி, இப்னுல் முபாரக், பைஹகீ, இப்னுல் ஜௌஸீ ஆகியோர் பதிவிடுகிறார்கள்.

தொடரும்.............

தற்காலத்துக்கு தேவையான நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் ஆலோசனைகள்

தற்காலத்துக்கு தேவையான நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் ஆலோசனைகள்


குறைஷியர்களின் அச்சுறுத்துதலும் இப்னு உபையுடன் தொடர்பும்
மக்காவில் முஸ்லிம்களுக்கு நிராகரிப்பாளர்கள் அளவிலாதுன்பங்களைக் கொடுத்து வந்தார்கள். முஸ்லிம்கள் மக்காவிலிருந்து மதீனாவிற்குச் செல்ல நாடிய போது அவர்களைப் பல விதத்திலும் தடுத்தார்கள். முஸ்லிம்களுக்குச் சொல்லிலடங்கா கொடுமைகளை அளித்தனர். உண்மையில் அவர்களுடைய குற்றங்களுக்காக அவர்களிடம் போர் செய்வதும், அவர்களுடைய சொத்துகளைச் சூறையாடுவதும் தகும் என்று இதற்கு முன்னுள்ள பக்கங்களில் கூறியிருக்கிறோம். முஸ்லிம்கள் மதீனாவிற்கு வந்த பிறகும் அந்த நிராகரிப்போர் முஸ்லிம்கள் மீது அத்துமீறுவதை நிறுத்திக் கொள்ளவில்லை. தங்களது அடாவடி அழிச்சாட்டியங்களை முடித்துக் கொள்ளவில்லை. முஸ்லிம்கள் தங்களிடமிருந்து தப்பித்து மதீனாவில் நிம்மதியான, பாதுகாப்பான இருப்பிடத்தை அமைத்துக் கொண்டார்களே என்ற கோபத்தால் கொதித்தெழுந்தார்கள். எப்படியாவது முஸ்லிம்களை மதீனாவிலிருந்து வெளியேற்றி விட வேண்டும் என்று தீர்மானமாக இருந்தார்கள். இதற்காக அப்துல்லாஹ் இப்னு உபை இப்னு சலூலுக்குக் கடிதம் எழுதினார்கள். அவன் அந்நேரத்தில் இணைவைப்பவனாக இருந்தான். அவனுடன் மக்காவாசிகள் தொடர்பு கொண்டதன் காரணம் என்னவெனில், நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம்) மதீனா வருவதற்கு முன் அவன்தான் மதீனாவாசிகளின் தலைவனாக இருந்தான். மதீனாவாசிகள் அவனையே தங்களது அரசனாக ஏற்றுக் கொள்ளவும் தயாராக இருந்தனர். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் மதீனாவிற்கு வராமல் இருந்திருந்தால் அவனே அவர்களின் அரசனாகியிருப்பான். இதனால் அவனுக்கு நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம்) அவர்கள் மீதுள்ள கோபத்தை அறிந்த மக்காவாசிகள், அப்துல்லாஹ் இப்னு உபைக்கும் அவனுடன் இருந்த இணைவைப்போருக்கும் கடிதம் எழுதினர். அதில் அவர்கள் கூறியதாவது:
“நீங்கள் எங்கள் ஊரைச் சார்ந்தவருக்கு அடைக்கலம் கொடுத்துள்ளீர்கள். இது அல்லாஹ்வின் மீது சத்தியம்! நிச்சயமாக நீங்கள் அவரிடம் போர் செய்ய வேண்டும் அல்லது அவரை வெளியாக்கி விட வேண்டும். அல்லது நாங்கள் (மக்காவாசிகள்) அனைவரும் ஒன்று சேர்ந்து உங்கள் மீது போர் தொடுத்து உங்களின் போர் வீரர்களைக் கொன்று குவித்து, உங்கள் பெண்களின் கற்புகளைச் சூறையாடுவோம்”- இவ்வாறு அக்கடிதத்தில் கூறியிருந்தனர். (ஸுனன் அபூதாவூது)
ஏற்கனவே, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் தனது ஆட்சியைப் பறித்துக் கொண்டார் என்று அப்துல்லாஹ் இப்னு உபை எண்ணி வந்ததால், நபியவர்களின் மீது கடுமையான வகையில் பகைமை கொண்டிருந்தான். எனவே, மக்கா முஷ்ரிக்குகள் கூறிய வார்த்தையை உடனடியாகச் செயல்படுத்தினான். இது சம்பந்தமாக அப்துர் ரஹ்மான் இப்னு கஅப் (d) கூறுகிறார்கள்:
குறைஷிகளின் செய்தி அப்துல்லாஹ் இப்னு உபைம்க்கும், அவனுடன் இருந்த சிலை வணங்கிகளுக்கும் கிடைத்த போது அவர்கள் அனைவரும் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம்) அவர்களிடம் போர் செய்வதற்கு ஆயத்தமானார்கள். அவர்கள் ஆயத்தமாகும் இந்தச் செய்தி நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம்) அவர்களுக்குக் கிடைத்தவுடன் அவர்களை சந்திக்கப் போனார்கள். அப்போது அவர்களிடம், “குறைஷிகள் உங்களை எச்சரித்ததால் நீங்கள் மிக பயந்துவிட்டீர்களோ! அவர்கள் உங்களுக்கு செய்யும் சூழ்ச்சியை விட நீங்கள் உங்களுக்குச் செய்யும் சூழ்ச்சிதான் மிக மோசமானது. என்ன! அவர்களின் சொல்லுக்கிணங்க உங்களது பிள்ளைகளிடமும், சகோதரர்களிடமும் நீங்கள் போர் புரிய எண்ணுகிறீர்களா?” என்று சிந்தனையைத் தூண்டும் விதத்தில் நபி (s) கேட்டதும், கூடி இருந்தவர்கள் மறுப்பின்றி பிரிந்து சென்றனர். (ஸஹீஹுல் புகாரி)
நூல் : ரஹீக் (முஹம்மது நபி (s) அவர்களின் வாழ்க்கை வரலாறு)

திங்கள், 7 ஜனவரி, 2019

நான் அருளன்றி வேறில்லை

நான் அருளன்றி வேறில்லை


நாம் உங்களை அருளாகத்தான் அனுப்பி வைத்தோம்” என்று அல்குர்ஆனும் “நான் அருளாகத்தான் அனுப்பி வைக்கப்பட்டுள்ளேன்” என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களும் நவின்றுள்ளதை நாம் அறிவோம். அதனடிப்படையில் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் எந்தெந்த அமைப்பில் அருளாக இருக்கின்றார்கள் என்பதற்கான ஒரு சில தகவல்களை இங்கே பதிவிடுகின்றொம். படித்துப் பயன் பெறுங்கள். 

ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் பிறப்பு பரக்கத்தாகும்.

“அல்ஹாபிழ் தஹபி அவர்கள் ஸியர் அஃலாமிந் நுபலாயி என்ற நூலில்“நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் மீலாத் முபாரக்கானதாகும்” என்று பதிவு செய்துள்ளார்கள்.”

நபிமார்கள் பிறந்த இடத்தின் மூலமாக அருள் பெறுதல்



عدل إلي عبد الله بن عمر رضي الله عنهما وأنا نازل تحت سرحة بطريق مكة فقال ما أنزلك تحت هذه الشجرة فقلت انزلني ظلها قال عبد الله فقال رسول الله صلى الله عليه وآله وسلم إذا كنت بين الأخشبين من منى ونفخ بيده نحو المشرق فإن هناك واديا يقال له السرربه سرحة سر تحتها سبعون نبيا.   

“நபித் தோழர் முஹம்மத் பின் இம்ரான் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் தன்னுடைய தகப்பன் சொன்னதொரு தகவலை இவ்வாறு சொல்கின்றார்கள். நான் மக்கா முகர்ரமாவின் வழியில் தென்பட்ட பெரியதொரு மர நிழலின் கீழ் தங்கினேன். இவ்விடத்தில் தங்கியதற்கான காரணம் என்னவென்று நபித் தோழர் ஹழ்ரத் ஸெய்யிதுனா இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அன்னவர்கள் என்னிடம் கேட்டார்கள். நிழல் பெறுவதற்காகவே தங்கினேன் என்று கூறினேன். நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் மினாவில் இருக்கும் சந்தர்ப்பத்தில் கிழக்குப் பகுதியில் ஸரர் என்றதொரு பள்ளத்தாக்கு இருக்கிறது. அங்கே பெரியதொரு மரம் உள்ளது. அவ்விடத்தில் எழுபது நபிமார்கள் பிறந்திருக்கின்றார்கள் என்று கூறியதாகச் சொன்னார்கள்.”
 பார்க்க : முவத்தா, நசாயீ, தம்ஹீது, பைஹகீ, இப்னு ஹிப்பான்.”

நபிமார்கள் பிறந்த இடங்களில் நமது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் தொழுது அவ்விடங்களை சங்கைப்படுத்தி இருந்துள்ளதுடன் தமது அருமைத் தோழர்களுக்கும் அவ்வாறான இடங்களை அடையாளப்படுத்திக் காண்பித்துள்ளார்கள். ஸஹாபாக்களும் அவ்வாறான இடங்களை தரிசித்து அருள் பெற்றிருக்கிறார்கள்

இமாம்களான ஸர்கானி, இப்னு அப்துல் பர்ரு ஆகியோர், நபிமார்கள் மற்றும் நல்லடியார்களுடன் தொடர்புள்ள இடங்களில் பரகத் இருக்கிறது. எனவே அவ்விடங்களில் பரகத் பெற முடியும் என்று இந்த ஹதீதை ஆதாரம் காண்பிக்கின்றார்கள்.
பார்க்க: அத்தபர்ருக் - உமர் அப்துல்லாஹ் காமில் பக்கம் 48

அல்லாஹ்வின் தூதர் நாயகம் முஜ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் அல்லாஹ்வின் பேரருளாகும். அவர்களின் உம்மத்தினர்களாக நாம் இருப்பது அல்லாஹ் நமக்களித்த பேருபகாரமாகும். உம்மதுன் மர்ஹுமதுன் - அருள்பாளிக்கப்பட்ட உம்மத் என்று இந்த சமூகத்திற்கு சொல்லப்படுகின்றது. ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களுடன் தொடர்பு பெறுகின்ற சகலதும் சிறப்பானது சங்கையானதென்பதற்கு இதை விட வேறு என்ன ஆதாரம் வேண்டும்.

ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் எதையெல்லாம் தன்னுடையது என்று அடையாளம் செய்து வைத்தார்களோ அவை அனைத்திற்கும் அருமைத் தோழர்களான ஸஹாபாக்கள் சங்கை செய்து அதனூடாக பரகத் பெற்றிருக்கின்றார்கள்.

ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லமவர்கள் மண்ணின் மேற் புறத்தில் வாழும் காலப் பகுதியில் மட்டும்தான் அவர்களினூடாகவோ அவர்கள் உபயோகித்த பொருட்களினூடாகவோ அருள் பெறலாமே தவிர மரணத்தின் பின்னர் பரகத் பெற முடியாதென்ற நிலைப்பாடு அருமைத் தோழர்களிடம் இருந்திருக்கவில்லை.

மண்ணின் மேற்புறத்தில் வாழும் ஒருவர் மற்றும் அவருடன் தொடர்புள்ள பொருட்களினால் பரகத் பெற முடிவயுமானால் அவர் மண்ணின் உற்புறத்தில் வாழச் சென்ற பின்னரும் அவர் பரகத் பெறப்படத் தகுதி பெறுகிறார். இதனடிப்படையில் அவரது நிரந்த இல்லமான கப்ரின் மூலமும் அருள் பெறலாம். இதுதான் இஸ்லாமிய ஆழமான சிந்தனை. இதனால்தான் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் திரு மேனியைச் சுமக்கும் பாக்கியம் பெற்ற மதீனத்து மண்ணானது அர்ஷை விடச் சிறந்ததென்று அவர்கள் சொன்னார்கள். ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் பிறந்த இடம் மட்டுமல்ல மறைந்த இடமும் மகத்தானது.

ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் நாமம் அருளாகும்.


