பிரபஞ்சங்கள் உருவானது எவ்வாறு?
அல்குர்ஆனும் அல்ஹதீதும் அல்லாஹ்வின் தாத் தொடர்பில் சந்திப்பதை தவிர்த்து கொள்ளுமாறு உத்தரவு பிறப்பித்திருக்கும் அதே நேரம் படைப்புக்கள் பற்றி சிந்திக்குமாறு தூண்டுகின்றன. வானம், பூமி பற்றிய சிந்தனையாளர்களை போற்றிப் பெருமை பாராட்டுகின்றன. அந்தவகையில் நாமும் சற்று சிந்தித்துப் பார்ப்போம்.
அல்லாஹ் நூர் என்று அறிந்துள்ளோம். நூர் என்ற பதத்திற்குப் பல பொருள்கள் இருக்கின்றன. இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் எந்த இடத்திற்கு என்ன பொருள் கூறினார்களோ அதையே நாமும் கூறுவோம். அல்லாஹ் நூராகும் என்ற அடிப்படையில் அவனது ஸிஃபாத்துக்களும் நூராகவே இருக்கவேண்டும். அதனால்தான்போலும் அவனது கலாமான அல் குர்ஆனை அவன் நூர் என்றான். அவன் மார்க்கமான இஸ்லாம் நூராகும். ஹிதாயத் என்பதும் நூராகும்.
அல்லாஹ்வின் தாத் பற்றித் தேடக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டு இருப்பதனால் அவன் படைப்பு பற்றி சிந்திக்க முடியும். அவ்வாறு சிந்திப்பது வணக்கமாகவும் இருக்கிறது. எனவே அல்லாஹ்வின் முதல் படைப்பான தண்ணீர் எதனால் படைக்கப்பட்டதாக இருக்கும் என்று சிந்திக்கின்றோம்?.
நூரான அல்லாஹ்வின் ஆட்சிபீடமான அர்ஷ் மற்றும் குர்ஷி, லவ்ஹ், கலம் என்பனவும் நூரினால் ஆனதென்று இமாம் சுயூத்தி ரஹ்மத்துல்லாஹ் அலைஹி அவர்கள் அஸ்ராருல் கவ்ன் என்ற நூலில் பதிவு செய்துள்ளார்கள்.
அர்ஷினை சுமந்துகொண்டிருக்கும் அமரர்கள் முதல் அகிலங்களைப் பராமரித்து நிர்வகிக்கும் நிர்வாகிகள் நூராகும்.
மனிதனுக்கு முந்திய இனமான ஜின்னினம் நார் – நெருப்பினால் படைக்கப்பட்டிருக்கின்றது. மனிதன் மண்ணினாலும் படைக்கப்பட்டவானாக இருக்கின்றான். நூருன் என்ற சொல்லுக்கும் நாருன் என்ற சொல்லுக்கும் இடையில் ஒரு எழுத்து வித்தியாசமாக இருக்கிறது. எனவே மண்ணினால் உருவான மனிதன் அல்லாஹ்வை ஏற்றுக்கொண்டு அவன் பாதையில் செல்லும்போது நூராகவும் அப்பாதையில் இருந்து விலகிச்செல்லும்போது அவன் நாராகவும் ஆகின்றான்.
ரூஹ் என்றால் என்ன?
ரூஹ் என்ற வார்த்தை அல் குர்ஆனில் பல அர்த்தங்களில் பிரயோகிக்கப்படுகிறது. அந்த வகையில் ஹழ்ரத் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு ரூஹ் என்று (சூரத்துஷ் ஷுஅரா வசனம் 193, 194) சொல்வது போன்று குர்ஆன், இஸ்லாத்திற்கும் ரூஹ் என்று சொல்லப்படும் என்பதற்கு இதே அத்தியாயத்தின் 53ம் வசனத்தினை பெருமக்கள் ஆதாரம் காண்பிக்கின்றனர்.
மனிதனின் சரீரத்துடன் சேர்ந்துள்ள ரூஹின் யதார்த்தமான நிலையினை அல்லாஹ் ஒருவனே அறிவான். எனினும் அது நூரினால் ஆனதென்று அறிவிப்போரும் உண்டு.
அல்லாஹ்வுக்கும் அமர்களுக்கும் அல்லது அர்ஷுக்கும் அமரர்களுக்கும் இடையில் பல திரைகள் இருக்கின்றன. அந்த திரைகளில் சில நூராகும்.
சூரியன், சந்திரன், நட்சத்திரம் என்பன நூராகும்.
"குன்” என்ற சொல்லின் கோலம்.
ஆக மொத்தத்தில் தண்ணீர முதல், துவக்கம் பெறுகின்ற அல்லாஹ்வின் படைப்புக்கள் யாவும் அவனின் குன் = ஆகு என்ற உத்தரவினால் ஆனவைகளாக இருக்கின்றன. அல்லாஹ்வும் அவனது கலாமும் நூராக இருகின்றதென்ற காரணத்திற்காக அவனது குன் என்ற உத்தரவும் அவ்வுத்தரவில் ஆனவைகளும் நூராக இருக்கவேண்டும். எனவே அல்லாஹ்வின் படைப்புக்களில் எந்தப் படைப்பு என்ன கோலத்தில் காணப்பட்டாலும் அது யதார்த்ததில் குன் என்ற நூரினால் வெளிவந்த கோலமாகவே இருக்கும். அந்தக் கோலங்களில் முதல் கோலம் முஹம்மதுன் என்ற கோலமாகும்.

Play Free casino games online, no deposit required - DrMCD
பதிலளிநீக்குFor the 대구광역 출장샵 free casino 문경 출장샵 games, you will get to play without risking 파주 출장마사지 your money, thanks to the great 김천 출장샵 rewards. Play for free without 원주 출장마사지 registration, or deposit