செவ்வாய், 5 மார்ச், 2019

அல்லாஹ்வும் நூர். அண்ணலாரும் நூர்.


அல்லாஹ்வும் நூர். அண்ணலாரும் நூர்.

அல்லாஹ் வானங்கள் பூமிகளின் நூர்ஆகும். (சூரத்துன்நூர்35ம்வசனம்.)

பூமி அதன் ரப்பின் நூரினால் பிரகாசிக்கும். (சூரத்துஸ்சுமர்வசனம் 69)

நீ வானம் பூமிகளின் நூராக இருக்கின்றாய். (புகாரி)


“நூருன்”  என்ற அரப் வார்த்தைக்கு பிரகாசம், ஒளி, வெளிச்சம் என அதற்குப் பொருள்கள் கூறப்படுவது போன்று படைத்தல், பராமரித்தல், நீதி செலுத்துதல், நேர்வழி காட்டுதல் போன்ற கருத்துக்களும் “நூருன்” என்ற வார்த்தைக்கு விரிவுரையாக சொல்லப்படுகிறன.

வெளிச்சமானது புறவெளிச்சம் அகவெளிச்சம் என இருவகை வெளிச்சங்கள் உண்டு. புற வெளிச்சம் இல்லாமல் மனிதன் எவ்வாறு அவனது சடவுலக வாழ்கையில் வெற்றியினை அடைந்து கொள்ள முடியாதிருக்கிறதோ அவ்வாறே அகவெளிச்சம் பெறாமல் ஆத்மீக வெற்றியினை அவனால் அடைந்து கொள்ள முடியாது. இவ்விரு வெளிச்சங்களினையும் அல்லாஹ்தான் வெளிப்படுத்தி வைக்கின்றான். என்றாலும் கூட அவற்றினை வசீலாவின் ஊடாக வெளிப்படுத்தி வைத்தானே தவிர நேரடியாக அவன் அவற்றினை வெளிப்படுத்தி வைக்க வில்லை.

மனித சடவுலக வாழ்கையின் வெற்றிக்குத் தேவையான புற வெளிச்சங்களை பெற்றுக் கொள்வதற்கு சூரியன், சந்திரன், நச்சத்திரங்களை அதற்கான வசீலாவாக அல்லாஹ் மனிதனுக்காகப் படைத்திருப்பது போன்று மனித ஆத்மீக வாழ்க்கையின் வெற்றிக்குத் தேவையான அகப்பிரகாசங்களைப் பெற்றுக் கொள்வதற்காக அல்குர் ஆனையும் அஸ்ஸுன்னாவினையும் அல்லாஹ் வஸீலாவாக ஏற்படுத்தித் தந்துள்ளான்.

சூரியனும் சந்திரனும் நட்சத்திரங்களும் புலனுக்குப் புலப்படுகின்ற வெளிச்சங்களை வெளிப்படுத்திக்  கொண்டிருந்தாலும் ஒவ்வொன்றும் வெவ்வேறுபட்ட தன்மைகளைக் கொண்டிருக்கிறதே தவிர மூன்றினதும் யதார்த்தம் ஒன்றென்று எண்ணி விடக்கூடாது . சந்திரனும் நட்சத்திரங்களும் சூரியனின் ஒளியினை உள்வாங்கிக் கொண்ட பின்னரே அவ்விரண்டும் ஒளியினை வெளிப்படுத்துகிறது. இவ்வாறே அகவெளிச்சத்தினை வெளிப்படுத்தி வைக்கும் சாதனங்களான அல் குர்ஆனும் அல் ஹதீதும் அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களினூடாக வெளிப்படும் பிரகாசங்களாக இருந்து கொண்டிருக் கின்றன.
சூரியன் ஊடாக சந்திரனும் நட்சத்திரங்களும் ஒளியினைப் பெற்றுக் கொண்டாலும் சூரியனுக்குப் பிரகாசம் வழங்கியவன் அல்லாஹ்வாகும். அவ்வாறே ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் ஊடாக அல்குர்ஆனும் அல்ஹதீஸும் ஒளியினை வெளிப்படுத்திக் கொண்டிருந்தாலும் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களுக்கு பிரகாசம் வழங்குபவன் அல்லாஹ் ஒரு வனாகும்.