وعزتي وجلالي لا أعذب أحدا تسمى باسمك فى النار. السيرة الحلبية

“நபியே நாயகமே உங்கள் நாமத்தைச் சூட்டியவரை நான் நரகில் தண்டிக்கமாட்டேன் என்று அல்லாஹ் சத்தியமிட்டுக் கூறினான் என்றார்கள் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள்.” 
அஸ்ஸீரதுல் ஹலபிய்யா

ما اجتمع قوم قط فى مشورة معهم رجل اسمه محمد لم يدخلوه فى مشورتهم إلا لم يبارك لهم. السيرة الحلبية

“முஹம்மத் என்ற பெயர் சூட்டப்பட்ட ஒருவர் கலந்து கொள்ளும் ஆலோசனை சபையானது அருள் பெற்ற சபையாகும் என்றார்கள் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள்.”
அஸ்ஸீரதுல் ஹலபிய்யா

ما كان فى أهل بيت اسم محمد إلا كثرت بركته. فيض القدير

“முஹம்மத் என்ற பெயர் உள்ள வீட்டில் அருள் அதிகரிக்கும் என இமாமுனா மாலிக் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறியுள்ளார்கள்.”
 ஃபைழுல் கதீர்

ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லமவர்கள் பிறருக்குப் பெயர் சூட்டுவதன் மூலமாக அருள் பெறுதல்

عن عائشة رضي الله تعالى عنها أن رسول الله صلى الله عليه وآله وسلم كان يؤتى بالصبيان فيبرك عليهم ويحنكهم. 
البخاري ومسلم

“நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களிடம் குழந்தைகள் கொண்டு வரப்பட்டு அருள் பெற்று செல்லப்படும். இன்னும் தஹ்னீகும் செய்யப்படும்.” புகாரி முஸ்லிம்

إن كل مولود ولد فى حياته عليه أفضل الصلاة والسلام بالمدينة المنورة كان يؤتى به إليه ليحنكه

“நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் மதீனா முனவ்வறாவில் வாழ்ந்த காலப் பகுதியில் அப்பிரதேசத்தில் பிறந்த சகல குழந்தைகளும் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களிடம் கொண்டு வரப்பட்டு தஹ்னீக் செய்து அருள் பெறப்பட்டிருக்கின்றது.”

தஹ்னீக் என்றால் என்ன?

குழந்தையொன்று பிறந்ததும் அதற்கு தாய் பாலூட்டுவதற்கு முன் நபிமார் மற்றும் நல்லடியார்களின் மடியில் அக்குழந்தை வைக்கப்பட்டு ஈத்தம் பழம் அல்லது ஏதாவதொரு இனிப்புப் பண்டம் அப்பெரியாரின் உமிழ் நீரில் கலக்கப்பட்டு மெண்று அக்குழந்தைக்கு ஊட்டுதலுக்குப் பெயர் தஹ்னீக் ஆகும். 

வலது காதில் அதானும் இடது காதில் இகாமத்தும் சொல்ல முடியும். அல்லது குழந்தையின் தலையினைத் தடாவி ஓதி ஊதிப் பார்க்கவும் முடியும். எப்படியோ பிறக்கும் குழந்தையில் முதன் முதலில் யாரொவொரு நல்லடியாரின் கரம் பட வேண்டும். இதில் அருள் இருக்கிறது. நல்லடியார்களின் அருள் பெற்ற அக்குழந்தைகள் நற்பிரஜைகளாக சமூகத்தில் காணப்பட்டனர். பாமரர்களாக அவர்கள் காணப்பட்டாலும் அவர்களிடம் நல்லொழுக்கம் நிறைந்து காணப்பட்டது. ஆனால் தற்காலத்தில் இது சமூகத்தில் இருந்து வழி கெட்ட கூட்டங்களின் ஊடுருவலால் அழிந்து போய் விட்டது. அதனால் கட்டுக்கடங்காத சொற் பேச்சு கேட்காத ஒழுக்கமற்ற குழந்தைகளாக இன்றைய குழந்தைகள் காணப்படுகிறார்கள். 

ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்களின் துப்பலின் மூலமாக அருள் பெறுதல்

والله إن تنخم نخامة إلا وقعت فى كف رجل منهم فدلك بها وجهه وجلده. البخاري

“அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் சளி துப்பினால் உடனே அதை ஸஹாபாக்களில் ஒருவர் தன் கையில் பிடித்து தன் முகத்திலும் மேனியிலும் தேய்த்துக் கொள்வார்.”
புகாரி

ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் ஆடையின் மூலமாக அருள் பெறுதல்


فقال رجوت بركتها حين لبسها النبي صلى الله عليه وآله وسلم لعلي أكفن بها. البخاري

“ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் அணிந்த ஆடை எனது கபன் ஆடையாக ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டேன் என்றார்.”புகாரி

عن أسماء بنت أبي بكر رضي الله تعالى عنها قالت جبة رسول الله صلى الله عليه وآله وسلم كانت عند عائشة رضي الله عنها حتى قبضت فلما قبضت قبضتها وكان النبي صلى الله عليه وآله وسلم يلبسها فنحن نغسلها للمرضى يستشفي بها. مسلم

“நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் அணிந்திருந்த ஜுப்பா ஒன்று ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களிடம் இருந்தது. அவர் மரணமான பின் அதை நான் கைப்பற்றிக் கொண்டேன். அதனை நாங்கள் கழுவி நோயாளிகளுக்குக் கொடுத்து நிவாரணம் பெறுவோம் என்று அஸ்மா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கின்றார்கள்.” முஸ்லிம்

ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் கரத்தினூடாக அருள் பெறுதல்


عن أنس رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وآله وسلم إذا صلى الغداة جاء خدم المدينة بآنيتهم فيها الماء فما يؤتى بإناء إلا غمس يده فيه. مسلم

“அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் அதிகாலைத் தொழுகையை தொழுது முடித்ததும் மதீனாவின் பணியாளர்கள் தண்ணீருள்ள பாத்திரங்களைக் கொண்டு வருவார்கள். கொண்டு வரப்படும் ஒவ்வொரு பாத்திரத்தினுள்ளும் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் தனது கையை மூழ்கச் செய்வார்கள்.”
முஸ்லிம்

أن النبي صلى الله عليه وآله وسلم أعطى إمرة من غفار قلادة ووضعها بيده فى عنقها قالت لا تفارقني فلما ماتت أوصت أن تدفن معها. أحمد

