மீலாத் வழங்கும் மாபெரும் தத்துவம்.
இமாம் பூசிரி (ரஹ்மத்துல்லாஹ் அலைஹி)அவர்கள் ஹம்சிய்யாவில்,
ليلة المولد الذي كان للدين –
سرور بيومه وازدهاء
“உங்கள் வெளிப்பாடானது மார்கத்திற்கு பெரும் மகிழ்ச்சியாகும்”
அல்லாஹ்வின் பேரருளான பெருமானார் முஜ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் உதய தினமானது முஸ்லிம்களுக்கு மகிழ்சியளிக்கிறது என்ற கருத்தினை இமாமுனா பூசிரி(ரஹ்மத்துல்லாஹ் அலைஹி) அவர்கள் ஹம்சிய்யாவில் குறிப்பிடுகிறார்கள்.
ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் உதய தினம் நம்மை ஊடறுத்துச் செல்லும் மற்றுமொரு சிறப்பான சந்தர்பம் உண்மையான விசுவாசிகளை அண்மித்துக்கொண்டிருக்கும் இச்சந்தர்பத்தில், ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் எந்த ஆண்டில் பிறந்தார்கள்?, எந்த நாளில், மாதத்தில் பிறந்தார்கள்?, பிறந்த நாளைக் கொண்டாட முடியுமா? முடியாதா? என்பன போன்ற போலியான வினாக்கள் வழமை போல் ஊடகங்களில் பதியப்படுவதைப் பார்க்கின்றோம்.
உண்மையில் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் மீலாத் தொடர்பில் முன்வைக்கப்படும் இது போன்ற வினாக்கள் இன்று நேற்று எழுந்த வினாக்கள் அல்ல. மாறாக ஹிஜ்ரி ஆறாம் நூற்றாண்டிலும் பேசப்பட்ட பேச்சுக்களாக இவை இருகின்றன. ஆனாலும் கூட அன்றுள்ளவர்களின் நோக்கமும் இன்றுள்ளவர்களின் நோக்கமும் ஒன்றுக் கொன்று முரண் பட்டிருப்பதைப் பார்க்க முடிகிறது.
ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் உதய தினம், நேரம் நினைவு கூரப்பட வேண்டுமென்ற நிலைப்பாட்டில் அன்றிருந்தவர்கள் இருந்து கொண்டிருக்க, இதுவொரு வழிகேடாகும் என்ற நிலைப்பாட்டில் இன்றுள்ளவர்கள் இருக்கின்றார்கள். இதனால்தான் இன்றுள்ளவர்களின் பதிவுகள் போலியானது என்கிறோம்.
ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் மீலாத் தொடர்பான தலைப்பில் தனி நபர் கருத்தினை நாம் கூறாமல் قول
الأصح والجمهور والمشهور மிகச் சரியான சொல் எதுவோ அதனைச் சொல்கின்றோம். பெரும்பான்மையின் நிலைப்பாடு எதுவோ அதனை நினைவு கூறுகின்றோம். மக்கள் மத்தியில் பிரபலமாகப் பேசப்படுகின்ற பேச்சினைப் பேசுகின்றோம். அத்துடன் மீலாத் நிகழ்வானது ஷரீஅத் விதியாக்கிய வாஜிபான, பர்லான வணக்கம் என்று யாரும் சொல்லவும் இல்லை. ஷரீஅத்திற்கு விரோரதமான நிகழ்வுகளை அதன் நிகழ்ச்சி நிரலில் இணைத்துக்கொள்ளுமாறு ஆணையிடவும் இல்லை.
நான் நினைவு கூரப்பட்டால் நீங்களும் என்னுடன் நினைவு கூரப்படுகின்றீர்கள் என்ற நபி வாக்கின் (ஹதீஸ் குத்ஸின்) அடிப்படையில் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் நினைவு கூரப்படாத நேரமே இல்லையென்று சொல்லுமளவுக்கு இஸ்லாமியன் செய்கின்ற ஒவ்வொரு நற்செயல்களிலும் அருமை நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் நினைவுகூரப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இவ்வளவு சிறப்புமிக்க ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் ஜனன தினம் விசேடமாக நினைவுகூரப்படுவதில் இஸ்லாமியர்கள் பெறுகின்ற பெறுமதியான படிப்பினை என்னவென்று தெரியுமா?
ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் பிறந்துள்ளார்கள். அவர்களுக்கு பெற்றோர்கள் இருக்கிறார்கள். பிறந்த மாதம், வருடம், நேரம், இடம் இருக்கிறது. அவர்களினால் பெறப்பட்டவர்கள் இருக்கிறார்கள். எனவே ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் ஒருபோதும் அல்லாஹ்வின் அந்தஸ்தினை அடைந்து கொள்ளப்போவதில்லை என்பதாகும்.
ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் மீலாத் நினைவு கூரத்தக்கது என்பதற்குத் தெளிவான ஆதாரம் இருக்கிறது. ஆனாலும் மீலாத் கால நடைமுறை நிகழ்வுகள் நவீனமானது. அதற்காக மீலாதினை மறுக்கமுடியாது. நடைமுறை நிகழ்வுகள் உங்களுக்குப் பிடிக்கவில்லையென்றால் உள்ளாலுள்ள படி மீலாதினை நிறைவேற்றுங்கள். அத்தோடு மீலாதுக்கு தடைவிதிக்காமல் அதில் நிகழும் தப்புத்தவறுகளை திருத்துங்கள். உங்கள் பார்வையில் தப்புத்தவறாகத் தெரியும் ஒன்று மற்றவர் பார்வையில் நல்லதாகத் தெரியவும் வாய்ப்பிருக்கிறதென்பதையும் மறந்துவிடாதீர்கள். அத்துடன் உங்கள் அமைப்பில் நடைமுறை யில் உள்ள அனைத்து நிகழ்வுகளும் உள்ளாலுள்ளபடிதான் நடைபெறுகின்றதா? என்றும் ஒரு முறை உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்.
தொடரும்......


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக