திங்கள், 1 ஜூலை, 2019

ஹஜ் விதியாக்கப்பட்டவர்கள்.




بسم الله الرحمن الرحيم وبه أستعين
 صلى الله على النبي الأمي صلى الله عليه وآله وسلم عدد ما فى علم الله صلاة دائمة بدوام ملك الله وعلى آلك وأصحابك يا خير خلق الله



யா அல்லாஹ்! ரமழான் மாதத்தினை அடைந்திடும் பாக்கியத்தினை எங்களுக்குத் தந்து விடு என்று இரு மாதங்களாகப் பிரார்தித்தோம். அல்லாஹ்வின் பேருதவியினால் ரமழான் மாத்தினை அடைந்த நாம் இயலுமான வணக்கங்களை அதில் புரிந்தோம். அல்ஹம்துலில்லாஹ். நோன்பு நோற்பது தக்வாவினை தருவிக்கும் ஓர் அமல்.

இஸ்லாத்தின் நான்காம் கடமையான ரமழான் மாத நோன்பின் காலம் முடிந்து போகும் மறு நிமிடம் இஸ்லாத்தின் ஐந்தாம் கடமையான புனித ஹஜ் பற்றிய பேச்சுக்களை கட்டத் தொடங்கி விட்டது. இது நோன்பின் மூலமாக நம்மிடம் தக்வா தரிபட்டிருக்கின்றதா? இல்லையா? என்பதைப் பரீட்சிப்பதற்கான ஒரு பயண யாத்திரையாகும்.

அல்லாஹ்வின் பேரருளான பெருமானார் முஜ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் பொருட்டினால் சென்ற நோன்பு மாதம் நோன்பின் விதிகளும் இலக்கும் என்ற தலைப்பில் நோன்பு தொடர்பிலான சில கருத்துக்களை உங்களோடு பகிர்ந்து கொண்டிருந்த நாம், இந்த பிரசுரத்தில் பதிவு செய்யும் கருத்துக்கள் ஹஜ் பயணம் மேற்கொண்டு அக்கடமையினை நிறைவேற்றும் பாக்கியம் பெற்றுக் கொண்டவர்களிடம் தரிபட்டு இருக்குமாக இருந்தால் உண்மையில் அவர்கள்தான் ஹஜ் கடமையினை நிறைவேற்றுவதற்கு தகுதிமிக்கவர்கள். அவர்கள்தான் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜினை நிறைவேற்றுபவர்கள்.

சத்திய சன்மார்கமான இஸ்லாத்தின் ஐம்பெரும் கட்டாயக் கடமைகளில் இறுதிக் கடமை புனித ஹஜ் கடமையாகும். இது ஆலஇம்ரான் அத்தியா யத்தின் 97ஆம் வசனத்தின் அடிப்படையில் ஹிஜ்ரி ஒன்பதாம் ஆண்டில் மதீனா முனவ்வராவில் வைத்துக் கடமையாக்கப்பட்டதாக சில அறிஞர்களும் அல்பகரா அத்தியாயத்தின் 196ஆம் வசனத்தின் அடிப்படையில் ஹிஜ்ரி ஆறாம் வருடத்தில் கடமையானதென்று வேறு சில அறிஞர்களும் கூறுகின்றார்கள்.

அல்லாஹ்வின் பேருளாக அகிலங்கள் பெற்றுக்கொண்ட பேரருட்கொடையான அருமை நாயகம் முஜ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் தன்னுடைய வாழ்க்கையில் ஒரு ஹஜ்ஜும் நான்கு உம்ரா க்களையும் நிறைவேற்றிருக்கின்றார்கள்.” (புகாரி முஸ்லிம்)

ஹிஜ்ரத்திற்கு முன்னர்  இரு விடுத்தங்களும் ஹிஜ்ரத்தின் பின்னர் ஒரு விடுத்தமுமாக மொத்தம் மூன்று விடுத்தங்கள் நாயகம் முஜ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் ஹஜ் செய்துள்ளார்கள்.” (திர்மிதி) இதுவொரு ழயீஃபான (பலவீனமான) தகவலாகும்.

ஹஜ் விதியாக்கப்பட்டவர்கள்.