“அபூதர் அல்கிபாரீ ரழியல்லாஹு அன்ஹு அன்னவர்களின் மனைவிக்கு நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் தங்களது கரத்தினால் அணிவித்த மாலையை தன்னை விட்டும் பிரிக்கக்கூடாதென்றும் மரணித்த பின் அதனுடன் நல்லடக்கம் செய்யப்பட வேண்டும் என்றும் வஸிய்யத் செய்திருந்தார்கள்.”அஹ்மத்

ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களைத் தொட்ட கரத்தின் மூலமாக அருள் பெறுதல்


قال ثابت لأنس رضي الله تعالى عنه أمسست النبي صلى الله عليه وآله وسلم بيدك؟ قال نعم فقبلها. البخاري فى الأدب المفرد

“நீங்கள் உங்கள் கரத்தினால் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களைத் தொட்டீர்களா? என்று ஹழ்ரத் தாபித் அவர்கள் நபித் தோழர் அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அன்னவர்களிடம் கேட்டார். ஆம் என்றதும் நபித் தோழரின் கரத்தினை அவர் முத்திக் கொண்டார்.” 
அதபுல் முப்ரத்

ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களைக் கண்ட கண்ணின் மூலமாக அருள் பெறுதல்.



உங்களது கண்கள் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களைக் கண்ட கண்கள் என்று கூறி நபித் தோழர் அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் கண்கள் முத்தப்பட்டிருக்கிறது. அவ்வாறே இடுப்புப் பகுதி முத்தப்பட்டிருக்கிறது.

நபித்தோழர் ஹழ்ரத் ஹன்ழலா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் சிறுவராக இருக்கும்போது அவரது தலையைத் தடாவி விட்டு அல்லாஹ் உங்களுக்கு அருள் புரியட்டும் என்று ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் துஆ செய்திருந்தார்கள். அவ்வாறு துஆ பரக்கத்தினைப் பெற்றுக் கொண்ட தோழரிடம் நோயாளிகள் வந்து அருள் பெற்றுச் சென்றிருக்கிறார்கள். 
பார்க்க: தபரானீ, அஹ்மத், மஜ்மஉஸ் ஸவாயித். அஷ்ஷர்ஹுல் கவீம் ஃபீ ஹல்லி அல்ஃபாழிஸ் ஸிராத்தில் முஸ்தகீம் பக்கம் 579.

ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் வியர்வை மூலமாக அருள் பெறுதல்


نرجو بركته لصبياننا. مسلم

“அல்லாஹ்வின் தூதரே! அதன் (வியர்வையின்) அருளை எங்கள் குழந்தைகளுக்காக எதிர்பாக்கிறொம் என்று கூறினார்.”
முஸ்லிம்


ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் திரு முடியின் மூலமாக அருள் பெறுதல்


நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் தமது முடிகளை அருமைத் தோழர்களுக்கு பங்கீடு செய்திருக்கிறார்கள். அவர்களின் ஒரு முடியாவது தனக்கு கிடைக்க வேண்டும் என்று தோழர்கள் ஆசைப்பட்டிருக்கிறார்கள். அவ்வாறு ஒரு முடி இருக்குமாக இருந்தால் அது உலகம் அதிலுள்ளவற்றுக்களை விடச் சிறந்ததாக தோழர்கள் கருதியிருக்கிறார்கள். அதனைத் தோழர்கள் பாதுகாத்து வந்திருக்கிறார்கள். அதனை தண்ணீருள் விட்டெடுத்து அத்தண்ணீரை நோயாளிகளிக்கு மருந்தாக பருகக் கொடுத்தும் இருக்கிறார்கள்.

ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் வுழுச் செய்த நீரின் மூலமாக அருள் பெறுதல்


ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் வுழுச் செய்த தண்ணீரை பெற்றுக் கொள்வதில் தோழர்கள் போட்டி போட்டுக் கொள்வார்கள். யார் அந்த தண்ணீரைப் பெறுகிறாரோ அவர் அதை தனது உடம்பில் தடவிக் கொள்வார். யாருக்கு தண்ணீர் கிடைக்கவில்லையோ அவர் தண்ணீர் கிடைக்கப்பெற்ற தனது நண்பரின் கையில் உள்ள ஈரத்தை தொட்டுத் தடவிக் கொள்வார்.

ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் இரத்தத்தின் மூலமாக அருள் பெறுதல்


நபித் தோழர்களான மாலிக் பின் சினான், அபூ தைபா, அப்துல்லாஹ் பின் ஸுபைர், அலி ரழியல்லாஹு அன்ஹும் போன்ற பலர் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் இரத்தத்தினைக் குடித்து அருள் பெற்றிருக்கிறார்கள். அவ்வாறு குடித்தவர்களுக்கு நரகம் தீண்டாது. வியாதிகள் மற்றும் பிற கஷ்டங்கள் வராது என்று ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் தனது இரத்தத்தினைக் குடித்தவர்களுக்கு சுபச் செய்தியும் கூறியிருக்கிறார்கள்.
பார்க்க: உசுதுல் காபா, அஸ்ஸீரதுல் ஹலபிய்யா, அல் இஸாபா, அஷ்ஷிஃபா, அல்இஸாபா

ذكر العلامة القسطلاني رحمه الله فى المواهب اللدنية نقلا عن كتاب الجوهر المكنون فى ذكر القبائل والبطون أنه لما شرب عبد الله بن الزبير دمه صلى الله عليه وآله وسلم تضوع فمه مسكا وبقيت رائحته موجودة فى فمه إلى أن صلب رضي الله عنه

“நபித் தோழர் இப்னு ஷுபைர் ரழியல்லாஹு அன்ஹு அன்னவர்கள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் இரத்தத்தினை குடித்ததைத் தொடர்ந்து அவரது வாயிலிருந்து கஸ்தூரியின் வாடை வீசத் தொடங்கிவிட்டது. அந்த வாடை அவர் சிலுவையில் அறையப்படும் வரை அவரில் காணப்பட்டதென்ற தகவலை அல்லாமா கஸ்தலானீ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் அல் ஜௌஹருல் மக்னூன் என்ற நூலை மேற்கோள் காட்டி தனது மவாஹிப் என்ற நூலில் பதிவு செய்துள்ளார்.”

ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் சிறு நீரின் மூலமாக அருள் பெறுதல்


ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் திரு மேனியில் இருந்து வெளிப்பட்ட எந்தவொரு பொருளும் அசுத்தமானதல்ல. இதுவே ஆய்வாளர்களின் அறிக்கையாகும். ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் மலஜலம் என்பன சுத்தமானதாகும். இதற்கு நிறைய ஆதாரங்கள் இருப்பதாக அல்ஹாபிழ் இப்னு ஹஜர் அல்ஹைதமீ அவர்கள் கூறுகின்றார்கள். இதற்கான நபி மொழி தபரானி மற்றும் பைஹகீ இப்னு அப்துல் பர்ரு தாரகுத்னீ அபூ நுஐம் ஹாகிம் ஆகியோர்அறிவிப்புச் செய்துள்ளனர்.

عن أم أيمن رضي الله عنها شربت بوله صلى الله عليه وآله وسلم فقال لها أما والله لا تلج النار بطنك ولم ينكر عليها

“உம்மு ஐமன் ரழியல்லாஹு அன்ஹா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் ஜலத்தினைக் குடித்திருக்கிறார்கள். இதை அறிந்த ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் உமது வயிற்றினை நெருப்புத் தீண்டாது என்று கூறினார்கள். அதனை நிராகரிக்கவில்லை.” தல்கீசுல் ஹிப்யர், அல்இஸாபா

இதுவொரு ஹஸனான ஸஹீஹான ஹதீத் என்கிறார் இமாம் தாரகுத்னீ அவர்கள். இமாம்களான காழீ ஹுஸைன்இ பகவீஇ சுப்கீ, பாரிஸீ, ஸர்கஸீ, இப்னுர் ரிப்ஆ, புல்கீனீ, ரமலீ, ஸர்கானீ, இப்னுல் அரபீ, பத்ருத்தீன் ஐனீ, இப்னு ஹஜர் அஸ்கலானீ ஆகியோர் மேற்கூறிய பொருள் சுத்தமானது என்று கூறுகின்றார்கள்.
 பார்க்க: அத்தபர்ருகு பிஸ்ஸாலிஹீன - ஹிஷாம் பின் முஹம்மத்


ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் பாதத்தின் வாயிலாக அருள் பெறுதல்


بخير قد اصابته بركتك


நபித் தோழர் ஸெய்யிதுனா ஜாபிர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிப்பதாவது: “நான் எனது பலவீனமான நடக்க இயலாத ஒட்டகத்தில் பயணம் செய்து ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களுடன் யுத்தம் ஒன்றில் கலந்து கொண்டேன். ஒட்டகத்தின் நிலையைக் கேட்டறிந்து விட்டு அதன் மீது ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் தமது பாதத்தினால் அடித்து விட்டு துஆச் செய்தார்கள். உடனே அது வேகமாகச் செல்ல ஆரம்பித்தது. அச்சந்தர்ப்பத்தில் தோழரிடம் உமது ஒட்டகத்தின் தற்போதைய நிலை எவ்வாறு உள்ளதென்று விசாரிக்கின்றார்கள். அதற்கு உங்கள் அருளால் அது தேறிவிட்டதென்று கூறினார்கள்.”
புகாரி, முஸ்லிம்
தொடரும்..........

ஞாயிறு, 6 ஜனவரி, 2019

அல்ஹதீதின் பார்வையில் அருள் பொருந்திய பொருட்கள் பகுதி 02

பெண்கள் மூலமாக அருள் பெறுதல்



قال رسول الله صلى الله عليه وآله وسلم أعظم النساء بركة أيسرهن مهرا وتكلفة. أحمد

“இலகுவான மஹர் கொடுக்கப்பட்ட பெண்ணும் குறைவான செலவீனங்கள் உள்ள பெண்ணும் அதிக அருள் நிறைந்த பெண்ணாகும் என்று பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் நவின்றார்கள்.”
அஹ்மத்

ஸலாம் சொல்வதன் மூலமாக அருள் பெறுதல்


أن رسول الله صلى الله عليه وآله وسلم قال يابني إذا دخلت على أهلك فسلم يكون بركة عليك وعلى أهل بيتك. الترمذي

“நீங்கள் உங்கள் குடும்பங்களிடம் சென்றால் அவர்களுக்கு சலாம் சொல்லுங்கள். அது உங்களுக்கும் அவர்களுக்கும் அருளாகும்.”
 திர்மிதி

இரத்தம் குத்தி எடுப்பதன் மூலமாக அருள் பெறுதல்


قال رسول الله صلى الله عليه وآله وسلم الحجامة على الريق أمثل وفيه شفاء وبركة. البيهقي

“இரத்தம் குத்தி எடுங்கள். அது நோய் நிவாரணியூம் அருளுமாகும்.”
பைஹகீ

ஸம்ஸம் மூலமாக அருள் பெறுதல்


قال رسول الله صلى الله عليه وآله وسلم إن ماء زمزم مباركة

“நிச்சயமாக ஸம்ஸம் நீரானது அருள் நிறைந்ததொரு நீராகும்.”

பெருநாள் மூலமாக அருள் பெறுதல்



كنا نؤمر أن نخرج يوم العيد حتى تخرج البكرمن خدرها ويخرج الحيض فيكن خلف الرجال يرجون بركة ذلك اليوم

“பெருநாள் தினத்தின் அருளைப் பெற்றிடுவதற்காக கண்ணிப் பெண்கள் அவ்வாறே ஹைழுடைய நிலையில் உள்ள பெண்களும் தொழுமிடம் செல்லுமாறு நாம் வேண்டப்பட்டிருந்தோம்.”

சாப்பிடுவதற்கு முன்னும் பின்னும் வுழுச் செய்து கொள்வது அருளாகும். சூடான உணவூகளைத் தவிர்த்து குளிரானவற்றை உண்ணுங்கள். அது அருளாகும்.