மனிதனுக்குத் தேவையான புறவெளிச் சங்களை அல்லாஹ் சூரிய சந்திரனூடாக வெளிப்படுத்தி வைத்த பிறகும் அவ்விரு பொருட்களையும் பிரகாசமிக்கவைகளென்று சொல்ல முடியுமாக இருந்தால் அம் மனிதனுக்குத் தேவையான அக வெளிச்சங்களை வெளிப்படுத்தி வைப்பதற்கு அல்லாஹ் வினால் தெரிவு செய்யப்பட்ட செம்மல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களைப் பிரகாசமிக்கவர்கள் என்று பிரசாரம் பண்ணுவதில் என்ன பிரச்சினை இருக்கிறது?


எனவே அல்லாஹ்வும் நூர். சந்திரனும் நூர். அல்லாஹ்வும் நூர். அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களும் நூராகும். அல்லாஹ்வுக்கு உபயோகிக்கப் படுகின்ற நூர் என்ற வார்த்தையினை சந்திரனுக்கு உபயோகிக்கின்ற சந்தர்ப்பத்தில் சங்கடமும் சந்தேகமும் எவ்வாறு உருவாக வில்லையோ அவ்வாறே அல்லாஹ்வுக்கு உபயோகம் செய்யப்படுகின்ற “நூர்” என்ற வார்த்தையினை அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களுக்கு உபயோகிப்பதிலும் எவ்விதப் பிரச்சினையும் ஏற்பட்டு விடப் போவதில்லை.

நூருன் என்பது அல்லாஹ்வின் திருநாமங்களில் ஒன்றாக இருக்கிறது. அவ்வாறே அவனது ஸிஃபத்தாகவும் இருந்து கொண்டிருக்கிறது. எனவே அவனது மார்க்கமும் நூர். அவனது தூதரும் நூர். அவனது இல்லமும் நூர். அந்த நூரினால் விசுவாசிகளின் உள்ளங்கள் பிரகாசம் பெறுகின்றன. அந்தப் பிரகாசம் விசுவாசிகளின் நாவுகளிலும் முகங்களிலும் வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் என இப்னுல் கைடயும் ஜவ்சி என்ற அறிஞர்  ஷிபாஉல்அலீல்” என்ற நூலில் பதிவு செய்துள்ளார்.

தொடரும்............

வெள்ளி, 1 மார்ச், 2019

அல் குர்ஆனும் நூர் அண்ணலாரும் நூர்


அல் குர்ஆனும் நூர் அண்ணலாரும் நூர்.




அல் குர்ஆனை நாம் நமது கண்களினால் பகலிலும் பார்க்கின்றோம். இரவிலும்பார்க்கின்றோம். கரங்களினால் பிடிக்கின்றோம். ஓதுகின்றோம். எழுதுகின்றோம். அச்சிடுகின்றோம். அழிக்கின்றோம். எரிக்கின்றோம். கரைக்கின்றோம். கரைத்துக்குடிக்கின்றோம்.  இத்தனை கருமங்களையும் அல் குர் ஆனில் புரிந்து கொண்ட பிறகும் அல் குர் ஆனை இஸ்லாமியர்களான நாமனைவரும் கருத்து முரண்பாடுகள் கடந்து நூர் என்றே சொல்கின்றோம். ஆனாலும்கூட அதில் இருந்து பிரகாசம் வெளிப்பட்டதை நாம் கண்டதில்லையே!

நாம் அல் குர் ஆனில் இருந்து பிரகாசம் வெளிப்பட்டதைக் காணவில்லை என்ற காரணத்திற்காக அது நூர் இல்லையென்று சொல்ல முடியுமா?.

ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் தாயின் வயிற்றில் இருந்து பிறந்தார்கள். திருமணம் செய்துள்ளார்கள். குழந்தைகளைப் பெற்றுள்ளார்கள். உண்ணுவார்கள். உறங்குவார்கள். ஓடியாடிவிளையாடியுள்ளார்கள். யுத்தங்களில் காயமுற்று ரத்தம் சிந்தியுள்ளார்கள். சுகவீனம் அடைந்துள்ளார்கள். மரணத்தினை தழுவியுள்ளார்கள். குளிப்பாட்டி நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். எனவே ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் மனிதரே தவிர நூர் அல்ல வென்று குற்றம் சுமத்து கின்றவர்கள் மேற் கூறிய காரணங்களைக் கூறி அல் குர் ஆன் நூர் என்பதை ஏன் மறுக்க வில்லை?.

அல் குர் ஆன் நூராகும் என்றால் அது நமது புலன்களுக்குப் புலப்படுகின்ற சூரிய சந்திரனின் நூரைப் போன்ற தென்று நாம் எவ்வாறு சொல்ல வில்லையோ அவ்வாறே ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் நூராகவே இருக்கின்றார்கள் என்றால் சாதாரன நூர் என்று நம்மில் யாரும் சொன்னதில்லை. நூரினால் படைக்கப் பட்டிருக்கும் அல் குர் ஆனில் இருளும் இருப்பதாக அல்குர்ஆன் சொல்லிக் கொண்டிருக்கிறது. உலக அழிவு நாள் நெருங்கும் போது அல்குர் ஆனில் எழுத்துக்கள் மட்டுமே மீதமாக இருக்கும். அப்போது அதில் நூர் இருக்காது என்றும் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் அறிவித்துள்ளர்கள். ஆனால் நூரினால் படைக்கப்பட்டிருக்கும் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களில் இருளுக்கே இடமில்லாமல் முழுமையாக நூரினால் ஆனவர்களாக இருக்கின்றார்கள். ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் நூர் நொடிக்கு நொடி அதிகரித்துச் செல்லுமே தவிர ஒரு கணப் பொழுதில் கூட நூர் நீங்கியவர்களாக அவர்கள் இருக்க மாட்டார்கள். எனவே அல்குர் ஆனைவிடவும் அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் அதிகூடிய அந்தஸ்த்தும் அகமியமும் நிறைந்தவர்களாக காணப்படுகின்றார்கள்.  அல்குர்ஆன் அண்ணலாரின் குணங்களாகும்.“நூருன்”என்ற சொல் அல்குர் ஆனில் சுமார். 45 இடங்களில் வெவ்வேறு விதமான அர்த்தங்களில் உபயோகம் செய்யப்பட்டுள்ளது. எனவே நூருன் என்ற வார்த்தைக் குரிய வெளிப்படையான தமிழாக்கத்தினை மட்டும் அதற்குரிய அர்த்தம் என எண்ணிக் கொண்டு ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் நூராகவே இருக்கின்றார்கள் என்ற வாதத்தை வெறுத்து விட வேண்டாம். மாறாக ஸல்லல்ல்லாஹு அலைஹிவ ஆலிஹி வசல்லம் அவர்கள் நூராகும் என்று நொடிக்கு நூறு விடுத்தங்கள் கூறுங்கள். ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் நூராக இருக்கின்றார்கள் என்ற கருத்தினைக் கூறுவதற்கு அஞ்சாதீர்கள். ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் நூராகவே இருக்கின்றார்கள் என்பது சூபிச செய்தியல்ல. அது இஸ்லாத்தின் அடிப்படை அகீதாவுடன் தொடர்புள்ள தகவலாகும். அதற்காக ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் நூராகும் என்ற செய்தி அகீதாவின் எந்த நூலில் பதிவாகி இருக்கிறது என்று கேட்டு உங்கள் முட்டாள் தனத்தினை வெளிப்படுத்தி வைத்துவிடாதீர்கள். இப்படியொரு கேள்வியினை கேட்பவர்கள் அகப்பார்வை அற்ற குருடர்களிடம் கல்வி கற்றுள்ளார்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். 
தொடரும்...........