புனித ஹஜ் மற்றும் உம்ரா ஆகிய இரண்டும் அல்லாஹ்வினாலும் அவனது பேரருள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களினாலும் விதியாக்கப்பட்டுள்ள கட்டாயக் கடமைகளாகும். இக்கடமைகளை நிறைவேற்றும் ஒருவர் முஸ்லிமாக இருக்கவேண்டும். பருவ வயதினை அடைந்திருக்க வேண்டும். புத்தி சுயாதீனமுள்ளவராக இருக்க வேண்டும். உடல், பொருள், போக்குவரத்துப் பாதை போன்றவற்றில் தங்கு தடைகள் அற்ற நிலையில் போதுமான வசதி வாய்ப்புக்களைப் பெற்றிட்ட ஆண் பெண் தங்கள் வாழ்வில் ஒரு தடவையாவது இக்கடமைகளை அல்லாஹ்வுக்காக நிறைவேற்ற தூய முறையில் பெறப்பட்ட பணத்தில் புனித கஃபாவுக்குச் செல்வது கட்டயாக் கடமையாகும்.

அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது அங்கு செல்ல சக்தியுள்ளவர்கள் மீது கடமையாகும்.  (ஆல இம்ரான் 96)

சக்திஎன்று சொல்லும்போது உடலில் பொருளில் போதியளவு சக்தி இருக்க வேண்டும் என்று சொல்கின்றோம். இந்த சக்திகளுக்கெல்லாம் மேலாக தூய்மை என்ற சக்தி மிக முக்கியமானதாகும். 

தற்காலத்தில் தன்னிடமுள்ள செல்வத்தில் ஒரு ரூபாய் கூட ஹராமான பணம் கலக்கவில்லையென்று சொல்ல ஒருவராவது இருப்பாரா? “பொருளீட்டலில் ஹராம் ஹலாலை கணக்கெடுக்காததொரு காலம்வரும் என்று காருண்ய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் அறிவித்த காலத்தில்தான் நாம் இருக்கின்றோமா? என்பன போன்ற சந்தேகங்கள் செறிந்து காணப்படுகின்ற இக்கால கட்டத்தில் நாம் நமது பொருளீட்டலை பரிசோதித்துப் பார்கக் கடமைப்பட்டிருக்கின்றோம்.

நாம் சுவாசிக்கின்ற காற்று, அருந்துகின்ற நீர், உணவுகள் யாவும் மாசடைந்த அழுக்கடைந்த நிலையில் அவற்றை நாம் பாவித்துக் கொண்டிருக்கின்றோம் என்றதொரு கருத்தும் நிலவும் கால கட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றொம்.

பொருளீட்டலில் மட்டுமல்ல பொருள்களிலும் பொய்யானவைகள் மலிந்து விட்டதால் அவற்றினூடாக வளர்கின்ற உடலும் அதில் ஊறுகின்ற குருதியும் எவ்வாறு சுத்தமாக இருக்கப் போகின்றது? குருதியின் உதவியினால் இயங்குகின்ற இதயம் எவ்வாறு இதமாக இருக்கப் போகின்றது? அந்த இதயத்தில் இருந்து வெளிப்படுகின்ற விளக்கங்கள் எவ்வாறு புனிதமாக இருக்கப் போகின்றது?. உடலிலும் பொருளிலும் காணப்படுகின்ற சக்தி எப்பொழுது தூய்மை அற்றுப்போகுமோ அப்பொழுது இதயத்தின் சக்தியும் தூய்மையற்றுப்போய் விடும்.

நமது பொருளீட்டளிலும் பொருட்களிலும் போலிகள் புகுந்து விளையாடுவதை விபரித்தது போன்று நமது அகீதாவில் கலந்துவிட்ட அசிங்கங்களை அடையாளப்படுத்தி வைக்க வேண்டிய அவசியமும் நமக்கு இருக்கின்றது என்ற காரணத்தினால் அதற்கான சில அடையாளங்களை இங்கே பதிவு செய்கின்றோம். படித்துப் பயன் அடையுங்கள்.
தொடரும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கட்டுரைகள்

“வஹ்ஹாபிகள்” இந்தக் காலத்தின் “க்வாரிஜ்கள்”

  இப்னு அப்தில் வஹ்ஹாபும் இப்னு தைமிய்யாவும்   இப்னு தைமிய்யா என்ற தனி நபரால் விதைக்கப்பட்ட பொய்யான, பிழையான, மார்க்கத்துக்கு ...