நாளின் மூலமாக அருள் பெறுதல்


عن جابر بن عبد الله رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وآله وسلم دعا فى مسجد الفتح ثلاثا يوم الإثنين ويوم الثلثاء ويوم الأربعاء فاستجيب له يوم الأربعاء بين الوقوف فعرف البشر فى وجهه قال جابر فلم ينزل بي أمر مهم غليظ إلا توخيت تلك الساعة فأدعوا فيه فأعرف الإجابة. أحمد والبزار ومجمع الزوائد

“அருமை நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் மஸ்ஜிதுல் ஃபத்ஹில் திங்கள், செவ்வாய், புதன் ஆகிய மூன்று தினங்கள் பிரார்த்தனை செய்தார்கள். புதன் கிழமைதான் பிரார்த்தனை அங்கீகரிக்கப்பட்டது. அவர்களின் வதனத்தில் சந்தோசம் தெரிந்தது என்று இதனை அறிவிப்புச் செய்யும் நபித் தோழர் ஜாபிர் ரழியல்லாஹு அன்ஹு பின்வருமாறு கூறினார்கள். அதாவது: எனக்கு ஏதாவது சிரமம் ஏற்பட்டால் அந்த நேரத்தை கவணத்தில் கொண்டு பிரார்த்திப்பேன். சிரமம் நீங்கிவிடுவதையும் கண்டுள்ளேன்.”
அஹ்மத்,பஸ்ஸார், மஜ்மஉஸ் ஸவாயித்

நல்லடியார்களை நினைவு கூர்வதன் மூலமாக அருள் பெறுதல்


عند ذكر الصالحين تنزل الرحمة

“நல்லடியார்கள் நினைவு கூறப்படுகின்ற போது அருள்கள் இறங்குகின்றன” என்று ஹழ்ரத் சுப்யான் பின் உயைனா ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் சொல்ல நான் செவியுயூற்றேன் என்று இமாமுனா அஹ்மத் பின் ஹன்பல் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

கூட்டாக இருப்பது மூலமாக அருள் பெறுதல்


وَاعْتَصِمُوا بِحَبْلِ اللَّهِ جَمِيعًا وَلَا تَفَرَّقُوا ۚ وَاذْكُرُوا نِعْمَتَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ كُنتُمْ أَعْدَاءً فَأَلَّفَ بَيْنَ قُلُوبِكُمْ فَأَصْبَحْتُم بِنِعْمَتِهِ إِخْوَانًا وَكُنتُمْ عَلَىٰ شَفَا حُفْرَةٍ مِّنَ النَّارِ فَأَنقَذَكُم مِّنْهَا ۗ كَذَٰلِكَ يُبَيِّنُ اللَّهُ لَكُمْ آيَاتِهِ لَعَلَّكُمْ تَهْتَدُونَ (103)

“நீங்கள் அனைவரும் (ஒற்றுமை எனும்) அல்லாஹ்வின் கயிற்றைப் பலமாக பற்றிப் பிடியூங்கள். நீங்கள் பிரிந்து விடாதீர்கள். நீங்கள் பகைவர்களாக இருந்த போது உங்களது உள்ளங்களுக்கிடையில் இணைப்பை ஏற்படுத்தி அவனது அருளினால் நீங்கள் சகோதரர்களாக மாறியதையும், நீங்கள் நரகக் குழியின் விளிம்பில் இருந்த போது அதைவிட்டும் உங்களை அவன் காப்பாற்றி, உங்கள் மீது அல்லாஹ் புரிந்த அருட்கொடையை நினைவு கூருங்கள்.”
 ஆல இம்ரான் 103

قال رسول الله صلى الله عليه وآله وسلم الجماعة بركة والفرقة عذاب. أحمد والطبراني والبيهقي

“ஒற்றுமையுடன் இருப்பது அருளாகும். பிரிந்து வாழ்வது வேதனையாகும் என்று ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.”
அஹ்மத் , தபரானி, பைஹகீ

يد الله مع الجماعة. الترمذي

“ஒற்றுமையுடன் கூட்டாக இருப்பவர்களுக்கு அல்லாஹ்வின் உதவி கிடைக்கிறது.” திர்மிதி

பிரிந்து பிளவுபட்டு முஷ்ரிகீன்களுக்கு ஒப்பாகாதீர்கள்.


ولا تكونوا من المشركين من الذين فرقوا دينهم وكانوا شيعا كل حزب بما لديهم فرحين. الروم 31-32

“எவர்கள் தங்கள் மார்க்கத்தைப் பிரித்து பல குழுக்களாக ஆக்கிவிட்டார்களோ அவர்களில் நீங்கள் ஆகிவிட வேண்டாம்.” என்று அல்லாஹ் சொன்ன பின்னரும் நாம் இன்று பல குழுக்களாக காணப்படுகின்றொம்.

தப்லீக், ஜமாஅதே இஸ்லாமி, காதியானி, கர்ணீ போன்ற நவீன வழிகெட்ட கூட்டங்கள் நம்நாட்டுக்குள் நுழையூம் வரை இந்நாட்டு மக்கள் ஒற்றுமையூடன் வாழ்ந்திருக்கிறார்கள். அவ்வாறு ஒற்றுமையுடன் சந்தோசமாக வாழ்ந்த மக்கள் மத்தியில் இக்கூட்டங்களின் வருகை பாரிய விரிசலை ஏற்படுத்தியது. பிரிந்து செல்வதும் பிரிவை ஏற்படுத்துவதும் முஷ்ரிகீன்களின் செயலாகும்.

ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களையும் நபிமார்கள் வலிமார்ளையும் அஹ்லுஸ் ஸுன்னத் வல்ஜமாஅத்தினர்களான நாம் அளவு கடந்து புகழ்வதாக குற்றம் சாட்டி ஒற்றுமையாக இருந்த நம்மைப் பிரித்து சின்னாபின்னமாக்கி விட்டனர். இவர்களால் ஏற்படுத்தப்பட்ட இப்பாரிய இழப்பு, பிளவு நீங்கி மீண்டும் இந்த உம்மத் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று உங்களுக்கு ஆசை இருக்குமாக இருந்தால் அந்த ஆசை அருமை நாயகம் முஜ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் ஒருவரால் மாத்திரமே அது சாத்தியப்படும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

அப்படியானால் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் மீண்டும் வருவார்கள் என்று கூறுகின்றீர்களா? என்று நம்மைப் பார்த்துக் கேட்டால் ஆம் என்றே நாம் அதற்கு பதில் கூறுவோம். அதாவது ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் பெயர் தாங்கிய மஹ்தி அலைஹிஸ்ஸலாம் தோன்ற வேண்டும் என்று சொல்கின்றொம்.

ஒற்றுமையாக இருக்கும் இருவருக்கு மத்தியில் பிரிவினையை ஏற்படுத்துவது இப்லீசுக்கு மிக விருப்பமான செயலாகும் என்று ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் நவின்றுள்ளார்கள். 
பார்க்க- முஸ்லிம்

நாம் நபிமார் வலிமார் அருளால் நலம் என்று கூறலாமா?