ஞாயிறு, 17 பிப்ரவரி, 2019

“நூர்”என்பதன் பொருள்.


நூர் என்பதன் பொருள்


நூர் என்ற அரபு மொழிவார்த்தைக்கு ஒளி என்று தமிழில் பொருள் கூறுகின்றோம். அதற்காக அந்த ஒளியினை மனிதனானவன் தன்னுடைய சாதாரண புலன்களுக்குப் புலப்படுகின்ற ஒளியென்று எண்ணிவிடக் கூடாது. ஸல்லல்ல்லாஹுஅலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களது நூரின் யதார்த்தத்தினை அல்லாஹ் ஒருவனே அறிவான் என்று அல்லாமா ஜவ்பர் பின் அல் பர்சன்ஜி அவர்கள் கூறிய கருத்தினை அஷ்ஷைக் அபூபக்ர் அஹ்மத் காந்தபூரி  (ஸகாபதுஸ்சுன்னிய்யாகேரளா) அவர்கள் “அல் அவாயிதுல் வஜ்திய்யாஎன்ற நூலின் பக்கம் 1-5ல் பதிவு செய்துள்ளார்கள்.
ஸல்லல்ல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் நூராக இருக்கின்றார்கள் என்றால் அதன்விளக்கம் என்ன? என்ற கேள்விக்கு ஹிதாயத் என்று பொருள் கூறப் படுகிறது . இவ்வாறு பொருள் கூறுவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை.
ஹிதாயத் என்றால் என்ன? என்று மீண்டும் கேட்டால் நேர்வழி என்று அதற்குப்பொருள் கூறுவோம். அதாவது ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் நூராக இருக்கின்றார்கள் என்றால் நேர்வழிகாட்டும் ஒருவராக இருக்கின்றார்கள் என்பது இதற்கான விளக்கமாகும் என்று சொல்வோம்.
ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் எந்தெந்த விடயங்கள் நூராக அதாவது ஹிதாயத்–நேர்வழி காட்டுகின்றதாக இருக்கிறதென்று நம்மிடம் உங்களில் யாராவது கேட்பீர்களாக இருந்தால் அவ்வாறு கேட்பவரிடம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹிவசல்லம் அவர்களின் எந்தெந்த விடயங்கள் நூராக அதாவது ஹிதாயத்-நேர்வழி காட்டவில்லை என்று சொல்லித் தருமாறு நாம் அவரிடம் திருப்பிக் கேட்போம்.
நூர் என்பதற்குச் சொல்லப்பட்ட விளக்கத்தின் அடிப்படையில் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லமவர்களின் பேச்சு மட்டுமல்ல மூச்சும் நூர்தான். மனைவிமக்கள் மட்டுமல்ல தோழர்களும் நூர்தான். ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் முபாரக்கான சிரசில் அமரும்பாக்கியம் பெற்ற தொப்பி,தலைப்பாகை முதல், பாதம் சுமக்கும் பாக்கியம் பெற்ற பாதணியும் நூர்தான்.
அவ்வாறே ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் முபாரக்கான திரு மேனியில் இருந்து வெளியேறிய வியர்வை, குருதி முதல், சகலதும் நூர்தான். இதையே தான் மனித வடிவத்தில் வெளியான அல்லாஹ்வுடைய நூரி (ஹிதாயத்தி) ன் முழு வடிவம் என்கின்றோம். நூரினால் படைக்கப்பட்டதாகப் பேசினோம் . அந்தநூருக்காகவே அகிலங்களெல்லாம் அமைக்கப்பட்டதென்று அறிவித்தோம். அவர்களின் நூரின்றி வேறில்லை என்கின்றோம். இது மேற் கூறிய நபி மொழியின் சாரமாகும்.
(அல் குர்ஆனும் நூர் அண்ணலாரும் நூர் ) தொடரும்...

சனி, 16 பிப்ரவரி, 2019

அல்லாஹ்வின் பேரருளான பெருமானார் முஜ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம்


அல்லாஹ்வின் பேரருளான பெருமானார் முஜ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் நூரும் பஷருமாகும்.