...وَاذْكُرُوا نِعْمَتَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ كُنتُمْ أَعْدَاءً فَأَلَّفَ بَيْنَ قُلُوبِكُمْ فَأَصْبَحْتُم بِنِعْمَتِهِ إِخْوَانًا وَكُنتُمْ عَلَىٰ شَفَا حُفْرَةٍ مِّنَ النَّارِ فَأَنقَذَكُم مِّنْهَا...
மேற்சொன்ன இறை வசனத்தில் சொல்லப்பட்ட அல்லாஹ்வின் அருள் என்பது அருமை நாயகம் முஜ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் அன்றி வேறு யாருமில்லை. அந்த அருளினால்தான் நாம் ஒற்றுமையாக இருந்தோம். அந்த அருள்தான் நம்மை நரக விளிம்பில் இருந்தும் பாதுகாத்தது.

எனவேஇ நாம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் பரக்கத்தினால் ஈமான் உள்ளவர்களாக இருக்கின்றொம். அவர்களின் ஷஃபாஅத்தின் அருளினால் சுவனமும் செல்ல இருக்கின்றோம். அவர்களது துஆவின் அருளினால் நாங்கள் அழிக்கப்படாது பாதுகாக்கப்படுகின்றோம். எனவே தான் நாம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் பரக்கத்தினால் அல்லது வலிமார்கள் பரக்கத்தினால் நலமாக இருக்கின்றொம் என்று மகிழ்ச்சியுடன் கூறி வருகின்றொம். 

மாலையின் பரகத்



தண்ணீர் கிடைக்கப் பெறாத சந்தர்ப்பத்தில் மண்ணின் மூலமாக தயம்மம் செய்து கொள்வது தொடர்பான இறை வசனம் உம்முல் முஃமினீன் அன்னை ஆயிஷா ஸித்தீக்கா ரழியல்லாஹு அன்ஹா அன்னவர்களின் மாலை தொலைந்து போன சந்தர்ப்பத்தில் இறங்கியிருக்கிறது. அப்பொழுது

ما كان أعظم بركة قلادتك

“உங்கள் மாலையின் பரகத்தின் அற்புதம்தான் என்ன” வென்று ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் ஆச்சரியப்பட்டிருக்கிறார்கள்.

தொடரும்.....

அல்ஹதீதின் பார்வையில் அருள் பொருந்திய பொருட்கள்



அல்ஹதீதின் பார்வையில் அருள் பொருந்திய பொருட்கள்




உணவின் மூலமாக அருள் பெறுதல்


تسحروا فإن فى السحور بركة

“ஸஹர் செய்து கொள்ளுங்கள். நிச்சயமாக அதில் பரகத் இருக்கிறது.” புகாரி, முஸ்லிம்

عن أنس رضي الله عنه أن رسول الله صلى الله عليه وآله وسلم كان إذا أكل طعاما لعق اصابعه الثلاث قال وقال إذا سقطت لقمة أحدكم فليمط عنها الأذى وليأكلها ولا يدعها للشيطان وأمرنا أن نسلت القصعة قال فإنكم لا تدرون فى أي طعامكم البركة. مسلم وابوداود والترمذي

“நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் உணவு சாப்பிட்டால் தனது மூன்று விரல்களையும் சூப்பிக் கொள்வார்கள். உங்களது உணவு கீழே விழுந்தால் அதனை எடுத்து அதிலுள்ள அசுத்தங்களை நீக்கிவிட்டு மீதத்தை சாப்பிடுங்கள். அதை ஷைத்தானுக்கு கொடுத்து விடாதீர்கள் என்று சொன்னார்கள். இன்னும் உணவுப் பாத்திரத்தில் உணவு மீதமில்லாதவாறு அதிலுள்ள சகலதையும் நன்றாகச் சாப்பிடுமாறும் உத்தரவிட்டார்கள். உங்களது உணவில் எந்தப் பகுதியில் அருள் இருக்கிறதென்று தெரியாது என்றும் சொன்னார்கள்.” 
முஸ்லிம், அபூதாவூத்,திர்மிதி

عن ابن عباس رضي الله عنهما أن النبي صلى الله عليه وآله وسلم قال إذا أكل أحدكم طعاما فلا يأكل من أعلى الصحفة ولكن ليأكل من أسفلها فإن البركة تنزل من أعلاها. أحمد وابودود 

“உங்களில் யாராவது உணவூ உண்டால் உணவுப் பாத்திரத்தின் மேற் பக்கமாக சாப்பிடாதீர்கள். மாறாக கீழ் பக்கம் இருந்து சாப்பிடுங்கள். ஏனெனில் அருள் அதன் மேற் பக்கமாக இறங்குகிறதென்று ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் நவின்றார்கள்.” 
அஹ்மத், அபூதாவூத்

وعن ابن عباس رضي الله تعالى عنهما عن النبي صلى الله عليه وآله وسلم قال البركة تنزل وسط الطعام فكلوا من حافتيه ولا تأكلوا من وسطه. أبوداود والترمذي والنسائي وابن حبان 

“உணவின் நடுப் பகுதியில் அருள் இறங்குகிறது. எனவே நடுவில் இருந்து உண்ணாமல் ஓரப் பகுதிகளில் இருந்து உண்ணுங்கள் என்று சொன்னதாகவூம் மற்றுமொறு தகவல் பதிவாகியுள்ளது.” 
அபூதாவூத்,திர்மிதி, நசாயி, இப்னு ஹிப்பான்

பேரித்தம் பழத்தின் மூலமாக அருள் பெறுதல்


قال رسول الله صلى الله عليه وآله وسلم إذا أفطر أحدكم فليفطر على تمر فإنه بركة. 
أحمد والترمذي وأبوداود وابن ماجة والدارمي 

“உங்களில் ஒருவர் நோன்பு திறப்பதாக இருந்தால் அதற்காக ஈச்சம் பழத்தினை உபயோகம் செய்து கொள்ளுங்கள். ஏனெனில் அது அருளாகும்.” அஹ்மத், திர்மிதி, அபூதாவூத், இப்னு மாஜா, தாரமீ

நேரத்தின் மூலமாக அருள் பெறுதல்


عن على رضي الله عنه  قال  قال رسول الله صلى الله عليه وآله وسلم اللهم بارك لأمتي فى بكورها. أحمد

“யா அல்லாஹ் எனது உம்மத்திற்கு அதிகாலையில் அருள் புரிவாயாக என்று ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் துஆ செய்துள்ளார்கள்.”
அஹ்மத்

பிரார்த்தனை மூலமாக அருள் பெறுதல்



اللهم بارك لهم فيما رزقتهم. مسلم

“உணவூ வழங்கியவருக்கு அருள் புரிவாயாக என்று ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் பிரார்த்தனை புரிந்துள்ளார்கள்.” முஸ்லிம்

بارك الله لك وبارك عليك وجمع بينكما فى الخير. الدارمي والترمذي

“திருமண தம்பதிகளுக்கு அருள் புரியுமாறு ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் துஆ செய்துள்ளார்கள்.”
திர்மிதி, தாரமீ

மிருகங்களின் மூலமாக அருள் பெறுதல்.





اتخذوا الغنم فإنها بركة. والغنم بركة. صلوا فيها فإنها بركة. 

“ஆடு வளருங்கள். நிச்சியமாக அது அருளாகும். ஆட்டுத் தொழுவத்தில் தொழுது கொள்ளுங்கள். ஏனெனில் அது அருளாகும் என்று ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் நவின்றுள்ளார்கள்.”

குர்ஆன் ஓதுவன் மூலமாக அருள் பெறுதல்


قال رسول الله صلى الله عليه وآله وسلم اقرءوا سورة البقرة فإن أخذها بركة. مسلم

“அல் பகரா அத்தியாயத்தினை ஓதுங்கள். அது அருளாகும்.” முஸ்லிம்

அல்குர்ஆன் கூட்டாக ஓதி அருள் பெறுதல்


ما اجتمع قوم فى بيت من بيوت الله تعالى يتلون كاب الله ويتدارسونه بينهم إلا نزلت عليهم السكينة وغشيتهم الرحمة. أبوداؤد

“அல்லாஹ்வின் ஏதாவதொரு வீட்டில் மக்கள் ஒன்றிணைந்து அல்லாஹ்வின் வேதத்தினை ஓதி அது தொடர்பாக பாடங்கள் இடம் பெறும் போது அவர்கள் மீது அமைதி இறங்குகிறது. அருள் அவர்களைச் சூழ்ந்து கொள்கிறது என்று ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் சொன்னார்கள்.” அபூதாவூத்

அல்குர்ஆன் தமாம் வைபவத்தின் மூலமாக அருள் பெறுதல்

عن أنس رضي الله تعالى عنه أنه إذا ختم القرآن جمع أهله ودعا.الدارمي

“நபித் தோழர் அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் குர்ஆனை தமாம் செய்தால் குடும்பத்தினர்களை அழைப்பார். துஆச் செய்வார்.” தாரமீ

عن مجاهد قال كانوا يجتمعون عند ختم القرآن ويقولون إن الرحمة تنزل عند ختم القرآن. أذكار النووي

“அவர்கள் (ஸஹாபாக்கள்) அல்குர்ஆனை ஓதி முடிக்கின்றபோது ஒன்று சேருவார்கள். கத்முல் குர்ஆனின் போது அருள் இறங்குகிறது என்று சொல்வார்கள் என முஜாஹித் ரஹ்மதுல்லாஹி அலைஹி கூறுகிறார்கள்.” அல்அத்கார்

عن الحكم بن عتيبة قال أرسل إلي مجاهد وعبدة بن أبي لبانة فقالا إنا أرسلنا إليك لأننا أردنا أن نختم القرآن والدعاء مستجاب عند ختم القرآن.أبوداؤد

“கத்முல் குர்ஆன் நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு ஹகம் பின் உதைபா (என்ற மிகப் பெரிய தாபிஈ) அவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டிருக்கிறது. துஆ அந்நேரத்தில் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.” 
அபூதாவூத்

கத்தம் ஓதலாமா?

“கத்ம்” என்ற வார்த்தை காலப்போக்கில் கத்தம் என்றாகிவிட்டது. எனவே கத்தம் ஓதுவதற்கு ஆதாரம் இருக்கிறதா? என்று கேட்பவர்களுக்கு இதனை காண்பித்தாலும் அவர்கள் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை. கத்தம் ஸஹாபாக்கள் ஓதியூள்ளார்கள். தாபிஊன்கள் ஓதியுள்ளார்கள். அதனால் நாமும் ஓதுகின்றொம். 

கத்முல் குர்ஆன் நிகழ்வு ஸஹாபாக்கள் காலத்தில் இடம் பெற்றுள்ளது. கத்முல் குர்ஆன் நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அவர்கள் காலத்தில் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

கத்முல் குர்ஆன் நிகழ்வில் விசேட துஆ பிரார்த்தனை இடம் பெற்றிருக்கிறது. உணவூ பரிமாறப்பட்டிருக்கிறது. அதனால் நாமும் கத்முல் குர்ஆன் நிகழ்வினை ஏற்பாடு செய்கிறொம். அதற்காக பிறர்களை அழைக்கின்றொம். விசேட துஆ பிரார்த்தனையில் ஈடுபடுகின்றோம். உணவளிக்கின்றொம். இது அஹ்லுஸ் ஸுன்னத் வல்ஜமாஅத்தினரின் நடை முறைகளில் ஒன்றாகும்.

தொடரும்....




வெள்ளி, 4 ஜனவரி, 2019

Mahfee Media Unit

 எமது கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்ளின்  ஆக்கங்கலை வெளி உலகுக்கு எடுதுக்காட்ட எகமது கல்லூரியின் பணிப்பாளர்  மதிப்புக்குரிடய அல் உஸ்தாத் முபரக் பைஸி, மஃஹ்பி அவர்களின் முயற்சியால் 01/01/2019 ஆம் திகதி ஆரம்பிக்க பட்டது.



கட்டுரைகள்

“வஹ்ஹாபிகள்” இந்தக் காலத்தின் “க்வாரிஜ்கள்”

  இப்னு அப்தில் வஹ்ஹாபும் இப்னு தைமிய்யாவும்   இப்னு தைமிய்யா என்ற தனி நபரால் விதைக்கப்பட்ட பொய்யான, பிழையான, மார்க்கத்துக்கு ...