“யா அல்லாஹ் எனது உள்ளம், நாவு, கேள்வி, பார்வை, வலது, இடது, மேலும், கீழும், முன்னும் பின்னும் என அனைத்திலும் நூரை ஏற்படுத்துவதுடன் எனக்கும் நூரைத் தருவாயாக” என ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தனை புரிந்துள்ளார்கள். (புகாரி, முஸ்லிம்.)
அல்லாஹ்வின் பேரருளான பெருமானார் முஜ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் பஷராகவும் நூராகவும் இருக்கின்றார்கள். இந்தரெண்டில் எந்தவொன்றையும் மறுக்கவோ மறைக்கவோ கூடாது. அவ்வாறு மறுப்பவன் அல்லது மறைப்பவன் முஸ்லிமாக இருக்க முடியாது. அத்துடன் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் நூரைத்தான் அல்லாஹ் முதன்மையாகப் படைத்தான் என்பதை மறுக்கும் ஒருவர் தெளிவான தூய்மையான (சூபித்துவ) அஹ்லுஸ் சுன்னத் வல்ஜமாஅத் கொள்கையுடையவராக  இருக்க முடியாது.
இந்த பிரபஞ்சத்தில் உயிரினங்களாக கருதப்படும் ஓரறிவுத் தாவரங்கள் முதல், பகுத்தறிவு கொண்ட மனிதன் வரை அனைத்துமே பஞ்சபூதங்களின் கூட்டாகும். உயிரற்ற பொருட்களிலும் பஞ்சபூதங்களின் செயல்பாடுகள் இருக்கும். அவ்வாறிருந்தும் தாவரம் முதல் மனிதன் வரை  எதிலுமே பஞ்சபூதங்கள் இருப்பது மனிதனின் சாதாரண புறப்பார்வைக்குப் புலப்படுவதாகத் தெரியவில்லை. அதற்காக மேற்கூறிய கூறுகள் மனிதனில் இல்லையென்று கூறிவிட முடியாது.

மின்சாரத்தினூடாக கிடைக்கப்பெறுகின்ற ஒளியின் உற்பத்திற்கு பஞ்சபூதங்களின் பங்ககளிப்பு இருப்பதாக மனிதன் சொல்லிக்கொண்டிருந்தாலும் அந்த ஒளியிலும் பஞ்சபூதங்களைப் பார்க்கமுடியாதவனாக அவன் இருக்கின்றான். அவ்வாறே சூரியனும் சந்திரனும் நமக்கு ஒளியைத் தருகிறது. அதன் ஒளிகளை மனிதனானவன் பார்த்துக்கொண்டும் அனுவவித்துக்கொண்டும் இருக்கின்றான். ஆனாலும்கூட அவ்விரண்டும் என்னென்ன கூறுகளின் கூட்டுக்களினால் அவை ஆனதென்பதை அவன் அறியாதிருக்கும்போது புலன்களுக்குப் புலப்படாததொரு ஒளியினை என்னவென்று வர்ணிப்பது?. அல்லது சாதாரண புலன்களுக்குப் புலப்படவில்லையே என்ற காரணத்திற்காக ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் நூரில்லை என்று சொல்ல முற்படுவது எவ்வாறு?
மனிதனில் கலந்துள்ளதாகச் சொல்லப்படுகின்ற பஞ்சபூதங்களின் அளவுகளும் சந்திரனில் என்னென்ன பஞ்சபூதங்கள் இருக்கின்றன என்பதும் கடுமையான தேடலுக்குப் பின் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதையும் நாம் மறுப்பதற்கில்லை.
(“நூர்”என்பதன்பொருள் )தொடரும்...

கட்டுரைகள்

“வஹ்ஹாபிகள்” இந்தக் காலத்தின் “க்வாரிஜ்கள்”

  இப்னு அப்தில் வஹ்ஹாபும் இப்னு தைமிய்யாவும்   இப்னு தைமிய்யா என்ற தனி நபரால் விதைக்கப்பட்ட பொய்யான, பிழையான, மார்க்கத்துக்கு ...